சற்று முன்

சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |   

சினிமா செய்திகள்

பாட்ஷா கிச்சா சுதீப்பின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் 'மேக்ஸ்' ZEE5-ல்!
Updated on : 14 February 2025

ZEE5, 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய கன்னட மாஸ் திரில்லரான “மேக்ஸ்” திரைப் படத்தை, 15 பெப்ரவரி 7:30 PM அன்று டிஜிட்டல் பிரீமியரில் வெளியிடுகிறது! இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ள “மேக்ஸ்” திரைப்படம்,  பரபர திரைக்கதையுடன், ஆக்சன் ரோலர்கோஸ்டர் அனுபவமாக உருவாகியுள்ளது. பாட்ஷா  கிச்சா சுதீப்  மிக சக்திவாய்ந்த மாஸ் அவதாரில் நடித்து அசத்தியுள்ளார் !



 



இந்த கதையானது  தனி ஒருவனின் தைரியம்,  சர்வைவல் மற்றும் பழிவாங்கலைச் சுற்றி ஒரு  பரபரப்பான திரை அனுபவத்தைத் தருகிறது. ஒவ்வொரு நொடியும் பரபரக்க வைக்கும்,  இப்படம் திரையரங்குகளில் பெரும் வெற்றியை பெற்றது. “மேக்ஸ்”  படத்தை ZEE5 இல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில், விரைவில் அனைவரும் கண்டு ரசிக்கலாம்.



 



பாட்ஷா சுதீப்புடன் இணைந்து, இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சாம்யுக்தா ஹோர்னாட், ஸுக்ருதா வாகிளே, சுனில் மற்றும் அனிரூத் பட் போன்ற பல பிரபல நடிகர்கள் முக்கிய  வேடங்களில் நடித்துள்ளனர். மேக்ஸ் படம் 2024 ஆம் ஆண்டின் மிக அதிக வருவாய் ஈட்டிய கன்னடப் படம் எனும் சாதனையை செய்துள்ளது.  தற்போது ZEE5 இல் இப்படம் டிஜிட்டல் பிரீமியர் ஆகிறது.



 



“Max” திரைப்படத்தின் கதை, போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள அர்ஜூன் மகாக்ஷய் (கிச்சா சுதீபா) என்னும் கதாபாத்திரத்தைப் பற்றி பேசுகிறது. அவர் தனது பதவியேற்புக்கு, ஒரு நாள் முன் அந்த ஊருக்கு வருகிறார். சக்திவாய்ந்த அமைச்சர்களின் இரு இளம் பிள்ளைகள், அவர் பதவியேற்கும் காவல் நிலையத்தில் மர்மமாக இறந்துவிட்டதால், அர்ஜூன் தனது சக ஊழியர்களின் உயிரைக் காக்க, அரசியல்வாதிகளுக்கும் கேங்க்ஸ்டர்களுக்கும் எதிராக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான். அந்த ஒரு இரவில் நடைபெறும் அதிரடி திருப்பங்கள், பரபர சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. 



 



ZEE5 சார்பில் கூறப்பட்டதாவது: 



“இந்த ஆண்டின் மிகப்பெரும் பிளாக்பஸ்டரான மேக்ஸ்  திரைப்படத்தை,  ZEE5 இல் பல மொழிகளில் அனைத்து பார்வையாளர்களுக்கும்  கொண்டு வருவதில் மிகவும் உற்சாகமாக இருக்கின்றோம். கிச்சா சுதீப் மற்றும் இந்த படத்தின் திறமையான குழுவுடன் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி.  மேக்ஸ் ஒரு அதிரடி அனுபவத்தை தரும் படம், மேலும் இப்படம் பார்வையாளர்களை அதிரடி ஆக்சன் கதை, பரபர திரைக்கதை,  மற்றும் சுதீப்பின் அருமையான நடிப்பு என மயக்குகிறது. திரையரங்குகளில் பெரும் வெற்றியை பெற்றதால், இப்படத்தை கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.”



 



கிச்சா சுதீப் கூறியதாவது.., 



“மேக்ஸ் திரைப்படத்தை ZEE5-க்கு கொண்டு வருவது மிகுந்த மகிழ்ச்சி, குறிப்பாக திரையரங்கில்  ரசிகர்களின் பேராதரவுக்குப் பிறகு, இப்போது டிஜிட்டலில் அனைவரிடமும் சென்று செருவது மகிழ்ச்சி.  போலீஸ் இன்ஸ்பெக்டரான அர்ஜூன் மகாக்ஷய் வேடம் மிக மிக சுவாரஸ்யமாக இருந்தது, இது புத்திசாலித்தனத்துடன் கூடிய  உணர்வுப்பூர்வமான  கதை. படம் முழுதும்  அதிரடியாக, பரபரப்பான தருணங்கள் மற்றும் வலிமையான திருப்பங்களுடன் ஒரு புது அனுபவமாக இருந்தது. ரசிகர்களின் உற்சாகமான வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்தது. இந்த திரைப்படம் ZEE5 மூலம் உலகமெங்கும் பல மொழிகளில்  சென்று சேரவுள்ளது பெரு மகிழ்ச்சி.”



 



இயக்குனர் விஜய் கார்த்திகேயா கூறியதாவது…,



மேக்ஸ் திரைப்படத்தை உருவாக்கியது  மிக அற்புதமானதாக இருந்தது, மேலும் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு,  எங்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்பதில் நான் பெருமைப்படுகிறேன், நாங்கள் உருவாக்க விரும்பியது, பார்வையாளர்களை அசத்தும் ஒரு பரபரப்பான, அதிரடியான உணர்வுப்பூர்வமான கதை . திரையரங்குகளில் கிடைத்த உற்சாக வரவேற்பைப் பார்த்தபோது, எங்கள் இலக்கை அடைந்ததாக உணர்ந்தோம். கிச்சா சுதீப்பின் அர்ஜூன் வேடம் மிக அசாதாரணமானது, மேலும் இந்த படத்தில் அனைத்து நடிகர்களும் அவர்களின் சிறந்த நடிப்பை தந்து, இந்த படத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியுள்ளனர். ZEE5 இல் மேக்ஸ் பிரீமியர் மூலம், அனைத்து பார்வையாளர்களுக்கு இந்த திரில்லரின் அனுபவத்தை உணர்வார்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.”



 



“மேக்ஸ்” திரைப்படத்தின் அதிரடி மற்றும் பரபரப்பு காட்சிகளை தவறவிடாதீர்கள் – ZEE5 இல் 15 பெப்ரவரி 7:30 PM அன்று வெளியாகும் “மேக்ஸ்”- திரைப்படத்தை கண்டு ரசியுங்கள் !



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா