சற்று முன்

4 ஆம் தேதி வெளியாகிறது இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ’சாரி’!   |    எஸ் ஜே சூர்யா சாருக்கு எவ்வளவு தீனி போட்டாலும் தீரவில்லை! - நடிகர் கார்த்தி   |    சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடிகர் தனுஷ் திறந்து வைத்த 'DCutz By Dev' சலூன்   |    ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிளாக்மெயில்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    சோஷியல் மீடியாவின் நெகட்டிவ் மற்றும் இருட்டு பக்கங்களை பேசும் ’சாரி’   |    'வீர தீர சூரன்- பார்ட் 2 '‌ படக் கொண்டாட்டம், ஆயிரக்கணக்கில் திரண்ட 'சீயான்' விக்ரம் ரசிகர்கள்!   |    வடிவேலு - பஹத் பாசில் கூட்டணியின் 'மாரீசன்' பட அப்டேட்   |    மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியத் திரைப்படம்!   |    டேனியல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆர் பி எம் (RPM) படத்தின் முன்னோட்டம் வெளியீடு!   |    ZEE5 தளம் வழங்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை' காமெடி சீரிஸ்!   |    விரைவில் வெளிவரவிருக்கும் “கொஞ்சநாள் பொறு தலைவா” பட டிரெல்யர் வெளியீட்டு விழா!   |    பான் இந்திய திரைப்படமான ' பெடி ( PEDDI) ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    மதுரை - திருச்சியில் 'சீயான்' விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2' ப்ரமோஷன்!   |    பாரதிராஜாவின் மகனும், நடிகர் மற்றும் இயக்குநருமான மனோஜ் பாரதி காலமானார்!   |    'வீர தீர சூரன்- பார்ட் 2 ' கேரளா ப்ரமோஷன்   |    விஜய் சேதுபதி திறந்து வைத்த 'மெட்ராஸ் பிட்னஸ்' ஜிம்   |    பெங்களூரூவில் நடைபெற்ற 'வீரதீர சூரன் பார்ட் 2 ' பட ப்ரமோஷன்!   |    கோலாகலமாக நடைபெற்ற 'எம்புரான்' பட தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு விழா!   |    ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட 'யோலோ' படத்தின் முதல் சிங்கிள்!   |    EMI வாழ்க்கை போராடியே சாக வைத்து விடுகிறது! - இயக்குநர் பேரரசு   |   

சினிமா செய்திகள்

ZEE5 தளம் வழங்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை' காமெடி சீரிஸ்!
Updated on : 01 April 2025

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி  சீரிஸான "செருப்புகள் ஜாக்கிரதை" சீரிஸை வெளியிட்டுள்ளது. S Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 



 



இந்த சீரிஸின் முன் திரையிடல் பத்திரிகை ஊடக நண்பர்களுக்காகப் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர். 



 



இந்நிகழ்வினில் 



ZEE5 நிறுவனம் சார்பில் கௌசிக் நரசிம்மன்  பேசியதாவது...



கடந்த அக்டோபரில் ஐந்தாம் வேதம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது, அந்த சீரிஸுக்கு நீங்கள் தந்த  ஆதரவுக்கு நன்றி. செருப்புகள் ஜாக்கிரதை மிக வித்தியாசமான சீரிஸ், மத்த வெப் சீரிஸ் மாதிரி இல்லாமல் எழுதவே மிகவும் அதிக டைம் எடுத்தது. 2 மணி நேரத்தை ஒரு சீரிஸாக கொடுக்கும் முயற்சி தான் இது. இனி தொடர்ந்து ZEE5 ல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்த மாதிரி சீரிஸ் வரும். அந்த வகையில் செருப்புகள் ஜாக்கிரதை முதல் புராஜக்ட். மிக சிம்பிளான லைன், ஆனால் அதை சுவாரஸ்யாமாக கொடுத்துள்ளோம், ராஜேஷ் சூசைராஜ் ஐந்தாம் வேதம் முதலே தெரியும் மிகத் திறமைசாலி, இந்த சீரிஸை சாத்தியமாக்கிய தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் அரவிந்தன், ராஜேஷ் சூசை ராஜ் ஆகியோருக்கு நன்றி. இந்த மாதிரி கதை நீங்கள் தான் நடிக்க வேண்டும், என்றவுடன் உடனே ஓகே சொன்ன சிங்கம்புலி அண்ணாவுக்கு நன்றி. ஐந்தாம் வேதம் சீரிஸில் என்னை ரொம்பவும் இம்ரெஸ் செய்தவர் விவேக் ராஜகோபால், மிக எளிதாக நடிப்பால் நம்மை அவர் பக்கம் ஈர்த்து விடுகிறார்.  அவருக்கு வாழ்த்துக்கள். ஐரா அகர்வால் மொழி தெரியாமலே டப்பிங் செய்துள்ளார், வாழ்த்துக்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் மிக அற்புதமாக பணியாற்றியுள்ளனர். நடித்த அனைவருக்கும் நன்றி. வேற வேற ஜானர்களில்  ZEE5லிருந்து பல படைப்புகள் வரவுள்ளது. உங்களுக்குப் பிடித்தமாதிரி படைப்புகள் தொடர்ந்து வரும். ஆதரவு தாருங்கள் நன்றி. 



 



தயாரிப்பாளர் சிங்காரவேலன் பேசியதாவது...



முன்னதாக மதில் எனும் ஓடிடி படைப்பைத் தயாரித்துள்ளோம், இப்போது செருப்புகள் ஜாக்கிரதை உருவாக ஆதரவாக இருந்த ZEE5  கௌசிக் நரசிம்மனுக்கு நன்றி. இந்தக் கதை சிறப்பாக வர வேண்டும் என்றால்  சிங்கம் புலி தான் வேண்டுமென நினைத்தோம், எங்களை நம்பி வந்த சிங்கம்புலி சாருக்கு நன்றி. இந்த அருமையான கதையைத் தந்த எழுச்சூர் அரவிந்தன் அவர்களுக்கு நன்றி. இந்த கதையைத் திரையில் உயிர்ப்பித்த ஒளிப்பதிவாளர் கங்காதரனுக்கு நன்றி. இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் மிக அற்புதமாக இந்த சீரிஸை உருவாக்கியுள்ளார். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 



 



ஒளிப்பதிவாளர் கங்காதரன் பேசியதாவது...



இந்த வாய்ப்பைத் தந்த ராஜேஷுக்கு நன்றி, ராஜேஷ் மிக நெருங்கிய நண்பர், இதை ஒப்புக்கொண்ட கௌஷிக் சார், சிங்கார வேலன் சாருக்கு நன்றி.  சிங்கம்புலி அண்ணா முழு ஒத்துழைப்புத் தந்தார், அவருக்கு என் நன்றிகள். இந்த சீரிஸில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. அனைவரும் இந்த சீரிஸ் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. 



 



இசையமைப்பாளர்கள் எல் வி முத்து & கணேஷ் பேசியதாவது...



இந்த வெப் சீரிஸ் ZEE5 உடன் இரண்டாவது படைப்பு, அவர்களுக்கு எங்கள் நன்றி. இதில் வாய்ப்புத் தந்த சிங்காரவேலன் சாருக்கு நன்றி.  நண்பர் ராஜேஷ் அருமையான காமெடி டைரக்டர். சிங்கம்புலி அண்ணாவைத் திரையில் பார்த்தாலே சிரிப்பு வரும், அருமையாக நடித்துள்ளார். விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் எல்லோருமே அட்டகாசமாக நடித்துள்ளனர். அவர்கள் நடிப்புக்கு இசையமைப்பது எளிதாக இருந்தது. ராஜேஷ் அருமையாக இந்த சீரிஸை உருவாக்கியுள்ளார். இந்த சீரிஸ் வெளியாகியுள்ளது அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. 



 



கதை வசனகர்த்தா எழுச்சூர் அரவிந்தன் பேசியதாவது...



நண்பர் கௌஷிக்கும் நானும் 22 வருட  நண்பர்கள். நல்ல காமெடி கதை வைத்திருக்கிறீர்களா எனத் திடீரென கேட்பார், அடுத்த விவாதத்தில், 2 வாரத்தில் துவங்கி விடும். கே எஸ் ரவிக்குமார் நடிப்பில், மதில்  ZEE5 க்காக எழுதினேன், உடனே கே எஸ் ரவிக்குமார் டீமில் எழுத்தாளாராக சேர்ந்து விட்டேன், அடுத்து இந்த சீரிஸில் நடித்த  விவேக் ராஜகோபால் நண்பர் படத்தில் இப்போது வேலை செய்கிறேன். இப்படி புதுப்புது வாய்ப்புகள் ZEE5 மூலம் கிடைத்துள்ளது. எப்போதும் எனக்கு உதவும் குணமுள்ளவர் தயாரிப்பாளர் சிங்காரவேலன், என்ன வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் ஒரு போன் செய்தால் செய்து விடுவார். ராஜேஷ் மகா உழைப்பாளி, மிக அருமையாக உழைத்துள்ளார். கங்காதரன் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். இந்தக்கதையின் முக்கிய தூண் சிங்கம்புலி அண்ணன், அவர் நடிப்பைப் பார்த்தாலே சிரிப்பு வரும். இதில் எல்லோரையும் சிரிக்க வைத்துள்ளார். எல்லா நடிகர்களும் மிக நன்றாக நடித்துள்ளனர்.  இந்த படைப்பில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. ZEE5 ல் இன்னும் தொடர்ந்து நிறையக் கதைகள் செய்ய ஆசைப்படுகிறேன்,  நன்றி 



 



ஐரா அகர்வால் பேசியதாவது...



மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது நான் நடித்த வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது. ZEE5  கௌசிக் நரசிம்மன்  சார், தயாரிப்பாளர் சிங்காரவேலன் சாருக்கு நன்றி. வாய்ப்பு தந்த ராஜேஷ் சாருக்கு நன்றி. நான் நடித்ததில் எந்த படத்திலும் இந்தளவு சந்தோஷமாக இருந்ததில்லை, இந்த ஷூட்டிங் ஸ்பாட் வெகு கலகலப்பாக இருந்தது. டைரக்டர் ராஜேஷ் மிகமிக அமைதியானவர், அற்புதமாக உருவாக்கியுள்ளார். சிங்கம் புலி சார் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார். கங்காதரன் சார் எனக்கு  முழு ஆதரவு தந்தார். எல்லோரும் மிக அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்கள்.   உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 



 



நடிகர் விவேக் ராஜகோபால்  பேசியதாவது...



முதலில் பத்திரிகையாளர்களுக்கு நன்றி, மதில் படைப்புக்கு முழு ஆதரவு தந்தீர்கள், அதனால் தான் இங்கு நான் நிற்கிறேன். செருப்புகள் ஜாக்கிரதை படைப்புக்கும் முழு ஆதரவு தாருங்கள். ZEE5 க்கு நன்றி. முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர் சிங்காரவேலன் சாருக்கு நன்றி. சிங்கம்புலி சார் அவ்வளவு சேட்டை, லவ்லி ஹியூமன், எல்லோரையும்  சிரிக்க வைப்பார் என்ன கேட்டாலும் சொல்லித் தருவார். இயக்குநர் ராஜேஷ் என்னிடம் நிறையக் கதை சொல்லியுள்ளார், எனக்கு வாய்ப்பு வந்தால் உன்னைக் கூப்பிடுவேன் என்றார். மை டார்லிங்க் ராஜேஷ் சாருக்கு நன்றி. இதில் நடித்த அனைவருக்கும் நன்றி. இந்த படைப்பிற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 



 



இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் பேசியதாவது...



முதல் நன்றி  ZEE5  கௌசிக் நரசிம்மன்  சாருக்கு தான், அவர்  மூலம் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது, ஐந்தாம் வேதம் மூலம் தான் அவர் அறிமுகம் கிடைத்தது. அவரது சினிமா அனுபவம் கற்றுக்கொள்ள வேண்டியது, என்ன சந்தேகம் கேட்டாலும் எளிதாகத் தீர்த்து விடுவார். அவருக்கு என் நன்றி. அவர் தான் சிங்காரவேலன் சாரிடம் அனுப்பி வைத்தார், தயாரிப்பைத்  தாண்டி மிக நல்ல மனிதர். கௌசிக் சார், சிங்காரவேலன் இருவரால் தான் நான் இயக்குநர் இருவருக்கும் நன்றி. சிங்கம் புலி சார் டாமினேட் செய்வார் என்று சொன்னார்கள், ஆனால் அவர் அப்படிப்பட்டவர் இல்லை, மிக மிக இனிமையான மனிதர், மிக அருமையாக நடித்துள்ளார். ஐரா அகர்வால் துறுதுறுப்பான பெண், ஷூட்டிங்கில், எங்களை விட அவர் நிறைய ரீல்ஸ் எடுத்துள்ளார். டார்லிங்க் விவேக், ஐந்தாம் வேதத்தில் அவர் நடிப்பு பார்த்து பிரமித்திருக்கிறேன். இந்தக்கதை ஒகே ஆனவுடன் அவரைத்தான் அழைத்தேன், நன்றாக நடித்துள்ளார். நான் அசோஷியேட்டாக வேலை பார்த்த போது, கங்காதரனும் அசோஷியேட்,  நான் இயக்குநர் ஆனால் நீ தான் கேமராமேன் என்றேன் ஆக்கிவிட்டேன். இதில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த சீரிஸ் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 



 



நடிகர் சிங்கம்புலி பேசியதாவது...



ZEE5  நிறுவனத்திற்கு முதல்  நன்றி. தயாரிப்பாளார் சிங்காரவேலன் அவர்களுக்கு நன்றி. அரசாங்கம் எல்லோரையும் மொத்தமாகப் பால் வாங்கி வைக்கச் சொன்னார்கள் அல்லவா? அப்போது ஆரம்பித்தது இந்த சீரிஸ். எழுத்தாளர் எழுச்சூர் அரவிந்தன் பேச பேச காமெடியாக இருக்கும் அவரிடம் அத்தனை கதை இருக்கிறது. அவர் இன்னும் உயரம் தொட வேண்டும். தயாரிப்பாளர் இன்னும் அப்பாவியாக இருக்கிறார், கங்காதரன் நான் கருப்பன் செய்யும் போது, அவர் அஸிஸ்டெண்ட், இதில் அவர் ஒளிப்பதிவு எனும் பொது, அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மனிதன். விவேக் ராஜகோபால் மிகப்பெரிய திறமைசாலி. மிக நன்றாக நடித்துள்ளார். ஐரா மிக அழகானவர் மிகத்திறமைசாலி. இந்த சீரிஸில் நடித்த அனைவரும் மிகத் திறமையானவர்கள் நன்றாகச் செய்துள்ளார்கள். ZEE5  எங்கள் எல்லோரையும் மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். செருப்பு, டெட்பாடி,  இரண்டை வைத்து மிக அருமையாக காமிக்கலாக இந்தக்கதையை எழுதியுள்ளார்கள். ராஜேஷ் சூசை அற்புதமாக எடுத்துள்ளார். இந்த சீரிஸில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த டீமுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 



 



இயக்குநர் எம் ராஜேஷ் பேசியதாவது...



புதிய இளமையான டீம், செருப்புகள் ஜாக்கிரதை டைட்டிலே மிக அழகாக இருக்கிறது. ZEE5  அடுத்தடுத்து நிறைய புராஜக்ட் செய்யப்போவதாக கௌஷிக் சொன்னார், அது நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பைத் தரும் அதற்காக அவருக்கு நன்றி.  சிங்காரவேலன் என் நெருங்கிய நண்பர், அவருக்கு வாழ்த்துக்கள். சிங்கம்புலி அண்ணாவுடன் கடவுள் இருக்கான் குமாரு வேலை பார்த்தேன், ஆனால் மாகாராஜா பார்த்து அவர் மீது பயமே வந்து விட்டது, அவர் வந்து பேசியபிறகு தான், நம்ம அண்ணன் என்ற உணர்வு வந்தது, இப்படி ஒரு கேரக்டர் அவருக்கு கிடைத்தது அருமை, அவர் திறமை பெரிது. அவருக்கு வாழ்த்துக்கள். விவேக் ராஜகோபால் நன்றாக நடிக்கிறார். இந்த சீரிஸில் வேலை பார்த்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். சீரிஸ் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி. 



 



ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் வகையில், முற்றிலும் நகைச்சுவையை மையமாக வைத்து, ரசிகர்கள் குலுங்கி சிரித்து மகிழும் வகையிலான காமெடி சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. 



 



இந்த சீரிஸில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சிங்கம்புலி நடித்திருக்கிறார். இவருடன்  விவேக் ராஜகோபால், இரா அகர்வால், லொள்ளு சபா மனோகர், இந்திரஜித், மாப்ள கணேஷ், உசேன், சபிதா, உடுமலை ரவி, பழனி, சேவல் ராம், டாக்டர் பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 



 



28 மார்ச் முதல் ZEE5 ல், செருப்புகள் ஜாக்கிரதை சீரிஸை பார்த்து மகிழுங்கள்!!



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா