சற்று முன்
சினிமா செய்திகள்
ஹாலிவுட்டை தாண்டிய தரத்தில் உருவாக்கியிருக்கும் படம் தான் சப்தம் - நடிகர் ஆதி
Updated on : 20 February 2025

7G Films நிறுவனம் சார்பில் 7G சிவா தயாரிப்பில், ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் “சப்தம்”.
காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக, ஒலியை மையமாக வைத்து, இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. வரும் 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்....
ஓளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் பேசியதாவது…
இயக்குனர் அறிவழகன் சாருடைய ஈரம் திரைப்படத்தில் நான் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன். அதன் பிறகு தான் நான் ஒளிப்பதிவாளராக பணிபுரிய ஆரம்பித்தேன். எனது முதல் படமான “மகாமுனி” திரைப்படத்தை பார்த்து, அறிவழகன் சார் என்னை இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக மாற்றினார். அதற்கு அவருக்கு நன்றிகள். இந்த திரைப்படம் எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிக முக்கியமான படம். இது போல ஒரு படம் மீண்டும் அமைவது கடினம். இந்த படத்திற்காக குழுவாக இணைந்து கடினமான உழைப்பை வழங்கியுள்ளோம். இந்த படத்தில் ஹீரோ சார் முதல், படக்குழுவினர் அனைவரும் முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். இந்த குழுவோடு பயணித்தது மிக்க மகிழ்ச்சி.
எடிட்டர் சாபு ஜோசப் பேசியதாவது....
இந்த மேடையில் நான் நிற்க காரணம், 15 வருடம் முன் ஈரம் படத்தின் டிரெய்லரை எடிட் செய்ய, இயக்குநர் அறிவழகன் தந்த வாய்ப்பு தான். அதன் பிறகு வல்லினம் அதிலிருந்து, வாழ்க்கை இங்கு வரை என்னைக் கொண்டு வந்துள்ளது. இப்போது சப்தம், இப்படத்தைப் பொறுத்தவரை ஹோம்கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடுவது போலத் தான். கிரியேட்டிவாக வேலை பார்க்க முழு சுதந்திரம் இருந்தது. சின்ன சின்ன விசயங்கள் இதில் நிறைய சேர்த்திருக்கிறார் அறிவழகன். சவுண்டுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்துள்ளோம், கண்டிப்பாக ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஹீரோ ஆதி எனக்கு நண்பர், அவரிடம் என்ன வேண்டுமானாலும் பேச முடியும், இப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகக் கடினமாக உழைத்துள்ளனர். இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும்.
ஆடியோகிராஃபர் உதயகுமார் பேசியதாவது....
அறிவழகனின் ஈரம் தவிர அனைத்து படத்திலும் வேலை பார்த்துள்ளேன், ஈரம் வேலை பார்க்க வில்லை என்ற வருத்தம் இருந்தது, அது இந்தப் படத்தில் நீங்கி விட்டது. பொதுவாக இயக்குநர்கள் கதை சொல்லும் போது, சவுண்டுக்கு என்றே இரண்டு காட்சிகள் வைத்திருக்கிறேன் என்று சொல்வார்கள், ஆனால் இந்தப்படம் முழுவதுமே சவுண்டை வைத்துத் தான். எங்களுக்கு இந்த மாதிரி படம் கிடைப்பது அரிது. எனக்கு இப்படம் கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. என் குருநாதர் தீபன் சக்கரவர்த்தி சார், ஊமை விழிகள் படங்கள் எல்லாம் செய்தவர், இந்தப்படம் ஊமை விழிகள் படம் போன்ற உணர்வைத் தரும். இந்த டிரெண்டில் அந்தப்படம் வந்தால் எப்படி இருக்குமோ? அது மாதிரி இருக்கும். தமிழில் ஒரு சில இயக்குநர்கள் தான் டெக்னிகலாக படம் செய்வார்கள், அதில் அறிவழகன் மிக முக்கியமானவர். தொழில் நுட்ப கலைஞர்கள் சவுண்டுக்கு முக்கியத்துவம் தந்து, பெரும் ஒத்துழைப்பு தந்தனர். தமனின் இசை மிகப்பெரிய பலமாக இருக்கும். ஆதி மிக அற்புதமாக நடித்துள்ளனர். இந்தப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.
இயக்குனர் அறிவழகன் பேசியதாவது....
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, என்னுடைய படம் தியேட்டருக்கு வருகிறது. ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து புதுமை செய்தது போல், இப்படத்தில் சவுண்ட் வைத்துச் செய்யலாம் என்ற போது, நிறைய சவால்கள் இருந்தது. ஈரம் படம் இப்போது வரை டெக்னிகலாக பாராட்டப்படும் படம். தண்ணீரில் ஹாரர் எனும் போது, அந்த ஆவியின் உருவத்தைக் காட்டுவது, மிக எளிதாக இருந்தது. ஆனால் சவுண்டை வைத்து பேயை காட்டுவது எப்படி என, கதை எழுதும் போதே சவாலாக இருந்தது. சவுண்டில் தியேட்டரில் டால்ஃபி சவுண்ட் புரமோ வருமல்லவா, அந்த குவாலிட்டியை திரையில் கொண்டு வர திட்டமிட்டோம். 7G Films நிறுவனம் 7G சிவா இப்படத்திற்கு மிக உறுதுணையாக இருந்தார், இந்தப்படத்தின் பட்ஜெட் பெரிதான போது, இந்தப்படத்தின் டெக்னிகல்களை புரிந்து கொண்டு, இப்படத்திற்கு முழு ஆதரவாக நின்றார். அவர்கள் ஏற்கனவே டிஸ்டிரிபூசனில் இருந்ததால் படத்தினை பற்றிய முழு புரிதல் அவரிடம் இருந்தது. படம் கேட்கும் அனைத்து செலவுகளையும் செய்யுங்கள் என்றார். அவரால் தான் இந்தப்படம் இந்த அளவு தரத்துடன் வந்துள்ளது அவருக்கு என் நன்றி. மேலும் என் தொழில் நுட்ப கலைஞர்களும் மிக உதவியாக இருந்தார்கள். ஆடியோகிராஃபர் உதயகுமார் என்னுடன் பல காலமாக வேலை பார்த்து வருகிறார். எடிட்டர் சாபு, ஒளிப்பதிவாளர் அருண், இசையமைப்பாளர் தமன் எல்லோரும் இணைந்து இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். மற்ற ஹாரர் படத்திலிருந்து இந்தப்படத்தில் என்ன வித்தியாசம்? ஹாரரில் பல ஜானர்கள் இருக்கிறது எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஈரம் படம் உங்களை ஒரு அனுபவத்திற்குள் கொண்டு சென்றது போல, இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஒளிப்பதிவாளர் இந்தப்படத்தில் புளூ டோன் வைக்கலாம் என்றார், அது மிக வித்தியாசமாக இருக்கும். சாபு ஜோசப் அவரும் இப்படத்தில் நிறைய புதுமைகள் செய்துள்ளார். படத்தில் என் வியூ தவிர அவரோட வியூ எப்படி இருக்கிறது எனப் பார்ப்பேன், அதில் அவர் கடினமாக உழைத்துள்ளார். அவருக்கு நன்றி. விவேகா என் எல்லாப்படங்களிலும் வேலை பார்த்துள்ளார், இந்தப்படத்திலும் பாடல்கள் நன்றாக இருக்கும். ஆர்ட் டைரக்டர் மனோஜ் மிக வித்தியாசமான செட்டை அமைத்துத் தந்தார். சவுண்ட் உதயகுமார் சார், பல விசயங்கள் புதுமை செய்துள்ளார். அவர் நிறைய பெரிய படங்கள் செய்து வருகிறார். இந்தப்படத்தில் எங்கே சவுண்ட் வேண்டும், எங்கு வேண்டாம் என நிறைய விவாதித்தோம். அதை மிகக் கச்சிதமாக செய்துள்ளார். ரொம்ப நாட்களாக ஆதி சாரும் நானும் வேலை செய்ய, பேசி வந்தோம், இந்தப்படத்தை கதை சொன்னவுடன் செய்யலாம் என்றார், அவர் தயாரிப்பில் ஃபர்ஸ்ட் காப்பியில் இப்படத்தைச் செய்துள்ளேன், தமனை நிறையத் தொந்தரவு செய்துள்ளேன், ஆனால் அதை எல்லாம் கடந்து, அவர் பின்னணி இசை வரும் போது பிரமிப்பாக இருந்தது. நாம் நினைத்த கதையை ஒருவர் நம்பி உள்ளே வர வேண்டும், அது தான் எனக்கு கம்ஃபடபிள், ஆதி என்னை நம்பி உள்ளே வந்தார். இந்தப்படம் மிகவும் வித்தியாசமான ஹாரர் அனுபவமாக இருக்கும். என் நேர்மை தான் என்னை இங்கு கொண்டு வந்துள்ளது என நம்புகிறேன், இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.
நடிகர் ஆதி பேசியதாவது....
இந்த மேடை மிக முக்கியமானது. "சப்தம்" என் நண்பர்களிடம் இந்தப்படம் பற்றி சொல்லும் போது ஏன் ஹாரர் எனக் கேட்பார்கள், ஹாரர் என்றாலே கொஞ்சம் கீழாக பார்க்கும் பார்வை இருக்கிறது, அப்போ ஈரமும் ஹாரர் தானே என்பேன், ஈரம் சூப்பராக இருக்கும் என்று பாராட்டுவார்கள். அது ஹாரரில் வித்தியாசமாக இருக்கும் என்று பாராட்டுவார்கள், அது தான் அறிவழகன் சார், அவர் இயக்கத்தில் ஈரம் மாதிரி இன்னொரு படம் கிடைக்குமா? என நினைத்துள்ளேன், அதை மீண்டும் அறிவழகன் எனக்குத் தந்துள்ளார். இந்தப்படத்தில் பாராநார்மல் இன்வஸ்டிகேட்டராக நடித்துள்ளேன், இது முழுக்க முழுக்க இந்த டீமின் படம், அவர்கள் உழைப்பு தான் முழுப்படமும். ஹாலிவுட் படம் மாதிரி என அடிக்கடி சொல்வோம் ஆனால் இங்கு நம்ம சினிமாவை ஹாலிவுட்டை தாண்டிய தரத்தில் உருவாக்கியிருக்கும் படம் தான் சப்தம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
இப்படத்தில் ஆதி நாயகனாக நடிக்க லக்ஷ்மிமேனன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி ஆகியோர் மிக முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்.
225 க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்தும், திரௌபதி, ருத்ர தாண்டவம், படங்களை இணைத்தயாரிப்பு செய்த 7G Films நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சிவா, முதல் முழுமையான தயாரிப்பாக, இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக தயாரித்துள்ளார். நடிகர் ஆதியின் திரை வாழ்க்கையில், இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது.
ஈரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி, இசையமைப்பாளர் தமன் இப்படத்தில் இணைந்துள்ளனர். மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பில், உலகத்தரத்தில் ஒரு அதிரடியான திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. சத்தங்களையே மிக வித்தியாசமாக உருவாக்கி ஒரு புதுமையான ஹாரர் அனுபவத்தை இசையில் கொண்டு வந்துள்ளார் தமன்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வரும் 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
சமீபத்திய செய்திகள்
FICCI ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (தெற்கு) அமைப்பின் தலைவராக கமல் ஹாசன் அறிவிக்கப்பட்டார்!
சென்னை, 21 பிப்ரவரி 2025: சென்னையில் இன்று நடைபெற்ற ‘ஃபிக்கி (FICCI) ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு (MEBC)–சவுத் கனெக்ட் 2025’-ஐ தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின், நடிகர் மற்றும் இயக்குநர் கமல் ஹாசனுடன் இணைந்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் FICCI ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (தெற்கு) அமைப்பின் தலைவராக கமல் ஹாசன் அறிவிக்கப்பட்டார்.
உலகளாவிய பொழுதுபோக்கு சந்தையில் இந்தியாவின் இடத்தை வடிவமைப்பதில் பிராந்திய மொழிகள் திறன்வாய்ந்த சக்திகளாக உருவாகி வருவதையும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி வருவதையும் கருத்தில் கொண்டு, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பான FICCI இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு நாள் நிகழ்வை சென்னையில் நடத்துகிறது. திரைப்படம், தொலைக்காட்சி, ஓடிடி, கேமிங், அனிமேஷன் மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்கு ஆகியவற்றின் எதிர்காலத்தை ஆராய்வதற்கான முக்கிய தளமாக செயல்படுவதை இந்நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் படைப்புலக பொருளாதாரத்தில் புதுமை, ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு இது அடித்தளம் அமைக்கிறது.
உலகளாவிய அங்கீகாரத்தை ஈர்ப்பதில் பிராந்திய மொழிகளின் முக்கியத்துவத்தை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் வலியுறுத்தினார். தமிழ்நாட்டை ஒரு பொழுதுபோக்கு மையமாக மாற்ற வேண்டும் என்ற டாக்டர் கலைஞர் (டாக்டர் கருணாநிதி) அவர்களின் கனவை நனவாக்குவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தினார். சென்னையில் 152 ஏக்கர் பரப்பளவில் ஒரு அதிநவீன திரைப்பட நகரத்தை நிறுவுவது இந்த பயணத்தில் ஒரு முக்கிய முயற்சியாக திகழும். இந்த உலகத்தரம் வாய்ந்த நகரத்தில் அதி நவீன போஸ்ட்-புரொடக்ஷன் ஸ்டுடியோக்கள், மெய்நிகர் தயாரிப்பு தொழில்நுட்பங்கள், அனிமேஷன் மற்றும் VFX ஸ்டுடியோக்கள், LED சுவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான 5 நட்சத்திர ஹோட்டல் என அனைத்து வசதிகளும் இடம்பெறும்," என்று திரு. உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
டாக்டர் கருணாநிதியின் கனவை நிறைவேற்றும் நோக்கில் மற்றுமொரு முக்கியமான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். “2010ம் ஆண்டு, டாக்டர் கலைஞர் ஆட்சிக் காலத்தில், கேளம்பாக்கம் அருகே 90 ஏக்கர் நிலம் திரைப்படத் துறை அமைப்புகளுக்கு குடியிருப்பு வளாகங்கள் கட்டுவதற்காக 99 ஆண்டு குத்தகைக்கு ஒதுக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும், ஆனால் பயனாளிகளால் அதை முடிக்க முடியவில்லை, இதனால் உத்தரவு செல்லாமல் போனது. திரையுலக சங்கங்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, நமது முதலமைச்சர் அந்த உத்தரவைத் திருத்தி, நிலத்தை திரையுலகினர் பயன்படுத்த அனுமதித்துள்ளார். திருத்தப்பட்ட உத்தரவு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது,” என்றார்.
திரு கமல்ஹாசன் பேசுகையில், "இந்திய சினிமா நமது கலாச்சாரத்தின் உண்மையான தூதராக திகழ முடியும். இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு ஒரு நீண்டகால தொலைநோக்கு திட்டம் நமக்கு தேவை. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் கட்டுப்படுத்தாமல் சந்தை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்,” என்று கூறினார்.
“மேலும், சினிமா மீதான மாநில பொழுதுபோக்கு வரியை மறுபரிசீலனை செய்து சீர்திருத்த வேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக துணை முதல்வரிடம் தெரிவிக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
FICCI ஊடக மற்றும் பொழுதுபோக்கு குழுவின் தலைவரும், ஜியோஸ்டார் பொழுதுபோக்கு - தலைமை நிர்வாக அதிகாரியுமான கெவின் வாஸ் பேசுகையில், “தென்னிந்திய பொழுதுபோக்கு துறை நாடு தழுவிய வளர்ச்சியை அடைந்து, உலகளாவிய கவனத்தையும் ஈர்த்துள்ளது, இதற்கு உதாரணமாக திரு. கமல்ஹாசன் போன்ற பிரபலங்கள் உள்ளனர். அவர்களின் படங்கள் பல ஆண்டுகளாக எல்லைகளை கடந்து வெற்றி பெற்றுள்ளன. ஆர் ஆர் ஆர் மற்றும் கே ஜி எஃப்-2 போன்ற படங்களாலும், தமிழ் சினிமாவின் கதைசொல்லலாலும் கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய திரைத்துறை மறுமலர்ச்சி, இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையை தொடர்ந்து முன்னெடுத்து செல்கிறது.
டிஜிட்டல் ஊடகங்கள் வேகமாக வளர்ந்து வருவதால், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஆகிய இரண்டு துறைகளும் இணைந்து செழிக்கும் மகத்தான திறனை கொண்டுள்ளன. விரைவில் தொடங்கப்பட உள்ள வேவ்ஸ் போன்ற அமைப்புகள் மற்றும் புதுமையான தொடர் முயற்சிகளின் காரணமாக இந்திய பொழுதுபோக்கு துறை உலகளாவிய பாய்ச்சலுக்கு தயாராக உள்ளது," என்றார்.
இந்த இரண்டு நாள் மாநாட்டில் அறிவுசார் அமர்வுகள், கூட்டங்கள், பயிற்சி பட்டறைகள், உள்ளடக்க சந்தைகள் மற்றும் கண்காட்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் வளர்ந்து வரும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் முக்கிய அம்சங்களை இந்த மாநாடு ஆய்வு செய்யும். இந்திய சினிமாவின் உலகளாவிய செல்வாக்கு, தொலைக்காட்சி மற்றும் OTT துறைகளால் ஏற்பட்டுள்ள மாற்றம், ஒளிபரப்பு மற்றும் இசை நுகர்வை மறுவரையறை செய்யும் புதுமை திட்டங்கள் மற்றும் கேமிங், அனிமேஷன், VFX உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் எழுச்சி ஆகியவை மீது முக்கிய கவனம் செலுத்தப்படும். மேலும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் வணிகம் செய்வதை எளிமைப் படுத்துவது (EoDB), ஒழுங்குமுறை அமைப்புகள், கொள்கைகள், தடையற்ற, வளர்ச்சி சார்ந்த தொழில் சூழல் பற்றிய விவாதங்கள் நடைபெறும்.
PlayNext - டெவலப்பர் தினம் என்ற சிறப்புப் பிரிவு, கேமிங், இணைய விளையாட்டு மற்றும் இது சார்ந்த பொழுதுபோக்குகள் குறித்து ஆராயும். AVGC-XR துறையில் உலகளாவிய முன்னோடியாக இந்தியா உருவெடுப்பதை இது வெளிப்படுத்தும்.
FICCI ஊடக மற்றும் பொழுதுபோக்கு குழுவின் இணைத் தலைவர் & மெட்டா நிறுவன துணைத் தலைவர் மற்றும் இந்திய தலைவர் சந்தியா தேவநாதன்; FICCI ஊடக மற்றும் பொழுதுபோக்கு குழுவின் இணைத் தலைவர் & வார்னர்ஸ் பிரதர்ஸ் டிஸ்கவரி மூத்த துணை தலைவர் மற்றும் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான தலைமை மேலாளர் அர்ஜுன் நோஹ்வர்; மற்றும் FICCI தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். ஆஷிஷ் பெர்வானி, ரவி கொட்டாரகரா, கார்த்திகேயன் சந்தானம், சஞ்சய் ஏ. வாத்வா, அங்கூர் வைஷ், ஸ்வேதா பாஜ்பாய், மகேஷ் ஷெட்டி, கிருஷ்ணன் குட்டி, ரவிகாந்த் சப்னவிஸ், முஞ்சல் ஷ்ராப், வைபவ் சவான், ஜேக்ஸ் பிஜாய், பிஜாய் அற்புதராஜ், ஆஷிஷ் குல்கர்னி உள்ளிட்ட திரையுலக முன்னணியினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னரான 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ராஜ்கமல் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் , யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான காணொளி வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை' எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத, இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான ஷான் ரோல்டன் மற்றும் பின்னணி பாடகி சைந்தவி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
'டெண்ட் கொட்டா' ஓடிடியில் வெளியாகி ட்ரெண்டிங்கில் அசத்தும் 'லாரா'!
இந்தப் புதிய ஆண்டு 2025தொடக்கத்தில் முதலில் வெளியான க்ரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'.
இந்தத் திரைப்படத்தில் கார்த்திகேசன், அசோக் குமார் ,அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, மேத்யூ வர்கீஸ், வர்ஷினி,பாலா,எஸ். கே. பாபு, திலீப்குமார்,இ .எஸ் . பிரதீப் நடித்து இருந்தனர்.
மணி மூர்த்தி இயக்கியிருந்தார். ஒளிப்பதிவு ஆர் ஜே ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார்.கார்த்திகேசன் தயாரித்திருந்தார்.
காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தத் திரைப்படம் உருவாகியிருந்தது. கார்த்திகேசன் இன்ஸ்பெக்டர் கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது பேசப்பட்டது.
இப்படத்தைப் பார்த்த பத்திரிகை, ஊடக நண்பர்கள் கடைசி வரை சஸ்பென்சை சிதற விடாமல் பராமரித்து,யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ் கொண்ட ஒரு திருப்தியான க்ரைம் திரில்லர் படத்தைப் பார்த்த அனுபவம் ஏற்பட்டது என்று படக்குழுவினைப் பாராட்டி இருந்தார்கள். படத்திற்கு நல்ல மாதிரியான நேர் நிலையான விமர்சனங்கள் வந்திருந்தன.
உதாரணத்திற்குச் சில:
படங்களைத் தர நிர்ணயம் செய்யும் IMDB படத்திற்கு 10 க்கு 9.9 தர மதிப்பெண்கள் கொடுத்திருந்தது.'புக் மை ஷோ 'தளம் 10 க்கு 9 குறியீட்டைக் காட்டியது.
தமிழின் முன்னணி இதழான தினத்தந்தி 'துப்பறியும் திரில்லர் கதையை அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பையும் பதற்றத்தையும் எகிற வைக்கும் வகையில் சஸ்பென்ஸ் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்தி திறமையான இயக்குநராக கவனம் பெறுகிறார் மணி மூர்த்தி 'என்றும் 'கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம் 'என்றும் பாராட்டிருந்தது .
இந்து தமிழ் திசை இதழ் 'யூகிக்க முடியாத ஆனால் நம்பகமான திருப்பங்களால் நிறைந்த திரைக்கதையால் இரண்டு மணி நேரமும் விறுவிறுப்பு' என்று கூறியிருந்தது.
தினகரன் இதழ், 'ரகு ஸ்ரவன் குமாரின் பின்னணி இசை, கிரைம் த்ரில்லருக்குத் தேவையான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 'என்று பாராட்டியது.
மாலைமலர் இதழ், 'யாருமே எதிர்பாராத திருப்பத்தை இறுதிக்காட்சிகளில் வெளிப்படுத்தி இருப்பது சிறப்பாக அமைந்துள்ளது. சுவாரசியம் நிறைந்த கிரைம் திரில்லர் படமாக லாரா படம் அமைந்துள்ளது 'என்று பாராட்டியது.
ZEE தமிழ் NEWS, ' க்ரைம் தில்லர் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு' லாரா' நிச்சயம் பிடிக்கலாம்' என்று கூறியது.
டெக்கான் க்ரானிக்கல் ஆங்கில இதழ் ,' ஒரு சிறு நகரம் சார்ந்த மர்மக் கதையாக இது சரியாக எடுக்கப்பட்டுள்ளது' என்று பாராட்டியது. அது மட்டுமல்லாமல் நான்கரை நட்சத்திர மதிப்பையும் கொடுத்து இருந்தது.
இவ்வாறு ஊடகங்களில் கவனம் பெற்றுப் பாராட்டுகளைப் பெற்ற 'லாரா' படம்
வணிகரீதிலும் வெற்றி பெற்று இந்த ஆண்டின் திரைப்படங்களிலேயே முதலில் வெற்றிக்கனி ருசித்த படம் என்ற பெருமையைப் பெற்றது.
இப்போது 'லாரா' திரைப்படம் 'டெண்ட் கொட்டா' ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகி அடுத்த தளத்திலான ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. வெளியான அன்றே ட்ரெண்டிங்கில் இடம் பெற்று அசத்தியது. படக் குழுவினர் படத்தின் அடுத்த வெற்றிப் பரிமாணத்தை சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
'ஃபயர்' படத்தின் வெற்றியை கேக் வெட்டி குழுவினர் கொண்டாடினார்கள்!
கடந்த வாரம் வெளியான 'ஃபயர்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் இயக்குநராகவும் அழுத்தமான முத்திரை பதித்துள்ள வெற்றிப்பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜெ எஸ் கே, 'ஃபயர்' திரைப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் சென்னையில் உள்ள காசி டாக்கீஸில் நேற்றிரவு (பிப்ரவரி 19) கொண்டாடினார்.
வார நாளின் இரவுக் காட்சியிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிய 'ஃபயர்' திரைப்படம் நிறைவடைந்தவுடன் திரையரங்கு நிர்வாகிகளின் உற்சாக அனுமதியோடு ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளுக்கு மத்தியில் படத்தின் வெற்றியை கேக் வெட்டி குழுவினர் கொண்டாடினார்கள்.
ஜெ எஸ் கே, பாலாஜி முருகதாஸ், சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், அனு, ஜீவா உள்ளிட்ட படக்குழுவினர் இதில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நாயகன் பாலாஜி முருகதாசுக்கு 'ஃபயர்' திரைப்படத்தை ஜெ எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாரித்து இயக்கியுள்ள ஜெ எஸ் கே தங்க சங்கிலியை பரிசாக வழங்கினார்.
படத்தின் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜெ எஸ் கே கூறியதாவது: "ஃபயர்' திரைப்படத்திற்கு பேராதரவு வழங்கிய பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நல்ல கதைக்கும், கடின உழைப்புக்கும் மக்கள் எப்போதும் ஆதரவளிப்பார்கள் என்பதற்கு 'ஃபயர்' படத்தின் வெற்றி சாட்சி.
பார்வையாளர்கள் காட்சிக்கு காட்சி கைதட்டி ரசிக்கிறார்கள். யூகிக்க முடியாத கிளைமேக்ஸ் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வார நாட்களிலும் கூட்டம் குவிவதால் திரையரங்கு உரிமையாளர்கள் இரண்டாவது வாரத்திலும் காட்சிகள் மற்றும் திரைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்கள். உண்மையான வெற்றிக்கு இது அடையாளம். சின்ன படத்தை பெரிய படமாக்கிய மக்களுக்கே இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்."
'ஃபயர்' படத்தின் வெற்றி தனக்கும் தனது குழுவினருக்கும் பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்துள்ளதாகவும், தரமான படைப்புகளை தொடர்ந்து ரசிகர்களுக்கு வழங்க உறுதி பூண்டுள்ளதாகவும் ஜெ எஸ் கே தெரிவித்தார்.
கதையின் நாயகர்களால் நிரம்பி வழிகிற படம் 'நிறம் மாறும் உலகில்' - 'பிக் பாஸ்' முத்துக்குமரன்
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், 'ஆடுகளம்' நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷி காந்த், கனிகா, ஆதிரா , காவ்யா அறிவுமணி, துளசி, ஐரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஏகன், விஜித், ஜீவா சுப்ரமணியம், திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மல்லிகார்ஜுன்- மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராம் - தினேஷ் - சுபேந்தர் - ஆகிய மூவர் கலை இயக்குநர்களாக பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் கவனித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகின் பிரபலமான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பட குழுவினருடன் 'பிக் பாஸ்' முத்துக்குமரன் , தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் தயாரிப்பாளர் பாலா சீதாராமன் வரவேற்று பேசுகையில்,
'' திரையுலகில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடும்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு தொழில்நுட்ப கலைஞராக அனைத்து பிரிவுகளிலும் தேர்ச்சிப் பெற்று வாய்ப்பு தேடிய போதும் கலைத்தாய் எங்களுக்கு சரியான வாய்ப்பை வழங்கவில்லை. இந்த தருணத்தில் என்னுடைய நண்பர்களுடனும், என்னுடைய சகோதரர்களுடனும் இணைந்து வாய்ப்பை உருவாக்குவோம் என எண்ணியும், மற்றவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என தீர்மானித்தும் தயாரிப்பாளராக மாறினோம். எங்களுடைய ஜி எஸ் சினிமாஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், சிக்னேச்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து 'நிறம் மாறும் உலகில்' எனும் இப்படத்தை தயாரித்திருக்கிறோம். இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் பிரிட்டோவையும் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள் ,தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள், உறவினர்கள் , மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். நாங்கள் தொடர்ந்து புதிய இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளிக்க காத்திருக்கிறோம். 'நிறம் மாறும் உலகில்' திரைப்படம் மார்ச் 7ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
இசையமைப்பாளர் தேவ்பிரகாஷ் பேசுகையில்,
''இது என்னுடைய முதல் படம். இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் வியப்பாகவும் , மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஒவ்வொரு கலைஞர்களுக்கும் சிறப்பு என்னவென்றால் அவர்களுடைய முதல் திரைப்படம். என்னுடைய முதல் திரைப்படமாக 'நிறம் மாறும் உலகில்' அமைந்ததில் மிகவும் சந்தோஷம். இதில் நடித்திருக்கும் பாரதிராஜா ஐயா , ரியோ அண்ணன், சாண்டி அண்ணன், நட்டி சார் உள்ளிட்ட பலருக்கும் இசையமைப்பேன் என நான் கனவில் கூட நினைத்ததில்லை. இதனை சாத்தியப்படுத்திய இயக்குநருக்கும் ,, தயாரிப்பாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னிடம் இருக்கும் இசைத் திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்திய நடிகர் ரியோ ராஜுக்கு நன்றி. இயக்குநர் பிரிட்டோ என்னுடைய நண்பர். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது அவரிடம் சில இசையமைப்பாளர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் இசையமைத்தால் சிறப்பாக இருக்கும் என ஆலோசனை கூறிக் கொண்டே இருந்தேன். அனைத்தையும் கேட்டுவிட்டு, இறுதியில் 'நீ தான் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர்' என சொன்னார். அதனால் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.
நடிகை ஜீவா சுப்பிரமணியம் பேசுகையில்,
'' இது என்னுடைய 25 ஆவது படம். இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநர் பிரிட்டோவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் போது எனக்கும் முக்கியத்துவம் கொடுத்து பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு இருந்தார்கள். அது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. இந்த திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் எமக்கும் முக்கியத்துவம் கொடுத்ததற்கு தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.
இந்தத் திரைப்படம் சொல்ல முடியாத ஒரு ரணத்தை சொல்ல முயற்சிக்கிறது. அது என்ன? என்பதை மார்ச் ஏழாம் தேதி என்று அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இயக்குநர் பிரிட்டோ தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக உயர்வார். இப்படத்தில் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
நடிகை ஆதிரா பேசுகையில்,
' இந்தப் படத்தில் நான் ரியோ ராஜின் தாயார் பரிமளம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் பிரிட்டோவின் அன்பிற்காக அனைத்து நட்சத்திரங்களும் இந்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பொறுமையுடன் அனைவரையும் மதித்து நடந்து கொண்டார். இதற்காகவே அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு ஆண் இருப்பார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னாலும் ஒரு பெண் இருப்பார். இதைத்தான் இந்த திரைப்படம் வலியுறுத்துகிறது'' என்றார்.
நடிகை விஜி சந்திரசேகர் பேசுகையில்,
'' இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு என் மகள் மூலமாக கிடைத்தது. இந்தப் படத்தில் என் மகள் லவ்லின் நடித்திருக்கிறார். அவருடைய அம்மாவாக நடிக்கிறீர்களா? என கேட்டார்கள். இந்தப் படத்தில் நானும், என் மகளும் நடித்திருக்கிறோம்.
இந்த திரைப்படத்தில் ரசிகர்கள் எதிர்பாராத விசயங்கள் நிறைய இருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் மிகவும் நெருக்கமாக பார்த்த பல விசயங்கள் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கிறது. '' என்றார்.
நடிகர் ஏகன் பேசுகையில்,
" நண்பர்களாக இணைந்து திரைப்படத்தில் பணியாற்றுவது உண்டு. இந்த திரைப்படத்தில் அனைவரும் சகோதரர்களாக இணைந்து பணியாற்றிருக்கிறோம். சகோதரர்களாக இணைந்து பணியாற்றினால்.. அது அம்மாவை பற்றிய படமாக தான் இருக்கும். இது அம்மாவை பற்றிய படம். மார்ச் ஏழாம் தேதி வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
தயாரிப்பாளர் - விநியோகஸ்தர் தனஞ்ஜெயன் பேசுகையில்,
'' இந்தப் படத்தின் முன்னோட்டம் மிகச் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக நட்டி நட்ராஜ் பின்னணி குரல் கம்பீரமாகவும், புது வடிவத்தையும் கொடுத்திருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் அவர் காந்த குரலில் அட்டகாசமாக கதையை சொல்லி இருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கு ஏதாவது ஒரு விசயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அது இதுவாக இருக்கும் என்று நம்புகிறேன். இதற்காக நட்டி நட்ராஜ்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் ரியோ ராஜுக்கும் நன்றி. சாண்டி மாஸ்டர் நடனத்தில் மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிப்பிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். 'மதிமாறன்' எனும் திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெறும் என வாழ்த்துகிறேன். '' என்றார்.
நடிகை காவ்யா அறிவுமணி பேசுகையில்,'' இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான தருணம். ஆம்பூர் எனும் ஊரிலிருந்து நன்றாக படிப்பதற்காக ஒரு பெண் சென்னைக்கு வருகிறாள். சென்னையில் அரசு பேருந்தில் அந்தப் பெண் பயணித்துக் கொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த நகைக்கடை ஒன்றின் விளம்பரத்தை பார்க்கிறாள். அந்த விளம்பரத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருக்கிறார். அந்த நகைக்கடை விளம்பரத்தை பார்த்த பிறகு, நாமும் ஏன் இது போன்ற விளம்பரங்களில் தோன்றக் கூடாது? என அந்தப் பெண் நினைத்தாள். அதன் பிறகு அதற்காக அந்தப் பெண் தன்னை தயார்படுத்திக் கொண்டாள். அதன் பிறகு குறும்படங்கள், பைலட் படங்கள், விளம்பர படங்கள், தொலைக்காட்சி தொடர்கள்.. என நடித்து ரசிகர்களின் கவனத்தையும், அன்பையும் சம்பாதித்தாள். அந்தப் பெண் நான்தான்.
முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த தருணத்தில் இயக்குநர் பிரிட்டோவிடமிருந்து அழைப்பு வந்தது. இந்தப் படத்திற்கு தேர்வு செய்யும்போது 'இந்தப் படத்தில் நீங்கள் கதாநாயகி இல்லை. ஆனால் இந்த படம் வெளியான பிறகு உங்களுடைய நடிப்புத் திறமை பேசப்படும் ' என இயக்குநர் வாக்குறுதி அளித்தார். அவருடைய வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் கடினமாக உழைத்தார் இயக்குநர் பிரிட்டோ. இந்தப் படம் வெளியான பிறகு அனைவரின் மனதிலும் என்னுடைய கதாபாத்திரம் இடம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். '' என்றார்.
'பிக் பாஸ்' முத்துக்குமரன் பேசுகையில்,
'' இசை வெளியீட்டு விழா என்று சொன்னார்கள். இங்கு இசை வெளியீட்டு மாநாடாக இருக்கிறது. இந்தப் படம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்கு ஏற்படுகிறது என்றால்... இப்படத்தின் கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொள்ளும் நடிகர்களின் பட்டியலை பார்க்கும்போது ஏற்படுகிறது. பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், லிஸி ஆண்டனி.. என நீளும் பட்டியலே இதற்கு சாட்சி. ஒரு படத்தில் கதை நாயகர்கள் இருப்பார்கள் கதையின் நாயகர்களால் நிரம்பி வழிகிற திரைப்படமாக இது இருக்கிறது. இதனை உருவாக்கிய இயக்குநர் பிரிட்டோவின் ஆளுமையை நினைத்து பிரமிக்கிறேன். இந்த கதையில் எப்படி பிரபலங்கள் நிரம்பி வழிகிறார்களோ... அதே போல் இப்படம் வெளியான பிறகு திரையரங்கிலும் ரசிகர்கள் நிரம்பி வழிய வேண்டும் என நான் விரும்புகிறேன். இதற்கு ஊடகங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.
தயாரிப்பாளர் கேத்ரின் ஷோபா பேசுகையில்,
''நிறைய நட்சத்திரங்களை நடிக்க வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் பிரிட்டோவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த குழுவினர் வெற்றி பெறுவதற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
இயக்குநர் பிரிட்டோ பேசுகையில்,
'' இது என்னுடைய முதல் திரைப்படம். நான் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதற்காக நிறைய கதைகளையும் எழுதினேன். இருந்தாலும் இந்த கதையை தான் முதலில் இயக்க வேண்டும் என்று தீர்மானித்தேன் காரணம் அம்மா. அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்வதற்கான எல்லா விசயங்களும் அடங்கிய படமாக இது உருவாகி இருக்கிறது. அம்மாவை பற்றி இதற்கு முன் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கலாம். ஆனால் இது தனித்துவமானது. இது எல்லோருக்கும் பிடிக்கும். மார்ச் ஏழாம் தேதி படம் வெளியாகும் போது திரையரங்குகளில் வருகை தந்து பார்த்த பிறகு உங்கள் அனைவருக்கும் புரியும்.
இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நான் இந்த திரைப்படத்திற்காக பிரபலமான நட்சத்திரங்கள் வேண்டும் என கேட்ட போது எந்தவித தயக்கமும் இல்லாமல் என் அனுபவத்தை பற்றி கூட கேள்வி கேட்காமல் ஒத்துழைப்பு வழங்கினார்கள். முதலில் தயங்கினாலும் பிறகு பணிகள் நடைபெற நடைபெற என் மீதான நம்பிக்கை அவர்களுக்கு அதிகரித்தது.
எனக்கு நடிகர் ஜெய்வந்த் நண்பர். அவர் மூலமாக பாரதிராஜாவை சந்தித்தேன். அவரிடம் கதை சொன்ன போது முழுவதையும் கேட்டுவிட்டு மனதார பாராட்டினார். வயதான தம்பதிகளை கதையின் நாயகனாகவும், நாயகியாகவும் உருவாக்கி கதை எழுதி இருக்கிறாய். இதனாலேயே நீ வெற்றி பெறுவாய் என ஆசீர்வதித்தார். அந்தத் தருணத்தில் தான் இந்த படத்தின் வெற்றியை உணர்ந்தேன். அவரை இயக்கியதற்காகவும், அவரிடம் வாழ்த்து பெற்றதற்காகவும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நட்டி நட்ராஜ் இந்தப் படத்திற்காக பெரிய ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார். மும்பை பின்னணியாக கொண்ட பகுதியில் அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்தை பற்றி நான் இப்போது முழுமையாக விவரிக்க இயலாது. நான் கேட்டுக் கொண்டதற்காகவே முன்னோட்டத்திற்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார். அதுவும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரியோ என் நண்பன். அவருடன் இன்றும் இணைந்து பயணிக்கிறேன். இப்படத்தில் அவர் வழங்கிய ஒத்துழைப்பிற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
'லியோ'விற்கு பிறகு சாண்டி மாஸ்டரை இந்த திரைப்படத்தில் மிகவும் வித்தியாசமாக காண்பீர்கள். உற்சாகமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கதை நரேட்டிவ் ஸ்டோரி. யோகி பாபுவில் தொடங்கி வித்தியாசமான உச்சகட்ட காட்சி வரை பயணிக்கும். இது அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாலும்.. இந்த கதை அம்மாவை பற்றிய கதை என்பதால் தான்...அதன் மீதான ஈர்ப்பின் காரணமாகவே நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். அவர்கள் அனைவரும் அவர்களுடைய அம்மாவுடனான கனெக்சனை திரையில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நீங்கள் அதனை பார்த்து ரசிப்பீர்கள்.
மார்ச் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினம். இதற்குள் இந்த படத்தை ரசிகர்களிடம் சென்றடைய செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் மார்ச் 7ஆம் தேதியை தேர்வு செய்தோம். இந்தப் படம<
புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில் சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2- டிரெய்லர் வெளியானது!
முற்போக்குச் சிந்தனையாளர்களான இரட்டையர்கள் புஷ்கர் & காயத்ரி எழுத்தில் உருவான இந்த சீசன், பிரம்மா & சர்ஜுன் இயக்கத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது
எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரில், கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் தோன்ற அவர்களுடன் இணைந்து லால், சரவணன், கௌரி கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், மோனிஷா பிளெஸ்ஸி ரினி, ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், மற்றும் அஸ்வினி நம்பியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள் நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் நடிகர் கயல் சந்திரன் ஆகியோர் கௌரவ வேடத்தில் தோன்றுகின்றனர்.
சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்தியேகமாகத் திரையிடப்படத் தயாராக உள்ளது.
மும்பை, இந்தியா—பிப்ரவரி 19, 2025— இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ விமர்சன ரீதியாக ஏகோபித்த பாராட்டுக்களை பெற்ற பார்வையாளர்களை புயலின் மையத்துக்குள் கடத்திச் சென்ற அதன் ஒரிஜினல் க்ரைம் த்ரில்லர் தொடர் சுழல்-தி வோர்டெக்ஸ் இரண்டாவது சீசன் இன் மனதைக் கொள்ளை கொள்ளும் டிரெய்லரை வெளியிட்டது. புஷ்கர் (Pushkar) மற்றும் காயத்ரி (Gayatri) ஆகியோரின் எழுத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பிரம்மா (Bramma) மற்றும் சர்ஜுன் KM (Sarjun KM) இயக்கத்தில் உருவான இந்தத் தொடரில், கதிர் (Kathir) மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) மீண்டும் முன்னணி வேடங்களில் தோன்றி நடிக்க, இவர்களுடன் லால் Lal, சரவணன் Saravanan, கௌரி கிஷன் Gouri Kishan (முத்து), சம்யுக்தா விஸ்வநாதன் Samyuktha Vishwanathan (நாச்சி), மோனிஷா பிளெஸ்ஸி Monisha Blessy (முப்பி), ரினி Rini (காந்தாரி), ஷ்ரிஷா Shrisha (வீரா), அபிராமி போஸ் Abhirami Bose (செண்பகம்), நிகிலா சங்கர் Nikhila Sankar (சந்தனம்), கலைவாணி பாஸ்கர்Kalaivani Bhaskar (உலகு), மற்றும் அஸ்வினி நம்பியார் Ashwini Nambiar ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, மஞ்சிமா மோகன் Manjima Mohan மற்றும் கயல் சந்திரன் Kayal Chandran ஆகியோர் கௌரவ வேடங்களில் தோன்றுகின்றனர். சுழல்—தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஆங்கில வசனங்களுடன் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்தியேகமாக ஒளிபரப்பாக உள்ளது.
விருது வென்ற இந்தத் தொடரின் இரண்டாவது சீசன், தமிழ்நாட்டின் காளிபட்டணம் என்ற கற்பனை கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அஷ்டகாளி திருவிழாவின் பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் மூத்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான செல்லப்பா (லால்) மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட அந்தச் சம்பவம், கிராம மக்களை திடுக்கிடச் செய்து முழு கிராமத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடுகிறது அந்த இருண்ட சூழல் அந்த கிராமத்தையும் அந்த கிராம மக்களையும் தாண்டி எல்லைகளைக் கடந்து வெகுதூரம் அதிவேகமாகப் பரவுகிறது. மர்மங்கள் நிறைந்த இனம் புரியாத இந்தக் குற்றத்தின் புதிரை விடுவிக்கும் பணியில் சக்கரை (கதிர்) ஈடுபட, நந்தினியின் (ஐஸ்வர்யா ராஜேஷ்) இன் இருண்ட கடந்த கால வாழ்க்கை நிகழ்வுகள் ஒரு நிச்சயமற்ற எதிர்கால சிறை வாழ்வை நினைவூட்டி அவளை ஆட்டிப்படைக்கிறது. இந்த விசாரணை நடவடிக்கைகள் அவர்கள் இருவரையுமே நய வஞ்சகம், மர்மம், குற்றம், சதி மற்றும் மரணங்கள் நிறைந்த ஒரு சிக்கலான புதிருக்குள் சிக்கவைத்துவிடுவதோடு ஒருவருக்கொருவர் சம்பந்தப்படாத 8 இளம் பெண்கள் இந்த கொலைக் குற்றம் தொடர்பாக முக்கிய குற்றவாளியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் எழ, இந்தச் சிக்கலை கட்டவிழ்க்கமுடியாத ஒன்றாக மேலும் தீவிரப்படுத்துகிறது. இந்த இருண்ட கொடூரமான கொலை நிகழ்வு அவரை முற்றிலும் அழித்துவிடும் முன்பாக இந்தக் குற்றத்தை புலன் விசாரணை செய்து தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடும் சக்கரை, வெளிப்படையான உள் நோக்கங்கள் தனிப்பட்ட பழி வாங்கல்கள், மற்றும் கடந்த கால செயல்பாடுகளை கடந்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
"சுழல் - தி வோர்டெக்ஸ் முதல் சீசனுக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இந்த இரண்டாவது சீசன் பார்வையாளர்களை இன்னும் கூடுதலாக கவர்ந்திழுப்பதை உறுதி செய்ய எங்களது திறனளவு குறியெல்லையை இன்னும் சற்று உயரே அமைத்து அதை நோக்கிப் பயணித்தோம்," என்று இயக்குநர்கள் பிரம்மா மற்றும் சர்ஜுன் KM. கூறினார்கள். "புஷ்கரும் காயத்ரியும் மேலும் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடிய கதையை உருவாக்கி, அதனை அற்புதமாக வடிவமைத்து வழங்கியுள்ளனர் அதற்கு உயிரோட்டம் அளிக்கும் வகையில் நாங்கள் கவனமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இயக்கியுள்ளோம். ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் இணைந்து கதிர் மற்றும் ஐஸ்வர்யா, மீண்டும் ஒரு மனதை மயக்கும் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியதில், இயக்குநர்களாக எங்கள் பணி மிகவும் எளிதாகிவிட்டது. சுழல் - தி வோர்டெக்ஸ் உலகில் பார்வையாளர்கள் மீண்டும் ஒருமுறை தங்களை மூழ்கடித்துக்கொண்டு பரவசமடைவதை காண நாங்க ஆவலோடு காத்திருக்கிறோம் மற்றும் இந்த இரண்டாவது சீசன் அவர்களை நம்பமுடியாத அளவிற்கு ஈர்ப்பதாக உணருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்."
"தமிழ் கதைசொல்லலில் புரட்சிகரமான ஒரு புதிய பாணியை கடைப்பிடித்து நமது கலைத் துறையை உலகளவில் புகழ் பெறச்செய்து, தேசிய அளவில் பல விருதுகளை பெற்ற சூழல் - தி வோர்டெக்ஸ் தொடரின் இரண்டாவது சீசனில் சப்-இன்ஸ்பெக்டர் சக்கரையாக மீண்டும் தோன்றி நடிப்பதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். இரண்டாவது சீசனுக்காக மேலும் ஒரு ஆர்வத்தை தூண்டும் பரபரப்பான பொழுதுபோக்கு கதையை வடிவமைத்த புஷ்கர் மற்றும் காயத்ரி.. இருவரும் உண்மையிலேயே தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு புரட்சிகரமான படைப்பாளிகள் . இதன் முதல் சீசன் மற்றும் அதில் நான் வெளிப்படுத்திய நடிப்பு இரண்டுக்கும் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கிடைத்த அமோக வரவேற்பு உண்மையிலேயே மனதளவில் என்னை உற்சாகமடையச் செய்துவிட்டது, மேலும் அனைவரும் அதே அளவுக்கு அல்லது அதற்கும் அதிகமாக இரண்டாவது சீசனையும் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று கதிர் கூறினார்.
"சுழல் - தி வோர்டெக்ஸ் என் மனதுக்கு நெருக்கமான பெருமைக்குரிய மறக்கமுடியாத ஒரு படைப்பாக எப்போதும் நிலைத்திருக்கும். மேலும் தொடரின் முதல் சீசனில் எனது நடிப்பிற்காக ரசிகர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அன்பு மற்றும் பாராட்டுகளில் இருந்து இன்னும் நான் மீள முடியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறேன். தனது தங்கையைத் தேடிச் செல்வது தொடங்கி மறக்க நினைத்த நினைவுகளை சுமந்து மீண்டும் வாழ்க்கையை தொடர்ந்து தனக்கும், தன் சகோதரிக்கும் எதிராகச் செய்யப்பட்ட கொடூரமான குற்றத்திற்குப் பழி வாங்கியது வரையிலான நந்தினியின் பாத்திரத்தில் நடித்தது... நடிப்பது.... ஒரு முழுமையான ரோலர் கோஸ்டர் பயணமாக எளிதில் மறக்க முடியாத அனுபவத்தை தந்தது. இரண்டாவது சீசனிலும் அந்த பயங்கரம் அவளை விட்டு விலகுவதாக இல்லை, அவள் மற்றொரு மர்மம் நிறைந்த கொடூரமான கொலைக்கு மத்தியில் தான் சிக்குண்டுள்ளதை காண்கிறாள். முதல் சீசன் உற்சாகமளித்ததாக, பார்வையாளர்கள் கருதியிருந்த நிலையில் இந்த இரண்டாவது சீசன் அவர்கள் எதிர்பாராத அளவு மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் அளிக்கும். இது உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் திரையிடப்படுவதை காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன்." என கூறினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
19 நாளில் இவ்வளவு குவாலிட்டியாக படத்தை முடிப்பது அத்தனை எளிதில்லை - நடிகை லிஜோமோல் ஜோஷ்
Komala Hari Pictures & One Drop Ocean Pictures தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சமூகத்தில் குடும்ப அமைப்பை பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜென்டில்வுமன் ”.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர் பேசியதாவது...
ஸ்கூலில் பேசக் கூப்பிட்டாலே ஓடிப்போயிடுவோம் இந்த மேடை பதட்டமாக இருக்கிறது. இந்தப்படத்தின் கதை கேட்டவுடனே படு இண்ட்ரஸ்டிங்காக இருந்தது. இயக்குநர் சொன்ன மாதிரியே படத்தை எடுத்தார். எந்த செலவும் இழுத்து விடவில்லை, மிக அழகாக படத்தை எடுத்துள்ளார். எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.
One Drop Ocean Pictures சார்பில் தயாரிப்பாளர் லியோ பேசியதாவது..
ஜென்டில்வுமன் கதையை ஜோஷ்வா சொன்ன போது, இப்படத்தில் அழுத்தமான கதை இருப்பது புரிந்தது. மிகத் தெளிவாக சமூகம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து கதையிலிருந்தது. இந்தக்கதை பிடித்து எதையும் யோசிக்காமல் தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர்கள் ஹரி பாஸ்கர், கோமளா மேடம் இருவருக்கும் நன்றி. இப்படத்தைப் புரிந்து கொண்டு, உழைப்பைத் தந்த கலைஞர்கள், நடிகர்கள் லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி. லிஜோமோல் ஜெய்பீமில் பார்த்ததை விட, மிகச்சிறப்பாக நடித்துள்ளார். லாஸ்லியாவுக்கு மிக அழுத்தமான பாத்திரம், ஒரு காட்சியில் லிஜோமோல், லாஸ்லியா இருவரும் கலக்கியிருக்கிறார்கள். வசனம் பாடல் வரிகள் யுகபாராதி அண்ணா, அவர் இப்படத்திற்குக் கிடைத்தது வரம். எந்த சாதியிலும் ஆணாதிக்கம் இன்றும் இருக்கிறது, அதைச் செருப்பால் அடித்த மாதிரி மிக அழுத்தமாகச் சொல்லியுள்ளார் இயக்குநர். ஹரி பிரதர் என்ன கேரக்டர் கொடுத்தாலும் தனித்துவமாகச் செய்வதைப் பார்த்து வியந்திருக்கிறேன். இப்படத்தில் கண்ணிலேயே நடித்துள்ளார். படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் , படத்தை வெளியிடும் உத்ரா புரடக்சனுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி.
எடிட்டர் இளையராஜா சேகர் பேசியதாவது...
இயக்குநர் ஜோஷ்வாவை இந்தப்படத்திற்குப் பிறகு அனைவருக்கும் தெரியும். தயாரிப்பாளர் ஹரி சார், இன்று தான் அவரை நேரில் பார்க்கிறேன், படத்திற்காகக் கேட்ட அனைத்தையும் தந்துள்ளார். லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் மூவருடைய நடிப்பையும் திரையில் பாருங்கள், அசத்தியிருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். ஒளிப்பதிவாளர் காத்தவராயன் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். யுகபாரதி அண்ணா வசனங்கள் படத்திற்கு பலம். படம் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும், அனைவருக்கும் நன்றி.
நடிகை தாரணி பேசியதாவது...
எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு என் நன்றி, என் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. என் கோ ஆக்டர்ஸ் லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் மூவருடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம், மூவருக்கும் நன்றி. படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. மார்ச் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
ஒளிப்பதிவாளர் காத்தவராயன் பேசியதாவது...
எங்கள் படத்தை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. லிஜோமோல் ஜோஷ், ஹரி கிருஷ்ணன் இருவரும் நடிப்பார்கள் எனத் தெரியும், அவர்களுடைய படங்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் லாஸ்லியா எப்படி நடிப்பார் எனத் தயக்கமாக இருந்தது, ஆனால் படம் பார்த்த பிறகு தான் தெரிந்தது, மூன்று பேரும் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா 96 பார்த்த போதே பிடிக்கும், இப்படத்தில் இன்னும் அட்டகாசமாக இசையமைத்துள்ளார். பாடல் வரிகள், வசனம் மிக அருமையாகத் தந்த யுகபாரதி அண்ணாவுக்கு நன்றி. இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் உதவி இயக்குநராக இருக்கும் போதே, நிறைய டார்ச்சர் செய்வான், இப்போது என்ன பண்ணப் போகிறானோ? என நினைத்தேன், ஆனால் இப்படத்தை மிக அமைதியாக அழகாக எடுத்துள்ளான். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
உத்ரா புரடக்சன்ஸ் சார்பில் ஹரி உத்ரா பேசியதாவது...
எங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து வெளியிட்டு வரும் அனைத்து படங்களுக்கும், நல்ல ஆதரவு தந்து வருகிறீர்கள், ஜென்டில்வுமன் இதுவரை நாங்கள் வெளியிட்ட படத்திலிருந்து, வித்தியாசமான படமாக இருக்கும். இந்த படத்தை வெளியிட எங்களுக்கு வழி ஏற்படுத்தித் தந்த, ரிஸ்வான் அண்ணனுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் ஹரி பாஸ்கர், கோமளா மேடம் மற்றும் நேதாஜி சார் ஆகியோருக்கு நன்றி. இயக்குநர் ஜோஷ்வா எந்தவொரு விசயத்தையும் மிக எளிதில் ஒத்துக் கொள்ள மாட்டார், எந்த விஷயமாக இருந்தாலும், மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார். இந்த படத்தின் ரிலீஸுக்கு அவரும் நானும் இணைந்து, நிறைய ஐடியாக்கள் ரெடி செய்து வைத்திருக்கிறோம். மார்ச் ஏழாம் தேதி இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
ஆர்ட் டைரக்டர் அமரன் பேசியதாவது...
இயக்குநர் ஜோஸ்வா எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம், உதவி இயக்குநர்களாக நிறையப் பேர் என்னிடம் கதை சொல்லி இருக்கிறார்கள், ஆனால் அதைச் சாத்தியமாக்குவது எத்தனை பெரிய கஷ்டம் என எனக்குத் தெரியும். இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில் அதைச் சாத்தியம் ஆக்கி இருக்கிறார். என்னை நானே நம்மால் முடியும் என தட்டிக் கொடுத்துக் கொண்டது, ஜோஷ்வாவைப் பார்த்துத் தான். 19 நாளில் அவர் இந்தப்படத்தை எடுத்துள்ளார், சினிமாவில் சிலருக்கு எல்லாமும் கிடைக்கும் ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். ஜோஷ்வா அதில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு இந்த மொத்த டீமும் தான் காரணம். அனைத்து நடிகர்களும் அற்புதமாக நடித்துள்ளார்கள், எல்லோரும் மிகக் கடினமாக உழைத்துள்ளார்கள். ஜோஷ்வா மாதிரி இயக்குநர்கள் சினிமாவுக்கு வந்தால், சினிமா இன்னொரு தளத்திற்குச் செல்லும். கண்டிப்பாக இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் லெனின் பாரதி பேசியதாவது...
யுகபாரதி தான் இவ்விழாவிற்கு என்னை அழைத்தார். டிரெய்லர் மிக அற்புதமாக இருந்தது. 19 நாட்களில் எடுத்ததாகச் சொன்னார்கள், அப்படி எடுக்கும் போது போதாமையால், பல தவறுகள் காட்சிகளில் தெரியும், ஆனால் இந்தப்படம் படு கச்சிதமாக இருந்தது. அதிலிருந்த அடர்வு மிக அருமையாக இருந்தது. பார்க்கப் பிரமிப்பாக இருந்தது. ஜோஷ்வாவை பார்த்தால், நம்மாலும் முடியும் எனும் நம்பிக்கை வருகிறது. பல கோடி போட்டு எடுக்கும் படங்களை விடக் கச்சிதமாக இருக்கிறது. லிஜோமோல் பலர் தயங்கும் பாத்திரங்களை எடுத்து நடிக்கிறார். ஹரி, லாஸ்லியாவுக்கும் வாழ்த்துக்கள். மனித வரலாற்றில் அன்பைப் பேசும் யுகபாரதி எழுத்தில் படம் உருவாவது பெருமை. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது...
இயக்குநர் ஜோஷ்வா யுகபாரதி அண்ணன் மூலமாகத்தான் பழக்கம், அவர் முதலில் இந்தக் கதையைச் சொன்ன போது இந்த படத்தின் பெயரே வேறு, ஆனால் அதைவிட ஜென்டில்வுமன் டைட்டில் மிக பொருத்தமாக உள்ளது. ஜென்டில்மேன் பற்றி மட்டும் பேசும் உலகில், ஜென்டில்வுமன் பற்றியும் பேச வேண்டும் அதை ஜோஷ்வா செய்துள்ளான். சென்சாரில் இருந்து ஒரு நாள் போன் செய்தான், இத்தனை கட் என்ன செய்வது என்றான், சென்சாரால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான் தான், அதனால் இதையெல்லாம் செய் என சொல்லித் தந்தேன். இன்றைய நிலைமை அப்படித்தான் இருக்கிறது. இங்கு எல்லாவற்றையும் புனிதப்படுத்துவது தான் மிகப்பெரிய பிரச்சனை, புனிதப்படுத்த நீ யார் ?. பலர் நம் காலத்துக்கு முன்பே வழக்கத்தை உடைத்து, என்னென்னவோ செய்து விட்டார்கள் ஆனால் நாம் அதைத் தாண்டவே இல்லை. இப்படியான உலகில் புனிதப்படுத்துவதைக் கட்டுடைப்பது முக்கியம். பெண்களை சக மனுஷியாகப் பார்க்காமல் கடவுளாகப் பார்க்கும் சமூகம் தான் மிக ஆபத்தான சமூகம் என நினைக்கிறேன். பெண்களை சக மனுஷியாகப் பார்த்து, அவர்களோடு அவர்கள் மொழியில் பேசுவது தான் இந்த ஜென்டில்வுமன். இது போன்ற படத்தைத் தயாரித்து திரைக்குக் கொண்டு வரும் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
இயக்குநர் த செ ஞானவேல் பேசியதாவது...
நடிகை லிஜோவுக்காகத் தான் வந்தேன், அவர் மிகச்சிறந்த ஆர்டிஸ்ட், அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் பிரமிப்பைத் தருகிறது. இயக்குநரிடம் ஏன் ஜென்டில்வுமன் எனப் பெயர் வைத்தீர்கள் எனக் கேட்டேன். இந்த மாதிரியான தலைப்புகளில் ஒன்று ஏதாவது கருத்து இருக்க வேண்டும், இல்லை எனில் கவன ஈர்ப்பு இருக்க வேண்டும். அவர் மிக அற்புதமான பதில் ஒன்றைத் தந்தார். சராசரி வழக்கத்தை உடைப்பது, இதுவரை ஜென்டில்மேன் மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறோம் அதை மாற்ற ஜென்டில்வுமன் வைக்கலாம் என வைத்தேன் என்று சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு ஸ்டீரியோ டைப்பை உடைப்பது சமூகத்தில் மிகவும் முக்கியம் என நான் கருதுகிறேன். கலைஞனாக ஸ்டீரியோ டைப்பை உடைப்பது மிகவும் முக்கியம். ஸ்டீரியோ டைப்பை உடைத்துத் தான் அனைத்து மாற்றங்களும் வந்துள்ளது. அதனால் இன்றைய சமூகத்தில் அந்த முயற்சியில் வரும் அனைத்து படைப்புகளையும் நாம் வரவேற்க வேண்டும். இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கும், உழைத்த கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பாடலாசிரியர் வசனகர்த்தா யுகபாரதி பேசியதாவது...
25 ஆம் ஆண்டுகால திரை வாழ்வில் நிறையத் தம்பிகளை நான் சந்தித்திருக்கிறேன், அவர்களில் சிலரைச் சந்திக்கும் போது, இவர்கள் கண்டிப்பாக இயக்குநர் ஆகி விடுவார்கள் என நினைப்பேன், அப்படியான தம்பிதான் ஜோஷ்வா. இந்த படத்தைப் பற்றி நிறையப் பேசக்கூடாது, இந்த படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் அனைவரும் அதிகம் பேச வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நல்ல படத்திற்கு நீங்கள் எப்போதும் பெரும் ஆதரவு தருவீர்கள், உங்கள் தோள் மீது வைத்துக் கொண்டாடுவீர்கள். இந்த படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். அதைத் தாண்டி இந்த திரைப்படத்தில் உள்ள கலைஞர்கள், நடிகர்கள் பற்றிச் சொல்ல வேண்டும், எல்லோரும் ஜோஷ்வா மீது வைத்த அன்பு தான் இந்த திரைப்படம். அவர் எப்போதும் தன் வேலை மீது கவனமாக இருப்பார். அவர் 19 நாளில் இப்படத்தை முடிக்க முடியும் எனச் சொன்ன போது, நான் நம்பவில்லை, ஆனால் அடுத்தடுத்து நல்ல கலைஞர்கள் நம்பி வந்த போது அது நடந்தது. ஜோஷ்வாவிற்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் பேசியதாவது...
சினிமா மீது நான் வைத்த காதல்தான் இந்தத் திரைப்படம். 19 நாளில் படத்தை முடிக்க முடியும் எனத் திட்டமிட்டது நான் அல்ல, அது என் திட்டம் அல்ல, அது நடக்கக் காரணம் என்னுடைய படக் குழுவினர் தான், எனக்காக என்னை நம்பி உழைத்தார்கள். அதனால் தான் இது நடந்தது. சென்சாரின் போது, ராஜுமுருகன் அண்ணன் தான் அறிவுரை சொன்னார், அவர் அறிவுரையால் தான் சென்சார் முடித்தேன். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவைப் பற்றிச் சொல்ல வேண்டும், அவரது இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும், கிட்டத்தட்ட 20 நிமிட காட்சிகள் வெறும் இசையில் மட்டுமே நகரும். அற்புதமாக இசையமைத்துள்ளார். ஆர்ட் டைரக்டர் அமரன் 20 நாட்களும் என்னுடன் இருந்தார். எடிட்டர் இளையராஜா சேகர், அவரை நான் நிறைய டார்ச்சர் செய்துள்ளேன், ஆனால் அதைத்தாண்டி என்னுடன் நின்றார். இந்தக்கதை எழுதியவுடன் இதை லிஜோ மோலிடம் சொல் என்றார் யுகபாரதி அண்ணன். அவரிடம் இந்த கதையைச் சொன்ன போது, அவர் ஒரு கேள்வி கேட்டார் அந்த கேள்விதான் படம் பார்க்கும்போது ரசிகர்கள் கேட்பார்கள், அதன் பதில் சொன்னவுடன் அவர் ஒத்துக்கொண்டார். லாஸ்லியா எனக்குப் பழக்கம். நான் இந்தக்கேரக்டர் சொல்லி அனுமதி எல்லாம் கேட்காமல், நடிக்கக் கூப்பிட்டேன், அவர் என்னை நம்பி வந்தார். ஹரியைப் படப்பிடிப்பிற்கு மூன்று நாட்கள் முன் தான் கூப்பிட்டேன், எனக்காக வந்தார். தயாரிப்பாளர்கள் பற்றி சொல்ல வேண்டும், என்னிடம் இந்தப்படத்தில் காமெடி கமர்ஷியல் இருக்கிறதா? என எதுவும் கேட்கவில்லை நான் கேட்ட அனைத்தும் தந்தார்கள். நேதாஜி அண்ணன் மூலம் தான் தயாரிப்பாளர்கள் அறிமுகம், அவருக்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் ஹரி கிருஷ்ணன் பேசியதாவது...
சினிமாவில் எனக்குப் பிடித்த அனைவரும் இங்கு வந்துள்ளார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தத் திரைப்படம் ஆரம்பிக்க மூன்று நாட்கள் இருக்கும்பொழுது தான் ஜோஷ்வா என்னை அழைத்தார், அவர் இந்த கதை சொன்ன போது, எப்படி இந்த கேரக்டர் செய்யப் போகிறேன் எனப் பயமாக இருந்தது. அவர் சொல்லும் கதைகள் எல்லாமே கொஞ்சம் பயமாகவே தான் இருக்கும். ஜோஷ்வா எனக்கு நல்ல நண்பர், அவரும் நானும் அயனாவரத்தைச் சேர்ந்தவர்கள். என் அப்பா ஆபாவாணன் படங்கள் பற்றிச் சொல்வார், அந்த படங்கள் எல்லாம் ஒரு இம்பாக்ட் கிரியேட் செய்யும். அது போலத் தான் நான் ஜோஷ்வாவை பார்க்கிறேன். இந்தப்படம் எப்படி வரும் எனப் பயம் இருந்தது, தினமும் ஜோஷ்வாவை கேட்டுக் கொண்டிருப்பேன். இந்த மாதிரி கதைகள் கண்டிப்பாகத் திரையில் பேசப்பட வேண்டும். யுகபாரதி அண்ணன் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். லிஜோ மோல் ஜெய்பீம் படத்திலேயே பிடிக்கும், அவருடன் நடிக்க ஆவலாக இருந்தேன், ஆச்சரியமாக லாஸ்லியாவும் இருந்தார், அவரும் அட்டகாசமாக நடித்துள்ளார். தயாரிப்பாளர்களுக்கு என் நன்றி. 19 நாளில் படத்தை முடித்தது சாதனை தான். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகை லாஸ்லியா பேசியதாவது...
தயாரிப்பாளர்கள் ஹரி பாஸ்கர், கோமளா மேடம் இருவருக்கும் என் நன்றிகள். எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர் ஜோஷ்வாவிற்கு நன்றி. அவர் நினைத்தது போல், இந்தக் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறேன் என நம்புகிறேன், லிஜோ மோல் உடன் நடித்ததைப் பெருமையாக நினைக்கிறேன். அவர் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஹரி உடன் நடித்தது நல்ல அனுபவம், இருவருக்கும் நன்றி. ஃபிரேம் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக இருக்கும் ஒளிப்பதிவாளர் காத்தவராயனுக்கு நன்றி. கோவிந்த் வசந்தா இசை சூப்பராக இருக்கும். யுகபாரதி சாரின் வசனங்கள் அற்புதம். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி
நடிகை லிஜோமோல் ஜோஷ் பேசியதா
சினிமா மாதிரி ஒரு பயங்கரமான ஆயுதம் வேறில்லை - இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்
ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டத்தைக் கதையாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.
கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.
'கூரன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் எஸ். . சந்திரசேகரன் பேசும்போது,
பொதுவாகவே ஒவ்வொரு திரைப்பட விழாவிலும் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போயிருக்கும் ஒரு வசனம். இது வித்தியாசமான படம் .இதுவரைக்கும் நீங்கள் பார்க்காத படம்.இந்த வார்த்தைகளை எல்லாருமே சொல்லி நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் என்னுடைய 45 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இது உண்மையிலேயே வித்தியாசமான படம்.நான் உண்மையிலேயே வித்தியாசமானது என்று சத்தியமாக சொல்லக் கூடிய கதை இது. பலவகையில் இது வித்தியாசமான படம்.
இந்த படத்தில் நாய் தான் கதாநாயகன்.ஒரு ஈ பழிவாங்கி ஒரு படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஒரு யானை பழி வாங்கிய வெற்றிப் படத்தை, ஒரு பாம்பு பழிவாங்கிய வெற்றிப் படத்தை எல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.இதில் மனிதர் மீது ஒரு நாய் பழிவாங்குகிறது. தன்னுடைய போராட்டத்திற்கு நீதிமன்றம் வரை படியேறுகிறது.இது ஒரு வித்தியாசம்.
இரண்டாவது, இந்தப் படத்தில் கதாநாயகன் இல்லை, கதாநாயகி இல்லை டூயட் இல்லை.நடனம் இல்லை.
இதில் நடித்தவர்கள் எல்லாம் பார்த்தால் நாய், நான் ஒரு 80 வயதுக்காரன், ஒய்.ஜி. மகேந்திரன் என் வயதுதான்.இப்படி இதில் நடித்தவர்கள் முழுதும் வயதானவர்கள் .அது ஒரு வித்தியாசம்.
என்னைப் பற்றி எல்லாரும் பேசினார்கள். அது கடவுள் கொடுத்த பரிசு. ஓடிக் கொண்டே இருக்கிறேன், இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன். எதையும் பாரமாக தலையில் போட்டுக் கொள்வதில்லை .கடைசி வரை உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.உடனிருப்பவர்கள் எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் .நான் அலுவலக வரும்போது அனைவரும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஒன்றும் வேலை இல்லை என்றால் கூட அனைவருடனும் பேசிக் கொண்டிருப்பேன். ஏதாவது செய்து கொண்டிருப்பேன்.
ஏனென்றால் வீட்டில் உட்காரக்கூடாது என்று நினைப்பேன்.சக்கர நாற்காலியில் உட்காரும் வாழ்க்கை எல்லாம் வேண்டாம் என்று காலையில் 9:00 மணிக்கு அலுவலகம் வந்து விடுவேன்.
இந்த விழாவில் எங்கள் படம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும்தான் மேடையில் இருக்கிறார்கள். கொடைக்கானலில் ஜனவரி மாதக் குளிரில் நாங்கள் சென்றோம் .அதுவே ஒரு மறக்க முடியாத அனுபவம்.நடுங்கிக்கொண்டே சென்றோம் படப்பிடிப்பு ஆரம்பித்ததும், அதெல்லாம் போய்விடும்.
இத்தனை ஆண்டுகளில் எனக்கு ஜுரம் வந்ததே கிடையாது .அங்கே போனபோதுதான் வந்தது.ஆனால் படப்பிடிப்பு இடத்திற்குப் போனால் எனக்கு எல்லாமும் போய்விடும். அந்த நம்பிக்கையில் தான் அங்கே நான் சென்றேன்.சொன்ன மாதிரியே என்னைத் தண்ணீரில் எல்லாம் குளிக்க வைத்தார்கள், ஜுரம் போய்விட்டது. வியாதி என்பது நம் மனம் நினைப்பதுதான்.
வாழ்க்கையைச் சுலபமாக எடுத்துக் கொண்டால் கடைசி வரை நன்றாக இருக்கலாம்.என் எல்லா படத்திலும் ஏதாவது ஒரு மெசேஜ் இருக்கும். இந்தக் கதையை கேட்டவுடன் எனக்கு அது பிடித்திருந்தது.நாய் நீதிமன்றம் செல்கிறது. அதுவே புதிதாக இருந்தது.நான் எழுபது படங்களில் ஐம்பது படங்களில் மனிதன் நீதிமன்றம் சென்றது போல் தான் எடுத்திருக்கிறேன்.நாயோ பூனையோ போனது போல் எடுக்கவில்லை. அதுதான் புதிதாக இருந்தது. இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் தங்களைத் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்.
இந்தப் படத்தை இயக்குநர்கள் அமீர், பார்த்திபன் போன்றவர்கள் பார்த்திருக்கிறார்கள். டெல்லியில் இருந்து மேனகா காந்தி பார்த்திருக்கிறார். அனைவரும் படத்தைப் பார்த்து விட்டு உடனே எழுந்திருக்கவில்லை, கண்கலங்கினார்கள்.
திரைப்படங்களில் எழுத்தாளன்தான் கதாநாயகனின் குணச் சித்திரத்தையே படைக்கிறான்.இங்கே நாம் நடிகர்களைக் கொண்டாடுகிறோம்.
.கதாநாயகன் அளவுக்கு இயக்குநர்களையும் கொண்டாட வேண்டும். அவர்களுக்கு ஒரு பொறுப்புணர்வு வேண்டும் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று.
சில படங்களைப் பார்க்கும் போது கஷ்டமாக உள்ளது. எழுத்தாளன் படைக்கும் பாத்திரங்கள் ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும். இவனைப் போல வாழ வேண்டும் என்கிற மாதிரி முன்னுதாரணமாக அந்தப் பாத்திரம் இருக்க வேண்டும். கத்தி எடு தலையை வெட்டு என்று படம் பார்த்து விட்டு வெளியே செல்கிறவனும் கத்தி எடுத்து கையை வெட்டு, தலையை வெட்டு என்று செய்து கொண்டிருந்தால் இளைய சமுதாயம் என்ன ஆகிறது?. அந்த பொறுப்புணர்வு வேண்டும் .சினிமா என்பது சாதாரணமானதல்ல. இந்தப் படத்தில் கத்தி இல்லை; ரத்தம் இல்லை;துப்பாக்கி சத்தம் இல்லை; ஆனால் ஒரு சக்தி வாய்ந்த விஷயம் இருக்கிறது.அதை நாங்கள் சத்தமாகத் தீவிரமாகச் சொல்லாமல் உணர்வுபூர்வமாக எதார்த்தமாக சொல்லி இருக்கிறோம்.
சில நல்ல படங்கள் இப்போது செய்கிறார்கள். அதை நான் தவறு சொல்லவில்லை. ஆனால் படம் பார்க்க நூறுபேர் வருகிற போது ஒருவராவது மனமாற்றம் அடையும்படி படங்கள் இருக்க வேண்டும்.இது ஒரு வன்முறை இல்லாத படம். ஆனாலும் சக்தி வாய்ந்த படம்.வன்முறை இல்லாத முறையில் தானே நாம் சுதந்திரமே வாங்கினோம்?காந்தியடிகளின் அஹிம்சைதானே வெள்ளையனை விரட்டி அடித்தது.
ஒரு காலத்தில் வில்லன் என்றால் இப்படித்தான் இருப்பான் என்று தெரியும். அவன் கற்பழிப்பான், கொலை செய்வான், 10 பேரை வெட்டுவான்.அப்படித்தான் இருந்தது. இப்போது அதையெல்லாம் கதாநாயகர்கள் செய்கிறார்கள். யார் வில்லன் யார் கதாநாயகன் என்று தெரிவதில்லை.படம் பார்க்கும் இளைஞர்களை நாம் எப்படிக் கொண்டு போக வேண்டும்?
அம்மாவைப் பிள்ளை வெட்டுகிறான்.மாமியார் மருமகளும் சேர்ந்து கொண்டு பிள்ளையைக் கொல்கிறார்கள். அப்பாவைக் கொல்கிறார்கள்.சினிமா மாதிரி ஒரு பயங்கரமான ஆயுதம் வேறில்லை .அதை நாம் சரியாகச் செய்தால் இந்த சமுதாயத்தைத் திருத்த முடியும். இயக்குநர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அந்த பொறுப்புணர்வும் கடமையுணர்வும் சமூக உணர்வும் வேண்டும்.
நான் பத்து ஆண்டு காலமாகச் சில படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு திருப்திகரமாக அமைந்த படம் இது. நான் அனுபவித்துச் செய்து இருக்கிறேன்.
இரண்டு மணி நேரம் அழகாக அமர்ந்து பார்க்க வைக்கும் படியான படம்.
மூன்று மணி நேரப் படமாக உருவானது அதை எடிட்டர் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் ஆக்கினார். லெனின் சார் படத்தைப் பார்த்தார் அதில் பத்து காட்சிகளைத் தூக்கிவிட்டு இருபது நிமிடங்களைக் குறைத்து விட்டார். படம் இரண்டு மணி நேரம் தான்.அவ்வளவு நேர்த்தியாக உள்ளது.
ஒரு குடும்பம் மாதிரி இந்த படத்தை எடுத்திருக்கிறோம். இதில் நடித்திருக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் அந்த பைரவா நாய்தான் .நாங்கள் எல்லாரும் உதிரிப்பூக்கள்தான், துணை நடிகர்கள்தான். இதில் நடித்திருக்கும் நான் உள்பட அனைவருக்கும் நல்ல பெயர் கிடைக்கும் ."இவ்வாறு இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பேசினார்.
விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரைம் வீடியோவின் 'சுழல் - தி வோர்டெக்ஸ்' இரண்டாவது சீசன்!
பிரேம் வீடியோவின் தமிழ் அசல் க்ரைம் திரில்லர் இணைய தொடரான ' சுழல் - தி வோர்டெக்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது பாகத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. இந்த விருது பெற்ற தொடரின் முதல் சீசன் அதன் ஒப்பற்ற கதை சொல்லல், கவர்ச்சிகரமான பின்னணி மற்றும் சக்தி வாய்ந்த நடிப்பிற்காக கொண்டாடப்பட்டது. தற்போது தமிழ்நாட்டின் காளிபட்டிணம் எனும் கற்பனை கிராமத்தில் நடைபெறும் வருடாந்திர அஷ்ட காளி திருவிழாவின் பின்னணியில் ஒரு புதிய மர்ம முடிச்சுகளுடன் இந்த இணைய தொடரின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. குடும்ப பிணைப்புகள், காதல், தியாகம், நேர்மை, பழிவாங்கல், பயம் ஆகிய கரு பொருள்களுடன் சுழல்- தி வோர்டெக்ஸ் எனும் இணைய தொடரின் இரண்டாவது சீசனில் காளி பட்டிணத்தின் சிக்கலான சமூக கட்டமைப்பை சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு அதிர்ச்சியூட்டும் மரணத்தை மையமாக கொண்டுள்ளது. அதே தருணத்தில் இதன் பின்னணியில் மறைந்திருக்கும் ரகசியங்களையும் விவரிக்கிறது. ஆனால் மர்மம் மற்றும் சூழ்ச்சியின் புதிய சுழலுக்குள் நுழைவதற்கு முன் சீசன் 1ன் சஸ்பென்ஸ் நிறைந்த பயணத்தை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்.
எச்சரிக்கை : ஸ்பாய்லர்கள்...!
நகரத்தையே உலுக்கும் காணாமல் போதல் :
சிறு நகரத்தை சேர்ந்த நிலா என்ற இளம் பெண் திடீரென காணாமல் போவதுடன் கதை தொடங்குகிறது. அவள் தன் காதலரான இன்ஸ்பெக்டர் ரெஜினாவின் மகனுடன் சேர்ந்து காணாமல் போகிறாள்.
இருண்ட ரகசியங்களை வெளிப்படுத்தும் வகையிலான விசாரணை :
இன்ஸ்பெக்டர் சக்கரை ( கதிர்) இந்த வழக்கின் விசாரணைக்கு பொறுப்பேற்கிறார். ஆனால் ஒரு வழக்கமான காணாமல் போனவர் பற்றிய புகாரை விரைவாக... மிகவும் கொடூரமான ஒன்றாக மாற்றம் பெற்று, இருண்ட ரகசியங்களையும், நீண்ட காலமாக புதைக்கப்பட்ட பொய்களையும் அம்பலப்படுத்துகிறது.
குடும்ப உறவுகள் மற்றும் மறைக்கப்பட்ட பேய்கள் :
தேடல் தீவிரமடையும் போது நிலாவின் சகோதரியான நந்தினி ( ஐஸ்வர்யா ராஜேஷ்) தனது சொந்த மற்றும் கடந்த காலத்துடனும் , அவரது குடும்பத்தினர் பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த வேதனையான உண்மைகளுடனும் போராடுகிறார்.
பாரம்பரியத்தில் மூழ்கிய ஒரு நகரம் :
இந்தத் தொடர் நகரத்தின் கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் இயக்கத்தை சிக்கலான முறையில் பின்னி பிணைக்கிறது. அங்கு பழங்கால மரபுகளும், நவீன யதார்த்தங்களும் எதிர்பாராத தருணத்தில் மோதுகின்றன.
கணிக்க முடியாத திருப்பங்கள் மற்றும் முடிச்சுகள் :
பல அதிர்ச்சியூட்டும் திருப்பங்களை கொண்டிருக்கிறது. பார்வையாளர்கள் நிலாவின் தலைவிதி மற்றும் உண்மையை கண்டறியும் பயணத்தைப் பற்றி யூகிக்க வைக்கிறது. இதனால் பொய்கள் மற்றும் மறைக்கப்பட்ட நோக்கங்களின் புதிய கோணங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன.
பரபரப்பான இறுதி கட்டம் :
தொடரின் இறுதி பகுதியை நெருங்கும் போது.. நிலா காணாமல் போனதன் பின்னணியில் உள்ள உண்மை வெளிப்படுகிறது. யாரும் எதிர்பாராத வஞ்சகம் மற்றும் துரோகம் நிறைந்த புதிரையும் வெளிப்படுத்துகிறது.
வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரான இந்த இணைய தொடர், புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து எழுதி, உருவாக்கி, இயக்குநர்கள் பிரம்மா மற்றும் கே எம் சர்ஜுன் ஆகியோர் இயக்கத்தில் தயாரான இந்த தொடரில் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் லால், சரவணன், கௌரி கிஷன்( முத்து) சம்யுக்தா விஸ்வநாதன் ( நாச்சி) மோனிஷா பிளெஸ்சி ( முப்பி), ரினி ( காந்தாரி ), ஸ்ரீஷா (வீரா) அபிராமி போஸ் ( செண்பகம்) நிகிலா சங்கர் (சந்தானம்), கலைவாணி பாஸ்கர் ( உலகு ), அஸ்வினி நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர்.
'சுழல் - தி வோர்டெக்ஸ்' சீசன் 2 பிரைம் வீடியோவில் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிப்ரவரி 28 தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆங்கில வசனங்களுடன் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது.
பிரபாஸின் ' சலார் ' திரைப்படத்தின் ஒரு வருட ட்ரெண்டிங் சாதனை!
ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் அதிரடி திரைப்படமான ' சலார் சீஸ்ஃபயர் - பார்ட் 1' ஜியோ ஹாட்ஸ்டாரில் (இதற்கு முன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்) 366 நாட்களுக்கும் மேலாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து புதிய சாதனையை படைத்துள்ளது. இயக்குநர் பிரசாத் நீல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன் ஆகியோர் உலகளவில் பார்வையாளர்களை கவர்ந்த சக்தி வாய்ந்த கதையில் நடித்திருந்தனர்.
இதில் உள்ள அதிரடியான சண்டை காட்சிகள் முதல் அதன் தீவிரமான கதை சொல்லும் பாணி வரை ' சலார் சீஸ்ஃபயர் பார்ட் 1' பார்த்தவுடன் திரைப்பட காட்சிகளை மறு வரையறை செய்து, வெளியான ஒரு வருடத்திற்கு பிறகும் கூட டிஜிட்டல் தளங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. நம்ப முடியாத இந்த நீடித்த வெற்றி- மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்திற்கும், அவர்களுடைய அசைக்க முடியாத ஆதரவிற்கும் சிறந்த சான்றாகும். இந்த தருணத்தில் அசாதாரணமான இந்த பயணத்தில் பங்கேற்ற 366 அதிர்ஷ்டசாலி ரசிகர்களுக்கு பிரத்யேக பரிசுகளை அனுப்பி ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அதன் அர்ப்பணிப்பு உள்ள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது. 'சலார் சீஸ்ஃபயர் பார்ட் 1' திரைப்படத்தின் மீதான அவர்களின் ஆர்வமும், அன்பும் இந்த திரைப்படத்தை கலாச்சார நிகழ்வாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
இது தொடர்பாக 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் பேசுகையில், '' சலார் மீதான ரசிகர்களின் காதலால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஜியோ ஹாட்ஸ்டாரில் 'சலார் 1' படத்தை தொடர்ந்து பார்வையிடுங்கள். விரைவில் கான்சாரில் கால் பதிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மேலும் இது தொடக்கம் தான். 'சலார் 2' படத்திற்கு உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். அங்கு புராணக்கதை தொடர்கிறது. அதிரடி மேலும் தீவிரமடைகிறது. கதை இன்னும் மிகப்பெரிய உயரத்தை தொட்டிருக்கிறது. அடுத்த அத்தியாயம் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பல எல்லைகளை கடந்து செல்லும் ஒரு மின்னல் போன்ற சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது. '' என்றார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா