சற்று முன்
சினிமா செய்திகள்
‘அக்யூஸ்ட்’ படத்திற்காக அதிக பட்ஜெட்டில் படமாக்கப்படும் பரபரப்பான பேருந்து சண்டைக்காட்சி!
Updated on : 24 February 2025

சச்சின் சினிமாஸோடு இணைந்து ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக உருவாகி வரும் ‘அக்யூஸ்ட்’ படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து அவர் நடிக்கிறார். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார்.
‘அக்யூஸ்ட்’ படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகவும் திரைக்கதையின் முக்கிய அங்கமாகவும் திகழக்கூடிய பரபரப்பான சண்டைக்காட்சி ஒன்று கடந்த ஒரு வாரமாக பூந்தமல்லிக்கு அருகே உள்ள குத்தம்பாக்கத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. ஆக்ஷன் டைரக்டர் ஸ்டண்ட் சில்வா அதிக பொருட்செலவில் இந்த சண்டைக்காட்சியை வடிவமைத்து இயக்கி வருகிறார்.
முழுக்க பேருந்தில் நடைபெறும் இந்த சண்டைக்காட்சிக்காக 'அக்யூஸ்ட்' தயாரிப்பாளர்கள் சொந்தமாக பேருந்து ஒன்றை வாங்கியுள்ளனர். சுமார் 45 ஃபைட்டர்கள், 60 துணைக் கலைஞர்களுடன் உதயாவும் அஜ்மலும் ஸ்டண்ட் காட்சியில் பங்கேற்றுள்ளனர். உதயாவின் திரையுலக பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் 'அக்யூஸ்ட்' அதிரடி படத்தின் பேசுபொருளாக பேருந்து சண்டை இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
மொத்தம் 3 சண்டைக்காட்சிகள் இடம்பெறும் 'அக்யூஸ்ட்' திரைப்படத்தின் ஆக்ஷன் டீசரை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதில் பேருந்து சண்டைக் காட்சியின் மேக்கிங் இடம்பெற்று ரசிகர்களை கவரும் என்று அவர்கள் கூறினர்.
ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமார் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மார்ச் 10க்குள் மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்து கோடை விடுமுறைக்கு 'அக்யூஸ்ட்' திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் அல்ல, சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகளால் நல்லவர்கள் கூட எப்படி பாதிப்படைகிறார்கள், தாதாவக உருவாகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் உதயா நடிக்கிறார். அவருடன் முதல் முறையாக அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்துள்ளனர்.
சமீபத்திய செய்திகள்
'சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2' 18 அசல் பாடல்கள் அடங்கிய இசை ஆல்பத்தை வெளியிட்டது!
மும்பை, இந்தியா, பிப்ரவரி 24, 2025 —இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, பெரிதும் பாராட்டப்பட்ட அதன் தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல் - தி வோர்டெக்ஸ் சீசன் 2 தொடரின் மர்மம் நிறைந்த காட்சிகளை பார்வையாளர்கள் கண்டு ரசித்து மகிழும் அனுபவத்தை தீவிரப்படுத்தும் வகையில் மிக அற்புதமாக உருவாக்கப்பட்ட 18 பாடல்கள் அடங்கிய சீசன் இரண்டின் இசை ஆல்பத்தை இன்று வெளியிட்டது. காளிபட்டணத்தின் பெரும் புதிரான சமூகக் கட்டமைப்பை சீர்குலைத்து பாதிப்பை விளைவிக்கக் கூடிய ஒரு ஒரு மரணத்தை மையமாகக் கொண்ட மனதை திடுக்கிடச்செய்து பதைபதைக்க வைக்கும் இந்த சஸ்பென்ஸ் த்ரில்லரின் , இரண்டாவது சீசன், அதன் மர்மத்தை விடுவிக்கும் அதே வேளையில் அதன் அடி ஆழத்தில் மறைந்திருக்கும் சமூகத்தின் கண்ணுக்குப் புலப்படாத பிளவுகளை வெளிக்கொண்டுவருகிறது. . சூழல் - தி வோர்டெக்ஸ் சீசன் 2 திரைப்படத்தின் முழுமையான இசை தொகுப்பை இப்போது அமேசான் மியூசிக், ஸ்பாட்டிஃபை, ஆப்பிள் மியூசிக், யூடியூப் மியூசிக் மற்றும் ஜியோ-சாவன் உள்ளிட்ட அனைத்து முன்னணி இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் கேட்டு மகிழலாம் .
ஆழமான பல்வேறு பொருள் பொதிந்த பாடல் வரிகளை விவேகாவுடன் இணைந்து சாம் CS,(Sam CS), எழுதி உருவாக்கிய இந்த இசைக் கோர்வை இதயத் துடிப்பை நின்றுபோகச் செய்யும் தொடரின் ஒவ்வொரு காட்சியின் சாராம்சத்தையும் மனதைக் கொள்ளைகொள்ளும் வகையில் அப்படியே முழுமையாக வழங்குகிறது. திறமையான இதர மற்ற பாடகர்களுக்கு மத்தியில் சாம் சிஎஸ், கபில் கபிலன், ஆண்டனி தாசன் மற்றும் திவாகர் உள்ளிட்ட அசாதாரண குரல் வளம் கொண்ட மாபெரும் பாடல் கலைஞர்களின் குரலில் பாடல் வரிகளும் இசையும் உயிர்பெற்று எழுகின்றன
"இந்தத் திரைப்படத்தின் கதைமாந்தர்களைப் போலவே இதன் இசையும், பின்னணி குரலும் தொடருடன் ஒன்றிணைந்த ஓர் அங்கமாக திகழ்கிறது மேலும் அது காட்சி மற்றும் கதையோட்டத்துக்கு வலுச் சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், காட்சியின் ஒவ்வொரு நுணுக்கமான உணர்வு பூர்வமான அம்சத்துக்கும் உயிரோட்டம் கொடுத்து கதையை வண்ணமயமாக்குகிறது. முதல் சீசனுக்குப் பிறகு, இரண்டாவது சீசனுக்கு உயிரூட்டும் இசையை உருவாக்கி வழங்கிய சாம் சி எஸ், சரியான மிகச் சிறந்த தேர்வாக அமைந்துள்ளார் என்பதே எங்கள் கருத்து. கதையுடன் உணர்வு பூர்வமாக ஒன்றி பின்னிப்பிணைந்த வகையில் உருவாக்கப்பட்ட இந்தக் இசைக் கோர்வை கதைக்கு உயிரோட்டமளிப்பதில் இசையின் மாபெரும் பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, மேலும் சுழல் - தி வோர்டெக்ஸ் உலகின் ஒவ்வொரு அம்சத்திலும் பார்வையாளர்கள் தங்கள் மனதை பறிகொடுத்து ஆழ்ந்து போகப்போவதை காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்," என்று தொடரை தயாரித்த வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி கூறினார்கள்.
இந்த தொடருக்கான இசையமைப்பு குறித்து தன் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் சாம் CS, கூறினார் "சஸ்பென்ஸ் த்ரில்லரின் கதையோட்டத்துக்கு இசை அளிக்கும் முக்கிய பங்கு குறித்து மிக ஆழமாகப் புரிந்துகொண்ட மேதைகளான இரட்டையர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சுழல் - தி வோர்டெக்ஸ் கதைக் களமானது நுண்ணிய உணர்ச்சிகளின் சிக்கலான ஒரு கலவையாகும். அவர்களின் கதைகளில், பின்னணி இசை கிட்டத்தட்ட ஒரு கதை மாந்தரைப் போலவே உருவெடுத்து, கதையை முன்னோக்கி செலுத்துகிறது. அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றி , அவர்களின் தனித்துவமான கதைசொல்லலில் என்னை நானே ஆழ்ந்து போகச்செய்தது தொடருக்கான பின்னணி இசையையும் பாடல் இசைத் தொகுப்பையும் உருவாக்குவதில் எனக்கு பெருமளவு உதவியது. இரண்டாவது சீசனின் ஒரு அங்கமாக செயல்பட்டதில் நான் மிக மகிழ்ச்சியடைகிறேன், மேலும் பார்வையாளர்கள் தொடரை அனுபவித்து மகிழ்வதை போன்ற அதே உணர்வுடன் இசையையும் ரசித்து மகிழ்வார்கள் என்று நான் நம்புகிறேன்."
இந்த ஆல்பத்தில் அடங்கியுள்ள பாடல்களின் பட்டியல் இங்கே:
1. ஆலங்கட்டி மழை (சாம் CS உருவாக்கி இசையமைத்த பாடல் வரிகளை கபில் கபிலன் பாடியுள்ளார்)
2. ஆம்பூர் தம் பிரியாணி (விவேகாவின் பாடல் வரிகளுக்கு சாம் CS இசை அமைக்க, பாடலுக்கு ஆண்டனி தாசன் குரல் கொடுத்துள்ளார்)
3. சாயா கோபுரமே (விவேகாவின் பாடல் வரிகளுக்கு சாம் CS இசை அமைத்து குரல் கொடுத்துள்ளார்)
4. சில்லா சில்லா (விவேகாவின் பாடல் வரிகளுக்கு சாம் CS இசை அமைத்து குரல் கொடுத்துள்ளார்)
5. அஷ்டகாளி (சாம் CS பாடல் வரிகளை எழுதி இசையமைத்து, திவாகருடன் இணைந்து குரல் கொடுத்துள்ளார்)
6. அரக்கன் அரங்கேற்றம் (பாடல் வரிகளை விவேகா எழுத சாம் CS இசையமைத்து பாடியுள்ளார்)
7. சூரசம்ஹாரம் (பாடல் வரிகளை விவேகா எழுத சாம் CSஇசையமைத்து பாடியுள்ளார்)
8. நாககன்னி பாடல் (பாடல் வரிகளை சாம் CS எழுதி இசையமைத்து பாடியுள்ளார்)
9. மாடனே சுடலை மாடனே (பாடல் வரிகளை சாம் CS எழுதி இசையமைத்து பாடியுள்ளார்)
10. தி சேஸ்
11. தி கமென்ஸ்மெண்ட்
12. தி ஜெனிசிஸ்
13. தி லாங்கிங்
14. தி பெனிட்டென்ஷியரி
15. தி ரெடீமர்
16. தி சால்வேஷன்
17. தி சீக்ரெட்
18. தி டன்னல்
புஷ்கர் (Pushkar) மற்றும் காயத்ரி (Gayatri) ஆகியோரின் எழுத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பிரம்மா (Bramma) மற்றும் சர்ஜுன் KM (Sarjun KM) இயக்கத்தில் உருவான இந்தத் தொடரில், கதிர் (Kathir) மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) மீண்டும் முன்னணி வேடங்களில் தோன்றி நடிக்க லால் Lal, சரவணன் Saravanan, கௌரி கிஷன் Gouri Kishan (முத்து), சம்யுக்தா விஸ்வநாதன் Samyuktha Vishwanathan (நாச்சி), மோனிஷா பிளெஸ்ஸி Monisha Blessy (முப்பி), ரினி Rini (காந்தாரி), ஷ்ரிஷாShrisha (வீரா), அபிராமி போஸ் Abhirami Bose (செண்பகம்), நிகிலா சங்கர் Nikhila Sankar (சந்தனம்), கலைவாணி பாஸ்கர்Kalaivani Bhaskar (உலகு), மற்றும் அஸ்வினி நம்பியார் Ashwini Nambiar ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க மஞ்சிமா மோகன் Manjima Mohanமற்றும் கயல் சந்திரன் Kayal Chandran ஆகியோர் கௌரவ வேடங்களில் தோன்றுகின்றனர். சுழல்—தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஆங்கில வசனங்களுடன் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்தியேகமாக ஒளிபரப்பாக உள்ளது.
'HIT : தி தேர்ட் கேஸ் ' எனும் படத்தின் டீசர் -' சர்க்கார்'ஸ் லத்தி- குறையற்ற கொடூரம்' வெளியீடு!
நேச்சுரல் ஸ்டார் நானியின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரைம் வித் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ' HIT - தி தேர்ட் கேஸ் ' பெரும் பரபரப்பையும் அதிர்வையும் ஏற்படுத்தி வருகிறது. தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குநர் டாக்டர் சைலேஷ் கோலானு இயக்கியுள்ள இந்த திரைப்படம் வெற்றிபெற்ற HIT எனும் திரைப்படத்தின் மூன்றாவது பாகமாகும். இந்தத் திரைப்படம் இதற்கும் முன் கவர்ச்சிகரமான காட்சிகளாலும், கண்ணை கவரும் போஸ்டர்களாலும் பார்வையாளர்களிடத்தில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. வால் போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி மற்றும் நானியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான யுனாானிமஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் 'சர்க்காரின் லத்தி' எனும் பெயரில் டீசர் ஒன்று.. நானியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.
கதைக்களம் - ஒரே மாதிரியாக நிகழும் கொலை குற்ற சம்பவங்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை வழக்கு காவல்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அவர்களின் இடைவிடாத முயற்சிகள் இருந்த போதிலும்.. அவர்களால் இந்த கொலை வழக்கை தீர்க்கவோ அல்லது குற்றவாளியை பிடிக்கவோ முடியவில்லை. இதன் இறுதி முயற்சியாக.. அவர்கள் அர்ஜுன் சர்க்காரிடம் இந்த வழக்கை ஒப்படைக்கிறார்கள். அர்ஜுன் சர்க்கார் என்பது குற்றவாளிகளின் முதுகெலும்பை நடுநடுங்க வைக்கும் பெயர்.
அர்ஜுன் சர்க்காராக நானியின் சித்தரிப்பு கொடூரமாக இருக்கிறது. அவரது கதாபாத்திரத்தில் வடிகட்ட இயலாத தீவிரத்தை கொண்டு வருகிறார். அவர் தவிர்க்க முடியாதவர் போலவே பயமுறுத்தும் ஒரு கதாபாத்திரத்தையும் உருவாக்குகிறார். அவரது மிரட்டும் சைகைகள் முதல் வெடிக்கும் கோபம் வரை நாணியின் அர்ஜுன் சர்க்கார் ஆக்ரோசத்தின் சூறாவளி.
ஒரு குற்றவாளியின் வயிற்றில் கத்தியை குத்தி, அதை மேலே நோக்கி உயர்த்தும் போது... கொடூரமான காட்சியில் ரத்தம் கூரையில் தெறிக்கிறது. இந்த தருணம்- கதாபாத்திரத்தின் அடக்க முடியாத மூர்க்கத்தனத்திற்கு ஒரு சிலிர்க்க வைக்கும் சான்றாகும்.
இயக்குநர் சைலேஷ் கோலானு ஒப்பற்ற கதை சொல்லல் மற்றும் காட்சி மொழியாக விவரிப்பதால் ..' HIT தி தேர்ட் கேஸ்' படத்தின் மூன்றாவது பாகத்தை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார். நானி தனது ஆற்றல் வாய்ந்த நடிப்பால் கதையை மேம்படுத்துவதுடன் அதன் ஆழத்தையும், தீவிரத்தையும் நடிப்பால் உணர்த்துகிறார். வழக்கமான பிம்பங்களை அந்த கதாபாத்திரம் உடைக்கிறது. நானியின் மாற்றமும் ரசிக்கத்தக்கது மற்றும் மறக்க இயலாதது.
கிரைம் வித் ஆக்சன் திரில்லரான இந்த திரைப்படத்திற்கு ஏற்ற வகையில் பார்வையாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில் சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவருடன் பின்னணி இசை மூலம் பதற்றத்தை அதிகரிக்க மிக்கி ஜே. மேயர் இணைந்திருக்கிறார். வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி மற்றும் நானி ஆகியரோல் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்தின் தயாரிப்பின் தரம் சர்வதேச அளவிலானது. படத்தின் படத்தொகுப்பு பணிகளை கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் கையாள, தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை ஸ்ரீ நாகேந்திர தங்கலா கவனிக்கிறார்.
ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் 'HIT : தி தேர்ட் கேஸ்' - 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
துடிப்பான மற்றும் வழக்கத்திற்கு மாறான கதைக்களம் - நானியின் அற்புதமான நடிப்பு - ஆகியவை இணைந்து ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம்... கிரைம் வித் ஆக்சன் திரில்லர் படங்களின் எல்லையை மறு வரையறை செய்வதாகவும், பார்வையாளர்களை மேலும் உற்சாகப்படுத்தும் என்றும் உறுதியளிக்கிறது.
உலகளாவிய மக்களுக்காக இரு மொழி திரைப்படமாக 'டாக்ஸிக் : ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்- அப்ஸ்'
ஒரு புரட்சிகரமான சினிமா முயற்சியாக 'டாக்ஸிக் ' என்பது ஆங்கிலம் மற்றும் இந்திய மொழி இரண்டிலும் கருத்தாக்கம் செய்யப்பட்டு, எழுதப்பட்டு, படமாக்கப்பட்ட முதல் பெரிய அளவிலான இந்திய திரைப்படமாகும். இந்திய மொழியான கன்னடத்தில் இந்த படம் படமாக்கப்பட்டு வருகிறது. இது உண்மையிலேயே உலகளாவிய திரைப்பட அனுபவத்திற்கு வழி வகுக்கும். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில் டப்பிங் செய்யப்படும்.
சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற இயக்குநர் கீது மோகன் தாஸ் எழுதி இயக்கிய, 'ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்' - பல்வேறு கலாச்சார ரீதியிலான கதை சொல்லலை மறு வரையறை செய்ய தயாராக உள்ளது. ஆங்கிலம் - கன்னடம் என இரு மொழிகளிலும் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம், உலகளாவிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது. கன்னடம் - இந்திய பார்வையாளர்களுக்கான நுணுக்கங்களை படப்பிடிக்கிறது. அதே தருணத்தில் ஆங்கிலம் - உலகளாவிய பார்வையாளர்களின் அணுகு முறையை உறுதி செய்கிறது. இது திரைப்பட தயாரிப்பாளர்களின் நம்பகத் தன்மை மற்றும் பன்முக தன்மை கொண்டு அணுகி இருப்பதற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,
'' டாக்ஸிக் படத்திற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வை- இந்தியாவிலும், உலக அளவில் உள்ள பார்வையாளர்களுடன் உண்மையாகவே எதிரொலிக்கும் ஒரு கதையை உருவாக்குவதாகும். கதையின் நுணுக்கங்களை கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பிரத்யேகமாக படமாக்க நாங்கள் உழைத்துள்ளோம். இது பல்வேறு மொழியியல் மற்றும் கலாச்சார பின்னணியில் உள்ள பார்வையாளர்களுக்கு ஒரு நிஜமான அனுபவத்தை உறுதி செய்கிறது. டாக்ஸிக் - கலை பார்வை மற்றும் வணிக ரீதியிலான கதை சொல்லலின் துல்லியத்தை ஆராய்கிறது. இது நிலவியல் எல்லைகள்- மொழிகள் மற்றும் கலாச்சார வரம்புகளையும் எல்லாம் கடந்து உலகெங்கிலும் உள்ள இதயங்களுடனும், மனங்களுடனும் இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பயணம்'' என்றார்.
கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா இணைந்து தயாரித்திருக்கும் 'டாக்ஸிக்' திரைப்படம் உலகளாவிய சினிமா அனுபவமாக கருதப்படுகிறது. இதில் பாக்ஸ் ஆபீஸ் நிகழ்வாக... யாஷ் மற்றும் சான்டான்ஸ் திரைப்பட விழா மற்றும் டொரன்டோ திரைப்பட விழா உள்ளிட்ட பல சர்வதேச தளங்களில் விருதினை வென்ற கீது மோகன் தாஸ் ஆகியோருக்கு இடையேயான கூட்டு முயற்சியின் தொலைநோக்கு பார்வையையும் பிரதிபலிக்கிறது. ஜான் விக் மற்றும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படங்களில் பணியாற்றியதற்காக மிகவும் புகழ்பெற்ற ஜே. ஜே. பெர்ரியின் அதிரடி சண்டைக்காட்சிகள் மற்றும் டூன் : பாகம் இரண்டிற்கான சிறப்பு விஷுவல் எஃபெக்ட்ஸிற்காக பாஃப்டா திரைப்பட விருதை வென்ற 'டி என் இ ஜி' யின் விசுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச குழுவினர் படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். இது உலகளாவிய அணுகுமுறையை மேலும் உறுதிப்படுத்துகிறது. நேர்த்தியான கதை சொல்லல் மற்றும் வித்தியாசமான நோக்கம் ஆகியவை இடம் பிடித்திருப்பதால்.. இந்த திரைப்படம் இரண்டு மொழிகளிலும் உருவாக்கப்பட வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வழி வகுத்தது.
கடந்த மாதம் 'ராக்கிங் ஸ்டார்' யாஷின் பிறந்த நாளன்று 'டாக்ஸிக்' உலகத்தை பற்றிய ஒரு பார்வையை வழங்கும் 'பிரத்யேக பிறந்தநாள் பார்வை' எனும் பெயரில் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த டீசர் குறிப்பிடத்தக்க உற்சாகத்தை உண்டாக்கியது. அத்துடன் படத்தின் பட்ஜெட் மற்றும் சர்வதேச தரத்திலான தயாரிப்பின் மதிப்பினையும் எடுத்துக்காட்டியது.
இரு மொழி இயல்புக்காக விரிவான தயாரிப்பு மற்றும் நீட்டிக்கப்பட்ட படப்பிடிப்பு நாட்கள் தேவைப்பட்டன. இப்படத்தின் படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கியது. திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு அதிவேகமான உலகத்தை உருவாக்குவதில் முதலீடு செய்துள்ளனர். இது உயர்தரமிக்க மற்றும் உலகளாவிய இந்திய திறமைசாலிகளின் குழுவை ஒருங்கிணைக்கிறது. இந்த அம்சங்கள் இணைந்து திட்டத்தின் பட்ஜெட் மற்றும் கால அவகாசத்திற்கு பங்களித்துள்ளன. இந்த அம்சங்கள் அனைத்தும் 'டாக்ஸிக்'கை இன்று வரை மிகவும் விலை உயர்ந்த இந்திய தயாரிப்புகளில் ஒன்றாக நிலை நிறுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா பேசுகையில்,
' டாக்ஸிக் படத்திற்கான எங்களுடைய குறிக்கோள் மிக தெளிவாக இருந்தது. இந்தியாவிலும், உலக அளவிலும் எதிரொலிக்கும் ஒரு படம். தொடக்கத்தில் இருந்து இந்த கதையிலும், அதன் ஆற்றலிலும் ஏற்பட்ட ஆழமான நம்பிக்கையால் நாங்கள் உந்தப்பட்டோம். இது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த சினிமா அனுபவத்தை உயிர்ப்பிக்க தேவையான எங்களின் 'ஆல்- இன்' அணுகுமுறையை தூண்டியது. டாக்ஸிக் உலக அளவில் பார்வையாளர்களை கவர்வதுடன், உலக அரங்கில் இந்திய சினிமாவின் திறமையையும் வெளிச்சம் போட்டு காட்டும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இந்த சவாலை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்'' என்றார்.
நடிகர் ரவி மோகன் - தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தொடங்கி வைத்த 'சட்டி கறி' உணவகம்
'சட்டி கறி ' உணவகம் - ஈரோடு பகுதியில் பிரபலமான ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவு வகைகளுக்காகவே சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள அக்கரை எனும் இடத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் மற்றும் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த உணவகத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து உரிமையாளரும் உணவு ஆர்வலருமான அஷ்வின் மற்றும் காயத்ரி ஆகியோர் பேசுகையில், '' உணவே மருந்து! ஆரோக்கியத்தின் ஆணிவேர் உணவு ! எங்களுடைய சட்டி கறி உணவகத்திற்கு வருகை தரும் விருந்தினர்களையும், வாடிக்கையாளர்களையும், அவர்களின் வீட்டை போல் உணர வைப்பதும், அவர்களுக்கு ஒப்பற்ற சுவையுடன் கூடிய உணவை வழங்குவதும் தான் எங்களுடைய முதன்மையான இலக்கு.
எங்களுடைய உணவகத்தில் தென்னிந்திய பாணியில் நாட்டுக்கோழி மற்றும் கடல் சார்ந்த உணவுகளை தயாரித்து வழங்குகிறோம். எங்களுடைய உணவகத்தின் தோற்றமே ஓலை குடிசையை கொண்டு அலங்கரிக்கப்பட்டு, பாரம்பரிய பின்னணியை கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் வருகை தரும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் அவர்களுக்கு எங்களின் உணவு பட்டியலில் இடம் பிடித்த அவர்களின் விருப்பத்திற்குரிய உணவை கடந்த தசாப்தங்களில் தமிழர்களின் மரபு சார்ந்த சமையல் முறையின் படி தயார் செய்து அவர்களுக்கு பரிமாறுகிறோம். உணவை சுவைத்து மகிழ இனிமையான சூழலையும் உருவாக்கி இருக்கிறோம். இந்த உணவகத்தில் 90 இருக்கைகள் கொண்ட பண்ணை உணவகமும் இடம் பிடித்திருக்கிறது. இதில் உங்களுடைய வீட்டிற்கு வருகை தரும் விருந்தினர்களை போல் உணர வைப்பதிலும், அவர்களுக்கு மறக்க முடியாத... என்றென்றும் நினைவில் இருக்கக் கூடிய அனுபவத்தை அளிப்பதிலும் நாங்கள் அர்ப்பணிப்புடன் சேவை செய்ய தயாராக இருக்கிறோம்.
சட்டி கறி உணவகம் - கிராமிய பாணியிலான சுவைக்காக பல விசயங்களை உறுதியான விதிமுறைகளுடன் பின்பற்றுகிறது.
*நாங்கள் ஆரோக்கியத்திற்காக செக்கு எண்ணெயை மட்டுமே பயன்படுத்துகிறோம்.
*அசைவ உணவுகளில் கோழி இறைச்சியை ஈரோடு பாணியில் பராமரிக்கப்படும் நாட்டு கோழியை மட்டுமே பயன்படுத்துகிறோம்.
*நாங்கள் உணவின் சுவைக்காக பயன்படுத்தும் மசாலாக்கள்- எங்களுடைய கைகளாலே வீட்டிலேயே தயாரிக்கப்படுகிறது.
*உணவு தயாரிக்கும் போது நறுமணத்தை மேம்படுத்துவதற்காக பாரம்பரியமான விறகு அடுப்பினை பயன்படுத்திக்கிறோம்
* சமையலுக்கு வெங்காய தாள்களையும் சின்ன வெங்காயத்தையும் மட்டுமே பயன்படுத்துகிறோம்.
ஒருமுறை வருகை தாருங்கள்..! எங்களின் விருந்தோம்பலை ஏற்றுக் கொள்ளுங்கள்..! நீங்களும், உங்களது நண்பர்களும் எங்களுடைய வாடிக்கையாளர்களாக மாறிவிடுவீர்கள்'' என்றார்.
இந்த உணவகத்தின் கிடைக்கும் பிரத்யேக உணவு வகைகளின் பட்டியல்:
நாட்டுக்கோழி வறுவல்
பச்சை மிளகாய் வறுவல்
மிளகு வறுவல்
நல்லம்பட்டி வறுவல்
கேரளா இறால் தொக்கு
வஞ்சிரம் வறுவல்
மீன் குழம்பு
மட்டன் குழம்பு
மற்றும் அசைவ உணவுகள் அனைத்தும் கிடைக்கும்.
பச்சைப்புளி ரசம்
சம்மந்தி மற்றும் பருப்புப்பொடி
பிரட்
ஹல்வா பரோட்டா
காரப்பூண்டு தோசை
வேர்க்கடலை குழம்பு
கறி தோசை
போன்ற சைவ உணவுகளும் கிடைக்கும்.
முன்னணி நட்சத்திரங்கள் பாராட்டு மழையில் சுழல் - தி வோர்டெக்ஸ் சீசன் 2
முன்னணி நட்சத்திரங்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நாக சைதன்யா, ஆர் மாதவன், அட்லீ மற்றும் பல பிரபலங்கள், பிரைம் வீடியோவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சுழல் - தி வோர்டெக்ஸ் சீரிஸ் 2ம் சீசனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர் !!
பிரைம் வீடியோ வெளியாகும் சுழல் - தி வோர்டெக்ஸ் சீரிஸின் 2வது சீசனின் ட்ரெய்லர் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் பிரபலங்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த க்ரைம் திரில்லர் வெப்சீரிஸின் 2வது சீசனை, ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இதன் ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முன்னணி நட்சத்திரங்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நாக சைதன்யா, ஆர் மாதவன், அட்லீ, துஷாரா, லோகேஷ் கனகராஜ், எம் சசிகுமார், ஆர்யா, விஷ்ணு விஷால், அதிதி பாலன், மகத் ராக்வேந்திரா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் சுழல் வெப்சீரிஸின் இரண்டாவது சீசனை பாராட்டி பதிவிட்டுள்ளனர்.
வால் வாச்சர் பிலிம்ஸ் தயாரிப்பில், புஷ்கர் மற்றும் காயத்ரி எழுத்தில், பிரம்மா மற்றும் சர்ஜுன் K M இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸில், முதல் சீசனில் நடித்த கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் மீண்டும் முக்கிய கதாபாத்திரங்களில் திரும்பவுள்ளனர். அவர்களுடன் லால், சரவணன், கவுரி கிஷன் (முத்து), சம்யுக்தா விஷ்வநாதன் (நாச்சி), மோனிஷா பிளெஸ்ஸி (முப்பி), ரினி (காந்தாரி), ஸ்ரீஷா (வீரா), அபிராமி போஸ் (சென்பகம்), நிகிலா சங்கர் (சந்தனம்), கலைவாணி பாஸ்கர் (உலகு) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
சுழல் - தி வோர்டெக்ஸ் 2வது சீசன் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அங்கிலம் சப்டைட்டிலுடன் அமேசான் ப்ரைம் தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.
1ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் பான் இந்தியத் திரைப்படம் 'மிராய்'!
இந்திய சினிமாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, சூப்பர் ஹீரோ ஜானரை முற்றிலும் மறு வரையறை செய்யும் முனைப்பில் இருக்கிறார். தேசிய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற "ஹனுமேன்" திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவரின் அடுத்த பெரிய முயற்சியான "மிராய்" படத்திலும் மக்களை மயக்கத் தயாராகி வருகிறார். இந்த பான் இந்தியா ஆக்ஷன்-அடைவேஞ்சர் படத்தில் தேஜா சஜ்ஜா, சூப்பர் யோதா என்ற மாபெரும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார், இந்தப்படம் சூப்பர் ஹீரோ ஜானரை மிகவும் சுவாரஸ்யமாக மாற்றும். இப்படத்தை கார்த்திக் கட்டமநேனி இயக்க, பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் சார்பில் டி.ஜி. விஷ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்துள்ளனர்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பான் இந்தியா திரைப்படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி உலகமெங்கும் 8 மொழிகளில், 2D மற்றும் 3D வடிவங்களில் வெளியிடப்படுவதாகத் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தினம் ஆகிய விடுமுறைகளை ரசிகர்கள் கொண்டாடும் வகையில், இப்படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் வெளியீட்டு தேதி போஸ்டரில், தேஜா சஜ்ஜா பனியால் மூடப்பட்ட மலைச் சிகரங்களின் நடுவில் நின்று, ஒரு இரும்பு கம்பியைப் பிடித்தபடி ஆழமாகப் பார்க்கும் தோற்றம், படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
"மிராய்" படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் மனோஜ் மஞ்சு வில்லனாக நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் மிக வலுவானதாகவும், மனதில் நிற்கக்கூடியதுமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரித்திகா நாயக் படத்தின் நாயகியாக, தேஜா சஜ்ஜாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.
தேஜா சஜ்ஜாவின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு படம் தொடங்கும் முன்பிருந்தே வெளிப்பட்டு வருகிறது. அவர் சூப்பர் யோதா கதாபாத்திரத்தைத் திரையில் உயிர்ப்புடன் கொண்டுவர முழு அர்ப்பணிப்புடன் உழைப்பை கொட்டி வருகின்றார். இயக்குநர் கார்த்திக் கட்டமநேனி மிகுந்த கவனத்துடன் புதிய உலகத்தை உருவாக்கி வருகின்றார்.
கார்த்திக் கட்டமநேனி படத்தின் ஒளிப்பதிவு, திரைக்கதை ஆகியவற்றைக் கையாளுவதோடு, மணிபாபு கரணம் உடன் இணைந்து வசனங்களையும் எழுதியுள்ளார். கௌரா ஹரி இசையமைக்க, ஸ்ரீ நகேந்திர தங்காலா கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். விவேக் குசிபோட்லா இணை தயாரிப்பாளராகவும், சுஜித் குமார் கொல்லி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி உலகமெங்கும் 8 மொழிகளில், 2D மற்றும் 3D வடிவங்களில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது "மிராய்'
இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன இயக்கத்தில் உருவாகும் 'நாக பந்தம்' பட பாடல்!
நடிகர் விராட் கர்ண் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில் NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கிஷோர் அன்னபுரெட்டி தயாரித்து, அபிஷேக் பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்கும் பான் இந்திய திரைப்படமான 'நாக பந்தம்' எனும் திரைப்படத்திற்காக நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன அசைவுகளில் நாயகன் விராட் கர்ண் மற்றும் நடிகைகள் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் பங்கேற்ற அற்புதமான பாடலை படக் குழுவினர் படமாக்கி வருகிறார்கள்.
இளம் நாயகன் விராட் கர்ண் - பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் 'நாக பந்தம்' எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை அபிஷேக் நாமா பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் பரபரப்பையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் நானக்ராம்குடா ராமாநாயுடு ஸ்டுடியோவில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நாயகன் விராட் கர்ண், நடிகைகள் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான பாடலை படமாக்கி வருகின்றனர். இதற்காக ஏராளமான பொருட்செலவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் அபே ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் பாடலுக்கு இசையமைத்துள்ளார். இந்த பாடலில் பின்னணி பாடகர்களான காலா பைரவா - அனுராக் குல்கர்னி மற்றும் மங்லி ஆகியோரின் துடிப்பான குரல்கள் இடம் பிடித்திருக்கிறது. பாடலாசிரியர் காசர்லா ஷ்யாம் அற்புதமான பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
இந்தப் பாடலுக்கு மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன அசைவுகள் சிறப்பாக இருக்கும். இதனால் படத்தில் இடம்பெறும் நடன காட்சிகள் ரசிகர்களை வசீகரிக்கும் என உறுதியளிக்கிறது.
'தி சீக்ரெட் ட்ரெஷர் ' எனும் வாசகத்துடன் 'நாக பந்தம்' ஒரு சாகச காவிய படைப்பாக தயாராகி வருகிறது. அபிஷேக் நாமா கதை மற்றும் திரைக்கதை என இரண்டிலும் தன்னுடைய தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தயாரிப்பாளர் கிஷோர் அன்னபுரெட்டி இந்த திரைப்படத்தை NIK ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை லட்சுமி ஐரா மற்றும் தேவன்ஷ் நாமா ஆகியோர் பெருமையுடன் வழங்குகிறார்கள்.
இந்த திரைப்படத்தில் இளம் நாயகன் விராட் கர்ண் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகைகள் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெகபதிபாபு, ரிஷப் சஹானி , ஜெயபிரகாஷ், ஜான் விஜய், முரளி சர்மா, அனுசுயா, சரண்யா, ஈஸ்வர் ராவ், ஜான் கொக்கன், அங்கீத் கோய்யா , சோனியா சிங் , மேத்யூ வர்கீஸ், ஜேசன் ஷா, பி. எஸ். அவினாஷ் மற்றும் பேபி கியாரா ஆகியோர் நடிக்கிறார்கள்.
'நாக பந்தம்' திரைப்படம் - பண்டைய புராணங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு கதையை ஆன்மீகமும், சாகசமும் கலந்த கருப்பொருள்களுடன் இணைத்து, அனந்த பத்மநாபசுவாமி மற்றும் பூரி ஜெகன்னாதர் ஆலயங்களில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மறைக்கப்பட்ட பொக்கிஷங்களில் இருந்து உத்வேகம் பெற்று உருவாகிறது. 'நாக பந்தம்' இந்த புனித தலங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. மேலும் இந்தியாவில் விஷ்ணு கோயில்களை சுற்றியுள்ள மர்மங்களை சுவராசியத்துடன் முன் வைக்கிறது.
இந்த திரைப்படத்தில் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்பு தரம், அதிநவீன வி எஃப் எக்ஸ் காட்சிகள் ஆகியவை இடம் பிடித்திருப்பதை உறுதி செய்கிறது. மேலும் இது ஒரு ஹை ஆக்டேன் ஆக்சன் படமாகவும் அமைந்திருக்கிறது. எஸ். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அபே இசையமைக்கிறார். உரையாடல்களை கல்யாண் சக்கரவர்த்தி எழுத படத்தொகுப்பு பணிகளை ஆர். சி. பிரணவ் கவனிக்க தயாரிப்பு வடிவமைப்பை அசோக் குமார் மேற்கொண்டிருக்கிறார். இப்படத்தின் திரைக்கதையை ஷ்ரா 1 மற்றும் ராஜீவ் என். கிருஷ்ணா ஆகியோர் மேம்படுத்தி இருக்கிறார்கள்.
'நாக பந்தம்' 2025 ஆம் ஆண்டில் தமிழ் , தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.
50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறுசுவை விருந்தளித்து கொண்டாடிய 'தனம்' சீரியல் குழுவினர்!
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், அடுத்ததாக, மக்களுக்கு விருந்தாக வெளிவரும் நெடுந்தொடர் “தனம்”. ஆட்டோ ஓட்டும் பெண்ணை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சீரியலை, விளம்பரப்படுத்தும் விதமாக, 50 பெண் ஓட்டுநர்களை அழைத்து, அவர்களை பாராட்டி விருந்தளித்துள்ளனர் படக்குழுவினர்.
தமிழ் சின்னத்திரையுலகில் தொடர்ந்து பல புதுமையான படைப்புகளை வழங்கி, மக்களை கவர்ந்து வரும், விஜய் தொலைக்காட்சியில், அடுத்ததாக இந்த பிப்ரவரி 17 முதல் ஒளிபரப்பாகி வருகிறது “தனம்” சீரியல்.
ஒரு குடும்பத்தில் திருமணமாகி வரும் புதுப்பெண், எதிர்பாரா விதமாக கணவனை இழந்த பின், அந்த மொத்தக் குடும்பத்தையும், ஆட்டோ ஓட்டி காப்பாற்றுகிறாள், மொத்தக் குடும்பத்தின் சுமைகளையும் தன் தோளில் சுமக்கிறாள். ஆட்டோ ஓட்டும் தனத்தை மையப்படுத்தி, இந்த சீரியலின் கதை பயணிக்கிறது.
தனம் கதாப்பாத்திரத்திரத்தில் சத்யா நடிக்க, ரூபஸ்ரீ, ஐஸ்வர்யா, Vj கல்யாணி, கிஷோர், அர்ஜுன், ஜெயஸ்ரீ, ரேணுகா, கோகுல், சமிக்ஷா சொர்ணா, மதன், ரவிவர்மா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
பிப்ரவரி 17 முதல் ஒளிப்பரப்பாகி வரும் இந்த புதிய சீரியல், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆட்டோ ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றி வரும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களான நிஜ ஹீரோக்களை கௌரவப்படுத்தும் விதமாக, தனம் சீரியல் குழுவினர் 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு அறுசுவை விருந்தளித்து கொண்டாடினர்.
இந்நிகழ்வினில் 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களும் இத்தொழிலுக்கு வந்த தங்களின் கதைகளை பகிர்ந்து கொண்டனர். அவர்களுடன் படக்குழுவினர் கலந்துதுரையாடி, சிறு சிறு விளையாட்டுக்கள் விளையாடி, அவர்களை உற்சாகப்படுத்தினர். இந்த மொத்த நிகழ்வும் மிக இனிமையான, மகிழ்வுடன் கூடிய கொண்டாட்டமாக அமைந்தது.
இந்த நிகழ்வின் வீடியோ இப்போது வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
“தனம்” சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும். மதியம் 3 மணிக்கு உங்கள் விஜய் தொலைக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் காணக்கிடைக்கிறது.
FICCI ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (தெற்கு) அமைப்பின் தலைவராக கமல் ஹாசன் அறிவிக்கப்பட்டார்!
சென்னை, 21 பிப்ரவரி 2025: சென்னையில் இன்று நடைபெற்ற ‘ஃபிக்கி (FICCI) ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு (MEBC)–சவுத் கனெக்ட் 2025’-ஐ தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின், நடிகர் மற்றும் இயக்குநர் கமல் ஹாசனுடன் இணைந்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் FICCI ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (தெற்கு) அமைப்பின் தலைவராக கமல் ஹாசன் அறிவிக்கப்பட்டார்.
உலகளாவிய பொழுதுபோக்கு சந்தையில் இந்தியாவின் இடத்தை வடிவமைப்பதில் பிராந்திய மொழிகள் திறன்வாய்ந்த சக்திகளாக உருவாகி வருவதையும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி வருவதையும் கருத்தில் கொண்டு, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பான FICCI இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு நாள் நிகழ்வை சென்னையில் நடத்துகிறது. திரைப்படம், தொலைக்காட்சி, ஓடிடி, கேமிங், அனிமேஷன் மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்கு ஆகியவற்றின் எதிர்காலத்தை ஆராய்வதற்கான முக்கிய தளமாக செயல்படுவதை இந்நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் படைப்புலக பொருளாதாரத்தில் புதுமை, ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு இது அடித்தளம் அமைக்கிறது.
உலகளாவிய அங்கீகாரத்தை ஈர்ப்பதில் பிராந்திய மொழிகளின் முக்கியத்துவத்தை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் வலியுறுத்தினார். தமிழ்நாட்டை ஒரு பொழுதுபோக்கு மையமாக மாற்ற வேண்டும் என்ற டாக்டர் கலைஞர் (டாக்டர் கருணாநிதி) அவர்களின் கனவை நனவாக்குவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தினார். சென்னையில் 152 ஏக்கர் பரப்பளவில் ஒரு அதிநவீன திரைப்பட நகரத்தை நிறுவுவது இந்த பயணத்தில் ஒரு முக்கிய முயற்சியாக திகழும். இந்த உலகத்தரம் வாய்ந்த நகரத்தில் அதி நவீன போஸ்ட்-புரொடக்ஷன் ஸ்டுடியோக்கள், மெய்நிகர் தயாரிப்பு தொழில்நுட்பங்கள், அனிமேஷன் மற்றும் VFX ஸ்டுடியோக்கள், LED சுவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான 5 நட்சத்திர ஹோட்டல் என அனைத்து வசதிகளும் இடம்பெறும்," என்று திரு. உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
டாக்டர் கருணாநிதியின் கனவை நிறைவேற்றும் நோக்கில் மற்றுமொரு முக்கியமான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். “2010ம் ஆண்டு, டாக்டர் கலைஞர் ஆட்சிக் காலத்தில், கேளம்பாக்கம் அருகே 90 ஏக்கர் நிலம் திரைப்படத் துறை அமைப்புகளுக்கு குடியிருப்பு வளாகங்கள் கட்டுவதற்காக 99 ஆண்டு குத்தகைக்கு ஒதுக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும், ஆனால் பயனாளிகளால் அதை முடிக்க முடியவில்லை, இதனால் உத்தரவு செல்லாமல் போனது. திரையுலக சங்கங்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, நமது முதலமைச்சர் அந்த உத்தரவைத் திருத்தி, நிலத்தை திரையுலகினர் பயன்படுத்த அனுமதித்துள்ளார். திருத்தப்பட்ட உத்தரவு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது,” என்றார்.
திரு கமல்ஹாசன் பேசுகையில், "இந்திய சினிமா நமது கலாச்சாரத்தின் உண்மையான தூதராக திகழ முடியும். இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு ஒரு நீண்டகால தொலைநோக்கு திட்டம் நமக்கு தேவை. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் கட்டுப்படுத்தாமல் சந்தை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்,” என்று கூறினார்.
“மேலும், சினிமா மீதான மாநில பொழுதுபோக்கு வரியை மறுபரிசீலனை செய்து சீர்திருத்த வேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக துணை முதல்வரிடம் தெரிவிக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
FICCI ஊடக மற்றும் பொழுதுபோக்கு குழுவின் தலைவரும், ஜியோஸ்டார் பொழுதுபோக்கு - தலைமை நிர்வாக அதிகாரியுமான கெவின் வாஸ் பேசுகையில், “தென்னிந்திய பொழுதுபோக்கு துறை நாடு தழுவிய வளர்ச்சியை அடைந்து, உலகளாவிய கவனத்தையும் ஈர்த்துள்ளது, இதற்கு உதாரணமாக திரு. கமல்ஹாசன் போன்ற பிரபலங்கள் உள்ளனர். அவர்களின் படங்கள் பல ஆண்டுகளாக எல்லைகளை கடந்து வெற்றி பெற்றுள்ளன. ஆர் ஆர் ஆர் மற்றும் கே ஜி எஃப்-2 போன்ற படங்களாலும், தமிழ் சினிமாவின் கதைசொல்லலாலும் கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய திரைத்துறை மறுமலர்ச்சி, இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையை தொடர்ந்து முன்னெடுத்து செல்கிறது.
டிஜிட்டல் ஊடகங்கள் வேகமாக வளர்ந்து வருவதால், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஆகிய இரண்டு துறைகளும் இணைந்து செழிக்கும் மகத்தான திறனை கொண்டுள்ளன. விரைவில் தொடங்கப்பட உள்ள வேவ்ஸ் போன்ற அமைப்புகள் மற்றும் புதுமையான தொடர் முயற்சிகளின் காரணமாக இந்திய பொழுதுபோக்கு துறை உலகளாவிய பாய்ச்சலுக்கு தயாராக உள்ளது," என்றார்.
இந்த இரண்டு நாள் மாநாட்டில் அறிவுசார் அமர்வுகள், கூட்டங்கள், பயிற்சி பட்டறைகள், உள்ளடக்க சந்தைகள் மற்றும் கண்காட்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் வளர்ந்து வரும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் முக்கிய அம்சங்களை இந்த மாநாடு ஆய்வு செய்யும். இந்திய சினிமாவின் உலகளாவிய செல்வாக்கு, தொலைக்காட்சி மற்றும் OTT துறைகளால் ஏற்பட்டுள்ள மாற்றம், ஒளிபரப்பு மற்றும் இசை நுகர்வை மறுவரையறை செய்யும் புதுமை திட்டங்கள் மற்றும் கேமிங், அனிமேஷன், VFX உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் எழுச்சி ஆகியவை மீது முக்கிய கவனம் செலுத்தப்படும். மேலும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் வணிகம் செய்வதை எளிமைப் படுத்துவது (EoDB), ஒழுங்குமுறை அமைப்புகள், கொள்கைகள், தடையற்ற, வளர்ச்சி சார்ந்த தொழில் சூழல் பற்றிய விவாதங்கள் நடைபெறும்.
PlayNext - டெவலப்பர் தினம் என்ற சிறப்புப் பிரிவு, கேமிங், இணைய விளையாட்டு மற்றும் இது சார்ந்த பொழுதுபோக்குகள் குறித்து ஆராயும். AVGC-XR துறையில் உலகளாவிய முன்னோடியாக இந்தியா உருவெடுப்பதை இது வெளிப்படுத்தும்.
FICCI ஊடக மற்றும் பொழுதுபோக்கு குழுவின் இணைத் தலைவர் & மெட்டா நிறுவன துணைத் தலைவர் மற்றும் இந்திய தலைவர் சந்தியா தேவநாதன்; FICCI ஊடக மற்றும் பொழுதுபோக்கு குழுவின் இணைத் தலைவர் & வார்னர்ஸ் பிரதர்ஸ் டிஸ்கவரி மூத்த துணை தலைவர் மற்றும் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான தலைமை மேலாளர் அர்ஜுன் நோஹ்வர்; மற்றும் FICCI தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். ஆஷிஷ் பெர்வானி, ரவி கொட்டாரகரா, கார்த்திகேயன் சந்தானம், சஞ்சய் ஏ. வாத்வா, அங்கூர் வைஷ், ஸ்வேதா பாஜ்பாய், மகேஷ் ஷெட்டி, கிருஷ்ணன் குட்டி, ரவிகாந்த் சப்னவிஸ், முஞ்சல் ஷ்ராப், வைபவ் சவான், ஜேக்ஸ் பிஜாய், பிஜாய் அற்புதராஜ், ஆஷிஷ் குல்கர்னி உள்ளிட்ட திரையுலக முன்னணியினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னரான 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ராஜ்கமல் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் , யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான காணொளி வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை' எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத, இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான ஷான் ரோல்டன் மற்றும் பின்னணி பாடகி சைந்தவி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா