சற்று முன்
சினிமா செய்திகள்
23 வருடங்களுக்கு பிறகு டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி இணையும் 'பிரஷாந்த் 55'!
Updated on : 06 April 2025

அந்தகன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது.
அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ளார் இயக்குனர் ஹரி.
நடிகர் பிரஷாந்துடன் இணைந்து, இயக்குனர் ஹரி இயக்கிய, அவரது அறிமுக படம் 'தமிழ்' மிகப் பெரிய வெற்றி அடைந்து வசூலை வாரிக் குவித்தது, அனைவரும் அறிந்ததே. பட்டி தொட்டி எங்கும், திரை அரங்கில் நூறு நாட்களுக்கு மேலாக ஓடி, சாதனை படைத்தது. அதன் பின் இயக்குனர் ஹரி, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்ததோடு, தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே இயக்கி, தான் ஒரு வெற்றி இயக்குனர் என தனி முத்திரை பதித்தார்.
தமிழ் சினிமாவின் பல முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்கும் இந்த படத்தில், பெரும் நட்சத்திர பட்டாளமே இருக்கும் எனவும், பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைய உள்ளார்கள் எனவும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
நடிகர் பிரஷாந்த்தின் பிறந்த நாளான ஏப்ரல் 6, இன்று இந்த படத்தின் (பிரஷாந்த் 55) அறிவிப்பு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியானது. ஸ்டார் மூவிஸின் சார்பாக இப்படத்தை நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் அவர்கள் தயாரிக்கிறார்.
சமீபத்திய செய்திகள்
தங்கள் கடந்த காதலை மண் மணத்தோடு சொல்லும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்'
ஶ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி பேனரில் கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிக்கும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்குகிறார். துர்கா தேவி பாண்டியன் இதன் இணைத் தயாரிப்பாளர் ஆவார்.
கும்பகோணம் கல்லூரி பின்னணியில் மதங்கள் கடந்த காதலை மண் மணத்தோடு சொல்லும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தில் 'காலங்களில் அவள் வசந்தம்' கெளஷிக் ராம் நாயகனாக நடிக்க, 'கொண்டல்' மலையாள படத்தின் மூலம் கேரள ரசிகர்களின் இதயங்களோடு இணைந்த பிரதிபா தமிழில் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.
சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், டி எஸ் ஆர், ஆருள் டி. ஷங்கர், சிலுமிஷம் சிவா, ரவி விஜே, கனா காணும் காலங்கள் புவனேஸ்வரி, சஞ்சய்வர்மன்,
ஆதித்யா டிவி விக்கி, சத்யா, மைக்கேல் உள்ளிட்டோர் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தனது இசை மழையால் பல வெற்றிப் படங்களுக்கு உயிரூட்டிய என். ஆர். ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்க, பிரகத் முனியசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார். லோகேஷ்வர் படத்தொகுப்பை கையாளுகிறார். பாடல்கள்: மோகன் ராஜன், கருமாத்தூர் மணிமாறன். தயாரிப்பு மேலாளர்: நமஸ்காரம் சரவணன்; போஸ்ட் புரொடக்ஷன்: Bee ஸ்டுடியோஸ்; கலரிஸ்ட்: பரணிதர்; வி எஃப் எக்ஸ்: ராகவ கோபாலன்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன், "கல்லூரியில் உடன் படிக்கும் ஒரு பெண்ணை நாயகன் ஒரு தலையாக காதலிக்க, சக மாணவியான மிகவும் சக்திவாய்ந்த ஒருவரின் தங்கையின் காதலை சேர்த்து வைப்பதற்காக நாயகனும் நாயகியும் இணைய, அது நாயகன்-நாயகியின் வாழ்வையே புரட்டிப்போட என 'கிறிஸ்டினா கதிர்வேலன்' விறுவிறுப்பாக செல்லும்.
'காலங்களில் அவள் வசந்தம்' படத்தில் மாநகர இளைஞனாக நடித்த கெளஷிக் ராம், கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களின் பின்னணியில் உண்மை சம்பவத்தை அடிப்படை யாக கொண்டு உருவாகி இருக்கும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' படத்திற்காக தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு கிராமத்து கதிர்வேலன் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். நாயகி பிரதிபாவின் அசாத்திய நடிப்பும், உணர்வுகளை அவர் வெளிப்படுத்தும் விதமும் குழுவினரின் பாராட்டுகளை அள்ளியது.
எதார்த்தம் மீறாத இப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தனின் இசை மிகப்பெரிய பக்க பலமாகும். 2023ம் ஆண்டு வெளியான 'அயோத்தி' திரைப்படத்தின் பின்னணி இசையை போன்று 'கிறிஸ்டினா கதிர்வேலன்' பின்னணி இசையையும் மக்கள் கொண்டாடுவார்கள். தனது முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் தேர்ந்த ஒளிப்பதிவை பிரகத் முனியசாமி வழங்கியுள்ளார்," என்று தெரிவித்தார்.
ஶ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி பேனரில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தை கோடை விடுமுறை ஸ்பெஷலாக மே மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
குளோபல் ஸ்டார் ராம் சரணின் பான்-இந்தியா படமான 'பெத்தி' படம் பிரம்மாண்டமாக துவங்கியது!
தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் புச்சி பாபு சனா, குளோபல் ஸ்டார் ராம் சரணின் கூட்டணியில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா படமான, “பெத்தி” ஏற்கனவே அதன் டைட்டில் மற்றும் இரண்டு கவர்ச்சிகரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற பான்-இந்தியா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸுடன் இணைந்து வழங்கும், “பெத்தி” இந்திய திரைப்படத் துறையில் ஒரு புதிய திருப்புமுனை படமாக இருக்கும். தொலைநோக்கு மிக்க படைப்பாளி வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தைப் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். ஸ்ரீ ராம நவமியின் புனிதமான சந்தர்ப்பத்தில், தயாரிப்பாளர்கள் முதல் ஷாட் வீடியோவை வெளியிட்டனர், மேலும் படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
படத்தின் முதல் ஷாட் ஒரு அற்புதமான சூழ்நிலையுடன் தொடங்குகிறது, மிகப்பெரிய கூட்டம் பெத்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறது. ராம் சரண் ஒரு அற்புதமான, சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் பெத்தியாக அறிமுகமாகிறார் , தோளில் பேட்டை சுமந்துகொண்டு, படு ஸ்டைலாக சிகார் புகைத்துக்கொண்டே , கிரிக்கெட் மைதானத்தில் அடியெடுத்து வைக்கிறார். அவர் பேசும் டயலாக் அவரது கதாபாத்திரத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. படுபயங்கர மாஸாக, அதிரவைக்கும் அறிமுகமாகும் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.
நீண்ட முடி, அடர்த்தியான தாடி மற்றும் மூக்குத்தியுடன் கூடிய ராம் சரணின் புதிய கரடுமுரடான தோற்றம், அவரது கதாபாத்திரத்தின் அழுத்தமான தன்மையை மேம்படுத்துகிறது, மேலும் அவரது ஆளுமைக்கு மேலும் தீவிரத்தைச் சேர்க்கிறது. அவரது டயலாக் டெலிவரி, மற்றும் உடல் மொழி எல்லாமே ரசிகர்களை வசீகரிக்கிறது. விஜயநகர பேச்சுவழக்கை அவர் குறைபாடற்ற முறையில் பேசுவது, ஒரு தனித்துவமான தருணம், இது அவரது வாழ்க்கையில் முதல் முறையாகும், இது அவரது கதாப்பாத்திர சித்தரிப்புக்கு நம்பகத்தன்மையையும் சக்தியையும் சேர்க்கிறது. இந்த ஃபர்ஸ்ட் ஷாட்டில் வரும் டயலாக் அவரது கதாபாத்திரத்தின் வாழ்க்கைத் தத்துவத்தின் சுருக்கமான பிரதிபலிப்பாக அமைந்துள்ளது, இது அவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியம் தருணமாக அமைகிறது. அவரது கரீஷ்மா “பெத்தி” கதாபாத்திரத்தை அசத்தலாக வெளிப்படுத்துகிறது.
அசாதாரணமான கதாபாத்திரத்தைத் திரையில் அசத்தலாக உயிர்ப்பிக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட இயக்குநர் புச்சி பாபு பெடி கதாப்பாத்திரத்தின் ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு அசைவையும் அற்புதமாக வடிவமைத்துள்ளார், மேலும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பு மற்றும் பிரம்மாண்டம் ஒவ்வொரு ஃப்ரேமிலும் பிரகாசிக்கிறது. ஆர் ரத்னவேலு படம்பிடித்த காட்சிகள் பிரமிப்பைத் தருகின்றன. அதே நேரத்தில் அகாடமி விருது பெற்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை, காட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. உலகளாவிய தரத்தில் நம் மண்ணின் கதை திரையில் விரிகிறது. அவினாஷ் கொல்லாவின் தயாரிப்பு வடிவமைப்பு, பெத்தியின் பழமையான உலகின் சாரத்தைத் திறமையாகப் படம்பிடித்து, ஒரு அற்புதமான அனுபவத்திற்கு மேடை அமைக்கிறது. தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலியின் கூர்மையான எடிட்டிங், தடையற்ற கதை ஓட்டத்தை உறுதி செய்கிறது, படத்தின் வேகத்தை இறுக்கமாகவும் ஈடுபாட்டுடனும் வைத்திருக்கிறது.
ராம் சரணின் வசீகரம், வெகுஜனத்தை ஈர்க்கும் நடிப்பு, புச்சி பாபுவின் கூர்மையான எழுத்து மற்றும் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உயர் மட்டத்தை நிர்ணயித்த தொழில்நுட்பக் குழுவுடன், “பெத்தி” இன் முதல் ஷாட் படத்தின் வெளியீட்டிற்கான எதிர்பார்ப்புகளை உயர்த்துகிறது. இப்படம் வரும் மார்ச் 27, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
ராம் சரணின் பிறந்தநாள் கொண்டாட்டமாக வரும் இந்தப் படம், ஒரு இணையற்ற சினிமா அனுபவத்தையும், அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பார்வையாளர்களுக்கு ஒரு முழு விருந்தை வழங்கும் என்று உறுதியளிக்கிறது.
ஆக்சன் கிங் அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 'தீயவர் குலை நடுங்க' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்
சன் மூன் யுனிவர்ஸல் பிக்சர்ஸ் டாக்டர் ரவிச்சந்திரன் வழங்க, 'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'தீயவர் குலை நடுங்க' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்பாடலை வெளியிட்டுள்ளார். க்ரைம் திரில்லராக தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் பரத் ஆசிவகன் இசையில், ஆதித்யா ஆர் கே குரலில், மனதை வருடும், துள்ளலான காதல் பாடலாக, இப்பாடல் அனைவரின் இதயத்தை கொள்ளை கொள்கிறது. இந்த அழகான பாடல், வெளியான வேகத்தில் இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
'ஆக்சன் கிங்' அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.
இறுதி கட்டப் பணிகள் முடிந்த நிலையில், படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு பரபரப்பாக இயங்கி வருகிறது. இப்படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து 'வீர தீர சூரன்' ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது!
சீயான் விக்ரம் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' திரைப்படம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது இப்படம்.
ரிலீஸ் நாளில் பல தடைகள் ஏற்பட்ட நிலையில், அனைத்தையும் கடந்து, ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருவதால், படக்குழு பெரும் உற்சாகத்தில் உள்ளது.
இது குறித்து நடிகர் சீயான் விக்ரம் தெரிவித்தாவது….
எனது ரசிகர்களுக்கு ஒரு மாஸானா, கிளாஸான, உண்மைக்கு நெருக்கமான ஒரு படைப்பை தர வேண்டுமென நீண்டநாட்களாக ஆசைப்பட்டேன். இயக்குநர் அருண்குமார் மூலம் அது நடந்தது. படம் ரிலீஸுக்கு முன்னால் பார்த்த நண்பர்கள் இது இந்த வருடத்தின் மிகப்பெரிய படமாக இருக்குமென பாரட்டினார்கள். ஆனால் ரிலீஸ் நாளான்று எதிர்பாராமல் ஏற்பட்ட தடங்கல்களால், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு படம் முதல் ஷோ வரவில்லை என்றாலே அந்தப்படம் ஓடாது என்பார்கள். எங்கள் படம் மாலைக்காட்சி தான் வந்தது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் தந்த வரவேற்பு மறக்கமுடியாதது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் ஒவ்வொரு விசயத்தையும், குறிப்பிட்டு பாராட்டிக் கொண்டாடினார்கள். படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியுள்ளார்கள். என் ரசிகர்களுக்கு நன்றியைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. என் மீதான உங்கள் அன்புக்கு நன்றி. உங்களுக்காக தொடர்ந்து நல்ல படங்கள் தருவேன். அனைவருக்கும் நன்றி.
மக்களின் பெரும் வரவேற்பில், உலகமெங்கும் 'வீர தீர சூரன் பார்ட் 2 ' அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் 'மெட்ராஸ் மேட்னி' டைட்டில் & டைட்டில் லுக் வெளியீடு!
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான சத்யராஜ் - காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ' மெட்ராஸ் மேட்னி ' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள' மெட்ராஸ் மேட்னி' எனும் திரைப்படத்தில் காளி வெங்கட் ,ரோஷினி ஹரிப்பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தோக், சுனில் சுகதா, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் சத்யராஜ் அறிவியல் சார்ந்த புனைவு கதை எழுதும் மூத்த எழுத்தாளராக திரையில் தோன்றுகிறார். ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலஸ்ரங்கன் இசையமைத்திருக்கிறார். ஜாக்கி கலை இயக்கத்தை கவனிக்க, சதீஷ் சமூஸ்கி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். கிரியேட்டிவ் புரொடியூசராக அபிஷேக் ராஜாவும், எஸ்கியூடிவ் புரொடியூசராக மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தை சேர்ந்த ஜி.ஏ. ஹரி கிருஷ்ணனும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தினை 'அருவி', 'ஜோக்கர்', 'கைதி' போன்ற திரைப்படங்களை வழங்கிய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது. மேலும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும், பொழுதுபோக்கு அம்சம் உள்ள நகைச்சுவையான குடும்பப் படமாக இது இருக்கும் என்றும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
'கிங்ஸ்டன்' திரைப்படம் ஏப்ரல் 13 முதல் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீம் செய்கிறது!
தமிழின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற "கிங்ஸ்டன்" திரைப்படத்தை, வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இந்த திரில்லர் திரைப்படம், கடற்கரை கிராம பின்னணியில், அசத்தலான விஷுவல்களுடன், ஃபேண்டஸி அம்சங்கள் நிறைந்த, புதுமையான ஹாரர் படமாக அனைவரையும் கவர்ந்தது. திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற இப்படம், ZEE5 டிஜிட்டல் வெளியீடு மூலம், ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.
'கிங்ஸ்டன்' திரைப்படம், துணிச்சலான கடத்தல்காரரான கிங்ஸ்டன் (ஜி.வி. பிரகாஷ்) என்பவனின் கதையை விவரிக்கிறது. உள்ளூர் ரௌடியிடம் வேலை பார்க்கும் கிங்ஸ்டன், அந்த ரௌடி, கிராமத்தை ஏமாற்றுவதை அறிந்து, அவனுக்கு எதிராகக் களமிறங்குகிறான். தன் கிராமத்தை மீட்கும் பொருட்டு, மீன் பிடிக்க முடியாமல், பல வருடங்களாகச் சபிக்கப்பட்ட கடற்பகுதிக்குள், தன் நண்பர்களுடன் துணிந்து நுழைகிறான். அந்த சாபத்தின் ரகசியத்தை அவன் கண்டுபிடித்தானா? தன் கிராமத்தை மீட்டானா? என்பது தான் இந்தப்படத்தின் கதை.
ZEE5 இன் SVOD தெற்கு துணைத் தலைவர் லயோட் சேவியர் கூறுகையில், “
தமிழ் சினிமா இப்போது மிகப்பெரிய வெற்றிப்பயணத்தில் இருக்கிறது. அந்த வகையில், அட்டகாசமான என்டர்டெயினர் திரைப்படமான, "கிங்ஸ்டன்" படத்தை, எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி. இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இந்தப்படம், ஒரு புதுமையான களத்தில், அதிரடி திரில்லராக ஒரு ரோலர்கோஸ்டர் பயணத்திற்கு ரசிகர்களைக் கூட்டிச் செல்கிறது. இந்தப்படம் கண்டிப்பாக ரசிகர்களை உற்சாகப்படுத்தும், இது போல் சிறந்த படைப்புகளைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு வழங்குவோம்.
நடிகர் ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது..,
"கிங்ஸ்டன் பல வழிகளில் சவாலாக அமைந்த மிகச்சிறப்பான ஒரு கதாபாத்திரம் - கிங்ஸ்டன் துணிச்சலானவன், கணிக்க முடியாதவன், இயற்கைக்கு அப்பாற்பட்ட ரகசியங்கள், மாய விசயங்களுக்குள் சிக்கிக் கொள்கிறான். தமிழ் சினிமா அரிதாகவே சொல்லும் இந்தக்களத்தில், அதிரடி, மர்மம் மற்றும் நாட்டுப்புறக் கதைக்களத்தில் ஒரு புதுமையான கதையை இந்தப்படம் சொல்கிறது. இப்படத்திற்குத் திரையரங்குகளில் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. இப்போது ZEE5 மூலம் இப்படத்தை அனைத்து ரசிகர்களும் கொண்டாடுவதைக் காண ஆவலாக உள்ளேன்.
இயக்குநர் கமல் பிரகாஷ் கூறியதாவது...,
இந்தப் படம் அன்பான குழுவின் உழைப்பு. மர்மம், அதிரடி மற்றும் ஃபேண்டஸி அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான அனுபவத்தைத் தரும் படைப்பு இது. இப்படத்தை உருவாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது, ஆனால் திரையரங்குகளில் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பு எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. கிங்ஸ்டன் கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷின் உழைப்பு வியக்கதக்கதாக இருந்தது. தன்னை முழுதாக மாற்றிக்கொண்டு, மிகப்பிரமாதமாக, தனித்துவமான நடிப்பைத் தந்தார். இந்த வேடத்தில் வேறு யாரையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ZEE5 மூலம் இப்படம் அனைத்து மக்களையும் சென்றடையவுள்ளது, மிகப்பெரிய மகிழ்ச்சி. அனைவருக்கும் இப்படம் புதுமையான அனுபவத்தைத் தரும்.
ஃபேண்டஸி கலந்த இந்த அற்புதமான திரைப்படத்தை, ZEE5 இல் பிரத்தியேகமாக ஏப்ரல் 13 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் கண்டு களியுங்கள் !!
நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்காக அதிரடியில் இறங்கிய நடிகர் சௌந்தரராஜா!
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சௌந்தரராஜா. நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். மரம் வளர்ப்பது தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சௌந்தரராஜா இதற்காக பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
இதுதவிர நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்பு வெளியானது முதலே சௌந்தரராஜா அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். முன்னதாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்த சௌந்தரராஜா, பிறகு கட்சியின் கொடி வெளியிட்டதும் அதனை மதுரை மீனாட்சி அம்மன் சன்னதியில் வைத்து சிறப்பாக வழிபாடு நடத்தி இருந்தார். பின்னர் மாநாட்டுக்கு சைக்கிள் பேரணி ஆகியவற்றை முன்நின்று செய்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்காக 'தலைவன் நீயே, தொண்டன் நானே...' என்ற தலைப்பில் ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கும் பணிகளில் நடிகர் சௌந்தரராஜா ஈடுபட்டு வருகிறார். மேலும், இந்த பாடலுக்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. டாக்டர் நந்துதாசன் நாகலிங்கம் இந்த பாடலை எழுத, சந்தோஷ் இசையமைக்கிறார்.
நிரோஜன் இயக்க இருக்கும் இந்த பாரலுக்கு நடன இயக்குநராக பிரசாந்த், புகைப்பட கலைஞராக சக்தி பிரியன் ஆகியோர் பணியாற்ற உள்ளார்கள். இந்தப் பாடலில் நடிகர் சௌந்தரராஜா நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மதுரை டூரிங் டாக்கீஸ் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். இப் பாடல் தொடர்பான இதர விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உப்பள தொழிலாளர்களின் வாழ்வியலை மையமாக கொண்டுள்ள படம் 'உயிர் மூச்சு'!
பிராட்வே சுந்தர் இயக்கத்தில் தீபா சங்கர், மீசை ராஜேந்திரன், கிங்காங், டெலிபோன் ராஜ், பெஞ்சமின்,விக்னேஷ்,சஹானா ஆகியோர் நடித்த உயிர் மூச்சு திரைப்படம் ஏப்ரல் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது...
முதலுதவி பற்றிய மையக்கருத்துடன் வரதட்சணை கொடுமை, லஞ்சம் ஊழல், மதுபோதையால் ஏற்படும் சீரழிவு பற்றிய கதை களத்துடன்., தமிழ் திரை உலகில் முதன் முதலில் வில்லனாக அறிமுகமாகிய டெலிபோன் ராஜின் வில்லத்தனத்தில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகி இருக்கும் உயிர் மூச்சு திரைப்படம் தியேட்டர்கள் கிடைக்காமல் தவித்து வருகிறது...
தூத்துக்குடியில் மட்டும் இன்று உயிர் மூச்சு திரைப்படம் ரிலீஸ் ஆனது... முதல் காட்சி மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது.. படம் முழுவதும் ஆர வாரத்துடன் மக்கள் படத்தை ரசித்தனர்... கிங் காங் படம் முழுவதும் காமெடியில் கலக்கி இருக்கிறார்., தீபாவின் நடிப்பு வியக்க வைக்கிறது.. பெஞ்சமின் இதுவரை நடித்த அருமையான வேடத்தில் நடித்திருக்கிறார் ... டெலிபோன்ராஜ் தமிழ் சினிமா துறையில் இருந்து முதன்முதலாக வில்லனாக அறிமுகமாகி இருக்கிறார்... ஒரு கிராமத்து வில்லனாக பயங்கரமாக மிரட்டி இருக்கிறார்.. மீசை ராஜேந்திரன் நடிப்பில் கம்பீரம் தெரிகிறது.. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விக்னேஷ் மற்றும் கதாநாயகியாக சஹானா நடித்திருக்கிறார்கள்... கதையை அத்திமரப்பட்டி விவசாயி ஜோதிமணி எழுதி இருக்கிறார்..
இந்த திரைப்படத்தை இயக்கிய பிராட்வே சுந்தர் ஏற்கனவே அரசியல் சதுரங்கம், விதி எண் 3, கருப்பு பக்கம் ஆகிய திரைப்படங்களை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த திரைப்படத்தில் நான்கு பாடல்களை இயக்குனர் பிராட்வே சுந்தர் எழுதி பாடியிருக்கிறார் உயிர் மூச்சு திரைப்படத்திற்கு அவரே இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. திரைப்படத்தில் வரும் நான்கு பாடல்களும் மனதில் நீங்காத இடம்பெறுகிறது..
'ஆத்தா உன்ன பாத்தா' என்ற பாடல் உப்பள தொழிலாளர்களின் வாழ்வியலை மையமாக கொண்டுள்ளது... படம் பார்த்த முதியவர் ஒருவர் கூறும்போது ..இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் ரிலீசாக வேண்டும் நான் 22 வருடங்களுக்கு பிறகு சினிமா தியேட்டர் வந்திருக்கிறேன்.. இந்த திரைப்படம் மிக அருமையாக உள்ளது நான் அடுத்த காட்சியும் பார்த்து விட்டு தான் வீட்டுக்கு செல்வேன் என்று கூறினார். நல்ல திரைப்படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்து..
4 ஆம் தேதி வெளியாகிறது இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ’சாரி’!
கிரி கிருஷ்ண கமல் இயக்கியுள்ள, இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான ’சாரி’ திரைப்படத்தில் சத்யா யது மற்றும் ஆராத்யா தேவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் பிரம்மாண்டமான ப்ரீ ரிலீஸ் நிகழ்வு ஹைதராபாத்திரல் நடைபெற்றது. இந்தப் படத்தை ரவிசங்கர் வர்மா, RGV - AARVI புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் தயாரித்துள்ளார். ’சாரி’ திரைப்படம் இந்த மாதம் 4 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இயக்குநர் கிரி கிருஷ்ண கமல் படம் பற்றி கூறியதாவது, "'சாரி' படத்திற்காக திறமையான புதிய குழு பணியாற்றியுள்ளது. ராம் கோபால் வர்மா எனக்கு படம் எப்படி உருவாக்குவது என்று ஒருபோதும் சொல்லிக் கொடுக்கவில்லை. இது இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்கு இடையிலான தீவிர கதைக்களத்தைக் கொண்டது. சத்யா யது மற்றும் ஆராத்யா தேவி படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யா மற்றும் ஆராத்யாவின் கதாபாத்திரம் வழக்கமான படத்தில் வருவது போல இருக்காது. ஆர்ஜிவியுடன் பணிபுரிவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
இசையமைப்பாளர் சஷிப்ரீதம் கூறியதாவது, "’குலாபி’ படத்திலிருந்தே ராம் கோபால் வர்மாவுடன் எனக்கு நல்ல ரிலேஷன்ஷிப் இருக்கிறது. ’சாரி’ படத்திற்காக அவருடன் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ராம் கோபால் வர்மாவை அடிக்கடி சந்தித்து பேசுவேன். எனது அனைத்து பாடல்களையும் அவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் என்னை எப்போது அழைத்தாலும் படத்திற்கு இசையமைக்கத் தயாராக இருக்கிறேன். இந்தப் படத்தின் பாடல்கள் நிச்சயம் பார்வையாளர்களை ஈர்க்கும்” என்றார்.
இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசியதாவது, “சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவது வாழ்க்கையில் மோசமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் ’சாரி’. இந்தப் படத்திற்கான கதையை நான் எழுதியுள்ளேன். நான் எழுதிய ஸ்கிரிப்டை விட இயக்குநர் கிரி கிருஷ்ணா இந்தப் படத்தை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார். அவர் என்னுடைய நீண்ட கால நண்பர். இந்தப் படம் பற்றி நான் அவருடன் விவாதித்தபோது, அவர் சொல்லிய கருத்துகளும் எனக்குப் பிடித்திருந்ததால் இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அவருக்கு வழங்கினேன். ஒளிப்பதிவாளர் சபரி, இசையமைப்பாளர் சஷிப்ரீதம் மற்றும் எனது முழு அணியினரும் படத்தில் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். ஒளிப்பதிவாளர் சபரி தனது காட்சியமைப்புகள் மூலம் படத்தின் மையக்கருவை சரியாக பிரதிபலித்துள்ளார். இசையமைப்பாளர் சஷிப்ரீதமும் இந்தப் படத்திற்கு சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். சுபாஷ் படத்தில் மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். படக்குழுவினரின் பங்களிப்பு என்னை விட அதிகம் என்பது எனக்கு பெருமையான ஒன்று” என்றார்.
கதாநாயகி ஆராத்யா தேவி, "'சாரி' படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த ராம் கோபால் வர்மாவுக்கு நன்றி. இந்தப் படம் என்னுடைய கனவு படம். இயக்குநர் கிரி கிருஷ்ண கமல் இந்தப் படத்தில் நடிக்க போதுமான சுதந்திரம் அளித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன். சத்யா யது சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். படம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறோம். இந்த மாதம் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 'சாரி' படத்திற்கு நீங்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.
நடிகர் சத்யா யது, "’சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இங்கு வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்திற்காக ராம் கோபால் சாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்தப் படத்தின் தீவிர கதைக்கருவும் எனது நடிப்பும் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். ஆராத்யா தேவி நடிப்பு சிறப்பாக இருந்தது. இந்தப் படத்தை கொடுத்த ராம் கோபால் வர்மாவுக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த மாதம் 4 ஆம் தேதி வெளியாகும் ‘சாரி’ படத்தைப் பார்த்து ஆதரிக்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
எஸ் ஜே சூர்யா சாருக்கு எவ்வளவு தீனி போட்டாலும் தீரவில்லை! - நடிகர் கார்த்தி
பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் இயக்கத்தில், அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவாகியுள்ளது. முதல் பாகத்தை விட பரபரப்பான திரில்லராக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசுகையில், “சர்தார் பெயர் வைத்ததிலிருந்தே அந்தப்படத்தின் மீது, எனக்கு நிறைய பிரியம் இருந்தது. நம் கிராமத்தில் இருந்து ஒருவனை தேர்ந்தெடுத்து, அவனுக்கு டிரெய்னிங் தந்து, உளவாளியாக அனுப்பி வைத்தார்கள். இது உண்மையில் நடந்தது. அதை அருமையான கதையாக்கி படமெடுத்தார் மித்ரன். இப்போது அந்த பாத்திரம் திரும்ப வருவது மகிழ்ச்சி. எல்லோரும் முதன் முறையாக ஒரு உளவாளி தனக்காக இல்லாமல், நாட்டுக்காக போராடுகிறான் என இந்தப்படத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள் அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப்படத்தில் இன்னும் பெரிய போரை நடத்தவுள்ளார் சர்தார். அதிலும் எஸ் ஜே சூர்யா சாருடன் நடிப்பது மகிழ்ச்சி. மித்ரன் மிகப்பிரம்மாண்டமாக இந்தக்கதையை உருவாக்கியுள்ளார். செட்டில் போய்ப் பார்க்கும் போது அவ்வளவு பிரமிப்பாக இருக்கும், அத்தனை செலவு செய்துள்ளார்கள். லக்ஷ்மன் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் படத்திற்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டியது தயாரிப்பாளரின் கடமையாக ஆகிவிட்டது. எஸ் ஜே சூர்யா சாருக்கு எவ்வளவு தீனி போட்டாலும் தீரவில்லை இதிலும் அசத்தியுள்ளார். சாம் சி எஸ் கைதிக்கு பிறகு அட்டகாசமான இசையைத் தந்துள்ளார். படம் உங்களை கண்டிப்பாக திருப்திப்படுத்தும். இந்த ஃபர்ஸ்ட் லுக்கை உங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம் நன்றி.” என்றார்.
இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேசுகையில், “முதன் முதலில் சர்தார் எடுக்கும்போது சர்தார் எப்படி இருக்க வேண்டும் என்பது என் மனதில் இருந்தது. கார்த்திக்கு மேக்கப் போட்டு முதல் சீன் எடுக்கும்போதே, இந்த கேரக்டர் நிறைய கதை சொல்ல முடியும் என்று தோன்றியது. அப்போதே இந்தப் பயணம் துவங்கிவிட்டது. இந்தப்படம் சர்தார் ப்ரீக்குவல் மற்றும் சீக்குவல் என இரண்டாகவும் இருக்கும். சர்தாரின் ப்ளாஷ்பேக்கில் இந்தக் கதை நடக்கும். இது மிகப்பெரிய கேன்வாஸில் உருவாகும் படம். அதற்கு லக்ஷ்மன் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். சர்தாரில் கார்த்தி சாரை பாடாய்படுத்தினோம், அதைத் தாண்டியும் மீண்டும் மேக்கப் போட்டு இந்தப்படத்திற்கு வந்ததற்கு நன்றி. இந்த ஃபர்ஸ்ட் லுக், சர்தாரில் யாரை எதிர்க்கப் போகிறார் என்பதை அறிமுகப்படுத்ததத் தான். எஸ் ஜே சூர்யா சார் கதை கேட்டு முடிக்கும் முன்பே ஒத்துக்கொண்டார். இதில் அசத்தியுள்ளார். படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசுகையில், “இறைவனுக்கு வணக்கம், சர்தார் முடித்தபோது அதன் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கலாம் என ஹீரோவும் இயக்குநரும் முடிவு செய்தார்கள், அப்போது மித்ரன் என்னிடம் ஒரு கதை சொன்னார். இது பெரிய கேன்வாஸில் இருக்கும் ஓகேவா என்றார். சர்தார் படம் கார்த்தி கேரியரில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அதற்காக அவர் கடுமையாக உழைத்திருந்தார். அதனால் இது பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என உடனே ஓகே சொன்னேன். சர்தார் மேக்கப் போடவே அவ்வளவு நேரம் கஷ்டப்பட்டார். இதற்காக கார்த்தி இன்னும் கடுமையாக உழைத்துள்ளார். மித்ரன் மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். உங்களுக்கு இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசரை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறோம் நன்றி.” என்றார்.
நடிகர் எஸ் ஜே சூர்யா பேசுகையில், “’சர்தார் 2’ஒரு ரிமார்க்கபிள் படம், மித்ரன் சார் வந்து கதை சொன்ன போதே, மிக மகிழ்ச்சியாக இருந்தது. என் கேரக்டர் மிக வித்தியாசமாக இருந்தது. நம்ம நேட்டிவிட்டியுடன் இன்டர்நேஷனல் தரத்தில் நம் மக்களுக்கு புரிகிற மாதிரி, மிக அழகாக இந்தக்கதையை உருவாக்கியுள்ளார். இறைவன் நல்ல நல்ல டைரக்டராக எனக்குத் தருகிறான். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிபெறும் எனும் நம்பிக்கை இருக்கிறது. 3 அற்புதமான மனிதர்கள், கார்த்தி சார், அவர் என்ன சொன்னாலும் நடத்திக் காட்டும் தயாரிப்பாளர், தரமாக உழைக்கும் இயக்குநர் மூவரும் மிகச்சிறந்த மனிதர்கள். கார்த்தி சாரிடம் உள்ள ஸ்பெஷல், மூளை மனதிற்கு தடையில்லாமல் அவரிடம் வார்த்தைகள் வரும். மிக நல்ல மனதுக்காரர். அந்த மேக்கப் போடவே நாலு மணி நேரம் ஆகும், அதை பொறுத்துக் கொண்டு உழைத்துள்ளார். அவருக்கு இது பெரிய வெற்றி தரும், அனைவருக்கும் நன்றி.” என்றார்.
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசுகையில், “இது மிகப்பெரிய மேடை, 10 வருடம் முன் இந்த இடத்தில் மித்ரன் என்னிடம் சர்தார் கதையைச் சொல்லியுள்ளார். அவர் எப்போதும் ஹாலிவுட் தரத்தில், நம் கதையை சொல்லும் இயக்குநர் அவருடன் படம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. தூக்கத்தில் எழுப்பினாலும் ஸ்பை திரில்லருக்கு இசையமைப்பேன், எனக்கு பிடித்த ஜானர். கார்த்தி சாருடன் கைதி படத்திற்கு பிறகு வேலை பார்க்கிறேன். மிகத் தனித்துவமான திறமைசாலி. அவரிடம் எப்போதும் தான் என்ன செய்கிறோம் என்பதில் தெளிவு இருக்கும். இந்தப்படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. பிரின்ஸ் பிக்சர்ஸ் என் குடும்பம் மாதிரி. இவர்களுடன் பல ஜானர்களில் வேலை பார்த்துள்ளேன். இன்னும் பல படங்கள் பணியாற்ற வேண்டும். இந்தப்படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.” என்றார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா