சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

'ஆஃபீஸ்' சீரிஸை, வரும் பிப்ரவரி 21 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது!
Updated on : 10 February 2025

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்,  ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘ஆஃபிஸ்’ சீரிஸின் இரண்டாவது புரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது.  இந்த சீரிஸின் புரோமோக்கள், டைட்டில் பாடல் ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது, இந்த சீரிஸ் இந்த ஆண்டு பிப்ரவரி 21 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. 



 



டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்ட இரண்டாவது புரோமோ, ஆஃபீஸ் சீரிஸின் கதைக்களத்தையும், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை பாணி திரைக்கதையையும் எடுத்துக்காட்டுகிறது. 



 



கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற தாசில்தார் அலுவலகத்திற்கு வருவதில் இந்த புரோமோ துவங்குகிறது. அவர் கிராமப்புற குடும்ப பின்னனியில் இருந்து வருவதால், அவர் தனது கணவரின் பெயரைக் கூற மறுக்கிறார். அதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் நம்மை வெடித்துச் சிரிக்க வைக்கிறது. முழு அலுவலகமும் அவரின் கணவரின் பெயரைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது. இறுதியில், அவள் சைகை மொழி மூலம் பெயரையறிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அதன்பின்னான வேடிக்கையான சம்பவங்கள் நகைச்சுவையுடன் முடிவடைகின்றன.



 



இந்த புரோமோ கிரேஸியான கிராமத்தையும் அதன் மக்களையும் விவரிக்கும் வகையில், "வில்லங்கமான கிராமமும், அட்ராசிட்டியான ஆஃபீஸும்" என்ற பொருத்தமான டேக்லைனுடன் முடிகிறது. 



 



நகைச்சுவையுடன் கூடிய கலகலப்பான இந்த சீரிஸை,  கபீஸ் இயக்கியுள்ளார்,  ஜெகன்நாத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில்   ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்ற சீரிஸான ​​‘ஹார்ட் பீட்’ இல் தங்கள் நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ள இருவர் இடம்பெற்றுள்ளனர்.



 



​​‘ஹார்ட் பீட்’ சீரிஸில்  நடித்த நடிகர்கள் குரு லக்ஷ்மண் மற்றும் சபரீஷ் இந்த சீரிஸில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும்  ஸ்மேகா, கீர்த்திவேல், கெமி, பரந்தாமன், தமிழ்வாணி, சரித்திரன், சிவா அரவிந்த், பிராங்க்ஸ்டர் ராகுல் மற்றும் டி.எஸ்.ஆர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 



 



சமீபத்திய, 'ஹார்ட் பீட்' சீரிஸை ரசித்தவர்கள், இந்த  'ஆஃபீஸ்' சீரிஸைக் கொண்டாடுவார்கள். இந்த ஆஃபீஸ் சீரிஸின் கதை,  ஒரு சிறிய, அழகான கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும், அன்றாட நிகழ்வுகளைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பின்னணியில்,  ஒரு அரசு அலுவலகத்தில் நடக்கும் நகைச்சுவையான நிகழ்வுகளும், வித்தியாசமான சம்பவங்களும்,  பார்வையாளர்களைச் சிரிப்பில் ஆழ்த்துவது உறுதி. இந்த ஆஃபீஸ்  சீரிஸின் ஒவ்வொரு எபிசோடும் அசத்தலான நகைச்சுவையால் நிரம்பியுள்ளது. மனம் விட்டுச் சிரித்து மகிழ, ஒரு அட்டகாசமான சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா