சற்று முன்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கெளரவ வேடத்தில் நடிக்கும் 'அடங்காதே'   |    உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட 'லெவன்' பட டிரெய்லர்!   |    நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் ஆரம்பித்து வைத்த 'துகில்' நிறுவனத்தின் புதிய கிளை!   |    நடிகர் சூரி நடிப்புத் திறமையின் மற்றொரு முகத்தை, பதிவு செய்யும் படமாக 'மாமன்' இருக்கும்   |    ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள மக்கள் மனம் கவர்ந்த 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ் புரோமோ!   |    வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வைடாக பார்ப்பவன் நான் - ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்!   |    என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள் - பேரரசு!   |    தமிழ் சினிமாவின் அடையாளமாக டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும் - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்   |    விஜய் சேதுபதி படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்!   |    வாரம் ஒரு சினிமாவைக் குழந்தைகளுக்குக் காட்டுங்கள் - ராணுவ வீரரும் நடிகருமான காமராஜ்   |    எழுத்தின் பங்கு இல்லாததால் சினிமா சீரழிந்து வருகிறது: இயக்குநர் கதிர் பேச்சு!   |    ஓடிடி தளத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'டார்க் ஃபேஸ்’!   |    பொதுவாக ஈழத் தமிழர்கள் படம் என்றால் அது சோகமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும் - சசிகுமார்   |    ஜியோ ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 24 முதல் ப்ளாக்பஸ்டர் 'எம்புரான்' ஸ்ட்ரீமாகிறது!   |    ’என்.டி.ஆர்.நீல்’ படத்தின் படப்பிடிப்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி இணைகிறார் என்.டி.ஆர்.!   |    ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஆடுகளம் கிஷோர் நடிப்பில் 'கலியுகம்' பட வெளியீட்டு தேதி போஸ்டர் வெளியானது!   |    விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' (ACE) ரிலீஸ், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!   |    வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கையில் நிறைய அழகான விசயங்கள் நடக்கும் - ‘ரெட்ரோ’ விழாவில் சூர்யா   |    'குபேரா' படத்தின் முதல் சிங்கிள் ‘போய் வா நண்பா’ வெளியாகியுள்ளது!   |    உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்களை நம்பி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! - கே.ராஜன்   |   

சினிமா செய்திகள்

ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள மக்கள் மனம் கவர்ந்த 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ் புரோமோ!
Updated on : 01 May 2025

தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற வெப் சீரிஸ் 'ஹார்ட் பீட்'. இதன் இரண்டாவது சீசன் புரோமோ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இதன் முதல் சீசன் பரபரப்பான திருப்பங்களுடன் முடிவடைந்த நிலையில், விடை தெரியாத கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள இரண்டாவது சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். பல எமோஷனலான தருணங்கள், வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் மருத்துவமனை வாழ்க்கையின் உண்மையான சித்தரிப்புடன் இருப்பதால் 'ஹார்ட் பீட்'டுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. வரவிருக்கும் இரண்டாவது சீசன் பல முக்கிய தருணங்கள், முரண்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதையைத் தர இருக்கிறது.



 



ஆர்கே மருத்துவமனையில் மூத்த மருத்துவராக ரீனா 2.0 இருக்கும்படியாக இந்த புரோமோ தொடங்குகிறது. தனது புதிய அணியை மிகவும் கட்டுபாடுடனும் அமைதியாகவும் வழிநடத்துகிறார். ஆனால், இந்த மருத்துவர் உலகத்திற்கு அப்பால் ரீனாவின் பழைய நண்பர்களுடனான அவரது விளையாட்டுத்தனமான நட்புறவையும் இந்த புரோமோ காட்டுகிறது. இப்போது சேர்மனாக இருக்கும் அர்ஜுனுடனான அவளது சிக்கலான உறவு மற்றும் தனது தாயார் டாக்டர் ரதிக்காக ரீனா ஏங்குவது போன்ற விடை தெரியாத கேள்விகளுக்கு இப்போது விடை கிடைக்க இருக்கிறது. பார்வையாளர்களுக்கும் இது உணர்ச்சிகரமான தருணங்களாக அமையும்.



 



கதையின் சீசன் 2 புதிய பயிற்சியாளர் குழுவையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. நிலோஃபர் (கனா காணும் காலங்கள் புகழ் அக்ஷதா), கிரண் (சிவம்), மற்றும் கமல் (அப்துல்), ரோஷினி (அமையா) மற்றும் புதிய தலைமை மருத்துவராக டி.எம். கார்த்திக் ஆகியோர் நடிக்கின்றனர். ரீனாவாக தீபா பாலு, டாக்டர் ரதியாக அனுமோல், தேஜுவாக யோக லட்சுமி, பாடினி குமார் அனிதாவாகவும், குணாவாக சர்வா, ராக்கியாக சபரீஷ், அர்ஜுனாக சாருகேஷ், நவீனாக ராம், தேவ்வாக சந்திரசேகர், ராமநாதனாக கிரி துவாரகேஷ், தியானேஷ், ரேயா ஆகியோர் நடித்துள்ளனர். 



 



'ஹார்ட் பீட் சீசன் 2'-வை தீபக் சுந்தரராஜன் எழுதி இயக்கியுள்ளார். ரெஜிமல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங், சரண் ராகவன் இசையமைத்துள்ளார். இந்தத் தொடரை ஏ டெலி ஃபாக்டரி புரொடக்ஷன்ஸ், தயாரிப்பாளர் ராஜவேலு தயாரித்துள்ளார். ஆர்ஜே. ஷியாம் சுந்தர் நிர்வாக தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இந்தத் தொடர் விரைவில் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாக இருக்கிறது. 



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா