சற்று முன்

யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |    மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'   |    'படையாண்ட மாவீரா' மக்களிடத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும்!   |    நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் 'An Ordinary Man' படத்தின் ப்ரோமோ வெளியீடு   |    மாபெரும் 3D அனிமேஷன் சினிமா 'வாயுபுத்ரா' புனிதமிக்க உலகின் பிரம்மாண்டம்!   |    அதிரடி காட்சிகளுடன் விரைவில் துவங்கவுள்ள பான்-இந்தியா திரைப்படம் 'சம்பராலா ஏடிகட்டு (SYG)'   |    நிவின் பாலியின் அதிரடி லுக்கில் உருவாகும் அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லர் ‘பேபி கேர்ள்’   |    அன்போடு 'ஸ்வீட்டி' என்று அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டிக்கு பிரபாஸ் வாழ்த்து பதிவு!   |    100 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லோகா - அத்தியாயம் 1’!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் பிரைம் வீடியோவில்!   |    கீர்த்தி சுரேஷ் & மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் விமரிசையாக துவங்கியது!   |    ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ள 'பூக்கி' பூஜையுடன் துவங்கியது!   |   

சினிமா செய்திகள்

திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!
Updated on : 05 March 2025

மனதை இலகுவாக்கும் சரவெடி காமெடி கொண்டாட்டத்திற்கு தயாராக இருங்கள்.  திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் மார்ச் 7, 2025ல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!. இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியுள்ள இப்படத்தில், கே. மணிகண்டன், ஷான்வி மேக்னா முன்னணி வேடங்களில் நடிக்க, நிவேதிதா ராஜப்பன், குரு சோமசுந்தரம், ஆர். சுந்தர்ராஜன், குதசனாட் கனகம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



கதை நாயகன் நவீன் (கே மணிகண்டன்), ஒரு கிராபிக் டிசைனர், வேலை இழந்து பிறகு,  அவனது மனைவி வெண்ணிலா (ஷான்வி மேக்னா) கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்கிறார். வேலை இழப்பு, கடன் சிக்கல்கள், குடும்ப பிரச்சனைகள் என அனைத்தும் சேர்ந்து நவீனின் வாழ்க்கையை படு சிக்கலாக மாற்றுகிறது. அவரின் மோசமான முடிவுகள், தோல்வியுற்ற  சொந்தத்தொழில் முயற்சிகள், அதனுடன் குடும்பத்தில் வரும் அதிர்ச்சியான தருணங்கள் எல்லாவற்றையும் நவீன் எப்படி சமாளிக்கிறான் என்பதை இக்கதை முழுக்க முழுக்க பரப்பரப்புடனும் காமெடியாகவும் சொல்கிறது.



 



மோசமான வணிக முயற்சிகள், தோல்வியுற்ற ரியல் எஸ்டேட் திட்டம், மற்றும் அவனது மாமா ராஜேந்திரனின் (குரு சோமசுந்தரம்)  உடனான சண்டைகள், என  நவீனின் வாழ்வில் மேலும் மேலும் பல சிக்கல்கள் உருவாகின்றன. குடும்ப உறவுகளின் உணர்வுகளையும், உண்மையையும் கலந்த அழகான இந்தக் கதையில், நவீன் தனது குடும்பத்தை சந்தோஷமாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்கிறான் எந்த எல்லைக்குப் போகிறான் என்பதை படு  சுவாரஸ்யமாகவும், காமெடியும் கலந்து சொல்கிறது இப்படம். 



 



ZEE5 நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது.., 



குடும்பஸ்தன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைக் குவித்து, பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. ரசிகர்களிடம் கண்ணீரையும் சிரிப்பையும் ஒருசேர வரவழைத்துள்ளது இப்படம். ZEE5ல் நல்ல  தமிழ்ப் படைப்புகளுக்கு எப்போதும் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.  



 



இந்த அரிய ரத்தினத்தை  எங்கள் ZEE5ல் கொண்டு வருவதில் பெருமை கொள்கிறோம். அற்புதமான நடிகர்கள், மிகச்சிறந்த நடிகர்களின் உழைப்பில்,  ஒரு மிடில்கிளாஸ் இளைஞனின் வாழ்க்கை கஷ்டங்களை, உணர்வுப்பூர்வமாகவும், கொண்டாட்டத்துடனும் சொல்லும்  இப்படத்தை, திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடியதைப் போலவே, இப்போது இந்த டிஜிட்டல் வெளியீட்டிலும் கொண்டாடுவார்கள் என நம்புகிறோம்.  வரும் மார்ச் 7 அன்று ZEE5 இல் இப்படத்தை கண்டுகளியுங்கள். 



 



இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி கூறியதாவது.., 



"ஒரு அறிமுக இயக்குனராக, ஒரு அற்புதமான குழுவுடன் குடும்பஸ்தன் படத்தை உருவாக்கியது, மிக அபாரமான பயணமாக அமைந்தது. தியேட்டர்களில் நவீனின் பயணத்தை  பார்வையாளர்கள் கொண்டாடியதைக் காண, பெரு மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது ZEE5 டிஜிட்டல் பிரீமியர் மூலம், அனைத்து மக்களும் இந்த காமெடி என்டர்டெயினரை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். 



 



நடிகர் கே. மணிகண்டன் கூறியதாவது, 



குடும்பஸ்தனில் ஒரு மிடில்கிளாஸ் இளைஞனாக  நவீன் பாத்திரத்தை ஏற்று நடித்தது,  மிகச் சவாலான அனுபவமாக இருந்தது. குடும்பத்துக்காக ஒரு இளைஞன் படும், துயரங்கள், சிக்கல்கள், அவனின் சாகசங்கள் என மிக உணர்ச்சிகரமான பயணமாக அமைந்தது. நவீன் கதாப்பத்திரம் அனைத்து இளைஞர்களின் பிரதிபலிப்பு. இந்த அற்புதமான திரைப்படத்தை அனைத்து ரசிகர்களும் ZEE5 மூலம் ரசிக்கவுள்ளது, பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. இப்படம் உங்களை சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், குடும்பம் சார்ந்த முடிவுகளில் உங்கள் சிந்தனையை மாற்றும். 



 



ஷான்வி மேக்னா கூறியதாவது,



"வெண்ணிலா அன்பு நிறைந்த ஒரு அழகான பாத்திரம், குடும்பத்தைச் சுற்றி நடக்கும் குழப்பங்களுக்கு மத்தியில், தனது கனவுக்காக போராடும் ஒரு இளம் பெண்.  நவீனின் தொடர் சாகசங்களுக்கு இணையாக அவளும் இணைந்திருப்பது, ஒரு முழுமையான ரோலர்கோஸ்டர் அனுபவமாக அமைந்தது.  பார்வையாளர்களை தங்கள் சொந்த வாழ்க்கையை நினைத்து, சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பல தருணங்களின் சரியான கலவையை இப்படம் வழங்குகிறது.  பல ஆச்சரிய திருப்பங்களுடன் கூடிய இந்த ஃபெமிலி என்டர்டெயினர் திரைப்படத்தை, Zee5 மூலம் அனைத்து மக்களும் ரசிக்கவுள்ளதில் மகிழ்ச்சியடைகிறேன். 



 



நிவேதிதா ராஜப்பன் கூறியதாவது, 



குடும்பஸ்தன் படத்தின் ஒரு அங்கமாக நானும் இருந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனது கதாபாத்திரம் நவீனின் வாழ்க்கையில் நடக்கும் சிக்கல்களுக்கு மேலும் ஒரு புதிய அடுக்கைச் சேர்க்கிறது, கதாப்பாத்திரத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நான் மிகவும் ரசித்தேன். இந்தப் படத்தின் சிறப்பு என்னவெனில், இது உண்மையான வாழ்க்கை போராட்டங்களை மிக அருமையான நகைச்சுவையுடன் சொல்கிறது.  திரையரங்குகளில் இப்படத்தை, ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ZEE5 மூலம் இப்போது அனைத்து மக்களுக்கும் சென்று சேர்வதைக் காண ஆவலோடு உள்ளேன்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா