சற்று முன்
சினிமா செய்திகள்
'ராமாயணா' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் பற்றிய அப்டேட்!
Updated on : 24 May 2025

தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் ஆதரவுடன் தயாராகும் ' ராமாயணா ' எனும் திரைப்படம் - சமீபத்திய காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். தொழில் துறையில் சில சிறந்த திறமையாளர்கள் - உலக தரம் வாய்ந்த VFX குழு - நட்சத்திர நடிகர்கள் - பிரம்மாண்டமான மற்றும் அதிவேகமாக உருவாக்கப்படும் அரங்கங்கள் - என ' ராமாயணா ' இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திரைமொழியாகவும் மற்றும் உணர்வு பூர்வமான படைப்பாகவும், உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களான ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடித்திருந்தாலும்... அவர்கள் ஒன்றாக திரையில் தோன்றும் நேரம் குறைவு என சொல்லப்படுகிறது.
''இப்படத்தின் தயாரிப்பாளர்கள் - பெரும்பாலான காவியங்களில் ராமரும், ராவணனும் ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லை என்ற அசலான வால்மீகி உரைக்கு உண்மையாக இருப்பது என்பதை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களின் உலகங்கள் தனித்தனியாகவே உள்ளன. உச்சக்கட்ட போரில் விதி அவர்களை நேருக்கு நேர் கொண்டு வரும் வரை அவர்களின் கதைகள் இணையாகவே விரிவடைகின்றன. அசல் கதையின் படி, சீதை கடத்தப்பட்ட பின்னரே ராமர்- ராவணனின் இருப்பை பற்றி அறிந்து கொள்கிறார். மேலும் இலங்கையில் போர்க்களத்தில் மோதல் ஏற்படும் வரை இருவரும் ஒருபோதும் ஒருவரை ஒருவர் சந்திக்க மாட்டார்கள்.''
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் கதாபாத்திரங்களை தனித்தனியாக வைத்திருக்க நிதிஷ் திவாரி மற்றும் குழுவினரின் படைப்பு தேர்வு - ராமாயணத்திற்கு ஒரு விருப்பத்திற்குரிய கதை ஆழத்தை உருவாக்குகிறது. அவர்களின் தனித்தனியான பயணங்களை ஒன்று தர்மத்தையும், நல்லொழுக்கத்தையும் உள்ளடக்கியதாகவும்.... மற்றொன்று ஈகோ மற்றும் சக்தியால் இயக்கப்படுவதாகவும் ... பட்டியலிடுவதன் மூலம் இந்த திரைப்படம் - அவர்களின் இறுதி மோதலுக்கான உற்சாகத்தை அதிகரிக்கிறது. இந்த தாமதமான மோதல் அவர்களின் கதாபாத்திரத்தை சுயாதீனமாக உருவாக்க அனுமதிக்கிறது. இதனால் அவர்களின் இறுதி மோதலை இன்னும் சக்தி வாய்ந்ததாக மாற்றுகிறது. ராவணனான யாஷ், சீதாவாக நடிக்கும் சாய் பல்லவி மற்றும் அனுமனாக நடிக்கும் சன்னி தியோலுடன் திரை நேரத்தை பகிர்ந்து கொள்ளும் அதே தருணத்தில்.. ரன்பீர் கபூர் உடனான காட்சிகள் நிச்சயமற்றதாகவே உள்ளன. ரன்பீர் கபூர் தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் & வார் படத்தில் விக்கி கௌசல் மற்றும் ஆலியா பட் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் அந்த படத்திற்காக அவர் பராமரிக்கும் குறிப்பிட்ட தோற்றம் அவரது பங்களிப்பு தருணங்கள் கிடைப்பதை கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக தயாரிப்பு, தாமதங்கள், திட்டமிடல் ஆகியவற்றை மேலும் சிக்கலாக்கியுள்ளன. இதனால் இந்தக் கட்டத்தில் ராமாயணத்திற்காக அவர் தனது தோற்றங்களை மாற்றிக் கொள்வது என்பது சாத்தியமற்றது.
படத்தின் தயாரிப்பு பணிகள்- தற்போது நகரத்தில் உள்ள பிரம்மாண்டமான அரங்க வடிவமைப்புப் பணிகளாக நடந்து வருகிறது. இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்படுகிறது. முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையிலும், இரண்டாவது பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையிலும் வெளியாகிறது. ரன்பீர் கபூர் ஏற்கனவே தனது பகுதிகளை நிறைவு செய்து விட்ட நிலையில்... மே மாத தொடக்கத்தில் உஜ்ஜயினியில் உள்ள மகாமல் ஆலயத்திற்கு சென்ற பிறகு, யாஷ் தனது பகுதிகளில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
முன்னணி கதாபாத்திரங்களுக்கு இடையில் பகிரப்பட்ட திரை நேரத்தை குறைப்பதற்கான தேர்வு.. நவீன சினிமா திரை மொழியை காட்சியாக வடிவமைக்கும் போது, அசல் காவியத்தின் சாரம்சத்தை மதிக்கும் தயாரிப்பாளர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. நட்சத்திரங்கள் நிறைந்த படங்கள் - பெரும்பாலும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க , பெரிய பெயர்களுக்கு இடையிலான தொடர்புகளை கட்டாயப்படுத்தும் ஒரு காலத்தில் ...இராமாயணம் என்பது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட கதை சார்ந்த பாதையை பிரதிபலிக்கிறது. இது நம்பகத் தன்மைக்கு முன்னுரிமை அளிக்கிறது மற்றும் புராணக் கதையை ஆழமாக மறுபரிசீலனை செய்வதை உறுதி அளிக்கிறது.
ராமாயணம் சந்தேகத்திற்கு இடமின்றி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாகும். நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி ,யாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் பிரம்மாண்டம்- மெகா ஸ்டார் நடிகர்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் தெய்வீக புராண இதிகாசத்தை அற்புதமான முறையில் வழங்குவதற்கும், இதற்கு முன் எப்போதும் இல்லாத ஒரு சினிமா அதிசயத்தை உருவாக்குவதற்கும், இந்தப் படம் உறுதியளிக்கிறது.
சமீபத்திய செய்திகள்
'தமிழ் பெண்களின் வீரத்தை போற்றும் வகையில் உருவாகியுள்ள 'வீர தமிழச்சி'!
மகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட் - இளயா - சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'வீர தமிழச்சி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் - பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும்' வீர தமிழச்சி' திரைப்படத்தில் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி, கே. ராஜன், மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சங்கரலிங்கம் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூபின் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை மகிழினி கலைக்கூடம் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சாரதா மணிவண்ணன் மற்றும் மகிழினி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார்- பேரரசு -ராஜகுமாரன்- விஜய் ஸ்ரீ - தயாரிப்பாளர் அன்புச்செல்வன் - ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மணிவண்ணன் பேசுகையில், ''தமிழ் பெண்களின் வீரத்தை போற்றும் வகையில் 'வீர தமிழச்சி' உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட உள்ளோம். இந்த 'வீர தமிழச்சி'யை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசித்து, வெற்றி தமிழச்சியாக மாற்றி தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், ''தயாரிப்பாளர்கள் நல்லதொரு இயக்குநருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். கட்டிட தொழிலாளியான இயக்குநரின் கனவை நனவாக்கிய தயாரிப்பாளருக்கு நன்றி.
இயக்குநர் கட்டிட தொழிலாளி என்பதால் எந்த கல்லை எங்கு வைக்க வேண்டும், எந்தக் கலவையை எங்கு பூச வேண்டும், ஜன்னலை எங்கு வைக்க வேண்டும், வாசக்காலை எங்கு வைக்க வேண்டும், பெட்ரூம் எப்படி இருக்க வேண்டும், கிச்சன் எப்படி இருக்க வேண்டும், எந்த அகலம்- எந்த நீளம் இருக்க வேண்டும், என்பதை பார்த்து பார்த்து தெரிந்து கொண்டு படைப்பை உருவாக்கி இருக்கிறார் என முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்க்கும்போது தெரிகிறது. ஒவ்வொரு இயக்குநரையும் கட்டிட கலைஞருடன் தான் ஒப்பிடுவார்கள். இவர்கள்தான் கதையை எங்கு, எப்படி ஆரம்பிப்பது, எப்படி எடுத்து செல்வது, அந்த கதையில் கதாநாயகனின் பிம்பம் என்ன, கதாநாயகியின் வேலை என்ன, நாம் சொல்லக்கூடிய சாராம்சம் என்ன, இந்த கதையின் முடிச்சு என்ன என ஏராளமான இன்ஜினியரிங் வேலைகளை பார்க்க வேண்டியது ஒரு இயக்குநரின் பொறுப்பு. நானும் ஒரு காலத்தில் மிகச்சிறந்த கட்டிட கலைஞராக இருந்தவன் தான். அதனால் இந்தப் படம் நன்றாக இருக்கும் என மனதார வாழ்த்துகிறேன்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தழுவி இப்படத்தை இயக்குநர் உருவாக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் பாடல்கள் அழகாகவும், நன்றாகவும் இருக்கின்றன. படத்தில் இடம்பெற்ற 'தீம் சாங்'கும் நன்றாக இருக்கிறது.
ஹீரோயின் ஓரியண்டட் ஸ்கிரிப்டான இந்த திரைப்படத்தில் சஞ்சீவ் - இளயா போன்றவர்கள் நடித்திருப்பதை பாராட்ட வேண்டும்.
இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்த பிறகு எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. இந்த திரைப்படத்திற்கு நிறைய திரையரங்குகள் கிடைக்க வேண்டும். இன்றைய சூழலில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த திரைப்படத்தை 40 அல்லது 50 திரையரங்குகளில் தினசரி மூன்று கட்சியாகவோ நான்கு காட்சியாகவோ திரையிடுமாறு திரையரங்க உரிமையாளர்களிடமும், விநியோகஸ்தர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒரு தியேட்டரில் மூன்று காட்சிகளாக ஒரு படம் வெளியானால் தான் 'மௌத் டாக்' மூலம் படத்திற்கான விளம்பரம் சில நாட்களில் கிடைக்கும். அப்போதுதான் இது போன்ற நல்ல படங்கள் மக்களை சென்றடையும்.
இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் வெற்றி மூலம் இந்தக் குழுவினருக்கு மேலும் பல வாய்ப்புகள் கிடைக்கட்டும் என்றும் வாழ்த்துகிறேன்,'' என்றார்.
சிறு பட தயாரிப்பாளர் சங்க தலைவர் அன்புசெல்வன் பேசுகையில், ''வீர தமிழச்சி என்றால் தமிழக பெண்கள்தான் என உலகத்திற்கே தெரியும். இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து மூன்று மாதங்களுக்கு முன்னரே வெளியாக இருந்தது. தயாரிப்பாளர் கடினமாக உழைத்து இப்படத்தினை வெளியிட முயற்சி செய்து வருகிறார். இந்த தயாரிப்பாளரின் கடின உழைப்பிற்காகவும், நல்ல மனதிற்காகவும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும்.
படம் வெளியாகும் நாளான வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் படத்தைப் பற்றிய விமர்சனங்களை வெளியிடாதீர்கள் என ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். சிறுபட தயாரிப்பாளர்களை காப்பாற்றுங்கள்,'' என்றார்.
இயக்குநர் ஷரவண சுப்பையா பேசுகையில், ''வீரம் என படம் வந்திருக்கிறது. 'தமிழ்' என படம் வந்திருக்கிறது. 'தமிழன்' என படம் வந்திருக்கிறது. 'தமிழச்சி' என்றொரு படம் வந்திருக்கிறது. இது 'வீர தமிழச்சி' பெயரை கேட்டாலே நல்ல அதிர்வு இருக்கிறது.
தமிழ் மொழி என்பது உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு யுனிக்கான வார்த்தை. அதற்கான இலக்கணம் இருக்கிறதே.. 'த' உயிரெழுத்து 'மி ' என்பது மெய்யெழுத்து என தமிழுக்குள் ஒரு மிகப்பெரிய ரகசியமே இருக்கிறது. இப்படி தமிழிலிருந்து வரும் மரபணு இருக்கிறதே, அதன் ரத்தத்தில் வீரம் இயல்பாகவே இருக்கும், உணர்வும் இருக்கும். இதனை நாம் இதிகாசங்களில் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம். இந்தப் படத்தில் அதனை நாம் காணவிருக்கிறோம். ஒரு பெண் தன்னுடைய பழி தீர்க்கும் உணர்வை வன்முறையால் தீர்த்துக் கொள்கிறாள் என்பது போன்ற ஒரு கன்டென்ட்டில் இந்த படம் இருக்கும் என நம்புகிறேன். அத்துடன் இந்த திரைப்படத்தின் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சில சட்ட திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாகவும் பேசி இருக்கிறார்கள். எனவே இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'புதுமைப்பெண்' திரைப்படம், இந்த சமூகத்தில் பெண்களுக்கான புரட்சியை உண்டாக்கிய படம் என குறிப்பிடலாம். அந்த காலகட்டத்தில் அந்த படம் பேசப்பட்டது. இந்த காலத்தில் 'வீர தமிழச்சி' படம் உருவாகி இருக்கிறது. கமர்ஷியலாக இல்லாமல் இது போன்ற கன்டென்ட் உள்ள படத்தினை தயாரித்ததற்காக தயாரிப்பாளரை பாராட்டுகிறேன்.
'சட்டம் ஒரு திறந்த புத்தகம். அதனால் அந்த சட்டத்தை பற்றி தெரியாதது குற்றம். அத்தகைய சட்டத்தை தெரிந்து கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்ளாமல் இருப்பதும் குற்றம்' என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் உச்சகட்ட காட்சியில் ஒரு கதாபாத்திரம் சட்ட மேதை அம்பேத்கரிடம் பேசுவது போல் அமைக்கப்பட்டு இருக்கிறது. அவரே ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்தப் படம் தெரிவிக்கும் கருத்து மதிப்பு மிக்கதாக இருக்கிறது. இந்த படத்திற்கு இசை, பாடல்கள் நன்றாக உள்ளன. இந்தப் படத்திற்கு ஆக்ஷன் காட்சிகள் அதாவது கதாநாயகிக்கு ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கும் விதமும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது,'' என்றார்.
இயக்குநர் ராஜகுமாரன் பேசுகையில், ''பெண்களுக்கு அடிக்க வேண்டும் என்பதற்காக பயிற்சி கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் அடித்தால் நம்மால் தாங்க முடியாது என்பதுதான் உண்மை. அவர்கள் நம்மை அடிக்காமல் இருக்கிறார்களே என்பது வரை தான் நமக்கு அது பெருமை. அவர்கள் மிக பயங்கரமான மன உறுதியும், உடல் வலிமையும் மிக்கவர்கள். நம்மை அவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் நமக்கு வலிமை குறைவு தான்.
தங்களை மலை போல் காண்பிப்பதில் ஆண்களுக்கு ஒரு கற்பனை உள்ளது. தங்களை மலர் போல் காண்பிப்பதில் பெண்களுக்கு ஒரு கற்பனை உள்ளது. ஆனால் நாம் காண்பது மவரல்ல, அவர்களிடம் இருப்பது தான் மலை. நான் இதனை என்னுடைய அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். நிறைய பெண்களிடம் அடி வாங்கி இருக்கிறேன் என்னுடைய அம்மாவை போன்ற கம்பீரமான - மலை போன்ற உறுதியான பெண்மணியை நான் இதுவரை சந்தித்ததே இல்லை. அவர்களை நான் எல்லா சூழ்நிலைகளிலும் பார்த்திருக்கிறேன்.
அதேபோல் தேவயானியை, பார்ப்பதற்கு நீங்கள் எல்லாம் புஷ்பம் போல் இருக்கும் அந்த பெண் அவ்வளவு உறுதியான, வலிமையான, ஒரே அடியில் ஒரு டன் அல்ல இரண்டு மூன்று டன் வெயிட் உடன் அடிக்கக்கூடிய ஒரு பயங்கரமான பெண்மணி. இதையும் நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் உண்மையிலேயே வலிமையானவர்கள். ஆண்களுக்காக, குழந்தைகளுக்காக மென்மையாக நம்மிடம் நடந்து கொள்கிறார்கள். அதனால் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது நடிகை சுஷ்மிதா சுரேஷிற்கு பயிற்சி அளிக்கவில்லை என்றாலும்... அவர் ஆக்ஷன் காட்சிகளில் பயங்கரமாக தான் நடித்திருப்பார். அவர்களை நான் வாழ்த்துகிறேன். இந்த ஆக்ஷன் ஜானரில் நடிக்கக்கூடிய நடிகைகளே இல்லை, நீங்கள் அந்த இடத்திற்கு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
சிறுசிறு குறும்படங்களை இயக்கி தன்னை செதுக்கி கொண்ட பின் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் பாரதி. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்,'' என்றார்.
நடிகை சுஷ்மிதா சுரேஷ் பேசுகையில், ''வீர தமிழச்சியாக என்னை தேர்வு செய்து நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் மனமார்ந்த நன்றி.
இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் போது ஸ்டண்ட் மாஸ்டர் என்னுடைய பாதுகாப்பையும், என்னுடைய சௌகரியத்தையும் மனதில் வைத்து பணியாற்றினார். குறிப்பாக நான் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியில் நடிக்கும் போது நான் பயந்தேனோ, இல்லையோ அவர் பயந்து கொண்டே இருந்தார். என் மீது அக்கறை செலுத்தி பாதுகாத்த ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வாவிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைப்படங்களில் ஆக்ஷன் காட்சிகளை பார்த்திருக்கிறோம். ஆனால் அதில் நடிக்கும் போது தான் கஷ்டம் தெரிகிறது. இந்த படத்தின் சண்டைக் காட்சிகளில் நடித்த போது உடலில் வலி உண்டானது, இருந்தாலும் பொறுத்துக் கொண்டு படக் குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்கினேன்.
படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரு குடும்பமாக பழகினார்கள். அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்தப்படம் பெண்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் படமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இந்த சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்- அதனை எப்படி வெளிக் கொண்டு வரலாம் என்பதை கற்றுத் தரும் படமாக இது இருக்கும்.
ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான எனக்கு ஏன் நடிப்பு என பலர் கேள்வி கேட்டனர். ஆனால் என்னுடைய விருப்பம் நடிப்பாக இருந்ததால் ஆடிஷனுக்கு பொறுமையுடன் என்னுடைய பெற்றோர்கள் வருகை தந்து ஆதரவை வழங்கினார்கள். நிறைய பெண்களுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது. இதனை பெற்றோர்கள் உணர்ந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
இசையமைப்பாளர் ஜுபின் பேசுகையில், '''திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தில் பணியாற்றி இருக்கிறேன்.
இந்த திரைப்படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. ஒரு பாடலை கலைமாமணி விவேகா எழுத, மற்றொரு பாடலை அறிமுக பாடலாசிரியர் செந்தில் ராஜா எழுதியிருக்கிறார். இந்த பாடலை எழுதிய பின் தான் மெட்டமைத்தோம். மூன்றாவதாக வீர தமிழச்சி என்ற பெயரில் ஒரு டைட்டில் சாங் இருக்கிறது.
பாதிக்கப்பட்ட ஒரு பெண் எப்படி போராடுகிறார் என்பதுதான் இதன் கதை. இந்தப் படத்தில் நாயகி சுஷ்மிதா சுரேஷ் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். அந்தக் கால விஜயசாந்தியை திரையில் பார்ப்பது போல் இருக்கிறது. இந்தப் படம் வெளியான பிறகு அவர்களுக்கு மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது, வாழ்த்துகள்.
இந்த படத்திற்காக எனக்கு என்ன சம்பளம் பேசப்பட்டதோ, அதனை முழுமையாக தயாரிப்பாளர் கொடுத்துவிட்டார். திரையுலகில் இவ்வளவு அன்பான பண்பான தயாரிப்பாளரை பார்க்க முடியாது. இவரிடம் நாம் சம்பளம் கொடுக்கிறோம் என்ற அதிகாரம் எப்போதும் இருக்காது, இவர்கள் தொடர்ந்து படத்தை தயாரிக்க வேண்டும்,'' என்றார்.
இயக்குநர் சுரேஷ் பாரதி பேசுகையில், ''அடிமட்ட கட்டிட தொழிலாளியாக 35 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்த நான் இன்று இயக்குநராக உயர்ந்திருக்கிறேன் என்றால், இதற்கு முதல் காரணம் என்னுடைய மனைவி மற்றும் மகன்கள் தான். இந்த படத்திற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக உழைத்து வருகிறேன். இந்த ஐந்து வருடங்களிலும் என்னையும், என் குடும்பத்தையும் வழிநடத்திச் செல்வது என் மனைவி தான்.
2016 ஆம் ஆண்டில் என்னுடைய 'கொஞ்சம் கொஞ்சமாக..' எனும் முதல் குறும்படத்திற்கு, சிதம்பரம் காட்மாடி பகுதியை சேர்ந்த என் குருநாதர் பழனிச்சாமி தான் ஒரு லட்ச ரூபாயை வழங்கினார். இந்த குறும்படம் சிறந்த விழிப்புணர்வுக்கான குறும்படம் என தேர்வு செய்யப்பட்டு, தமிழக முதல்வரிடம் விருதினை பெற்றேன். என்னுடைய இரண்டாவது குறும்படமான 'தாய்'. இணையத்தில் வெளியாகி இதுவரை 46 மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது. இதுவரை நான் 18 குறும்படங்களை இயக்கியிருக்கிறேன், 36 விருதுகளை வென்றிருக்கிறேன். நான் இயக்கினால் அது நிச்சயம் வெற்றி பெறும், வெற்றி பெறும் படைப்பை தான் இயக்குவேன் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அதற்குப் பிறகு ஒரு கதையை சினிமாவுக்காக தயார் செய்துவிட்டு ஏராளமான தயாரிப்பாளர்களை அணுகி கதையை சொன்னேன். மகிழினி கலைக்கூடத்தில் கதையை சொன்னேன். அவர்களால் படத்தை தயாரிக்கும் அளவிற்கு பொருளாதாரமில்லை, அதனால் இந்த திரைப்படத்தை கிரவுட் ஃபண்டிங் முறையில் உருவாக்கத் தொடங்கினோம். ஒரு வார காலம் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் நன்றாக வந்திருக்கிறது என்பதை அறிந்து தயாரிப்பாளர் நித்தியானந்தம் எங்களுடன் இணைந்தார். அதன் பிறகு முழு படத்தையும் நானே தயாரிக்கிறேன் என்று அவர் சொன்னார். என்னை தொடர்ச்சியாக ஊக்குவித்து என்னுடைய இயக்குநர் கனவை நனவாக்கி
நடிகர் சசிகுமார் பிறந்தநாளை முன்னிட்டு 'யாத்திசை' படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியானது!
நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ரசிகர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. அந்த வகையில், நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திரைத்துறையில் களம் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் ஜே. கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படத்தை அறிவித்துள்ளது. இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தை விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு, வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற 'யாத்திசை' பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் முக்கியமான சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
படம் குறித்து இயக்குநர் தரணி ராசேந்திரன் பகிந்து கொண்டதாவது, "நடிகர் சசிகுமார் எங்கள் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டது பெருமகிழ்ச்சி. பிரிட்டிஷ் சகாப்தத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த கதையில், அவர் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் சுவாரஸ்யமான விஷயமாக ஆக்ஷன் காட்சிகள் இருக்கும்" என்கிறார்.
நடிகர்கள் தேர்வு குறித்து கேட்டபோது, "சசிகுமார் சார் தவிர வேறு யாரையும் இந்தக் கதாபாத்திரத்திற்கு கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு தன் நடிப்பால் கதாபாத்திரத்தையும் படத்தையும் மெருகேற்றியுள்ளார் சசிகுமார். 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் வெற்றிக்குப் பின்பு அவர் இந்தப் படத்தின் கதையை கேட்டு உடனே ஒத்துக்கொண்டது எங்களுக்கு ஆச்சரியமான விஷயம்" என்றார்.
படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்த நிலையில், ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
சேயோன், பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். நடிகர் சசிகுமாருக்கும் படக்குழு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. படம் குறித்தான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' டிரெய்லர்!
ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடித்த பான்-இந்திய பிரம்மாண்ட திரைப்ப்படமான “தி ராஜா சாப்” படத்தின் டிரெய்லர் இறுதியாக வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமானுஷ்ய திகில், நகைச்சுவை, டிராமா மற்றும் உணர்வுகளை கலந்து, இந்திய திரையுலகில் அரிதாகக் நிகழும் கலக்கலான எண்டர்டெய்ன்மெண்ட் படைப்பாக இப்படம் இருக்குமென்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி டிராமாவாகக் கருதப்படும் இந்த படம், பெரும் பிரம்மாண்டத்தால் மட்டுமல்லாமல், உணர்ச்சிகரமான கதையினாலும் மனதைத் தொடுகிறது. காதல், குடும்பம், மரபு போன்ற உணர்வுகளால் மனதை தொடும் இந்த கதை, பெரும் கனவுலகப் பிம்பங்களுடன் பார்வையாளர்களின் உள்ளங்களையும் கவரவிருக்கிறது.
₹1,200 கோடி வசூலித்த கல்கி 2898 AD வெற்றிக்குப் பிறகு, பிரபாஸ் புதிய வேடத்தில் திரைக்கு வரும் இந்தப் படத்தின் மீது குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
படக்குழு மூன்று நிமிடத்திற்கும் அதிகமான டிரெய்லரை, படத்தின் வெளியீட்டிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே வெளியிட்டிருப்பது, படத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 105 தியேட்டர்களில் டிரெய்லர் மாஸ் ஸ்கிரீனிங்ஸ் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆரவாரம், விசில் முழக்கங்களுடன் திரையரங்குகளை திருவிழாவாக மாற்றினர். அதேசமயம், பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் People Media Factory’ன் டிஜிட்டல் தளங்களிலும் டிரெய்லர் வெளியிடப்பட்டது, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது.
படம் குறித்து இயக்குநர் மாருதி கூறியதாவது:
“தி ராஜா சாப் மூலம் பெரும் உலகம், உணர்ச்சி, எண்டர்டெய்ன்மென்ட் என அனைத்தையும் ஒருங்கிணைக்கவேண்டுமென விரும்பினோம். டிரெய்லர் என்பது அந்த அளவின் ஒரு சிறு முன்னோட்டமே. பிரபாஸ் அவர்கள் தனது திரை ஆளுமையாலும், தனித்துவ நடிப்புத் திறமையாலும் வேடத்தை சிறப்பாகக் கொண்டுசென்றுள்ளார். சமீபத்தில் முடிந்த இன்ட்ரோ பாடல் எனக்குப் பெரும் அனுபவமாக இருந்தது – அதை நீங்கள் டார்லிங் ரெபெல் ஸ்டாருக்கான அன்பாகக் கருதினாலும், டைட்டில் பாடலாக கருதினாலும் அது எங்கள் இதயத்திலிருந்து உருவாகி வந்தது.”
தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத் (People Media Factory) கூறியதாவது..,
“இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர் செட் உருவாக்கியதிலிருந்து, ரெபல் ஸ்டார் பிரபாஸை முன்னணியில் வைத்து சக்திவாய்ந்த நடிகர் பட்டாளத்தை அமைத்தது வரை, எங்கள் குறிக்கோள் மறக்க முடியாத பான்-இந்திய அனுபவத்தை தர வேண்டும் என்பதே. டிரெய்லருக்கான ரசிகர்களின் பெரும் வரவேற்பு, எங்கள் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது கொண்டாட்டத்தின் தொடக்கம் மட்டுமே.”
பிரபாஸ் உடன் சஞ்சய் தத், பூமன் இரானி, சரினா வாஹாப், மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள இந்த படம், சக்திவாய்ந்த நடிப்புத் திறமைகளோடும் அமானுஷ்ய உலகின் களத்தோடும் திரைக்கு வருகிறது. பீப்பிள் மீடியா ஃபேக்டரி People Media Factory நிறுவனத்தின் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்துள்ள இப்படம், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. தமன் எஸ் இசையமைத்து, பிரம்மாண்ட காட்சிகளுடன், ஹாரர், ஃபாண்டஸி, நகைச்சுவை, உணர்ச்சி என அனைத்தையும் இணைக்கும் இந்தப் படம், ரசிகர்கள் ஆராதிக்கும் பிரபாஸின் தனித்துவமான திரை ஆளுமையை அசத்தலாக வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.
VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடிக்க 'ஹெய் லெசோ' திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது!
சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் தன் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கும் சுதீர் ஆனந்த் (சுடிகாளி சுதீர்) தனது புதிய படத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரசன்னா குமார் கோட்டா ( Prasanna Kumar Kota) இயக்குநராக அறிமுகமாகும் , சிவா சேர்ரி – ரவிகிரண் ஆகியோர் வஜ்ர வராஹி சினிமாஸ் (Vajra Varahi Cinema) சார்பில் தங்கள் முதல் தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்கள். இது சுதீர் ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் ஐந்தாவது படமாகும். “கோர்ட்” படத்தில் வில்லனாக, தனது அழுத்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த சிவாஜி, இப்புதிய படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
“ஹெய் வெசோ” எனும் தலைப்பு, விவசாயிகளிடையே பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நாட்டுப்புறச் சொல் என்பதால், படத்திற்கு இயற்கையான மண் மணத்தைக் கொடுக்கிறது. டைட்டில் டிசைன் வெகு அற்புதமாக கப்பலின் வடிவில், அதில் பெண்ணின் கால் வடிவில் ‘S’ எழுத்தாக அமைந்திருப்பது சிறப்பு. ஆயுதம் ஏந்திய மர்ம மனித உருவமும் அதில் காணப்படுகிறது.
டைட்டில் போஸ்டரில் புராணத்தன்மையும் கிராமிய வட்டார சுவையும் கலந்திருக்கிறது. பொற்காலணியும் விரலணியும் அணிந்த ஒரு தெய்வீக பாதம் பெரிய பச்சை இலையில் பதித்துக் கொண்டிருக்கும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. அந்த இலையில் சடங்கினை குறிக்கும் வகையில் சமைத்த சாதம், ஆடு-கோழி தலைகள், பூக்கள், குங்குமம் வைக்கப்பட்டுள்ளது. இரத்தம் சொட்டும் வாள், கதையின் தீவிரத்தன்மையையும், தெய்வீக சக்தியும் இருப்பதை வலியுறுத்துகிறது.
படம் இன்று பிரமாண்ட விழாவுடன் கோலாகலமாக தொடங்கப்பட்டது. ஹீரோ நிகில் டைட்டிலை வெளியிட்டார். பன்னி வாசு (Bunny Vasu) திரைக்கதைப் பிரதியை வழங்கினார். இயக்குநர்கள் வசிஷ்டா (Vassishta) , சந்தூ மொண்டேட்டி (, Chandoo Mondeti) , மெஹர் ரமேஷ் ( Meher Ramesh )கேமரா ஸ்விட்ச் ஆன் செய்தனர். VV வினாயக் முகூர்த்தக் காட்சிக்கு க்ளாப் அடித்தார். இயக்குநர் பிரசன்னா குமார் முதல் காட்சிக்கு “ஆக்சன்” கூறினார்.
நடாஷா சிங் (Natasha Singh) , நக்ஷா சரண் (Naksha Saran) ஆகியோர் ஹீரோயின்களாகவும், பிரபல கன்னட நடிகை அக்ஷரா கவுதா (Akshara Gowda) முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர்.
இளம் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழு இந்த படத்தில் பணியாற்றுகிறது. அனுதீப் தேவ் (Anudeep Dev) இசையமைக்க, சுஜாதா சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். சோட்டா K பிரசாத் (Chota K Prasad) எடிட்டிங், பிரஹ்மா கடலி ( Brahma Kadali )ஆர்ட் டைரக்சன், சிந்தா ஸ்ரீனிவாஸ் எழுத்து ஆகிய பணிகளை மேற்கொள்கிறார்கள்.
“ஹெய் வெசோ” படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ளது.
'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!
இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் தி பாரடைஸ், ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களின் ஆவலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ‘ஜடால்’ வேடத்தில் நானியின் லுக் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதேலா படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மிகுந்த நுணுக்கத்துடன் வடிவமைத்து வருகிறார், இதுவரை அவர் தந்து வரும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களைப் பெரிய அளவில் உற்சாகப்படுத்தி வருகிறது.
இன்று, "தி பாரடைஸ்" படக்குழு, சினிமா வரலாற்றில் தனித்துவமான இடம் பிடித்த மூத்த நட்சத்திரம் மோகன் பாபுவை ‘ஷிகன்ஜா மாலிக்’ என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்குத் திரும்பும் மோகன் பாபுவின் இந்த வேடம், அவர் பழைய "வின்டேஜ்" அழகை மீண்டும் உயிர்ப்பிக்கும்விதமாக அமைந்துள்ளது. கதாபாத்திரம் குறித்து இயக்குநர் சொன்னவுடன் மோகன் பாபு பெரும் உற்சாகத்துடன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அவர் நடித்துள்ள கதாப்பாத்திரத்தின் புதிய லுக், அவரது செல்லப்பெயரான "டைலாக் கிங்" க்கு ஏற்ப தத்ரூபமாக உள்ளது.
அழுத்தமான, சக்திமிகுந்த மற்றும் ஸ்டைலான இந்த வேடம், மோகன் பாபுவின் தனித்துவமான வசனங்களையும், தனித்துவமான நடிப்புத்திறமையையும் வெளிப்படுத்தவிருக்கிறது. இந்தக் கதாபாத்திரம் படத்தின் முக்கிய ஈர்ப்பாக மாறி, ரசிகர்களுக்கு ஒரு புதிய அவதாரத்தைத் தரப்போகிறது.
சுதாகர் செருகுரி தயாரிப்பில், எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். "தி பாரடைஸ்" படம் 2026 மார்ச் 26ஆம் தேதி உலகளவில் 8 மொழிகளில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம், மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகிறது. இந்திய சினிமாவை உலகளவில் கொண்டாடவிருக்கும் இந்த "பான்-வேர்ல்ட்" பிரம்மாண்ட படத்திற்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!
2டி என்டர்டைன்மெண்ட் சார்பில், சூர்யா ஜோதிகா தயாரிக்க, பாலிவுட் லைட்வுமன்களை மையமாக கொண்டு உருவாயிருக்கும் டாக்கு டிராமா குறும்படம் “லீடிங் லைட்” #LeadingLight. சூர்யா ஜோதிகாவின் மகள் தியா சூர்யா இப்படம் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ளார்.
திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து ஒளி தரும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட் உலகில் பணிபுரியும் அப்பெண்களின் அனுபவங்களை விவரிக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
உலகம் முழுக்க பலத்த பாராட்டுக்களை குவித்து வரும் இப்படம் oscar Qualifying Run க்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் Regency Theatre-இல் திரையிடப்படுகிறது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை தினமும் மதியம் 12:00 மணி காட்சியாக இப்படம் திரையிடப்படுகிறது.
அறிமுக இயக்கத்திலேயே, ஆஸ்கர் வரை செல்லும் இத்தகைய பெருமையை பெற்றிருக்கும் இயக்குநர் தியா சூர்யாவுக்கு, பல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது புதிய தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 10 முதல் பிரீமியர் ஆகும் இந்த சீரிஸ், அதன் அறிவிப்பிலிருந்தே பெரும் ஆர்வத்தை உருவாக்கிய நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இருன்மை நிறைந்த, உணர்ச்சிப்பூர்வமான மற்றும் திகில் நிறைந்த கதையம்சத்தில் பரபர திரில்லராக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
வேடுவன் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் கண்ணா ரவி நடித்துள்ளார். மேலும் சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், ரம்யா ராமகிருஷ்ணா, ரேகா நாயர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பவன் இயக்கியுள்ள இந்த சீரிஸ், ரைஸ் ஈஸ்ட் நிறுவனத்தின் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இசை – விபின் பாஸ்கர்.
கதையில் சூரஜ் (கண்ணா ரவி), முன்னேற போராடும் நடிகராக வாழ்ந்து வரும் போது, “என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அருண்” என்ற போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. தனது கரியரை மீண்டும் உயிர்ப்பிக்க வந்த இந்த வாய்ப்பு, சூரஜை அருணின் ரகசியங்கள், சவாலான பணி, கடினமான முடிவுகள் ஆகியவற்றின் உலகில் ஆழமாக இழுத்துச் செல்கிறது. சினிமா கதையும் நிஜ வாழ்க்கையும் கலக்கும் நிலையில், கடமை, காதல், நெறிமுறைகள் மூன்றும் மோதும் பரபரப்பான திரில்லராக இந்த கதை நகர்கிறது.
நடிகர் கண்ணா ரவி கூறுகையில்:
“வேடுவன் எனக்கு மிக நெருக்கமான படைப்பு இது ரீல்-ரியல் கலந்த ஒரு வித்தியாசமான வாழ்க்கைப் பயணம். சூரஜாக நடித்தது மிக மகிழ்ச்சியான அனுபவம், ஒரு நடிகனின் போராட்ட வாழ்க்கையை மட்டும் அல்லாமல், அருணின் சவால்கள், முடிவுகள், தியாகங்களை வாழ்ந்தது போன்ற உணர்வைத் தந்தது. கடமைக்கும், காதலுக்கும், மக்கள் எவ்வளவு தூரம் செல்வார்கள் என்பதை சொல்லும் கதை இது. ஒரு நடிகனாக, இது எனக்கு வித்தியாசமான சவாலை அளித்தது.”
ZEE5 தமிழ் & மலையாளம் பிஸினஸ் ஹெட்அான லாய்ட் C சேவியர் தெரிவித்ததாவது..,
“வேடுவன் மூலம், வேர்களோடு பிணைந்த, துணிச்சலான, உணர்ச்சிப்பூர்வமான கதைகளை எங்கள் தமிழ் பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்வதில் மகிழ்ச்சியடைகிறோம். வலுவான நடிகர்கள், உணர்ச்சி மிக்க கதை, அருமையான விஷுவல் மூன்றும் இணைந்திருப்பதால், இது சாதாரண டிராமாவாக இல்லாமல், ரசிகர்களுக்கு பிரத்தியேகமான அனுபவத்தை தரும். மனித உணர்வுகளின் உறுதியைப் பற்றிய சக்திவாய்ந்த கதையாக, பார்வையாளர்களுக்கு இனிமையான அனுபவம் தரும் என்று நம்புகிறோம்.”
இயக்குநர் பவன் கூறுகையில்..,
“வேடுவன் எனது கண்ணோட்டத்தில், காதல், கடமை, துரோகம் ஆகியவை மனித உணர்வுகளின் ஆழத்தைக் கேள்விக்குள்ளாக்கும் கதையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆழமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு பெரிய விலை கொடுக்கிறார்கள். பொழுதுபோக்கைத் தாண்டி சிந்திக்க வைக்கும், பார்வையாளர்கள் தங்களும் இத்தகைய சூழலில் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுப்பும் கதையாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இப்படியான கதைக்கு துணிச்சலாக ஆதரவளித்த ZEE5-க்கு நன்றி. பார்வையாளர்கள் ‘வேடுவன்’ உலகத்தை அனுபவிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
காதல், துரோகம், மீட்பு நிறைந்த பயணம் அக்டோபர் 10 முதல், உங்கள் ZEE5-இல்!
இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!
நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது சகோதரி பூஜா சரத்குமார் இணைந்து தோசா டைரீஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் தங்கள் முதலாவது தயாரிப்பை தொடங்கியிருப்பதை, மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.
இந்த சிறப்பான துவக்கத்தில்,“சரஸ்வதி” என்ற படத்தின் மூலம், வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபத்திரத்தில் நடிக்க பிரபல நட்சத்திரங்கள் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவின் சந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.
முன்னனி இசையமைப்பாளர் தமன் S இசையமைக்க, A.M.எட்வின் சகாய் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு - வெங்கட் ராஜன், கலை இயக்கம் - சுதீர் மச்சர்லா
திரையுலகில் தங்கள் புதிய பயணத்தை தொடங்கும் இந்த முயற்சி, சகோதரிகள் இருவருக்கும் மறக்க முடியாத தொடக்கமாக அமைந்துள்ளது.
காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!
இந்திய தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு கவர், பட அஞ்சல் அட்டைகள் & கேன்சலேஷன் ஸ்டாம்ப் வெளியிட்டு கௌரவித்துள்ளன!!
இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம், ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், ஒரு சிறப்பு கவர், இரண்டு பட அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்பை வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற காந்தாரா திரைப்படத்தில் வலிமையாக வெளிப்பட்ட புனிதமான பூதகோலா மரபை, இந்த வெளியீடு சிறப்பித்துள்ளது.
செப்டம்பர் 22-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகத்தினரும் கர்நாடக அஞ்சல் வட்டார பிரதிநிதிகளும் பங்கேற்றனர். காந்தாரா படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி, கர்நாடக அஞ்சல் வட்டாரத்தின் இயக்குநர் (முகாம்) ஸ்ரீ சந்தேஷ் மகாதேவப்பா, பெங்களூரு GPO முதன்மை அஞ்சல் மாஸ்டர் ஸ்ரீ H.M. மஞ்சேஷா, ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிராகந்தூர் ஆகியோர் இணைந்து இந்த சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டனர்.
பூதகோலா காட்சியுடன் வடிவமைக்கப்பட்ட கேன்சலேஷன் ஸ்டாம்ப், சேகரிப்பதற்குரிய அரிய வெளியீடாகவும், கர்நாடகாவின் வாழும் மரபுகளை பிரதிபலிக்கும் பெருமையான நினைவுச் சின்னமாகவும் அமைந்துள்ளது.
இந்நிகழ்வில் பேசிய ரிஷப் ஷெட்டி, “காந்தாரா எங்கள் மரபின் வேர்களையும் வழிபாடுகளையும் கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்திய தபால் துறை இந்த பயணத்தை சிறப்பு கவர் மற்றும் அஞ்சல் அட்டைகள் மூலம் கௌரப்படுத்தியுள்ளது என்பது பெருமை. இது படத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, நம் மண்ணின் கலாச்சாரம் மற்றும் மக்களுக்கான அங்கீகாரமும் ஆகும்” என்றார்.
சிறப்பு அங்கீகாரமாக, “காயகவே கைலாச” என்ற சொற்றொடரை ரிஷப் ஷெட்டி ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி கையெழுத்திட்டார். உழைப்பின் புனிதத்தையும் பக்தியையும் பிரதிபலிக்கும் இந்த நிலையான தத்துவம் காந்தாரா படத்தின் கதையிலும் பிரதிபலிக்கிறது.
தயாரிப்பாளர் விஜய் கிராகந்தூர், “இந்திய தபால் துறையில் இந்த அங்கீகாரம் படத்திற்கும் மட்டுமல்ல, கர்நாடகாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்திற்கும் ஒரு பெரிய கௌரவம். இது எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையான தருணம். இப்படியான முயற்சிகள் எங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல உதவும். காந்தாரா எங்கள் வேர்களை இவ்வளவு பெருமைக்குரிய மேடையில் வெளிப்படுத்தும் ஊடகமாக மாறியது எங்களை மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது” என்றார்.
சிறப்பு கவர், அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்ப் ஆகியவை, மனிதன், இயற்கை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் ஆழ்ந்த ஆன்மீக இணைப்பை வெளிப்படுத்திய காந்தாரா படத்திற்கான ஒரு அஞ்சலியாகும். இந்த முயற்சியின் மூலம், இந்தியா தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ், கர்நாடகாவின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும், ஒற்றுமை, நம்பிக்கை, கலாச்சார மரியாதை போன்ற காலத்தால் அழியாத மதிப்புகளை மக்களிடம் நினைவூட்டவும் முன்னெடுத்து சிறப்பித்துள்ளன.
இந்த வெளியீடு, இந்தியா தபால் துறை பாரம்பரியத்தையும், காந்தாரா படத்தின் சினிமா பாரம்பரியத்தையும் இணைக்கும் பெருமையான தருணமாகும். கலாச்சாரத்தையும் சமூகத்தையும் இணைக்கும் காலத்தால் அழிக்க முடியாத நம் வேர்களை கௌரவிக்கும் அடையாள முயற்சியாக இது திகழ்கிறது.
முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், தனது 2023 வெளியீடான “ஜவான்” திரைப்படத்திற்காக, நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான தேசிய விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை உலகில் சாதனை படைத்துவரும் ஷாரூக், தனது முதலாவது தேசிய விருதை இப்போது வென்றிருப்பது, அவரது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, மிகப்பெரும் கௌரமாக அமைந்துள்ளது.
“ஜவான்” படத்தில் தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 71வது தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஷாரூக்கான், ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். ஆக்சன் காட்சிகளிலிருந்து உணர்ச்சிபூர்வமான நடிப்புவரை, பல்வேறு விதமான வேடங்களில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்திய ஷாரூக், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் மனதையும் கவர்ந்திழுத்துள்ளார். இவ்விருது அவரது திரைப்பயணத்திற்கு மிக உரிய பெருமையாகும்.
சமீபத்தில், தனது மகன் ஆர்யன் கானின் இயக்கிய அறிமுகப்படைப்பு The Ba***ds of Bollywood சீரிஸில், சிறப்பு தோற்றத்தில் நடித்தார் ஷாரூக்கான். அடுத்ததாக, சித்தார்த் ஆனந்த் இயக்கும் King திரைப்படத்தில் மகள் சுஹானாகானுடன் இணைந்து நடிக்க உள்ளார். 2026-இல் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், ஷாரூக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணையும் காட்சிகளும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தேசியவிருது பெற்றதை, ரசிகர்கள் மிக உற்சாகமான கொண்டாடி வருகின்றனர்.
- உலக செய்திகள்
- |
- சினிமா