சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

உப்பள தொழிலாளர்களின் வாழ்வியலை மையமாக கொண்டுள்ள படம் 'உயிர் மூச்சு'!
Updated on : 03 April 2025

பிராட்வே சுந்தர் இயக்கத்தில் தீபா சங்கர், மீசை ராஜேந்திரன், கிங்காங், டெலிபோன் ராஜ், பெஞ்சமின்,விக்னேஷ்,சஹானா ஆகியோர் நடித்த உயிர் மூச்சு திரைப்படம் ஏப்ரல் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது...



 



முதலுதவி பற்றிய மையக்கருத்துடன் வரதட்சணை கொடுமை, லஞ்சம் ஊழல், மதுபோதையால் ஏற்படும் சீரழிவு பற்றிய கதை களத்துடன்., தமிழ் திரை உலகில் முதன் முதலில் வில்லனாக அறிமுகமாகிய டெலிபோன் ராஜின் வில்லத்தனத்தில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகி இருக்கும் உயிர் மூச்சு திரைப்படம் தியேட்டர்கள் கிடைக்காமல் தவித்து வருகிறது...



 



தூத்துக்குடியில் மட்டும் இன்று உயிர் மூச்சு திரைப்படம் ரிலீஸ் ஆனது... முதல் காட்சி மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது.. படம் முழுவதும் ஆர வாரத்துடன் மக்கள் படத்தை ரசித்தனர்... கிங் காங் படம் முழுவதும் காமெடியில் கலக்கி இருக்கிறார்., தீபாவின் நடிப்பு வியக்க வைக்கிறது.. பெஞ்சமின் இதுவரை நடித்த அருமையான வேடத்தில் நடித்திருக்கிறார் ... டெலிபோன்ராஜ் தமிழ் சினிமா துறையில் இருந்து முதன்முதலாக  வில்லனாக அறிமுகமாகி இருக்கிறார்... ஒரு கிராமத்து வில்லனாக பயங்கரமாக மிரட்டி இருக்கிறார்.. மீசை ராஜேந்திரன் நடிப்பில் கம்பீரம் தெரிகிறது.. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விக்னேஷ் மற்றும் கதாநாயகியாக சஹானா நடித்திருக்கிறார்கள்... கதையை அத்திமரப்பட்டி விவசாயி ஜோதிமணி எழுதி இருக்கிறார்..

இந்த திரைப்படத்தை இயக்கிய பிராட்வே சுந்தர் ஏற்கனவே அரசியல் சதுரங்கம், விதி எண் 3,  கருப்பு பக்கம் ஆகிய திரைப்படங்களை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த திரைப்படத்தில் நான்கு பாடல்களை இயக்குனர் பிராட்வே சுந்தர் எழுதி பாடியிருக்கிறார் உயிர் மூச்சு திரைப்படத்திற்கு அவரே இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. திரைப்படத்தில் வரும் நான்கு பாடல்களும் மனதில் நீங்காத இடம்பெறுகிறது..



 



'ஆத்தா உன்ன பாத்தா' என்ற பாடல் உப்பள தொழிலாளர்களின் வாழ்வியலை மையமாக கொண்டுள்ளது... படம் பார்த்த முதியவர் ஒருவர் கூறும்போது ..இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் ரிலீசாக வேண்டும் நான் 22 வருடங்களுக்கு பிறகு சினிமா தியேட்டர் வந்திருக்கிறேன்.. இந்த திரைப்படம் மிக அருமையாக உள்ளது நான் அடுத்த காட்சியும் பார்த்து விட்டு தான் வீட்டுக்கு செல்வேன் என்று கூறினார். நல்ல திரைப்படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்து..

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா