சற்று முன்
சினிமா செய்திகள்
திரைப் படைப்பாளிகளின் பாராட்டுக்களைக் குவித்துள்ள 'மனிதர்கள்' மே 30 முதல் திரையரங்குகளில்!
Updated on : 24 May 2025

Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மனிதர்கள்” திரைப்படம், வரும் மே 30 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர், திரை ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, திரைப் படைப்பாளிகள் மத்தியில் பெரும் பாராட்டுக்களைக் குவித்துள்ளது.
இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெகு சுவாரஸ்யமான டிரெய்லர், படத்திற்காக காத்திருக்கிறேன் எனக் கூறியதோடு, தனது சமூக வலைத்தள பக்கத்திலும் படத்தின் டிரெய்லரைப் பகிர்ந்துள்ளார்.
புகழ் மிகு ஒளிப்பதிவாளர் பி சி ஶ்ரீராம் இப்படத்தின் டிரெய்லரால் ஈர்க்கப்பட்டு, உடனடியாக படக்குழுவினரை அழைத்துப் பாராட்டி, அவர்களோடு உரையாடியுள்ளார். அந்நிகழ்வில்.. முதல் சில நொடிகளிலேயே இந்தப்படம் என்னை ஈர்த்துவிட்டது. காட்சியும் களமும் வெகு சுவாரஸ்யமாக உள்ளது. படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள், எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு இரவில் ஒன்று சேர்ந்து மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்கும் ஏற்படும் ஒரு சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சனையாக வெடிக்கிறது என்பதை, பரபரப்பான திரைக்கதையில், வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில், இப்படத்தை உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர் இராம் இந்திரா.
இப்படத்தில் அறிமுக நடிகர்கள் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெளியீட்டுக்கு முன்னதாகவே மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் மே 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகீறது.
சமீபத்திய செய்திகள்
பேயை செல்லப்பிராணியாக வளர்க்கலாம் என்று 'ஜின் தி பெட்' படம் சொல்கிறது - ஆர். கே. செல்வமணி
'பிக் பாஸ் சீசன் 3' வெற்றியாளரும், 'வேலன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஜின் - தி பெட்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜின் -தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, 'நிழல்கள்' ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை தீபக் கவனிக்க கலை இயக்கத்தை வி. எஸ். தினேஷ்குமார் மேற்கொண்டிருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை டி ஆர் பாலா மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்குகின்றன.
வரும் 30ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ' ஜின் -தி பெட்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் படக்குழுவினருடன் நீதியரசர் எஸ் கே கிருஷ்ணன், ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரி பன்னீர்செல்வம் ஐபிஎஸ், ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, தயாரிப்பாளர் கேயார், ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் சங்க தலைவர் ஆர். வி. உதயகுமார் , செயலாளர் பேரரசு , துணைத் தலைவர் ஆர் . அரவிந்தராஜ், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வருகை தந்த அனைவரையும் தமிழ்நாடு திரைப்பட கல்லூரியின் முதல்வரும் இயக்குநருமான திருமலை வேந்தன் வரவேற்றார்.
ஃபெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி பேசுகையில், ''இப்படத்தின் இயக்குநரின் தந்தையான திருமலை வேந்தன் திரைப்படக் கல்லூரியில் எனக்கு ஜூனியர். அவருடன் எனக்கு 40 ஆண்டுகால நட்பு இருக்கிறது. அவருடைய வரவேற்புரையும் , வாழ்த்துரையும் சுருக்கமாகவும் , சிறப்பாகவும் இருந்தன.
இயக்குநரின் தாயாரான ராஜேஸ்வரி அம்மாவை பார்த்தால் பலருக்கு பயம். உண்மையில் அவர்தான் புரட்சிகரமான போராளி. அவருடன் பழகத்தொடங்கினால் ஒன்று எதிரியாகி விடுவார்கள், இல்லையென்றால் நட்பாகி விடுவார்கள். ஆனால் அவர் ஒருபோதும் யாருக்கும் துரோகியானதில்லை. இப்படத்தின் பாடல்களையும் முன்னோட்டத்தையும் பார்த்தபோது தமிழ் திரையுலகுக்கு அற்புதமான திறமை மிக்க குழு கிடைத்திருப்பதாகவே நினைக்கிறேன்.
நாங்கள் எல்லாம் நாயகியை தேர்வு செய்யும்போது அந்தப் பெண்ணின் புன்னகையையும், கண்களையும் மட்டும் தான் கவனிப்போம். அந்த வகையில் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் பவ்யாவிடம் அழகான புன்னகை இருக்கிறது. பார்ப்பதற்கு சமந்தா போல் இருக்கிறார். அவருக்கு தென்னிந்திய திரைப்படத்துறையில் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.
வளர்ந்த நட்சத்திரங்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். இயக்குநரிடமும், எழுத்தாளர்களிடமும் நீங்களே நேரடியாக கதையை கேளுங்கள். நடிகர்களின் மேலாளர்களும், உதவியாளர்களும் கதை கேட்க தொடங்கியதால் தான் சினிமா சீரழிகிறது. இதனால் திரைத்துறையில் ஆரோக்கியமான நட்பு ஏற்படுவதில்லை. எப்போது ஒரு நாயகனுக்கும்.. நாயகிக்கும் இயக்குநருக்கும் இடையே ஒரு புரிதலும், நட்பும் இல்லையோ, அப்போதே அந்தப் படம் தோல்வியை தழுவுகிறது. இதை என் படத்தினை ஆய்வு செய்து தெரிந்து கொண்டிருக்கிறேன்.
தயாரிப்பாளர் கேயார் ஒரு ஜீனியஸ். அவர் நினைத்தால் தற்போது திரைத்துறையில் நடைபெற்று வரும் பிரச்சனைக்கு தீர்வை சொல்ல முடியும். அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. இன்றைய தேதியில் ஒரு நாளைக்கு திரையரங்குகளில் ஏழு முதல் எட்டு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன. இதன் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு நாளொன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு அறுபது கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இவை அனைத்தும் படத்தின் தயாரிப்பாளர்கள் மூலம் தான் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் இந்த வருமானம் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கிறதா என்றால் இல்லை. படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு மட்டும்தான் நஷ்டம் ஏற்படுகிறது.
என்னுடைய தயாரிப்பாளர் நண்பர் ஒருத்தர் 'மத கஜ ராஜா' படம் வெளியாகி ஐந்து மாதங்கள் ஆகிவிட்டான, இன்னும் அதற்கான வசூல் முழுமையாக வந்து சேரவில்லை என குறிப்பிட்டார். இதுதான் தயாரிப்பாளர்களின் இன்றைய நிலை. அதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும். திரையுலகத்தில் தொழிலாளர்கள் தான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிப்பதில்லை. சில தயாரிப்பாளர்கள் மட்டுமே 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் வெற்றிகரமாக செயல்படுகிறார்கள்.
எங்களுடைய பெப்சி பொதுக்குழுவில் தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் தொழிலாளர்களாகிய நாம் நன்றாக இருக்க முடியும் என்று சொல்லி இருக்கிறேன். தற்போதுள்ள தயாரிப்பாளர்களில் 80 சதவீதத்தினர் தொழிலாளர்களை சிறப்பான மரியாதையுடன் நடத்துகிறார்கள். அதனால் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நாங்களும் பிரார்த்திக்கிறோம். தயாரிப்பாளர் கேயார் ஒரு ஃபார்முலாவை வைத்திருக்கிறார். அதனைப் பயன்படுத்தி தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு அவர் தீர்வு காண வேண்டும். நாங்கள் தவறு செய்திருந்தாலும் அதனை அவர் சுட்டிக் காட்டலாம். நாங்கள் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம்.
படத்தின் இயக்குநர் பாலா எதிர்காலத்தில் சிறந்த இயக்குநராக வருவார்.
பெற்றெடுத்த குழந்தையை கையில் ஏந்திக் கொள்ளும் போது கிடைக்கும் உணர்வை போல் இசை இருக்க வேண்டும். அப்படித்தான் கதையும் இருக்க வேண்டும். இப்போதுள்ள ஹீரோக்களுக்கு கதையை சொல்ல வேண்டும் என்றால் மெயிலில் அனுப்புங்கள் என்கிறார்கள். இது குழந்தையை மெயிலில் அனுப்புவது போல் இருக்கிறது. கதையை இயக்குநர் விவரிக்கும் போது தான் எதிரில் இருப்பவர்கள் கதையில் எந்த தருணத்தை ரசிக்கிறார், எதனை ரசிக்கவில்லை என்பதை இயக்குநரால் தெரிந்து கொள்ள முடியும். கதையை மெயிலில் அனுப்ப சொன்னால் அது கடினமானது. முதலில் கதையை ஆங்கிலத்தில் எப்படி மொழியாக்கம் செய்வது என்று யோசிக்க வேண்டும். இதுவரை பேய் படம் என்றால் ஒரு பயம் இருந்தது. ஆனால் அந்த பேயை ஒரு செல்லப்பிராணியாக மாற்றி அதனை வளர்க்கலாம் என்று இந்த படம் சொல்கிறது. அதனால் இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.
ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசுகையில், ''என்னுடைய பெற்றோர்கள் முதலில் சென்னையில் தான் வணிகம் செய்தார்கள். அதில் நஷ்டம் ஏற்பட்டதும் சொந்த ஊருக்கு திரும்பி விட்டார்கள். நான் முதன் முதலாக 19 வயதில் சென்னைக்கு வந்தபோது, எனக்கு அறையை கொடுத்து, உணவளித்து, தினசரி ஊதியமும் கொடுத்து, அவருடைய இயக்கத்தில் வேலை செய்வதற்கான வாய்ப்பு கொடுத்து ஆதரித்தவர் டி ஆர் பாலா. என் பின்னணி தெரியாமல் என்னிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று கண்டுபிடித்தவர் டி ஆர் பாலா. இவர் திறமையான இயக்குநர். இவர் இதற்கு முன் 'தேர்ட்டீன்' என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இவருடைய வாழ்வியலை மையப்படுத்தி 'சென்னை பிரம்மாக்கள்' என்ற ஒரு குறும்படத்தை நான் இயக்கினேன். இதன் பிறகு எங்களுடைய நட்பு இன்று வரை தொடர்கிறது. அதன் பிறகு தவிர்க்க முடியாத காரணத்தினால் ஆன்மீகத்தின் பக்கம் என்னுடைய கவனம் திரும்பியது.
படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நண்பர் டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஜின் -தி பெட்' திரைப்படத்திற்கு உங்களது ஆதரவை வழங்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
இயக்குநர் ஆர். அரவிந்தராஜ் பேசுகையில், ''16 குட்டி சாத்தான்களுக்கு தலைவர் ஒரு பூதம். 16 பூதத்திற்கு தலைவர் ஒரு பேய். 16 பேய்களுக்கு தலைவர் ஒரு ஜின். என நான் வாசித்திருக்கிறேன். இந்த 'ஜின்' திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது, எனக்கு 'பட்டணத்தில் பூதம்' திரைப்படம் நினைவுக்கு வந்தது. எனவே இந்தத் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும். பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள திரைப்படங்கள் வந்து நாளாகி விட்டது. அதுவும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஒரு திரைப்படம் வருகிறது என்றால் அது வரவேற்கக் கூடியது. இன்றைக்கு குழந்தைகள் பேய் படங்களை பார்த்து பேயை ரசிக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
தயாரிப்பாளர் கேயார் பேசுகையில், ''ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு முக்கியம். ஒரு தலைப்பு வைத்தால் அந்தத் தலைப்பு அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும். தற்போது ஓ டி டியில் அனைத்து மொழியினரும் படத்தை பார்ப்பதால் அவர்களுக்கும் பிடிக்கும் வகையில் படத்தை தலைப்பை வைக்க வேண்டியதிருக்கிறது. இதையெல்லாம் நன்றாக சிந்தித்து, இந்தப் படத்திற்கு இயக்குநர் டி ஆர் பாலா 'ஜின்' என்று பெயர் வைத்ததை பாராட்டுகிறேன்.
இப்படத்தின் முன்னோட்டத்தை அண்மையில் பார்த்தேன். பார்த்தவுடன் அதன் தரம் புரிந்தது. ஹீரோ-ஹீரோயின் காம்பினேஷன் சூப்பராக இருந்தது. ஜின் என்பது புது கான்செப்ட். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 'ஈ டி' என்றொரு படம் வந்தது. அதை அடிப்படையாக வைத்து தான் 'மை டியர் குட்டிச்சாத்தான்' உருவானது. அந்த வகையில் குழந்தைகளை கவரும் வகையில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் 'ஜின்'. இப்படத்தின் ஆடியோ உரிமை, டிஜிட்டல் உரிமை என அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு விட்டது என கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெற்றியை பெற்றிருக்கிறது. எந்த அளவிற்கு வெற்றியை பெறுகிறது என்பதை 30ம் தேதி முதல் திரையரங்குகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் படத்தின் இயக்குநர் டி ஆர் பாலா லோகேஷ் கனகராஜ், நெல்சன் போல் முன்னணி நட்சத்திர இயக்குநராக வருவார். அந்த அளவிற்கு திறமைசாலியாக இருக்கிறார். அது படத்தின் முன்னோட்டத்திலேயே தெரிந்து விட்டது,'' என்றார்.
இணை தயாரிப்பாளர் ராகவேந்திரா பேசுகையில், '' எனக்கு சினிமா மீது ஆசை இருக்கிறது. படத்தை தயாரிக்கலாம் என்று நினைத்தபோது இப்படத்தின் கதை கிடைத்தது. படத்தின் கதை பிடித்து போனதால் இணை தயாரிப்பாளராக இந்த குழுவுடன் இணைந்தேன். இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருப்பது ஒரு கதை. ஆனால் படத்தில் மற்றொரு கதையும் உண்டு. அது சிறப்பானதாக இருக்கும். இது என்னுடைய முதல் படம். இவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இப்படத்தின் மூலம் இயக்குநருக்கு சிறப்பான எதிர்காலம் கிடைக்க வேண்டும், கிடைக்கும் என நம்புகிறேன். இந்த திரைப்படத்தை திரையரங்கத்தில் பத்துக்கு மேற்பட்ட முறை பாருங்கள். பலருக்கு பகிருங்கள், ஆதரவிற்கு நன்றி,'' என்றார்
தயாரிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி வேந்தன் பேசுகையில், ''ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் மகன் என்னிடம் 'ஜின்' என்றொரு தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என கேட்டார். அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி ஜின் என்ற தலைப்பை பதிவு செய்தேன். அதன் பிறகு இந்த ஜின் என் குடும்பத்தை சின்னாபின்னமாக்கிவிட்டது. என் மகன் இந்த டைட்டிலையும், கதையையும் வேறொரு நிறுவனத்திற்கு சொல்கிறார், நன்றாக இருக்கிறது என சொன்னார்கள் ஆனால் மேற்கொண்டு எந்த பணியும் நடைபெறவில்லை. அதன் பிறகு முன்னணி பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர் நடிப்பதற்காக இந்த டைட்டிலும் கதையையும் சொன்னார். கதை விவாதம் எல்லாம் நடந்தது. ஆனால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. இந்த தருணத்தில் இப்படத்தின் டைட்டில் வேறு ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது. அதன் பிறகு அந்த டைட்டிலை அந்த நிறுவனத்திடம் கேட்டோம். அவர்கள் தர மறுத்து விட்டார்கள். அதன் பிறகு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து 'ஜின் தி பெட்' என டைட்டில் வைத்தோம். இதன் பிறகு எங்கள் குடும்பம் தொடர்ந்து உயர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கடவுள் இருக்கிறார் என்று ஒரு பிரிவினர் சொல்கிறார்கள். கடவுள் இல்லை என்று ஒரு பிரிவினர் சொல்கிறார்கள். ஆனால் ஜின் நிச்சயமாக இருக்கிறது. 'ஜின்- தி பெட்' என்று பெயர் வைத்த பிறகுதான் எங்களுக்கு நல்லது நடந்திருக்கிறது. இந்த ஜின்னை மலேசியாவில் வளர்க்கிறார்கள்.. அதன் பின்னணியில் உருவானது தான் இப்படத்தின் கதை," என்றார்.
நடிகை பவ்யா தரிகா பேசுகையில், ''2022 நவம்பர் 20ம் தேதியன்று நான் என்னுடைய தோழியின் வீட்டில் இருந்தேன். அப்போதுதான் என்னுடைய தோழிகள் 'ஜின் 'என்ற ஒரு விஷயத்தை பற்றி சொன்னார்கள். அதைப்பற்றி அப்போது நான் அவ்வளவாக நம்பவில்லை. ஒரு வார்த்தையை சொல்லி அதனை அடிக்கடி சொல் அதனுடைய எனர்ஜி கிடைக்கும் என்றார்கள். அதனையும் நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டேன். அங்கிருந்து நான் நள்ளிரவு 2.30 மணிக்கு கிளம்பினேன். அதன் பிறகு ஏதோ ஒரு விஷயத்திற்காக தோழியின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். அந்தத் தருணத்தில் என் முதுகு பின்னாடி இருந்து' பவ்யா என்ற குரல் ஒலித்தது. அதைக் கேட்டவுடன் பயம் ஏற்பட்டது.
அதன் பிறகு அடுத்த நாள் காலை என்னுடைய சமூக வலைதளத்தை பார்வையிடுகிறேன். அப்போது ஜின்ஷா என்றொரு ஃபாலோயர் நிறைய லைக்குகளை போட்டு கவனத்தைக் கவர்ந்தார். இது எனக்கு மேலும் பயத்தை ஏற்படுத்தியது இதனால் உடனடியாக கோவில், சர்ச், தர்கா, குருத்வாரா ஆகிய இடங்களுக்கு சென்று வந்தேன், மூன்று மாதங்கள் கழித்து இயல்பானேன். அதன் பிறகு என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் வருகிறது. அதன் டைட்டில் 'ஜின்'. எனக்குள் ஆச்சரியம் ஏற்பட்டது. இயக்குநர் பாலா என்னை சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சந்தித்தார். அப்போது ஜின்னை பற்றிய எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. அதனால் தானோ என்னவோ இப்படத்தில் நான் நாயகியாக நடித்திருக்கிறேன். ஜின்னுடைய தொடர்பு எனக்கும் இருக்கிறது என ந
'மெட்ராஸ் மேட்னி' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள 'மெட்ராஸ் மேட்னி' திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் லுக் மூலம் ரசிகர்களிடம் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் இப்படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மிடில் கிளாஸ் வாழ்வியலை, அதன் அழகியலை, ஒரு மாறுபட்ட தளத்தில், அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கும் இப்படம், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது.
இப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் சமுஸ்கி மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்புகளை ஜாக்கி ஏற்றிருக்கிறார். இந்த திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் எக்ஸிகியூடிவ் புரொடக்ஷன் பணிகளை மேற்கொடுள்ளது. இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
இப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
'ராமாயணா' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் பற்றிய அப்டேட்!
தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் ஆதரவுடன் தயாராகும் ' ராமாயணா ' எனும் திரைப்படம் - சமீபத்திய காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். தொழில் துறையில் சில சிறந்த திறமையாளர்கள் - உலக தரம் வாய்ந்த VFX குழு - நட்சத்திர நடிகர்கள் - பிரம்மாண்டமான மற்றும் அதிவேகமாக உருவாக்கப்படும் அரங்கங்கள் - என ' ராமாயணா ' இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திரைமொழியாகவும் மற்றும் உணர்வு பூர்வமான படைப்பாகவும், உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களான ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடித்திருந்தாலும்... அவர்கள் ஒன்றாக திரையில் தோன்றும் நேரம் குறைவு என சொல்லப்படுகிறது.
''இப்படத்தின் தயாரிப்பாளர்கள் - பெரும்பாலான காவியங்களில் ராமரும், ராவணனும் ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லை என்ற அசலான வால்மீகி உரைக்கு உண்மையாக இருப்பது என்பதை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களின் உலகங்கள் தனித்தனியாகவே உள்ளன. உச்சக்கட்ட போரில் விதி அவர்களை நேருக்கு நேர் கொண்டு வரும் வரை அவர்களின் கதைகள் இணையாகவே விரிவடைகின்றன. அசல் கதையின் படி, சீதை கடத்தப்பட்ட பின்னரே ராமர்- ராவணனின் இருப்பை பற்றி அறிந்து கொள்கிறார். மேலும் இலங்கையில் போர்க்களத்தில் மோதல் ஏற்படும் வரை இருவரும் ஒருபோதும் ஒருவரை ஒருவர் சந்திக்க மாட்டார்கள்.''
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் கதாபாத்திரங்களை தனித்தனியாக வைத்திருக்க நிதிஷ் திவாரி மற்றும் குழுவினரின் படைப்பு தேர்வு - ராமாயணத்திற்கு ஒரு விருப்பத்திற்குரிய கதை ஆழத்தை உருவாக்குகிறது. அவர்களின் தனித்தனியான பயணங்களை ஒன்று தர்மத்தையும், நல்லொழுக்கத்தையும் உள்ளடக்கியதாகவும்.... மற்றொன்று ஈகோ மற்றும் சக்தியால் இயக்கப்படுவதாகவும் ... பட்டியலிடுவதன் மூலம் இந்த திரைப்படம் - அவர்களின் இறுதி மோதலுக்கான உற்சாகத்தை அதிகரிக்கிறது. இந்த தாமதமான மோதல் அவர்களின் கதாபாத்திரத்தை சுயாதீனமாக உருவாக்க அனுமதிக்கிறது. இதனால் அவர்களின் இறுதி மோதலை இன்னும் சக்தி வாய்ந்ததாக மாற்றுகிறது. ராவணனான யாஷ், சீதாவாக நடிக்கும் சாய் பல்லவி மற்றும் அனுமனாக நடிக்கும் சன்னி தியோலுடன் திரை நேரத்தை பகிர்ந்து கொள்ளும் அதே தருணத்தில்.. ரன்பீர் கபூர் உடனான காட்சிகள் நிச்சயமற்றதாகவே உள்ளன. ரன்பீர் கபூர் தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் & வார் படத்தில் விக்கி கௌசல் மற்றும் ஆலியா பட் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் அந்த படத்திற்காக அவர் பராமரிக்கும் குறிப்பிட்ட தோற்றம் அவரது பங்களிப்பு தருணங்கள் கிடைப்பதை கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக தயாரிப்பு, தாமதங்கள், திட்டமிடல் ஆகியவற்றை மேலும் சிக்கலாக்கியுள்ளன. இதனால் இந்தக் கட்டத்தில் ராமாயணத்திற்காக அவர் தனது தோற்றங்களை மாற்றிக் கொள்வது என்பது சாத்தியமற்றது.
படத்தின் தயாரிப்பு பணிகள்- தற்போது நகரத்தில் உள்ள பிரம்மாண்டமான அரங்க வடிவமைப்புப் பணிகளாக நடந்து வருகிறது. இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்படுகிறது. முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையிலும், இரண்டாவது பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையிலும் வெளியாகிறது. ரன்பீர் கபூர் ஏற்கனவே தனது பகுதிகளை நிறைவு செய்து விட்ட நிலையில்... மே மாத தொடக்கத்தில் உஜ்ஜயினியில் உள்ள மகாமல் ஆலயத்திற்கு சென்ற பிறகு, யாஷ் தனது பகுதிகளில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
முன்னணி கதாபாத்திரங்களுக்கு இடையில் பகிரப்பட்ட திரை நேரத்தை குறைப்பதற்கான தேர்வு.. நவீன சினிமா திரை மொழியை காட்சியாக வடிவமைக்கும் போது, அசல் காவியத்தின் சாரம்சத்தை மதிக்கும் தயாரிப்பாளர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. நட்சத்திரங்கள் நிறைந்த படங்கள் - பெரும்பாலும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க , பெரிய பெயர்களுக்கு இடையிலான தொடர்புகளை கட்டாயப்படுத்தும் ஒரு காலத்தில் ...இராமாயணம் என்பது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட கதை சார்ந்த பாதையை பிரதிபலிக்கிறது. இது நம்பகத் தன்மைக்கு முன்னுரிமை அளிக்கிறது மற்றும் புராணக் கதையை ஆழமாக மறுபரிசீலனை செய்வதை உறுதி அளிக்கிறது.
ராமாயணம் சந்தேகத்திற்கு இடமின்றி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாகும். நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி ,யாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் பிரம்மாண்டம்- மெகா ஸ்டார் நடிகர்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் தெய்வீக புராண இதிகாசத்தை அற்புதமான முறையில் வழங்குவதற்கும், இதற்கு முன் எப்போதும் இல்லாத ஒரு சினிமா அதிசயத்தை உருவாக்குவதற்கும், இந்தப் படம் உறுதியளிக்கிறது.
JP.தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் 'அங்கீகாரம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் முன்னிறுத்துகிறது. இந்த திரைப்படத்தில் அறம், க/பெ ரணசிங்கம், டாக்டர், அயலான் போன்ற கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் K.J.R கதையின் நாயகனாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்து சிந்தூரி விஸ்வநாத் , விஜி வெங்கடேஷ், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு A.விஸ்வநாத், சண்டை காட்சி பீட்டர் ஹெயின், படத்தொகுப்பு ஷான் லோகேஷ், கலை இயக்கம் ராமு தங்கராஜ், ஒலி வடிவமைப்பு சம்பத் ஆழ்வார், நடனம் ஷெரீப், போன்ற முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்போடு உருவாகிவரும் அங்கீகாரம் திரைப்படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த் - அஜித்பாஸ்கர் - அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அங்கீகாரம் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மோகன்லாலின் பிறந்தநளை முன்னிட்டு கண்ணப்பா படத்தின் சிறப்பு வீடியோ கிளிம்பஸ் வெளியானது!
தொடர்ந்து 200 கோடி ரூபாய் வசூல் செய்து உச்சத்தில் இருக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், அடுத்து டைனமிக் ஸ்டார் விஷ்ணு மஞ்சு இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்திய காவியமான 'கண்ணப்பா'-வில் நடிக்கிறார். மோகன்லால் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார், கொண்டாட்டங்களுக்கு கூடுதலாக, ஜூன் 27 ஆம் தேதி உலகளவில் பிரமாண்டமாக வெளியாக உள்ள கண்ணப்பா படத்தின் சிறப்பு வீடியோ கிளிம்பஸ் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், கண்ணப்பா படத்தின் தயாரிப்பாளர்கள் மோகன்லால் ஒரு சக்திவாய்ந்த மற்றும் தீவிரமான அவதாரத்தில் இடம்பெறும் ஒரு மின்னூட்டக் காட்சியை வெளியிட்டனர். அவர் கடுமையான உறுதியுடன் நடப்பதை, கவனத்தை ஈர்க்கும் ஒரு காந்தத் திரை இருப்பை வெளிப்படுத்துவதை இந்த குறுகிய வீடியோ காட்டுகிறது. ஒரு அற்புதமான பின்னணி இசையால் மெருகேற்றப்பட்ட இந்த காட்சி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
தெய்வீக சக்தியுடன் தொடர்புடைய ஒரு புகழ்பெற்ற நபரான கிராதாவின் வலிமையான பாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார். மோகன்லால் நடிகர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது படத்தின் அளவையும் பிரமாண்டத்தையும் உயர்த்துகிறது, இது அனைத்து மொழிகளிலும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நடிப்பை உறுதியளிக்கிறது.
படத்தை விளம்பரப்படுத்துவதில் விஷ்ணு மஞ்சு மற்றும் கண்ணப்பா குழுவினர் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். விளம்பர பிரச்சாரம் தீவிரமாகவும், உத்தி ரீதியாகவும் உள்ளது, ஒவ்வொரு புதுப்பிப்பும் சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதாபாத்திர சுவரொட்டிகளை வெளியிடுவது முதல் டீஸர்கள் வரை, விளம்பர இயக்கம் சமீப காலங்களில் இதற்கு முன்பு காணப்பட்டதைப் போலல்லாமல் உள்ளது.
பிரமாண்டமான வெளியீட்டிற்கு முன்னதாக ரசிகர்கள் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம்.
'விருஷபா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து கொண்ட மோகன்லால்
'இந்திய சினிமாவின் லாலேட்டன் ' மோகன்லாலின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் அவருடைய ரசிகர்களுக்கு பரிசளித்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் எதிர்பார்த்த பிரம்மாண்ட படைப்பான 'விருஷபா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
டிராகன் அளவிலான வடிவங்களுடன் சிக்கலானதாகவும், விரிவானதாகவும் தங்க பழுப்பு நிற கவசத்தை அணிந்த மோகன்லால், ஒரு புராண போர் வீரன் - ராஜாவாக கம்பீரமாக நிற்கிறார். அவரது அலைபாயும் கூந்தல்- அடர்த்தியான தாடி -அற்புதமான வெள்ளை வண்ண திலகம் - அவரது கட்டளையிடும் தோற்றத்திற்கு காலத்தால் அழியாத ஆன்மீக ஈர்ப்பை வழங்குகிறது. ஒரு பெரிய வாழ்வில் அமைதியாக அமர்ந்திருக்கும் கைகளாலும் ... தீர்க்கமான பார்வையுடன் உயர்த்தப்பட்ட கண்களாலும்... அவர் அமைதியின் வலிமை, மரபு மற்றும் தெய்வீக எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். பாரம்பரிய ஆபரணங்களும், ஒரு தடித்த மூக்குத்தியும் ராஜ நாகரீக தோற்றத்தை நிறைவு செய்கின்றன. இந்த தோற்றம் - போஸ்டரை ஒரு சக்தி வாய்ந்த அறிக்கையாக மாற்றுகிறது. மேலும் இது ஒரு காவிய கதையின் மையத்தில்.. அதன் மகத்துவத்திற்காக விதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்றும் வெளிப்படுத்துகிறது.
மோகன்லால் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களது சமூக ஊடக பக்கங்களில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, ''இது சிறப்பு வாய்ந்தது. என்னுடைய எல்லா ரசிகர்களுக்கும் இதை அர்ப்பணிக்கிறேன். இத்துடன் இதற்கான காத்திருப்பு நிறைவடைகிறது. பெருமிதத்துடனும், ஆற்றலுடனும் புயல் விழித்தெழுகிறது. உங்கள் ஆன்மாவை தூண்டும் வகையிலும்.. காலத்தை எதிரொலிக்கும் வகையிலும்.. உருவானதொரு கதையான 'விருஷபா'வின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறேன்.
எனது பிறந்தநாளில் இதை வெளியிடுவது மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது. உங்களது அன்பு எப்போதும் எனக்கு மிகப்பெரிய சக்தியாக இருந்து வருகிறது. # விருஷபா அக்டோபர் 16ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது'' என பதிவிட்டிருக்கிறார்கள்.
நந்தகிஷோர் எழுதி, இயக்கி, கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலி பிலிம்ஸ் நிறுவனம் வழங்கும் 'விருஷபா'- அதிரடி- உணர்வு பூர்வமான டிராமா மற்றும் புராணங்களை தடையின்றி இணைத்து வழங்கும் ஒரு சினிமா அனுபவமாகும். மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம் பிராந்திய மற்றும் மொழியியல் எல்லைகளைக் கடந்து எதிரொலிக்கும்... ஒரு உண்மையான கலாச்சார ரீதியாக வேரூன்றிய அனுபவத்தை வழங்கும் என்பதையும் உறுதி செய்கிறது.
2025 அக்டோபர் மாதம் 16ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் விருஷபா வெளியிடப்பட உள்ளது. இந்தியா மற்றும் உலகளாவிய திரை சந்தைகளில் பாக்ஸ் ஆபீசை 'விருஷபா' அதிர வைக்க தயாராகிறது. சோபா கபூர் - ஏக்தா ஆர். கபூர் -சி கே பத்மகுமார் - வருண் மாத்தூர்- சௌரப் மிஸ்ரா - அபிஷேக் எஸ். வியாஸ் - விஷால் குர்னானி மற்றும் ஜூஹி பரேக் மேத்தா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம்.. இந்திய சினிமாவில் காவிய கதை சொல்லலை மறு வரையறை செய்வதாக உறுதியளிக்கிறது.
வியப்பில் ஆழ்த்தும் காட்சிகள் - உணர்வுபூர்வமான காட்சிகள் - பெரிய அளவிலான போர் காட்சிகள் - மறக்க இயலாத நிகழ்ச்சிகளுடன் தயாராகும் 'விருஷபா'- ஒரு நீடித்த தாக்கத்தை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மோகன்லாலை மையமாகக் கொண்டு இதயங்களை கவரும் வகையிலும் உலகெங்கிலும் உள்ள திரைகளை ஆள்வதற்கான.. ஒரு காவியத்திற்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் அக்டோபர் 16ஆம் தேதி அன்று இந்திய சினிமாவின் மிகப்பெரிய நிகழ்விற்கான கவுண்ட் டவுன் இன்றிலிருந்து தொடங்குகிறது.
யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் அர்ஜுன் தாஸ் - காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'போர் ' எனும் திரைப்படத்தைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தினை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளது.
இந்த திரைப்படத்தில் யோகி பாபுவுடன் மேகா தாமஸ், ஜாஸிக், அஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இயக்குநர் ஜெய் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 2' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது.
குற்றாலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினருக்கான ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பிரபு ஆண்டனி- மது அலெக்சாண்டர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அத்துடன் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என்று படத்தைத் தயாரிக்கும் ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. நரேஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிஜு சாம் இசையமைத்திருக்கிறார்.
'#சூர்யா 46' படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது!
ரசிகர்களுக்கு அற்புதமான புதிய சினிமா அனுபவத்தை வழங்குவதற்கு ஏற்ற வகையில் களம் அமைத்து , சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், 'புரொடக்ஷன் நம்பர் 33 - #சூர்யா 46 ' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இது தமிழ் - தெலுங்கு என இரு மொழி திரைப்படத்தின் பணிகள் தொடங்குவதை குறிக்கிறது. சூர்யா- வெங்கி அட்லூரி கூட்டணியில் தொடங்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கிலும் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் சூர்யாவின் கதாபாத்திர தேர்வு மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை தொடர்ந்து படைப்பு எல்லைகளை கடந்து வருகிறது. அவரது நடிப்பில் 46 ஆவது படமான ' #சூர்யா 46' - சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் 'புரொடக்ஷன் நம்பர் 33 ' என்ற பெயரில் முழு அளவிலான இரு மொழி படமாக தயாராகிறது. மேலும் இது தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது.
இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் உருவான ' சார் /வாத்தி' , 'லக்கி பாஸ்கர்' ஆகிய சமீபத்திய படங்கள் தொடர்ச்சியான வெற்றியை பெற்றிருக்கிறது. தனது தனித்துவமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்ற வெங்கி அட்லூரி- தற்போது சூர்யாவுடன் கரம் கோர்க்கிறார். இயல்பான படைப்பிலிருந்து மாறி, அசாதாரணமானதாக இருக்கும் என்று உறுதி அளிக்கும் வகையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகளை அவர் அதிகரிக்கிறார்.
'பிரேமலு ' படத்தின் மூலம் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையான மமீதா பைஜூ கதாநாயகியாக இணைகிறார். இவருடன் ரவீனா டாண்டன் தெலுங்கு சினிமாவில் மீண்டும் மறுபிரவேசம் செய்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
தேசிய விருதைப் பெற்ற ஜீ.வி. பிரகாஷ் குமார் மீண்டும் ஒரு இசை அனுபவத்தை வழங்குவதற்காக வெங்கி அட்லூரியுடன் இணைந்திருக்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவை நிமிஷ் ரவி மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை நவீன் நூலி கவனிக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை பங்களான் ஏற்றுக் கொள்கிறார். இந்த திரைப்படத்தை வெற்றிகரமான திரைப்படங்கள் மற்றும் தரமான திரைப்படத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தயாரிப்பாளர்கள் எஸ். நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
2026 ஆம் ஆண்டில் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு மே மாத இறுதியில் தொடங்குகிறது.
விஜய் ஆண்டனியுடன் 'லாயர்' படத்துக்காக இணையப்போகும் புகழ் பெற்ற ஒரு நடிகை!
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் ”லாயர்” திரைப்படத்தை “ஜென்டில்வுமன்” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்குகிறார்.
நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன்.
இதுவரை திரையில் காட்டியிராத, நீதிமன்றத்தையும், அதன் நடைமுறைகளையும், தத்ரூபமாகத் திரையில் பிரதிபலிக்கும் திரைப்படமாக இப்படம் இருக்கும்.
விஜய் ஆண்டனியுடன் இப்படத்தில் அவருக்கு இணையான எதிர் கதாப்பாத்திரத்தில், இந்தியளவில் புகழ் பெற்ற ஒரு நடிகையும் இப்படத்தில் இணையவுள்ளார்.
இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், படக்குழு இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
சண்முக பாண்டியன் நடித்துள்ள 'படை தலைவன்' பட இசை வெளியீட்டு விழா!
VJ Combines நிறுவனம் Dass Pictures உடன் இணைந்து வழங்க, தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் படம் “படை தலைவன்”.
வரும் மே 23 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், L.K. சுதீஷ், ஹீரோ சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன், இயக்குநர் -நடிகர்கள் கஸ்தூரி ராஜா, சசிக்குமார், இயக்குநர்கள் A.R. முருகதாஸ், பொன்ராம் படத்தின் தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம், இயக்குநர் .U.K. அன்பு, ஒளிப்பதிவாளர் சுரேஷ், தயாரிப்பாளர்கள் T. சிவா, J.S.K. சதீஷ், நடிகை யாமினி மற்றும் படக்குழுவினர் ஆகியோர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
வசனகர்த்தா பார்த்திபன் தேசிங்கு பேசியதாவது….
சினிமாவில் என் மானசீக குரு, இன்ஸ்பிரேஷன் எல்லாமே முருகதாஸ் சார்தான், அவரது ஆசீர்வாதத்துடன் இங்கு இருப்பது மகிழ்ச்சி. நான் கேப்டனின் தீவிர ரசிகன். அவரது கேப்டன் பிரபாகரன் பட தலைப்பைத் தான் என் முதல் கதைக்கு வைத்தேன் அது கிடைக்கவில்லை. கேப்டன் உடன் வேலை பார்க்கும் எனும் என் ஆசை நிறைவேறவில்லை. படை தலைவன் வாய்ப்பு மூலம் அந்த கனவு நனவாகியுள்ளது. இந்தப்படத்திற்குத் தலைப்பு படைத் தலைவன். ஒருவன் பின்னால் ஒரு படையே நிற்கும் என்றால், அவன் தான் படை தலைவன், அது கேப்டன் மட்டும் தான். அவருக்குப் பிறகு, அது சண்முக பாண்டியனுக்குத் தான் பொருத்தமாக அமைந்துள்ளது. இந்தக்கதையை அன்பு முதலில் சொன்ன போது, நான் இதற்கு வசனம் எழுதுவேன் என நினைக்கவில்லை. இந்தப்படத்தில் நான் வேலை பார்த்தது எனக்குப் பெருமை. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் சதீஷ் குமார் பேசியதாவது…,
நான் இங்கு கேப்டனுடன் எனக்குக் கிடைத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன், அவருடன் ஒரு ஸ்டண்ட் காட்சியில் பணி புரிந்தேன், பெரிய அனுபவம் இல்லை என்றாலும் அனைவரின் சொல்லுக்கும் மதிப்பளிப்பவர் எங்கள் கேப்டன் அதை நான் அன்று உணர்ந்தேன், அதே போல் சண்முக பாண்டியனும் பொறுமையாகக் கோபம் கொள்ளாமல், எத்தனை டேக் சென்றாலும் அதை முடித்துக் கொடுத்து விட்டுத் தான் அங்கிருந்து கிளம்புவார், அவரிடத்தில் நான் என் கேப்டன் சாரை பார்க்கிறேன். இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும், சண்முக பாண்டியன் அவர்களுக்குப் பெரிய வெற்றிப்படமாக அமையும் அனைவருக்கும் என் நன்றிகள்.
நடிகர் ரிஷி பேசியதாவது..,
எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் அன்புவிற்கு நன்றி என் தயாரிப்பாளர் அவர்களுக்கும் நன்றி, நான் ஆரம்ப காலத்தில் சினிமாவில் பணி புரியும்போது எல்லோரும் கேப்டன் சாரின் ஸ்டண்ட் பற்றித்தான் பேசுவார்கள், அவரை நேரில் பார்க்க வேண்டும் என பல நாட்கள் காத்திருந்தேன் ஆனால் அவர் மகனுடன் நடிக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. மிகவும் பெருமையாக இருக்கிறது, இந்தப் படத்தில் கொடூரமான வில்லனாக நடித்துள்ளேன், என் கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது, படம் பார்க்கும் போது அது உங்களுக்குத் தெரியும். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தந்து, வெற்றி பெறச் செய்ய வேண்டும் நன்றி.
நடிகை யாமினி சந்தர் பேசியதாவது…,
இந்தப் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கேப்டன் சாரின் வாழ்த்து நமக்குக் கிடைத்துள்ளது அதுவே பெரிய பாக்கியம். இளையராஜா சார் பாடல்களில் நான் நடித்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. சண்முக பாண்டியன் சார் எங்கள் அனைவரையும் அன்பாய் பார்த்துக்கொண்டார். இதில் எங்களை விட, யானையுடன் தான் அவர் அதிக காட்சிகள் நடித்துள்ளார். இருவரும் இணை பிரியா நண்பர்கள் ஆகிவிட்டனர். இந்தப் படமும் அவர்களைப் பற்றித் தான். நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.
இயக்குநர், நடிகர் கஸ்தூரி ராஜா பேசியதாவது…,
படத்தின் தலைப்பே படத்திற்கு யானை பலம், அதை விட முக்கியம் கேப்டனின் ஆசீர்வாதம், அவருடன் எனக்குப் பல அனுபவங்கள் உண்டு, அதைச் சொல்ல எத்தனை மேடைகள் இருந்தாலும் பத்தாது. இந்தப் படத்தில் ஓய்வின்றி கடினமாக உழைத்தவர் ஒளிப்பதிவாளர் தான், கஷ்ட பட்டு காட்சிகளை வடிவமைத்துள்ளார் வாழ்த்துக்கள். சண்முக பாண்டியன் யானையுடன் இணைந்து செய்த காரியங்களுக்கு எல்லாம் அசாத்திய தைரியம் தேவை, அதற்கு என் கேப்டன் தான் காரணம், அவரின் அதே பாணியை இவரிடமும் கண்டேன். படப்பிடிப்பில் இப்படக்குழு பல சிரமங்களைச் சந்தித்தனர், அத்தனையும் தாண்டி இந்தப் படம் இங்கு வந்ததற்குக் காரணம் இயக்குநரும் தயாரிப்பாளரும் தான். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இந்தப் படத்திற்கு இசையமைத்தது இளையராஜா இந்தப் பெயரே போதும், அந்த இசையைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை, நிச்சயம் இந்தப் படம் பெரிய வெற்றி பெறும். அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ் பேசியதாவது…,
இந்தப் படத்தைத் தயாரித்த பரமசிவம் எனக்கு 25 ஆண்டு கால நண்பர், அவருடன் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன், அதனால் சொல்கிறேன் இந்தப் படம் இந்தியாவே பேசும் ஒரு படைப்பாக இருக்கும். கேப்டனின் ரசிகர்களுக்கு இன்னும் பெரிய விருந்து காத்திருக்கிறது. படத்தின் காட்சிகள் மெய் சிலிர்க்க வைத்துள்ளது, சண்முக பாண்டியன் பற்றி நான் சொல்ல தேவையில்லை, கேப்டனின் ரத்தம் அது அப்படியே இவரிடம் உள்ளது. அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகள். படக்குழு அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அம்மா கிரியேஷன் டி சிவா பேசியதாவது..,
கேப்டன் சாரை போல மற்றொருவரைப் பார்க்க வேண்டுமெனில் அது சண்முக பாண்டியன் தான், கேப்டனின் தன்மை அப்படியே அவரிடம் உள்ளது. அது செட்டில் இருந்த அனைவருக்கும் தெரியும். சண்முக பாண்டியனின் வெற்றிக்கு மிகவும் சந்தோஷபடுபவன் நான்தான். நிச்சயம் நாம் அதைப் பார்க்கப் போகிறோம், இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் நன்றி.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் ஶ்ரீதர் பேசியதாவது…,
இந்த காலத்தில் பெரிய நடிகர்கள் படம் என்று ஒரு சில படங்கள் மட்டும் தான் நல்ல வரவேற்பைப் பெறுகிறது. ஆனால் மற்ற நேரங்களில் சிறு படங்கள்தான் திரையரங்கை வாழ வைத்துக் கொண்டுள்ளது, இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இந்தப் படம் இருக்கும். கேப்டனின் ஆசிர்வாதம் சண்முக பாண்டியனுக்கு உள்ளது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள் நன்றி.
இயக்குநர் பொன்ராம் பேசியதாவது…, .
எனக்கு சண்முக பாண்டியனைப் பார்க்கும்போது அவர் தெரியவில்லை கேப்டன் தான் தெரிந்தார். அவரது இடத்தை யாராலும் இன்று வரை அடைய முடியவில்லை, அதைச் சண்முக பாண்டியன் அடைவார். அவரை பிரேமில் வைக்கும்போது அப்படி ஒரு பிரம்மாண்டம், படம் பார்க்கும்போது உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் இருவருக்கும் வாழ்த்துக்கள், பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளீர்கள் என்று டிரெய்லர் பார்க்கும்போதே தெரிகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள், நன்றி.
எல் கே சுதீஷ் பேசியதாவது…,
இந்தப் படம் சண்முக பாண்டியனுக்கு பெரிய வெற்றிப்படமாக அமையும். கேப்டனின் ஆசீர்வாதம் இந்தப் படத்திற்கு உள்ளது. அது மட்டுமல்ல, இந்தப் படத்தை வாழ்த்த பல நல் உள்ளங்கள் இங்கு வந்துள்ளனர். அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் வெள்ளி விழாவில் அனைவரும் சந்திப்போம், நன்றி.
தே.மு.தி.க மாநில இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் பேசியதாவது…,
இந்த மேடையில் நான் ஒரு ரசிகனாக தான் வந்துள்ளேன், சினிமா மேடையில் நான் பேசியது இல்லை, இது எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது, நான் என் தம்பிக்காக வந்திருக்கிறேன். என் அப்பா விஜயகாந்திற்கு நான் தான் முதல் ரசிகன், அதே போல் சண்முக பாண்டியனுக்கும் நான் தான் முதல் ரசிகன், கேப்டனை நீங்கள் பார்க்க நினைத்தால் சண்முக பாண்டியன் உருவத்தில் நாம் அவரை பார்க்கலாம். கேப்டனின் கட்டளைகள் பணிகள் இன்னும் காத்திருக்கிறது. அவரின் அனைத்து ஆசையும் நடக்கும் நாம் நடத்திக் காட்டுவோம். மேலும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார் அது ஒரு வரம் தான். படம் மிக நன்றாக இருக்கிறது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், இந்தப் படத்தை நாம் அனைவரும் சுமந்து செல்வோம் அனைவருக்கும் நன்றி.
நடிகர் சசிகுமார் பேசியதாவது…,
விஜயகாந்த் சார் எங்கள் மண்ணின் மைந்தன் , அவரை இயக்கும் ஆசை எனக்கு நிறைவேறாமல் போனது, ஆனால் சண்முக பாண்டியனை இயக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது, ஒரு ஷூட்டிங்கில் அவரது கண்ணைப் பார்த்து மிரண்டு விட்டேன், அப்படியே விஜய்காந்த் சார் தான். கண்டிப்பாகச் சண்முக பாண்டியனை நான் இயக்குவேன். கேப்டன் சாருடன் பயணிக்கும் அனுபவம் இல்லை, ஆனால் நிச்சயம் அவரது மகனுடன் அந்த அனுபவத்தைப் பெறுவேன். இந்தப் படை தலைவன் படம் நிச்சயம் பெரிய வெற்றி பெறும். அனைவருக்கும் நன்றி.
தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது..,
அரசியல் மேடை இல்லாமல் ஒரு சினிமா சார்ந்த மேடையில் நான் பேசுவது இதுவே முதல்முறை. சண்முக பாண்டியனை இனிமேல் உங்களிடம் ஒப்படைக்கிறேன். தமிழ்நாட்டு மக்களிடமும், சினிமா துறை சார்ந்தவர்களிடமும் ஒப்படைக்கிறேன். கள்ளழகர் படத்தில் நடித்த போது, கேப்டன் யானையோடு நெருக்கமாக பழகி, வீட்டிற்கு யானையை அழைத்து வரவா? என்று கேட்டார், அவ்வளவு பெரிய வீடு இல்லையே என்று கூறினேன். அதேபோன்று தான் சண்முக பாண்டியனும், தற்போது அவருடன் நடித்த மணியன் யானையை வீட்டிற்கு அழைத்து வரக் கேட்டார். இருவரும் யானை வளர்க்கவே விரும்புகின்றனர். நிச்சயம் ஒரு யானையை வளர்ப்போம். கேப்டனின் இடத்தை எனது இரண்டு மகன்களும் நிரப்புவார்கள். விஜய பிரபாகரன் அரசியலிலும், சண்முக பாண்டியன் சினிமாவிலும் தங்களை நிலைநிறுத்திக்கொள்வார்கள். அதில் எந்த ஐயமும் இல்லை" இப்படம் மக்களுக்குப் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.
படைத்தலைவன் படத்தின் கதாநாயகன் சண்முக பாண்டியன் பேசியதாவது..
”இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம், காரணம் அப்பா இருக்கும்போது இந்த படத்தின் கதையைக் கேட்டிருந்தார். இந்த படத்தில் இருக்கும் இரண்டு சண்டைக் காட்சிகளையும் அப்பா பார்த்திருக்கிறார். எனவே இந்த படம் எனக்கு மிக மிக நெருக்கமான படம். படைத்தலைவன் படத்தைக் கும்கி அல்லது வேறு எந்த படத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இந்த படம் முற்றிலும் வேறு மாதிரியான கதைக்களத்தைக் கொண்டுள்ளது”
”என்னுடைய முதல் ஷாட்டே ஐந்து யானைகளுடன் தான்.." எல்லாரும் நான் அப்பா மாதிரி இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் எனக்கு அப்படியே தெரியவில்லை, அவரை ஈடு செய்ய முடியாது. இந்த படத்திற்காக என்னால் முடிந்தவரை உழைத்துள்ளேன். நிச்சயம் இந்தப் படம் உங்கள் அனைவரையும் கவரும். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசியதாவது…,
”ஏராளமான படங்களில் நடிகருக்கு நிகராக வில்லன்கள் அழகாக இருக்கும் டிரெண்டை செட் செய்தவர் விஜயகாந்த் தான். அதற்கென ஒரு பெரிய நம்பிக்கை வேண்டும், அதை விஜயகாந்த் சார் அவர்கள் செய்தார்கள். எல்லோரும் விஜயகாந்த் குறித்துப் பேசி இருப்பார்கள். ஆனால் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் மட்டும்தான் விஜயகாந்த் உடன் பணியாற்றியுள்ளேன் என்று நினைத்தேன். ஆனால் கஸ்தூரி ராஜாவும் பணியாற்றியதாகக் கூறியபோது சற்று பொறாமையாக இருந்தது,
விஜயகாந்தின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் சண்முக பாண்டியனுக்கு வேண்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக உங்களைக் கைவிட மாட்டார்கள். இவ்வளவு கம்பீரமான நடிகர் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறார். விஜயகாந்தின் இரு கண்கள் அப்படியே சண்முக பாண்டியனுக்கு உள்ளது. சினிமாவில் வளர்ந்து வாருங்கள்... கண்டிப்பாக ரமணா 2படம் எடுக்கலாம். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் U அன்பு பேசியதாவது,
என் தயாரிப்பாளர்களுக்கும், சண்முக பாண்டியனுக்கும் மிக்க நன்றி. என்னை நம்பி இந்த படைப்பை என்னிடம் கொடுத்துள்ளனர். அவர்களிடம் நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன் என்று நம்புகிறேன், எனக்கு உதவியாக இருந்த படக்குழு, அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், படத்தின் வெற்றி நிகழ்வில் மீண்டும் நம் சந்திப்போம் நன்றி.
மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, A.வெங்கடேஷ், S.S.ஸ்டான்லி, லோகு N P K S, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார், அவரது இசையில் மூன்று அற்புதமான பாடல்கள் இப்படத்திற்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா