சற்று முன்

அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |    தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியாகும் 'படை தலைவன்'   |    புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகும் 'பேரன்பும் பெருங்கோபமும்' திரைப்படம்!   |    விக்ரமுக்கு 'சேது' போல உதயாவுக்கு 'அக்யூஸ்ட்' அமையும் - ஆர்.கே. செல்வமணி   |    சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் விளையாட்டு சரித்திரத்தை மாற்றியமைக்க உள்ளது!   |    'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா   |    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் கத்தார் அரசு விருதை வென்று சாதனை!   |    'இராமாயணா' படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது!   |    பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது   |    இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம்! - தயாரிப்பாளர்-இயக்குநர் இசக்கி கார்வண்ணன்   |    இங்கு பெண்களுக்கான குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது - இயக்குநர் வசந்தபாலன்   |    சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    திரைப் படைப்பாளிகளின் பாராட்டுக்களைக் குவித்துள்ள 'மனிதர்கள்' மே 30 முதல் திரையரங்குகளில்!   |   

சினிமா செய்திகள்

முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்ட 'கிராண்ட் காலா ஃபேஷன் வீக்'
Updated on : 11 May 2025

மே 3ஆம் தேதி  வெஸ்டின் வேளச்சேரியில் துவாரகா ஸ்டூடியோஸ் சார்பில், ஃபேஷன் உலகின் மிக முக்கியமான “கிராண்ட் காலா ஃபேஷன் வீக்” நிகழ்ச்சி நடைபெற்றது.  இவ்விழாவில் முன்னணி நட்சத்திரங்கள் சித்தி இத்னானி, வைபவ்,கருணாகரன்,பிரதீப் மில்ராய்,நயனா சாய், ஐஸ்வர்யா ராஜேஷ், பிர்க்யா நக்ரா, பிக்பாஸ் தர்ஷன், ஷிவானி நாராயணன்,மாதுரி ஜெயின்,சஞ்சனா சிங், இனியா ,ஸ்வயம் சித்தா ,ஆகியோருடன் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகையர் கலந்துகொண்டனர். 



 



ஃபேஷன் உலகின் பிரம்மாண்டமாக நடந்த இவ்விழாவில், திரு பிளேஸ் கண்ணன் மற்றும் திரு சத்யன் மகாலிங்கம் ஆகியோர்   இசைக் கலைஞர்களுக்கு உதவும் வகையிலான “சேவ் த வாய்ஸஸ்” அறக்கட்டளை அமைப்பு அறிவித்தனர். 



 



திரு பிளேஸ் கண்ணன் மற்றும் திரு சத்யன் மகாலிங்கம் ஆகியோர் இணைந்து துவங்கியுள்ள “சேவ் த வாய்ஸஸ்” என்ற புதிய அமைப்பு, இசை உலகில் போராடும் இசைக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் கலைஞர்களின் உடல்நலம் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவ, ஒரு சமூக அமைப்பாகச் செயல்படவுள்ளது. 



 



தமிழ்நாடு முழுவதும் உள்ள இசைக்கலைஞர்களின் குழுவால் வழிநடத்தப்படும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள்:



 



உதவி தேவைப்படும் கலைஞர்களுக்கு மருத்துவ மற்றும் கல்வி ஆதரவு வழங்குதல்.



 



குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் இசைத்திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு இசைக்கருவிகள் வாசிக்கவும், பாடுவதிலும் திறனை மேம்படுத்தவும் பயிற்சி அளித்தல்.



 



அவர்களை ஒரு தெளிவான இசைமிக்க வாழ்க்கை நோக்கில் வழிநடத்தி, இசைத்துறையில் ஒரு நிலையான இடம் பிடிக்க உதவுதல்.



 



இந்த புதிய அமைப்பு, திறமை மிக்க எளிய இசைக்கலைஞர்களின் வாழ்வில் புத்துயிர் பாய்ச்சும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா