சற்று முன்

நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்காக அதிரடியில் இறங்கிய நடிகர் சௌந்தரராஜா!   |    உப்பள தொழிலாளர்களின் வாழ்வியலை மையமாக கொண்டுள்ள படம் 'உயிர் மூச்சு'!   |    4 ஆம் தேதி வெளியாகிறது இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ’சாரி’!   |    எஸ் ஜே சூர்யா சாருக்கு எவ்வளவு தீனி போட்டாலும் தீரவில்லை! - நடிகர் கார்த்தி   |    சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடிகர் தனுஷ் திறந்து வைத்த 'DCutz By Dev' சலூன்   |    ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிளாக்மெயில்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    சோஷியல் மீடியாவின் நெகட்டிவ் மற்றும் இருட்டு பக்கங்களை பேசும் ’சாரி’   |    'வீர தீர சூரன்- பார்ட் 2 '‌ படக் கொண்டாட்டம், ஆயிரக்கணக்கில் திரண்ட 'சீயான்' விக்ரம் ரசிகர்கள்!   |    வடிவேலு - பஹத் பாசில் கூட்டணியின் 'மாரீசன்' பட அப்டேட்   |    மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியத் திரைப்படம்!   |    டேனியல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆர் பி எம் (RPM) படத்தின் முன்னோட்டம் வெளியீடு!   |    ZEE5 தளம் வழங்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை' காமெடி சீரிஸ்!   |    விரைவில் வெளிவரவிருக்கும் “கொஞ்சநாள் பொறு தலைவா” பட டிரெல்யர் வெளியீட்டு விழா!   |    பான் இந்திய திரைப்படமான ' பெடி ( PEDDI) ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    மதுரை - திருச்சியில் 'சீயான்' விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2' ப்ரமோஷன்!   |    பாரதிராஜாவின் மகனும், நடிகர் மற்றும் இயக்குநருமான மனோஜ் பாரதி காலமானார்!   |    'வீர தீர சூரன்- பார்ட் 2 ' கேரளா ப்ரமோஷன்   |    விஜய் சேதுபதி திறந்து வைத்த 'மெட்ராஸ் பிட்னஸ்' ஜிம்   |    பெங்களூரூவில் நடைபெற்ற 'வீரதீர சூரன் பார்ட் 2 ' பட ப்ரமோஷன்!   |    கோலாகலமாக நடைபெற்ற 'எம்புரான்' பட தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு விழா!   |   

சினிமா செய்திகள்

புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில் சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2- டிரெய்லர் வெளியானது!
Updated on : 20 February 2025

முற்போக்குச் சிந்தனையாளர்களான இரட்டையர்கள் புஷ்கர் & காயத்ரி எழுத்தில் உருவான இந்த சீசன், பிரம்மா & சர்ஜுன் இயக்கத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது 



 



எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரில், கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் தோன்ற அவர்களுடன் இணைந்து லால், சரவணன், கௌரி கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், மோனிஷா பிளெஸ்ஸி ரினி, ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், மற்றும் அஸ்வினி நம்பியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள் நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் நடிகர் கயல் சந்திரன் ஆகியோர் கௌரவ வேடத்தில் தோன்றுகின்றனர்.



 



சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்தியேகமாகத் திரையிடப்படத் தயாராக உள்ளது.



 



மும்பை, இந்தியா—பிப்ரவரி 19, 2025— இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ விமர்சன ரீதியாக ஏகோபித்த பாராட்டுக்களை பெற்ற பார்வையாளர்களை புயலின் மையத்துக்குள் கடத்திச் சென்ற அதன் ஒரிஜினல் க்ரைம் த்ரில்லர் தொடர் சுழல்-தி வோர்டெக்ஸ் இரண்டாவது சீசன் இன் மனதைக் கொள்ளை கொள்ளும் டிரெய்லரை வெளியிட்டது.  புஷ்கர்  (Pushkar) மற்றும்  காயத்ரி (Gayatri) ஆகியோரின் எழுத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பிரம்மா (Bramma) மற்றும் சர்ஜுன் KM (Sarjun KM) இயக்கத்தில் உருவான இந்தத் தொடரில்,  கதிர் (Kathir) மற்றும்  ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) மீண்டும் முன்னணி வேடங்களில் தோன்றி நடிக்க, இவர்களுடன் லால் Lal, சரவணன்  Saravanan, கௌரி கிஷன்  Gouri Kishan (முத்து), சம்யுக்தா விஸ்வநாதன் Samyuktha Vishwanathan (நாச்சி), மோனிஷா பிளெஸ்ஸி  Monisha Blessy (முப்பி), ரினி  Rini (காந்தாரி), ஷ்ரிஷா Shrisha (வீரா), அபிராமி போஸ் Abhirami Bose (செண்பகம்), நிகிலா சங்கர்  Nikhila Sankar (சந்தனம்), கலைவாணி பாஸ்கர்Kalaivani Bhaskar (உலகு), மற்றும் அஸ்வினி நம்பியார்  Ashwini Nambiar ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, மஞ்சிமா மோகன்  Manjima Mohan மற்றும் கயல் சந்திரன்  Kayal Chandran ஆகியோர் கௌரவ வேடங்களில் தோன்றுகின்றனர். சுழல்—தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஆங்கில வசனங்களுடன் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்தியேகமாக ஒளிபரப்பாக உள்ளது.



 



விருது வென்ற இந்தத் தொடரின் இரண்டாவது சீசன், தமிழ்நாட்டின் காளிபட்டணம் என்ற கற்பனை கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அஷ்டகாளி திருவிழாவின் பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் மூத்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான செல்லப்பா (லால்) மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட அந்தச் சம்பவம், கிராம மக்களை திடுக்கிடச் செய்து முழு கிராமத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடுகிறது அந்த இருண்ட சூழல் அந்த கிராமத்தையும் அந்த கிராம மக்களையும் தாண்டி எல்லைகளைக் கடந்து வெகுதூரம் அதிவேகமாகப் பரவுகிறது. மர்மங்கள் நிறைந்த இனம் புரியாத இந்தக் குற்றத்தின் புதிரை விடுவிக்கும் பணியில் சக்கரை (கதிர்) ஈடுபட, நந்தினியின் (ஐஸ்வர்யா ராஜேஷ்) இன் இருண்ட கடந்த கால வாழ்க்கை நிகழ்வுகள் ஒரு நிச்சயமற்ற எதிர்கால சிறை வாழ்வை நினைவூட்டி அவளை ஆட்டிப்படைக்கிறது. இந்த விசாரணை நடவடிக்கைகள் அவர்கள் இருவரையுமே நய வஞ்சகம், மர்மம், குற்றம், சதி மற்றும் மரணங்கள் நிறைந்த ஒரு சிக்கலான புதிருக்குள் சிக்கவைத்துவிடுவதோடு ஒருவருக்கொருவர் சம்பந்தப்படாத 8 இளம் பெண்கள் இந்த கொலைக் குற்றம் தொடர்பாக முக்கிய குற்றவாளியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் எழ, இந்தச் சிக்கலை கட்டவிழ்க்கமுடியாத ஒன்றாக மேலும் தீவிரப்படுத்துகிறது. இந்த இருண்ட கொடூரமான கொலை நிகழ்வு அவரை முற்றிலும் அழித்துவிடும் முன்பாக இந்தக் குற்றத்தை புலன் விசாரணை செய்து தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடும் சக்கரை, வெளிப்படையான உள் நோக்கங்கள் தனிப்பட்ட பழி வாங்கல்கள், மற்றும் கடந்த கால செயல்பாடுகளை கடந்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.



 



"சுழல் - தி வோர்டெக்ஸ் முதல் சீசனுக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இந்த இரண்டாவது சீசன் பார்வையாளர்களை இன்னும் கூடுதலாக கவர்ந்திழுப்பதை உறுதி செய்ய எங்களது திறனளவு குறியெல்லையை இன்னும் சற்று உயரே அமைத்து அதை நோக்கிப் பயணித்தோம்," என்று இயக்குநர்கள் பிரம்மா மற்றும் சர்ஜுன் KM. கூறினார்கள். "புஷ்கரும் காயத்ரியும் மேலும் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடிய கதையை உருவாக்கி, அதனை அற்புதமாக வடிவமைத்து வழங்கியுள்ளனர் அதற்கு உயிரோட்டம் அளிக்கும் வகையில் நாங்கள் கவனமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இயக்கியுள்ளோம். ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் இணைந்து கதிர் மற்றும் ஐஸ்வர்யா, மீண்டும் ஒரு மனதை மயக்கும் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியதில், இயக்குநர்களாக எங்கள் பணி மிகவும் எளிதாகிவிட்டது. சுழல் - தி வோர்டெக்ஸ் உலகில் பார்வையாளர்கள் மீண்டும் ஒருமுறை தங்களை மூழ்கடித்துக்கொண்டு பரவசமடைவதை காண நாங்க ஆவலோடு காத்திருக்கிறோம் மற்றும் இந்த இரண்டாவது சீசன் அவர்களை நம்பமுடியாத அளவிற்கு ஈர்ப்பதாக உணருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்."



 



"தமிழ் கதைசொல்லலில் புரட்சிகரமான ஒரு புதிய பாணியை கடைப்பிடித்து நமது கலைத் துறையை உலகளவில் புகழ் பெறச்செய்து, தேசிய அளவில் பல விருதுகளை பெற்ற சூழல் - தி வோர்டெக்ஸ் தொடரின் இரண்டாவது சீசனில் சப்-இன்ஸ்பெக்டர் சக்கரையாக மீண்டும் தோன்றி நடிப்பதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். இரண்டாவது சீசனுக்காக மேலும் ஒரு ஆர்வத்தை தூண்டும் பரபரப்பான பொழுதுபோக்கு கதையை வடிவமைத்த புஷ்கர் மற்றும் காயத்ரி.. இருவரும் உண்மையிலேயே தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு புரட்சிகரமான படைப்பாளிகள் . இதன் முதல் சீசன் மற்றும் அதில் நான் வெளிப்படுத்திய நடிப்பு இரண்டுக்கும் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கிடைத்த அமோக வரவேற்பு உண்மையிலேயே மனதளவில் என்னை உற்சாகமடையச் செய்துவிட்டது, மேலும் அனைவரும் அதே அளவுக்கு அல்லது அதற்கும் அதிகமாக இரண்டாவது சீசனையும் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று கதிர் கூறினார்.



 



"சுழல் - தி வோர்டெக்ஸ் என் மனதுக்கு நெருக்கமான பெருமைக்குரிய மறக்கமுடியாத ஒரு படைப்பாக எப்போதும் நிலைத்திருக்கும். மேலும் தொடரின் முதல் சீசனில் எனது நடிப்பிற்காக ரசிகர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அன்பு மற்றும் பாராட்டுகளில் இருந்து இன்னும் நான் மீள முடியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறேன். தனது தங்கையைத் தேடிச் செல்வது தொடங்கி மறக்க நினைத்த நினைவுகளை சுமந்து மீண்டும் வாழ்க்கையை தொடர்ந்து தனக்கும், தன் சகோதரிக்கும் எதிராகச் செய்யப்பட்ட கொடூரமான குற்றத்திற்குப் பழி வாங்கியது வரையிலான நந்தினியின் பாத்திரத்தில் நடித்தது... நடிப்பது.... ஒரு முழுமையான ரோலர் கோஸ்டர் பயணமாக  எளிதில் மறக்க முடியாத அனுபவத்தை தந்தது. இரண்டாவது சீசனிலும் அந்த பயங்கரம் அவளை விட்டு விலகுவதாக இல்லை, அவள் மற்றொரு மர்மம் நிறைந்த கொடூரமான கொலைக்கு மத்தியில் தான் சிக்குண்டுள்ளதை காண்கிறாள். முதல் சீசன் உற்சாகமளித்ததாக, பார்வையாளர்கள் கருதியிருந்த நிலையில் இந்த இரண்டாவது சீசன் அவர்கள் எதிர்பாராத அளவு மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் அளிக்கும். இது உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் திரையிடப்படுவதை காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன்." என கூறினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா