சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய '35 சின்ன விஷயம் இல்ல' தற்போது SUN NXT-இல் ஸ்ட்ரீமாகிறது!
Updated on : 10 February 2025

நந்தா கிஷோர் எமானி இயக்கத்தில், நிவேதா தாமஸ் நடித்த 35 சின்ன விஷயம் இல்ல என்பது ரசிகர்களை கவர்ந்த மிகுந்த தாக்கமுள்ள குடும்பக் கதையாகும். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் தற்போது தமிழின் முன்னணி ஓடிடி தளமான SUN NXT-இல் ஸ்ட்ரீமாகிறது!



 



ஒரு நடுத்தர குடும்பத்து இளம் தாய் தனது மகன் படிப்பில் திணறுகையில், அவனை பாஸ் மார்க்கான 35 மதிப்பெண்களைப் பெற வைக்க முயற்சிக்கிறாள்.  இது வீட்டின் இயல்பான வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. அந்த குடும்பம் சந்திக்கும் சவால்களும், அதைத் தீர்க்க அவர்கள் போராடுவதும், வெகு சுவாரஸ்யமான திரைக்கதையால் சொல்லப்பட்டுள்ளது. எளிய நடுத்தர வர்க்கம் தங்கள் வாழ்க்கையைத் திரையில் பார்க்கும்படி ஒரு அசத்தலான ஃபேமிலி டிராமாவாக  உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகள் மற்றும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.



 



நடிகை நிவேதா தாமஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில்  பிரியதர்ஷி, விஸ்வதேவ் ரச்சகொண்டா, கௌதமி, பாக்யராஜ், கிருஷ்ண தேஜா, அருண் தேவ், அபய், அனன்யா  ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.



 



இப்படத்திற்கு இசையமைப்பாளர் விவேக் சாகர் இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி  ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக  T C பிரசன்னா பணியாற்றியுள்ளார். பிரின்சி வைத்  காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை லதா நாயுடு செய்துள்ளார்.



 



ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தின் ஓடிடி வெளியீட்டை எதிர்நோக்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், இப்படம் SUN NXT ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா