சற்று முன்

பாரதிராஜாவின் மகனும், நடிகர் மற்றும் இயக்குநருமான மனோஜ் பாரதி காலமானார்!   |    'வீர தீர சூரன்- பார்ட் 2 ' கேரளா ப்ரமோஷன்   |    விஜய் சேதுபதி திறந்து வைத்த 'மெட்ராஸ் பிட்னஸ்' ஜிம்   |    பெங்களூரூவில் நடைபெற்ற 'வீரதீர சூரன் பார்ட் 2 ' பட ப்ரமோஷன்!   |    கோலாகலமாக நடைபெற்ற 'எம்புரான்' பட தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு விழா!   |    ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட 'யோலோ' படத்தின் முதல் சிங்கிள்!   |    EMI வாழ்க்கை போராடியே சாக வைத்து விடுகிறது! - இயக்குநர் பேரரசு   |    யாஷ் நடிக்கும் 'டாக்சிக்' வெளியீட்டுத் தேதியைக் குறிக்கும் அசத்தலான போஸ்டர் வெளியானது!   |    ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் 28, 2025 அன்று வெளியாகும் 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ்!   |    'ஸ்வீட் ஹார்ட்' படத்தை பார்த்து ரியோ ராஜை கண்கலங்க பாராட்டிய ரசிகை!   |    சீயான் விக்ரம் தமிழ் சினிமாவின் கௌரவம்! - நடிகர் எஸ். ஜே. சூர்யா   |    ZEE5 இல் 360 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்த 'சங்கராந்திகி வஸ்துனம்' புதிய சாதனை!   |    இணையம் முழுக்க வைரலாகி வரும் 'எம்புரான்' பட டிரெய்லர் - வாழ்த்து தெரிவித்த சூப்பர்ஸ்டார்!   |    சோசியல் மீடியா ஒரு கூர்மையான கத்தி - தலைவர் கவிஞர் விவேகா பேச்சு   |    மும்பையில் 'எம்புரான்' பட டிரெய்லர் ஐமேக்ஸ் பதிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!   |    'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷை புதிய படம் மூலம் மறு அறிமுகம் செய்கிறார் இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி!   |    விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ் ( ACE ) 'படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு   |    இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கி நடிக்கும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்'   |    யுவன் சங்கர் ராஜா வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம், 'ஸ்வீட் ஹார்ட் படக்குழுவினருக்கு வாழ்த்து!   |    மார்ச் 27ல் உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது 'லூசிபர்' பட இரண்டாம் பாகமான 'எம்புரான்'!   |   

சினிமா செய்திகள்

EMI வாழ்க்கை போராடியே சாக வைத்து விடுகிறது! - இயக்குநர் பேரரசு
Updated on : 22 March 2025

சபரி புரொடக்ஷன்ஸ்  நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் " EMI " மாதத் தவணை ". இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுக்க முழுக்க காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது.  



 



தற்போதைய உலகில், 20,000 ரூபாயில ஒரு மொபைல் வாங்கவேண்டுமானால் கூட,  அதை முழு பணத்தைக் கொடுத்து யாரும் வாங்குவது இல்லை,  எல்லோரும்  இஎம்ஐ ல போட்டுத் தான் வாங்குகிறார்கள். இப்போது லோ கிளாஸ்,  மற்றும் மிடில் கிளாஸ், ஹைகிளாஸ் என அவங்க அவங்க தகுதிக்கு தகுந்த மாதிரி ஏதோ ஒன்னு, காரோ, பைக்கோ, இஎம்ஐ  போட்டு தான் வாங்குகிறார்கள்.  இந்த மாதிரி இஎம்ஐ வாங்கவேண்டுமானால் அவங்களுக்கு சூருட்டி கையெழுத்து ஒருத்தர் போடவேண்டும், அப்போதான் தான் அவர்களுக்கு இஎம்ஐ -ல ஈசியா லோன் கிடைக்கும்.



 



இந்த மாதிரி லோன் எடுத்துட்டு போயிட்டு  ரெண்டு மூணு மாசம் தவணை கட்டவில்லையென்றால் மேனேஜர்ல இருந்து, கடைசி ஸ்டாப் வரைக்கும் கால் பண்ணி டார்ச்சர் பண்ண ஆரம்பிப்பாங்க. இதை அனுபவிக்காமல் கண்டிப்பா 90% மக்கள் இருக்க முடியாது. அவர்களின் கதை தான் இந்தப்படம். 



 



ஏப்ரல் மாதம்  திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன்  திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. 



 



இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மல்லையன் பேசியதாவது…. 



எங்கள் பட விழாவிற்கு வருகை தந்திருக்கும் திரை ஆளுமைகள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். EMI  எடுத்து எத்தனையோ பேர் மனநிம்மதி இல்லாமல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். பலர்  EMI ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்,  அவர்களின் கதையை இந்த EMI படம் சொல்கிறது. EMI  எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற விழிப்புணர்வை இந்தப்படம் பேசியுள்ளது, அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறேன் நன்றி. 



 



இயக்குநர் ஆர் வி  உதயகுமார் பேசியதாவது… 



இந்த விழாவை என் குடும்ப விழா எனச் சொல்லலாம். என் அஸிஸ்டெண்டின் அஸிஸ்டென்ட் இப்படத்தை இயக்கியுள்ளார். என் கொள்ளுப்பேரன் எனச் சொல்லலாம். EMI  அகலக்கால் வைக்காமல் நம் தகுதிக்கு எடுத்தால் தப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் தான் சிக்கிக் கொள்வோம்.  இந்த படக்குழு EMI ல் தப்பித்துவிட்டார்கள். முதல் EMI  சரியாகக் கட்டிவிட்டார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இங்கு இயக்குநர் பாக்யராஜ் வந்துள்ளார். அவர் தன் முதல் படத்தில் ஒரு சிறு தெருவை மையமாக வைத்து, மிக அழகான படத்தைத் தந்தவர். இப்போது யாராலும் அது முடியாது. இப்போது சரியானவர்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் இல்லை, நல்ல தயாரிப்பு நிறுவனங்கள் படம் எடுப்பதையே நிறுத்தி விட்டார்கள். அந்தக்காலத்தில் படம் பூஜையின் போதே படம் விற்று விடும். ஆனால் இப்போது நிலைமை மிக மோசமாக உள்ளது. அப்போது 16 படம் வெளியாகி 16 படமும் ஜெயிக்கும், பல வித்தியாசமான களங்களில் படம் வரும், இப்போது அந்த மாதிரி ஹெல்தி சினிமா இல்லை. இப்போது இருக்கும் இயக்குநர்களை போனில் பிடிக்க முடியவில்லை. எங்கே போகிறது தமிழ் சினிமா?  இந்த நிலைமையை மாற்ற இம்மாதிரி EMI  படத்தை ஆதரிக்க வேண்டும். இப்போது சின்ன படங்கள் தான் ஓடுகிறது. ரப்பர் பந்து, குடும்பஸ்தன் படங்கள் வரும் வரை அதைப்பற்றி யாருக்கும் தெரியாது, ஆனால் அந்தப்படங்கள் மிகப்பெரிய வெற்றி. அது போல இந்தப்படமும் வெற்றி பெறட்டும். படம் பார்க்க மிக நன்றாக உள்ளது. படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 



 



சின்னத்திரை புகழ் ஆதவன் பேசியதாவது.. 



படத்தில் நான் வந்த சீனை விட அதிகமாக எனக்கு போஸ்டர் வைத்துள்ளார்கள் நன்றி. வாய்ப்பு தந்த சதாசிவம் சாருக்கு நன்றி. நானும் அஜித் சாரும் ஒரே மாதிரி, வருடத்துக்கு ஒரு படம் தான் செய்வோம். இங்கு மேடை இயக்குநர் சங்கம் போல உள்ளது. வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. நயன்தாரவை போல இனிமேல் எனக்கு பிளாக் பாண்டி பட்டம் வேண்டாம் எனக் கூறியிருக்கும் பாண்டிக்கு வாழ்த்துக்கள். இந்தப்படத்தின் குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள். இப்ப இருக்கும் தயாரிப்பாளர்கள் 4 கோடிக்கு படம் செய்வதில்லை, 40 கோடிக்கு படம் செய்யவே ஆசைப்படுகிறார்கள். எது புதிதாக வந்தாலும் கதை தான் முக்கியம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என சொல்லிச்சென்ற ஆர் வி உதயகுமார் அண்ணனுக்கு நன்றி. 



 



நடிகை சாய் தன்யா பேசியதாவது… 



EMI  படம் மிக அழகான படம், கிருஷ்ணகிரியில் தான் ஷீட் செய்தோம். EMI  யோட கொடுமைகளை இந்தப்படத்தில் அழுத்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளோம். உங்களுக்கு விழிப்புணர்வு தரும் படமாக இப்படம் இருக்கும். EMI  ஆல் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் நண்பர்களை, இந்தப்படத்திற்கு அழைத்துச் சென்று காட்டுங்கள். நன்றி.



 



இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது… 



இயக்குநர் பாக்யராஜ் முதலாக பெரும் ஆளுமைகள் இருக்கும் மேடையில் நான் இருப்பது எனக்குப் பெருமை. தன் சிஷ்யனுக்காக இவ்வளவு இறங்கி வேலை செய்யும் பேரரசுவுக்கு நன்றி. எத்தனை பேருக்கு இந்த மனம் வரும் என தெரியவில்லை. இந்தப்படத்தின் பாடல் விஷுவல் பார்க்கும்போது ஹீரோ பக்கத்து வீட்டு பையன் போல இயல்பாக இருக்கிறார். நன்றாக நடித்துள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. சன் டிவி ஆதவன், பிளாக் பாண்டி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். படத்தின் டிசைன் முதல், எல்லாமே மிகத்திட்டமிடலுடன் உருவாக்கியிருக்கிறார்கள். EMI  வாங்காத ஆளே இருக்க முடியாது, எல்லோருக்கும் மிக எளிதாக கனக்ட் ஆகும் படம். இந்தப்படம் நிச்சயம் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்குமென நம்புகிறேன் வாழ்த்துக்கள். 



 



இசையமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சை பேசியதாவது…



10 வருடங்களுக்கு முன் இயக்குநரும் நானும் ஒரு ஷார்ட் ஃபிலிம் செய்தோம், அதை ஞாபகம் வைத்து, என்னை அழைத்து இந்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 



 



இயக்குநர் வெங்கடேஷ் பேசியதாவது…



இயக்குநர் பேரரசுவிற்காக தான் அத்தனை பேரும் வந்துள்ளார்கள். பேரரசு எங்கள் சங்கத்திற்காகக் கடுமையாக உழைக்கும் உழைப்பாளி, அவரின் உதவியாளார் என்பதால் தான் அனைவரும் வாழ்த்த வந்துள்ளார்கள். பாக்யராஜ் சார் வந்துள்ளார் அவருடைய படங்கள் எல்லாம் இன்றும் ரெஃபரென்ஸ் தான். அவருடைய புத்தகத்தைப் படித்தால் திரைக்கதை எழுதி விடலாம். மூத்தவர்களை எல்லோரும்  மதிக்க வேண்டும். மலையாளத்தில் வாராவாரம் பாசில் ஜோசப் கண்டெண்டுடன் படம் தருகிறார் ஆனால் அதை அந்தகாலத்திலேயே தந்தவர் பாக்யராஜ் சார்.  படம் நன்றாக இருந்தால் பத்திரிக்கையாளர்களே கொண்டு சேர்த்து விடுவார்கள். அவர்கள் சொல்லிவிட்டால் படம் ஹிட், சதாசிவம் முதல் படத்தில் நல்ல கண்டண்ட் உடன் படம் தந்துள்ளார். இந்தப்படத்திற்கு முழு ஆதரவு தாருங்கள். புதுமுகங்களை நம்பி தயாரித்திருக்கும் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள். நன்றி. 



 



தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் பேசியதாவது… 



என்னை இயக்குநர் சதாசிவம் அழைத்திருந்தார். சின்னப்படங்களுக்கு அழைத்தால் எப்போதும் நான் வந்துவிடுவேன். நல்ல தயாரிப்பாளர்கள் படம் எடுக்கத் தயாரிக்க வருவதில்லை என்கிறார்கள். ஆனால் நடிகர்கள் எல்லாம் தாங்களே தயாரிக்கிறார்கள். அண்ணா அம்மா எல்லாம் தயாரிப்பாளர்கள் எனும் போது, நாங்கள் என்ன தான் செய்வது. நல்ல கதைகள் வந்தால் நாங்கள் தயாரிக்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் இப்போது நல்ல கதைகள் வருவதில்லை. இந்தப்படம் நல்ல கதையுடன் வந்துள்ளது, அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 



 



இயக்குநர் அரவிந்த்ராஜ் பேசியதாவது… 



எல்லோரும் பேசும் போது, தயாரிப்பாளர் யாருக்கும் EMI வைக்கவில்லை  என்பது தெரிந்தது. அவரைப்பற்றி எல்லோரும் பெருமையாகச் சொன்னார்கள் அவருக்கு வாழ்த்துக்கள். இப்படத்தில் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிக அருமையாக உழைத்துள்ளனர். இயக்குநர் நடிகராகவும் நடித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக இருந்தது. பார்க்க அழகாக இருந்தது. பாடல்கள் எல்லாம் சூப்பராக இருந்தது. EMI  எல்லோர் வாழ்விலும் கனக்ட் ஆகக் கூடியது. இப்படத்தில் நிறைய நல்ல விசயங்கள் சொல்லப்பட்டுள்ளது. இயக்குநர் படத்தை அழகாக எடுத்துள்ளார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  தமிழ் சினிமாவில் போன மாதம் மட்டும் 32 படங்கள் வந்துள்ளது. இதை எப்படி அணுகுவது எனத் தெரியவில்லை. மக்கள் நல்ல படத்திற்கு எப்போதும் ஆதரவு தருகிறார்கள். நல்ல படம் எடுத்துள்ளீர்கள் அதைச் சரியாக விளம்பரப் படுத்துங்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.



 



நடிகை தேவயானி  பேசியதாவது.. 



இயக்குநர் சங்கத்திலிருந்து இந்த படத்தின் அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்கள். EMI டைட்டிலே எனக்குப் பிடித்திருந்தது. EMI வாங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. எல்லோரும் EMI வாங்குகிறோம் அதைச் சரியாகப் பயன்படுத்தினால் நல்லதாக இருக்கும், இல்லையெனில் அது பிரச்சனையாகி விடும். அதை இந்தப்படத்தில் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். இயக்குநரே நடித்துள்ளார் வாழ்த்துக்கள். இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள் படம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி. வாழ்க்கையில் எப்போதும் புதிதாக எதையாவது செய்ய வேண்டும், புதிதாக முயற்சி செய்ய வேண்டும், அந்த வகையில் தான் இயக்கம் படித்து குறும்படம் எடுத்தேன். அதன் திரையிடல் இங்கு தான் நடந்தது. உங்கள் ஆதரவுக்கு நன்றி. 



 



இயக்குநர் பேரரசு பேசியதாவது.. 



என் அழைப்பை ஏற்று வந்த ஆளுமைகளுக்கு என் நன்றி. என் உதவி இயக்குநர் இயக்கியுள்ள படம் இது. சினிமாவில் முதன் முதலில் என்னை கதை எழுத வைத்தவர் பாக்யராஜ் சார் தான். கதை திரைக்கதை வசனம் இயக்கம் என போட வைத்தது அவர் தான்.  இயக்குநர் என்றால் அவர் தான் கதை எழுத வேண்டும், என விதியை உருவாக்கியவர் அவர் தான்.  அவர் ஒரு ஜாம்பவான். அவர் வாழ்த்த வந்திருப்பதற்கு நன்றி. EMI எல்லோரும் வாங்கியிருப்பார்கள், முதல் மூணு மாதம் கட்டுவார்கள் ஆனால் 4 வது மாதம் கட்ட மாட்டார்கள், வாங்கியவர் ஆஃபிஸ் போய்விடுவார்கள், வசூலிக்க வருபவர்களிடம்  பெண்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஆம்பளைகள் வாங்கும் EMI ஆல் பாதிக்கப்படுவது பெண்கள் தான். EMI எல்லோரும் பொறுப்போடு பார்க்க வேண்டிய அருமையான படம்,  EMI வாழ்க்கை போராடியே சாக வைத்து விடுகிறது அதைத்தான் இந்தப்படம் பேசுகிறது. இன்று டாஸ்மாக் ஒரு போதை, EMI இன்னொரு போதை, இது ரெண்டும் அழிய வேண்டும் நன்றி. 





இயக்குநர் சதாசிவம் சின்னராஜ்  பேசியதாவது.. 



EMI படம் என் வாழ்வில் நான் நேரிடையாக பார்த்தது.  ஒரு நண்பருக்குத் தொடர்ந்து கால் வந்து கொண்டே இருந்தது ஆனால் அவர் அட்டன் செய்யவே இல்லை, கார் எடுத்துவிட்டு EMI டார்ச்சரை அனுபவித்தார். அதை நேரில் கண்டபோது தான் இது அனைவர் வாழ்விலும் நடக்கும், அதை எடுக்கலாம் என முடிவு செய்தேன்.  முதல் முதலில் கதையைப் பேரரசு சாரிடம் சொன்னேன், இப்போது வரை படத்திற்கு அனைத்து உதவிகளும் செய்து வருகிறார். முதலில் 4 பேர் சேர்ந்து தான் தயாரிப்பதாகத்தான் இருந்தது, ஆனால் தயாரிப்பாளர் மல்லையன்,  நீ ஏன் எல்லோருக்கும் பதில் செய்கிறாய், நானே தயாரிக்கிறேன் என்று, என்னை நம்பி இறங்கினார். அவருக்கு என் நன்றி. இந்தப்படத்தில் சமூகத்திற்கான கருத்தை பேசியுள்ளோம். எல்லோர் வாழ்விலும் இதை அனுபவித்திருப்பார்கள் அதைத்தான் படமாக எடுத்துள்ளோம். நான்  முதலில் நடிப்பதாக இல்லை, எந்த ஹீரோவும் சின்ன பட்ஜெட்டுக்கு ஒத்துக்கொள்ள வில்லை அதனால் தான் நானே நடித்து விடலாம் என இறங்கி விட்டேன். நல்ல படம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.





இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது…. 

EMI டைட்டிலே எளிதாக புரிகிறது. சில நேரம் பட டைட்டிலே புரியாது, இந்த டைட்டிலிலேயே எல்லாம் புரிந்து விடுகிறது. தயாரிப்பாளர் மல்லையன், இயக்குநரையே நடிகராகத் தைரியமாக ஆக்கியுள்ளார் அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இசையமைப்பாளர் மிக அருமையாகப் பாடலை தந்துள்ளார், தொழில் நுட்ப கலைஞர்கள் மிக நன்றாக வேலை பார்த்துள்ளனர். விஷுவல் பார்க்க நன்றாக வந்துள்ளது. ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்துள்ள இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள்.  நானே முதல் படத்திற்கு ஒரு மொக்கை கதையைத் தான் வைத்திருந்தேன் ஆனால் உதவி இயக்குநராக வேலை பார்க்க ஆரம்பித்த பிறகு, அதைத் தூக்கிப் போட்டுவிட்டேன்.  நம் வாழ்க்கையிலிருந்து கதையை எடுப்போம் என கதை செய்தேன். நம் வாழ்க்கையை எடுத்தால் படம் ஜெயிக்கும். EMI எல்லோரும் அனுபவிப்பது தான். இதில் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  காமெடி சென்ஸோடு படத்தைச் சொல்லியிருந்தால் மக்கள் ஆதரிப்பார்கள்,  படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி.





கதாநாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், OAK சுந்தர் லொள்ளுசபா மனோகர், TKS, செந்தி குமாரி, ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளார் 



 



சிம்பு குரலில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற " என் நண்பனே " என்ற இசை ஆல்பதிற்கு இசையமைத்த ஸ்ரீநாத் பிச்சை இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் இந்த படத்தின் பாடல்களை பேரரசு மற்றும் விவேக் இருவரும் எழுதியுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா