சற்று முன்

'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு!   |    அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக கூறும் நடிகை   |    நடிகர் சூர்யா பத்து கோடி ரூபாய் நிதியுதவி!   |    இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை! - சிறுத்தை சிவா   |    இயக்குநர் மிஷ்கின், துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் 'ஐ அம் கேம்' பூஜையுடன் துவங்கியது!   |    தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் துருவ் விக்ரம் நடிக்கும் படம் 'பைசன் காளமடான்' வெளியாகிறது!   |    துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான 'ஐ அம் கேம்' படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார்   |    ஓடிடி- யில் உலகில் சாதனை படைத்து வருகிறது ZEE5-இன் 'அய்யனா மானே' சீரிஸ்!   |    'நாக் நாக்' கில், நான் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் நான் ஹீரோ கிடையாது - இயக்குநர் ராகவ் ரங்கநாதன   |    பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் #STR49 பூஜையுடன் துவங்கியது!   |    முன்னணி திரைப்பிரபலங்கள் வெளியிட்ட 'மனிதர்கள்' அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கெளரவ வேடத்தில் நடிக்கும் 'அடங்காதே'   |    உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட 'லெவன்' பட டிரெய்லர்!   |    நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் ஆரம்பித்து வைத்த 'துகில்' நிறுவனத்தின் புதிய கிளை!   |    நடிகர் சூரி நடிப்புத் திறமையின் மற்றொரு முகத்தை, பதிவு செய்யும் படமாக 'மாமன்' இருக்கும்   |    ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள மக்கள் மனம் கவர்ந்த 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ் புரோமோ!   |    வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வைடாக பார்ப்பவன் நான் - ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்!   |    என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள் - பேரரசு!   |    தமிழ் சினிமாவின் அடையாளமாக டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும் - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்   |    விஜய் சேதுபதி படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்!   |   

சினிமா செய்திகள்

நட்சத்திர கூட்டணியில் உருவாகும் 'தி பாரடைஸ் ' படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு
Updated on : 03 March 2025

'நேச்சுரல் ஸ்டார்' நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - SLV  சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் 'தி பாரடைஸ்' எனும் திரைப்படத்திலிருந்து ரா ஸ்டேட்மெண்ட் எனும் பெயரில் பிரத்யேகமான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இது கடினமான மற்றும் காவிய வடிவிலான பயணத்தை உறுதியளிக்கிறது. 



 



'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில் வெளியான தசரா திரைப்படம்- அவருடைய திரையுலக பயணத்தில் குறிப்பிடத்தக்க படைப்பாக இருந்தது.  அவர் தன்னுடைய சௌகரியமான தளத்திலிருந்து விலகி, ஒரு கரடு முரடான கிராமிய கதாபாத்திரத்திற்கு மாறி இருக்கிறார். திரைப்பட ஆர்வலர்கள் அவரிடமிருந்து எதிர்பார்க்காத ஒன்றை தற்போது நானி மீண்டும் வழங்குவதற்கு தயாராக உள்ளார். அவர் SLV சினிமாஸ் - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெலா மற்றும் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி ஆகியோருடன் மீண்டும் ஒரு பிரம்மாண்டமான படத்திற்காக இணைகிறார். இவர்கள் இணைந்திருக்கும் புதிய படம் 'தி பேரடைஸ்'. தற்போது தயாரிப்பின் தொடக்க நிலையில் உள்ளது. மேலும் நானியை இதற்கு முன் ஏற்றிராத தைரியமான- மிக வலிமையான கதாபாத்திரத்தில் தோன்றுவதையும் உறுதியளிக்கிறது. 



 



இப்படத்தின் தயாரிப்பாளர்கள் 'ரா ஸ்டேட்மென்ட்' எனும் பெயரில் பிரத்யேக  வீடியோவை வெளியிட்டனர். அந்த காணொளியின் முதல் காட்சியிலிருந்து 'ரா - RAW' என்ற சொல் ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.‌ சூழல் - மொழி-  கதை - பின்னணி - ஆகியவை கரடு முரடானவை மற்றும்  பண்படுத்தப்படாதவை. இந்தக் காட்சி ஒருவகையான மறுப்புடன் தொடங்குகிறது. அசலான உண்மை - அசலான மொழி - ஆகியவை வரவிருக்கும் விசயங்களுக்கான த்வொனியை அமைக்கிறது. ஒரு சக்தி வாய்ந்த குரல் வழியாக இக்கதையின் மையம் குறித்து விவரிக்கப்படுகிறது. 



 



அதில், '' வரலாற்றில் எல்லோரும் கிளிகள் மற்றும் புறாக்களை பற்றி எழுதி இருக்கிறார்கள். ஆனால் அதே இனத்தில் பிறந்த காகங்களைப் பற்றி யாரும் இதுவரை எழுதியதில்லை. பசியால் வயிறு எரிந்த காகங்களின் கதை இது. பல காலமாக நடந்து வரும் சடலங்களின் அழுகைகள் - தாயின் மார்பிலிருந்து பாலில் அல்ல.. ரத்தத்தில் எழுப்பப்பட்ட ஒரு சமூகத்தின் கதை. ஒரு தீப்பொறி பற்ற வைக்கப்பட்டு, முழு சமூகத்தையும் உற்சாகத்தால் நிரப்பியது. ஒரு காலகட்டத்தில் இழிவுபடுத்தப்பட்ட காகங்கள் இப்போது தங்கள் கைகளில் கூரிய வாள்களை வைத்திருக்கின்றன. அந்த காகங்களை ஒன்றிணைத்த ஒரு கலகக்கார இளைஞனின் கதை இது. அந்த இளைஞன் ஒரு தலைவராக மாறிய கதை...'' என அந்த குரல் விவரிக்கிறது.‌ 



 



இந்தக் குரல் அப்பட்டமான காட்சிகளுடன் இணைந்து பார்வையாளர்களை அது விவரிக்கும் சமூகத்தின் வேதனையை உணர அனுமதிக்கிறது. தொடக்கக் காட்சியில் இறந்த உடல்களால் சிதறடிக்கப்பட்ட சேரிகளையும், அதன் மேலே அச்சுறுத்து வகையில் காகங்கள் பறப்பதையும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. பின்னர் ஒரு மிகப்பெரிய வெடிப்பிற்குள் கதாநாயகன் நானியின் பிரவேசத்தை குறிக்கிறது. அவர் எதிர்பாராத தோற்றத்தில் தோன்றுகிறார். காலணிகளில் கட்டப்பட்ட கை கடிகாரம்-  தண்ணீரிலிருந்து இழுக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கி - கரடு முரடான தோற்றம் - இதனுடன் அவர் உறுதி குலையாமல் நடந்து ..தனது மக்களை பெருமையுடன் வழி நடத்துகிறார். அவரது முகம் மறைக்கப்பட்டிருந்தாலும் அவரது உடல் மொழி - தோரணை - குரலின் ஆற்றல் - அவருடைய உடல் அமைப்பு மற்றும்  இரட்டை ஜடையுடனான சிகை அலங்காரத்தால் சிறப்பிக்கப்படுகிறது. அத்துடன் கதாபாத்திரத்தின் தீவிரத்தையும் உடனடியாக காட்சிப்படுத்துகிறது. 'ஹீரோ' என்ற வார்த்தையால் அலங்கரிக்கப்பட்ட அவர் அணிந்திருக்கும் பெல்ட் - மக்களின் தலைவராக அவருடைய பங்களிப்பையும் குறிக்கிறது. 



 



இந்த ரா ஸ்டேட்மென்ட் மூலம் 'தி பாரடைஸ்' படத்திற்காக இன்றுவரை நானியின் மிகவும் முரட்டுத்தனமான மற்றும் தீவிரமான கதாபாத்திரத்தை காட்சிப்படுத்துகிறது என்பதை குறிக்கிறது. அவரது அற்புதமான மேக்ஓவர் பார்வையாளர்களுடன் நிறைய பேசுகிறது. மேலும் அவரது முகத்தில் தெளிவான பார்வை இல்லாவிட்டாலும் அந்த கதாபாத்திரத்தின் சித்தரிப்பும்.. உணர்வும்... வலிமையும்... நேர்த்தியாக வெளிப்படுகின்றன. இது ஆரம்பம் மட்டும்தான். மேலும் படம் - கிளர்ச்சி மற்றும் தலைமைத்துவ உலகத்திற்குள் ஒரு முரட்டுத்தனமான மற்றும் காவியம் சார்ந்த பயணமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது. 



 



இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெலா மீண்டும் ஒரு கற்பனை திறன் மிகு படைப்பாளியாக தன்னை நிரூபித்துள்ளார். முதல் காட்சியிலிருந்து பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் ஒரு முரட்டுத்தனமான மற்றும் மூழ்கடிக்கும் உலகத்தை திறமையாக உருவாக்கியிருக்கிறார். அவரது வித்தியாசமான கதை சொல்லல் ஒவ்வொரு காட்சியிலும் பளிச்சிடுகிறது. மேலும் அவர் நானியின் திரை தோற்றத்தை அசலான தீவிரம் நிறைந்த கதாபாத்திரமாக முன் வைப்பதையும் மறு வரையறை செய்கிறார். இது இந்த வீடியோவில் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று. நானியின் கையில் உள்ள பச்சை குத்தியிருப்பது..போன்ற விவரங்களுக்கு மிகுந்த கவனம் செலுத்துவதாகும். இந்த சிறிய காட்சியின் அம்சம்- கதாபாத்திரத்தின் தனிப்பட்ட பரிணாம வளர்ச்சியின் சக்தி வாய்ந்த அடையாளமாக மாறுகிறது. 



 



ரா ஸ்டேட்மென்ட் காணொளியில் இப்படத்தில் பணியாற்றும் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலும் சிறப்பாக விளங்குகிறது. ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் செய்துவரும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' அனிருத் இசையமைக்கிறார். 



 



தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை அவினாஷ் கொல்லா மேற்கொள்வது இந்தத் திரைப்படத்தின் தனித்துவமான அம்சமாகும். இயக்குநர் ஓடெலா உருவாக்கும் உலகம் நம்பக்கூடிய வகையில் உருவாகிறது. கதாபாத்திரங்கள் அணியும் உடைகள் முதல் அரங்க வடிவமைப்பு வரை ஒவ்வொரு விவரமும் பார்வையாளர்களை இந்த தீவிரமான பிரபஞ்சத்தில் மூழ்கடிக்கும். படத்தொகுப்பு பணிகளை நவீன் நூலி கையாள்கிறார். SLV சினிமாஸின் தயாரிப்பின் தரம் என்பது சர்வதேச அளவிலானது. படத்தின் பிரம்மாண்டம் ஒவ்வொரு காட்சியிலும் தெளிவாக தெரியும். இவை சொல்லப்படும் கதையின் அளவை அடிக்கோடிட்டு காட்டும் வகையில் மெருகூட்டுகிறது. 



 



தமிழ், தெலுங்கு,  இந்தி, ஆங்கிலம் , மற்றும் ஸ்பானிஷ் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் ரா ஸ்டேட்மென்ட் எனும் பிரத்யேக வீடியோ பார்வையாளர்களுக்கு எதிர்பாராததை வழங்குகிறது. ஒரு புதிய தரத்தை உருவாக்கி. சிறப்பான சினிமாவிற்கான தரத்தை மேலும் உயர்த்துகிறது. இந்த காணொளியின் வீடியோவின் கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி  மொழி பதிப்புகள் விரைவில் வெளியிடப்படும். இதன் உலகளாவிய ஈர்ப்புடன் படம் உலகம் முழுவதும் வெளியிடப்படும். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா