சற்று முன்

நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

'ஸ்வீட் ஹார்ட்' படத்தை பார்த்து ரியோ ராஜை கண்கலங்க பாராட்டிய ரசிகை!
Updated on : 21 March 2025

'மாடர்ன் மாஸ்ட்ரோ ' யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில், ரியோ ராஜ் - கோபிகா ரமேஷ் நடிப்பில் உருவாகி கடந்த 14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான 'ஸ்வீட் ஹார்ட்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு வழங்கி வருகிறார்கள். 



 



உறவுகள் குறித்த உளவியல் சிக்கலில் தவிக்கும் காதலர்- அவரை காதலிக்கும் காதலி- இந்த ஜோடி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ரசனையாகவும், உணர்வுபூர்வமாகவும் விவரிக்கும் படைப்பாக 'ஸ்வீட் ஹார்ட்' இருந்ததால்... ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து தங்களது ஆதரவினை வழங்கி வருகிறார்கள். அதிலும் யுவன் சங்கர் ராஜாவின் வசீகரிக்கும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் கவரப்பட்ட ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரையரங்கத்திற்கு வந்து தங்களின் மகிழ்ச்சியை உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். 



 



ரசிகர்களின் வரவேற்பினை கண்டு சந்தோஷமடைந்த படக் குழு, கடந்த 19 ஆம் தேதியன்று ஈரோடு - ஸ்ரீ சக்தி திரையரங்கத்திற்கும், சேலம் - டி என் சி திரையரங்கத்திற்கும்,  கோவை - பிராட்வே திரையரங்கத்திற்கும்,  திருப்பூர் - ஸ்ரீ சக்தி திரையரங்கத்திற்கும் நேரடியாக சென்று ரசிகர்களின் வரவேற்பினை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன் படக் குழுவினரை நேரில் சந்தித்த ரசிகர்களும் செல்ஃபி எடுத்துக் கொண்டு, படத்தைப் பற்றிய தங்களுடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டனர். 



 



இதனைத் தொடர்ந்து படக்குழு இருபதாம் தேதியன்று மதுரை - வெற்றி திரையரங்கத்திற்கும், திருச்சி - எல்.ஏ சினிமாஸிற்கும் சென்று ரசிகர்களை சந்தித்தனர். இந்நிகழ்வுகளில் ரசிகர்கள் பலரும் கதையின் நாயகனான ரியோ ராஜையும், நாயகி கோபிகா ரமேஷையும் வெகுவாக பாராட்டினார்கள். அதிலும் ஒரு ரசிகை ரியோ ராஜை கண்கலங்க பாராட்டியது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. 



 



தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதால்.. படக்குழு மகிழ்ச்சியடைந்திருக்கிறது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா