சற்று முன்

16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்'   |    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பான 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' செப்டம்பர் 18 முதல் உலகம் முழுவதும்!   |    பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நடிகை ரெஜினா கசாண்ட்ரா!   |    ‘மூன்வாக்’ திரைப்படம் — உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியது!   |    2025 தீபாவளிக்காக பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம்!   |    கெட்ட எண்ணம் உள்ளவர்கள் நிர்வாகத்திற்கு வந்துவிட்டால் எல்லாம் முடிந்தது - ஆர்.கே. செல்வமணி   |    முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட விஜய் சேதுபதியின் 'ஏஸ்' (ACE ) பட முன்னோட்டம்!   |    சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்த!   |    பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்த சூர்யா!   |    கோலாகலமாக நடைபெற்ற டாகடர்.ஐசரி கே கணேஷ் மகள் சிறப்பு திருமண வரவேற்பு!   |    கேன்ஸ் 2025 திரை விழாவில் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் 'மாண்புமிகு பறை'!   |    முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்ட 'கிராண்ட் காலா ஃபேஷன் வீக்'   |    இதயத் துடிப்பை எகிற வைக்கும் கிரைம் திரில்லர் 'பிளாக் ரோஸ்' முன்னோட்டம் வெளியீடு!   |    பரபரப்பான 'டென் ஹவர்ஸ்' திரைப்படம் இப்பொழுது டெண்ட்கோட்டா OTT இல்!   |    'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு!   |    அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக கூறும் நடிகை   |    நடிகர் சூர்யா பத்து கோடி ரூபாய் நிதியுதவி!   |    இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை! - சிறுத்தை சிவா   |    இயக்குநர் மிஷ்கின், துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் 'ஐ அம் கேம்' பூஜையுடன் துவங்கியது!   |   

சினிமா செய்திகள்

பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நடிகை ரெஜினா கசாண்ட்ரா!
Updated on : 15 May 2025

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. ‘அழகிய அசுரா’ படத்தில் கதாநாயகியான ரெஜினா கசாண்ட்ராவுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு தந்தன. 



 



இதனை தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கிலும் நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அங்கு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். 



 



ரெஜினா கசாண்ட்ரா தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘நிர்ணயம்’, ‘ராஜதந்திரம்’, ‘மாநகரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’, ‘விடாமுயற்சி’,  ‘பார்டர்’, ‘ஃப்ளாஸ் பாக்’ ஆகிய படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.  



 



சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘விடா முயற்சி’ படத்தில் யாரும் எதிர்பாராத தோற்றத்தில் நடித்து அசர வைத்தார். இவரது வில்லத்தனமான நடிப்புக்கு ஏராளமான பாராட்டுக்கள் குவிந்தது. தற்போது இந்தி படங்களான சன்னி தியோலுடன் ‘ஜாத்’, அக்ஷய் குமார், அனன்யா பாண்டேவுன்  ‘ கேசரி 2’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து தமிழில் சுந்தர்.சி. இயக்கத்தில் மூக்குத்தி அம்மன்2-ம் பாகத்திலும் என பிசியாக நடித்து வருகிறார். இதனால் ரெஜினா கசாண்ட்ரா பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா