சற்று முன்

துபாயில் புதிய பாந்தர் கிளப் திறந்து வைத்த கிங் கான் ஷாருக்கான்!   |    பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் 'வித் லவ்'!   |    நடிகை ரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!   |    ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தில் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ஜனவரி 23 அன்று திரைக்கு வரும் 'மாயபிம்பம்'!   |    ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகும் தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை நிகழ்வு!   |    இசை உலகின் ஜாம்பவான் ஏ.ஆர். ரஹ்மான் முதன்முறையாக நடிகராக அறிமுகமாகிறார்!   |    ஆக்சன்-திரில்லர் திரைப்படம் ‘மாஸ்க்’ ஜனவரி 9, 2026 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது!   |    ‘தி ராஜா சாப்’ ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது   |    நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்தே அவர்கள் குணம்தான் - இயக்குநர் நாராயணன்   |    இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'த்ரிபின்னா' இந்திய சிம்பொனி!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” கன்னட பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'   |    நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது   |    5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த 'சிக்மா' திரைப்பட டீசர்   |    களைகட்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!   |    விஜய் சேதுபதிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வைரல்!   |    Behindwoods Productions நிறுவனம் யூடுயூபில் வெளியிட்ட 'மூன்வாக்' படத்தின் மினி கேசட்!   |    சிறை ஒரு நிறைவான அனுபவம்! - தயாரிப்பாளர் SS லலித் குமார்   |    உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘மிஷன் சாண்டா’   |   

சினிமா செய்திகள்

கிரிக்கெட் வீரர் ஆர் அஸ்வின் அறிமுகப்படுத்திய நடிகர் சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம்!
Updated on : 14 March 2025

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருக்கும் ’டெஸ்ட்’ படத்தில் நடிகர் சித்தார்த்தின் அர்ஜூன் கதாபாத்திர அறிமுக வீடியோவை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் வெளியிட்டுள்ளார். 



 



சிலருக்கு கிரிக்கெட் ஒரு விளையாட்டு, பலருக்கு அது ஒரு ஆர்வம். ஆனால், அர்ஜுனுக்கு அது வாழ்க்கை! திறமையான நடிகரான சித்தார்த் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  அவரது கிரிக்கெட் வீரர் கதாபாத்திரம் லட்சியம், தியாகம் மற்றும் இடைவிடாத முயற்சி ஆகியவற்றைக் கொண்டது. அர்ஜூன் மைதானத்தில் அடியெடுத்து வைக்கும்போது கிரிக்கெட் பேட்டை மட்டும் எடுத்து செல்லவில்லை. ஒரு நாட்டின் எதிர்பார்ப்புகளையும் தனது சொந்த குடும்பத்தின் நம்பிக்கைகளையும் சுமந்து செல்கிறார். சர்வதேச சுழற்பந்து வீச்சாளரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரருமான ஆர். அஸ்வின், அர்ஜுனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளார். 



 



அர்ஜுனுக்கு கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதையும் தாண்டி அது அவனது அடையாளம், குறிக்கோள் மற்றும் அவனது மிகப்பெரிய சவால். ஆனால் அவனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் இடையில் பிரச்சினைகள் வரும்போதுதான் அர்ஜூனுக்கு உண்மையான ‘டெஸ்ட்’ தொடங்குகிறது. 



 



தனது கதாபாத்திரத்தைப் பற்றி சித்தார்த் பேசுகையில், “அர்ஜுனின் கதை முழுக்க முழுக்க ஆர்வம் மற்றும் தியாகத்தைக் கொண்டது. அவன் தனக்காக மட்டும் விளையாடவில்லை. அவன் தனது  நாட்டிற்காகவும், விளையாட்டின் மீது கொண்ட காதலுக்காகவும், அவனது கனவுகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான போராட்டத்தையும் சுமந்துதான் விளையாடுகிறான். ’டெஸ்ட்’ என்பது ஒரு ஸ்போர்ட்ஸ் படம் மட்டுமல்ல. இது நமது தேர்வுகள் பற்றியும் நமக்கே தெளிவுபடுத்துகிறது. இந்தப் படத்தை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் பார்ப்பதற்காக நான் காத்திருக்கிறேன்” என்றார். 



 



அர்ஜுனின் விளையாட்டு மீதான காதல் அவரது தேர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இதுபற்றி மேலும் அறிய ஏப்ரல் 4 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ’டெஸ்ட்’ திரைப்படம் பாருங்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா