சற்று முன்

'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |    தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியாகும் 'படை தலைவன்'   |    புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகும் 'பேரன்பும் பெருங்கோபமும்' திரைப்படம்!   |    விக்ரமுக்கு 'சேது' போல உதயாவுக்கு 'அக்யூஸ்ட்' அமையும் - ஆர்.கே. செல்வமணி   |    சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் விளையாட்டு சரித்திரத்தை மாற்றியமைக்க உள்ளது!   |    'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா   |    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் கத்தார் அரசு விருதை வென்று சாதனை!   |    'இராமாயணா' படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது!   |    பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது   |    இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம்! - தயாரிப்பாளர்-இயக்குநர் இசக்கி கார்வண்ணன்   |    இங்கு பெண்களுக்கான குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது - இயக்குநர் வசந்தபாலன்   |    சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    திரைப் படைப்பாளிகளின் பாராட்டுக்களைக் குவித்துள்ள 'மனிதர்கள்' மே 30 முதல் திரையரங்குகளில்!   |    பேயை செல்லப்பிராணியாக வளர்க்கலாம் என்று 'ஜின் தி பெட்' படம் சொல்கிறது - ஆர். கே. செல்வமணி   |    'மெட்ராஸ் மேட்னி' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!   |    'ராமாயணா' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் பற்றிய அப்டேட்!   |    JP.தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் 'அங்கீகாரம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    மோகன்லாலின் பிறந்தநளை முன்னிட்டு கண்ணப்பா படத்தின் சிறப்பு வீடியோ கிளிம்பஸ் வெளியானது!   |   

சினிமா செய்திகள்

'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்
Updated on : 08 June 2025

B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குயிலி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  'எழுச்சித் தமிழர்' தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.



 



அறிமுக இயக்குநர்ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள 'குயிலி' திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவிசா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற் குஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார். ஒரு தாயின் வைராக்கியம் மிக்க தொடர் வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார். 




 



விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன் மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல், இயக்குநர் ஸ்ரீஜர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



 



தயாரிப்பாளர் அருண்குமார் பேசுகையில், ''இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த அனைவரையும் வரவேற்கிறேன். இப்படம் சிறப்பாக உருவாவதற்கு உழைத்த படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  



 



முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் 'ஏமாற்றாதே', 'பொய் சொல்லாதே', 'திருடாதே', 'கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும்' என்ற விஷயங்களை சொல்லிக் கொடுத்து வளர்த்தனர். அவற்றை பின்பற்றி இப்படத் தயாரிப்பின் போது பல தடைகள், தாமதங்கள் ஏற்பட்டாலும் அனைத்தையும் கடந்து வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறோம். இதற்காக கடினமாக உழைத்த 'குயிலி' படகுழுவினர் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்ததிரைப்படத்திற்காக முதலீடு செய்த நண்பர்களையும் வாழ்த்துகிறேன், வரவேற்கிறேன், நன்றி தெரிவிக்கிறேன். 




 



இந்தத் திரைப்படம் ஒரு அம்மாவின் வலியை பேசுகிறது. ஒரு அம்மா தன் மகனை வளர்ப்பதற்காக எவ்வளவு சவால்களை எதிர்கொள்கிறார்கள்? எவ்வளவு போராட்டங்களை சந்திக்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கையில் இறுதிவரை எப்படி போராடுகிறார்கள்? என்பதை இப்படம் விவரிக்கிறது. குயிலியாக நடித்த நடிகை லிசி ஆண்டனி உள்ளிட்ட இப்படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 



 



இது கமர்ஷியல் படமாக இல்லாமல் சமூகத்திற்கான படமாக உருவாகி இருக்கிறது. இதற்காக இயக்குநரை பாராட்டுகிறேன். இந்த திரைப்படம் வெளியான பிறகு படத்தை பார்த்தவர்களில் ஐந்து சதவீத மக்களாவது தங்களை திருத்திக் கொண்டால்..அதுவே இப்படத்தின் வெற்றியாக கருதுகிறோம்,'' என்றார். 



 



நடிகை தாஷ்மிகா பேசுகையில், ''இந்தப் படத்தில் நடிப்பதற்கு எனக்கு திடீரென்று வாய்ப்பு கிடைத்தது. அதனால் எனக்கு இந்த தருணம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏதோ ஒரு படப்பிடிப்பில் சிறிய வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இப்படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வந்தது. குடிக்கு எதிரான படத்தில் நீங்கள் நாயகியாக நடிக்க வேண்டும் என படக்குழுவினர் சொன்னவுடன் உற்சாகம் அடைந்தேன். என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி,'' என்றார். 



 



மூத்ததயாரிப்பாளர்கே. ராஜன்பேசுகையில், ''குறிப்பிட்ட சமுதாயத்திற்கோ, குறிப்பிட்ட சாதிக்கோ இல்லாமல்,  எல்லாருக்குமான தலைவராகவும், ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் தலைவராக திகழும் தொல்.திருமாவளவனை வருக, வருக என வரவேற்கிறேன். அவர் சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே எனக்கும், அவருக்கும் பழக்கம் உண்டு. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் தருணத்தில் நாங்கள் தினமும் சந்தித்துக் கொள்வோம். இந்தியா கூட்டணி உருவாவதற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை போல் இவருக்கும் பங்கு இருக்கிறது. பாராளுமன்றத்தில் இவருடைய குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது, ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 



 



பி எம் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த 'குயிலி' திரைப்படம் அற்புதமான குடும்ப படம். ஒரு தாய் தன் குடும்பத்திற்காக எப்படி போராடுகிறார் என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள். இதற்காக இயக்குநர் முருகசாமியையும் இப்படத்தை துணிச்சலுடன் தயாரித்த தயாரிப்பாளர் அருண்குமாரையும் பாராட்டுகிறேன். 




 



இந்தத் திரைப்படம் குடிகாரர்களை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த த்திரைப்படத்தில் கவர்ச்சி இல்லை, ஓரளவு அறிமுகமான நடிகர்களை வைத்து இயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள். குடியினால் என்ன கொடுமை நடைபெறுகிறது என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள். 



 



நான் தமிழக முதல்வருடனும், திருமாவுடனும் நெருக்கமாகத்தான் இருக்கிறேன். ஆனால் இந்த மது விஷயத்தில் சற்று விலகியே இருக்கிறேன். குடி பல குடும்பங்களை கெடுத்திருக்கிறது. பல குடும்பங்கள் பலியாகி இருக்கிறது. அதனால் குடியை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதற்கு தடை விதிக்க வேண்டும். தற்போதுள்ள சூழலில் 20 முதல் 25 சதவீத பெண்களும் குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நாடு மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது.அதனால் தமிழக முதல்வரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் ஒரு வழியில் மதுவை ஒழிக்க வேண்டும்.  



 



இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஆனால் என்னை பொருத்தவரை இந்த படத்திற்கு இத்தனை பாடல்கள் தேவை இல்லை. திரையரங்கத்தில் பாடல் காட்சிகளை ரசிகர்கள் விரும்பி பார்ப்பதில்லை. ஆனால் இந்த பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. கருத்துள்ள பாடல் இருக்கிறது, மது ஒழிப்பை பற்றி பேசுகிறது, மதுவால் தாய்மார்கள் படும் வேதனையை பேசுகிறது. இதனால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதை பெருமிதமாக கருதுகிறேன். இப்படம் வெற்றி பெற வேண்டும். படத்திற்கு முதலீடு செய்த பணம் தயாரிப்பாளருக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இதற்கு தமிழ் ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.



 



முன்னணி நடிகர்கள் திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என தயாரிப்பாளர்களிடத்திலும் ,இயக்குநர்களிடத்திலும் பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.



 



இயக்குநர்ப. முருகசாமி பேசுகையில், ''இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் உதவியாளராக பணியாற்றும் போது தான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை பற்றி வாசித்தேன். அதன் மூலமாக பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு கூகை திரைப்பட இயக்கத்தில் இணைந்து கொண்டு திரைப்படக் கல்வியைக் கற்றேன். அதைவிட முக்கியமான அரசியல் கல்வியையும் கற்றேன். எளிய மக்களின் வாழ்வியலையும் அங்கு தான் கற்றுக் கொண்டேன். அதன் மூலமாகத் தான் நல்லதொரு படைப்பை உருவாக்க முடிந்தது. 




 



இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், உதவி இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 



 



நான் கார்ல்மார்க்ஸ், அண்ணல்அம்பேத்கர், பெரியார் ஆகியோரை பார்க்கவில்லை. இந்த மூவரும் ஒன்றாக இருக்கும் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவைபார்க்கிறேன். சிறிய வயதிலிருந்து அவருடைய போராட்டத்தையும், பேச்சையும் கேட்டு பார்த்து வளர்ந்தவன். பா.ரஞ்சித்தைப் பார்த்தும் வளர்ந்திருக்கிறேன்,'' என்றார். 



 



இசையமைப்பாளர் ஜூஸ்மித் பேசுகையில், ''முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி படிப்பை முடித்த பிறகு, நான் இசைத்துறையில் பயணிக்க விரும்புகிறேன் என்ற என் விருப்பத்தை தெரிவித்ததிலிருந்து இதுவரை எதையும் அவர்கள் கேட்டதில்லை.  இதனைத் தொடர்ந்து இப்படத்தின்த யாரிப்பாளரான அருண்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர் ஒவ்வொருமுறை தொலைபேசி மூலம் பேசும் போது நலம்வி சாரித்து நான் படம் தயாரித்தால் நீதான் இசையமைப்பாளர் என உற்சாகப்படுத்துவார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தயாரிப்பாளரானதும் அழைப்பு விடுத்து இப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையும் வழங்கினார். 



 



சினிமாவில் இருந்து தோல்வி அடைந்தவர்களை விட, சினிமாவை விட்டுவிட்டு சென்று தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். என்னை சினிமாவில் அழைத்து வந்தவர்கள் யாரும் தற்போது என்னுடன்இல்லை. அவர்கள் சினிமாவிலும் இல்லை. வேறு துறைக்கு சென்று விட்டார்கள். இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர் அருண்குமார் மட்டுமே எனக்கு நம்பிக்கை அளித்து வாய்ப்பளித்தார். இப்படத்திற்கு இசையமைக்கும் அனுபவம் வித்தியாசமாக இருந்தது. மறக்க முடியாததாகவும் இருந்தது. இயக்குநர் முருகசாமி, 'குயிலி' கமர்ஷியல் திரைப்படம் அல்ல, கருத்து சொல்லும் படம். அதற்கேற்ற வகையில் இசையமைக்க வேண்டும் என சொன்னார். அதன் பிறகு நான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் அவருக்கு பிடித்தது. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஐந்து பாடல்களும் மதுவை குடிக்காதே என்பதை சொல்லும் விதமாகத் தான் இருக்கும். இந்தப் படத்தின் பாடல்களை நான்கு புதுமுக பாடகர்கள் பாடி இருக்கிறார்கள்,'' என்றார். 



 



இயக்குநர் ஸ்ரீஜர் பேசுகையில், '' சினிமாவும் அரசியலும் ஆண்டாண்டு காலமாக இணைந்து பயணித்துக் கொண்டிருக்கின்றன. சமீபகாலமாக சினிமாவில் அரசியல் பேசு பொருளாகமாறி இருக்கிறது. 'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் ,கலாச்சாரத்தையும் பேசும் என நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் குடிக்கு அடிமையானவர்களைப் பற்றி ஒரு பாடம் எடுத்திருக்கிறார்கள். தாய்ப் பாசத்தை மிக அழகாக சித்தரித்திருக்கிறார்கள். 



 



இந்த விழாவின் நாயகனான ஜூஸ்மித் பத்து ஆண்டுகளுக்கு முன்என்னால் அடையாளம் காணப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டவர். இந்தத் திரைப்படத்தில் நிறைய பாடல்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். இது போன்ற படங்களுக்கு இரண்டு பாடல்களே போதுமானது. பரபரப்பான இந்த வாழ்க்கை சூழலில் சினிமாவையே ஒன்றரை மணி நேரமாக சுருக்கி விட்டோம். இதுவே போதும் என்றும் நினைக்கிறோம். 'குயிலி' திரைப்படம் நல்ல கலாச்சாரத்தையும், நல்ல பண்பாட்டையும் போதிக்கும் படமாக இருக்கிறது. வலியை பதிவு செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. படத்தின் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்" என்றார். 




 



இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், ''எல்லோருக்குமான தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்க்கை வரலாறு சுயசரிதை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன். யாரேனும் இதற்கு முயற்சி செய்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன். 



 



இப்படத்தின் இயக்குநர் முருகசாமி, 'கல்லூரி' படத்தில் இருந்து என்னிடம் உதவியாளராக இருக்கிறார். அவர் ஒரு குறும்படத்தை இயக்கி என்னிடம் காண்பித்து அதன் பிறகு உதவியாளராக சேர்ந்தார். இன்று வரை என்னுடன் பயணிக்கிறார். அவர் ஒரு நடிகரும் கூட, இந்தப் படத்திலும் நடித்திருப்பார் என நினைக்கிறேன். 'பொன்னியின் செல்வன்', 'அசுரன்' ஆகிய படங்களில் நான் நடிக்கும் போது என்னுடன் வருகை தந்து அங்கு நடைபெறும் விஷயங்களை உள்வாங்கிக் கொள்வார். அதையெல்லாம் செய்த பிறகு தான் அவர் இந்த படத்தை உருவாக்கி இருப்பார் என நம்புகிறேன்.  இயக்குநர் முருகசாமி மிக எளிமையான பின்புலம் கொண்டவர். மறைந்த நடிகர் மயில்சாமி உடன் இணைந்து ஏராளமான தொண்டுகளை செய்திருக்கிறார். எளிமையாக பழகக்கூடிய முருகசாமி இயக்குநராக உயர்ந்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் அருண்குமாரை மனதார பாராட்டுகிறேன். 



 



இந்தப் படத்தை எளிய மனிதர்களின் பார்வையில் இருந்து இயக்கியிருக்கிறார். அதில் வீரியம் இருக்கும். இது தான் இப்படத்தின் பலம். இப்படத்தின் திரைக்கதையும் நன்றாக அமைத்து இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப் படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,'' என்றார். 



 



நடிகை லிசி ஆண்டனி பேசுகையில், ''சுயவிருப்பம், கடின உழைப்பு, விடாமுயற்சி, பொறுமை ஆகிய நான்கு விஷயங்கள் மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருப்பவள். இதைத் தான் நான் என் வாழ்க்கையில் தற்போது வரை கடைப்பிடித்து வருகிறேன். இந்த விஷயங்களை தயாரிப்பாளர் அருண்குமாரிடமும் நான்பார்த்தேன். 



 



இந்தப் படத்திற்கான அழைப்பு அவரிடம் இருந்து தான் எனக்கு முதலில் வந்தது. அவரே இப்படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். என் வாழ்க்கையில் முதல் முதலாக தயாரிப்பாளர் ஒருவர் கதையை அழகாக சொன்னது என்றால் அது இவர் தான். அந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. இந்த திரைப்படம் பேசும் விஷயமும் எனக்கு பிடித்திருந்தது. இந்தப் படத்திற்கு 'குயிலி' என்று தான் தலைப்பு இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். உடனே அவரும் சரி என்று ஒப்புக்கொண்டார்.  இந்தப் படம் வெற்றி பெறுவதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,'' என்றார்.



 



விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், 'சத்தீஸ்கர் நிலத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதால் இங்கு இந்நிகழ்ச்சிக்கு வர தாமதமானது. இப்படத்தின் பாடல் ஒன்றை மேடையிலேயே கேட்டேன். படம் எதைப் பற்றி வலியுறுத்துகிறது என்பதனை அண்ணன் ராஜனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். 




 



இந்தகால சூழலில் சமூக பொறுப்புடன் மதுவிற்கு எதிராக ஒரு திரைப்படம் எடுக்கும் துணிச்சல் இயக

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா