சற்று முன்

சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘இரவின் விழிகள்’   |    நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கும் 'மாமன்'   |    ரசிகர்களின் ஆரவாரக் கொண்டாட்டத்துடன் பாக்ஸ் ஆஃபிஸ் - இல் கலக்கும் 'மிஸ் யூ'!   |    வித்தியாசமான தோற்றத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் தோன்றும் 'மெண்டல் மனதில்'   |    கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகும் மோகன்லாலின் 'பரோஸ்'   |    வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிக்கும் பிரமாண்டமான தயாரிப்பு 'படையாண்ட மாவீரா'   |    ரசிகர்களின் எதிர்பார்ப்பை வியப்பில் ஆழ்த்திய 'வீர தீர சூரன்' படத்தின் டீசர்!   |    விஜய் தேவரகொண்டா வெளியிட்ட ராஷ்மிகா மந்தனாவின் 'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் டீசர்!   |    இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில் முதல் ஆன்மிக ஆல்பம் 'அஷ்ட ஐயப்ப அவதாரம்'!   |    பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள 'திரு.மாணிக்கம்' வெளியீடு அறிவிப்பு!   |    'மெட்ராஸ்காரன்' திரைப்பட இரண்டாவது சிங்கிள்' காதல் சடுகுடு' பாடல் வெளியீட்டு விழா!   |    திருநங்கைகளை பற்றி அழுத்தமாக பேசும் படைப்பாக 'சைலண்ட்' படம் வந்திருப்பது அழகு   |    நந்தமுரி மோக்ஷக்யா அறிமுகப்படத்தின் அட்டகாச ஸ்டில் வெளியாகியுள்ளது   |    கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்து பொங்கல் வெளியீடாக வரும் 'தருணம்'!   |    ‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது !!   |    ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுகம்!   |    திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள 'சைலண்ட்' பட டிரெய்லர் வெளியீடு!   |    என் படங்களில் திருநங்கைகளுக்கு மரியாதை செய்யும் காட்சிகள் வைப்பேன் - இயக்குநர் சீனு ராமசாமி   |    சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட 'ஸ்வீட் ஹார்ட்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    அமெரிக்காவில் நடைபெறவுள்ள ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு!   |   

சினிமா செய்திகள்

கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகும் மோகன்லாலின் 'பரோஸ்'
Updated on : 12 December 2024

Aashirvad Cinemas  சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான  " பரோஸ்" , வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படம்,  மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. 



 



பரோஸ் எனும் பூதத்திற்கும்,  ஒரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை ஃபேன்டஸி கலந்து, அனைவரும் ரசிக்கும் வகையில், பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மோகன்லால். 



 



மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இதுவரையிலும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் திரை வாழ்க்கையில் முதன்முறையாக இயக்கியுள்ள படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர், மோகன்லால் கூட்டணியில் இதுவரை 28 படங்களுக்கு மேல் வெளியாகி அனைத்தும் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இவர்கள் கூட்டணியில் மீண்டும் இந்திய சினிமாவின்  பிரம்மாண்ட படைப்பாக, முற்றிலும்  3டி தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாகியுள்ளது என்பதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 



 



'டீப் ப்ளூ சீ 3', 'ஐ இன் தி ஸ்கை' மற்றும் 'பிட்ச் பெர்பெக்ட்' ஆகிய திரைப்படங்களில் பணியாற்றிய பிரபல  ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான்,  'பரோஸ்' படத்திற்கு  ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். இளம் வயதிலேயே உலகப் புகழ்பெற்ற, லிடியன் நாதஸ்வரம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 



 



இப்படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்குச் சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி  வெளியாகவுள்ளது எனும் அறிவிப்பு, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா