சற்று முன்

10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |   

சினிமா செய்திகள்

சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'
Updated on : 08 July 2025

Dark Artz Entertainment நிறுவனம் சார்பில், அறிமுக இயக்குநர் ஹரி கே சுதன்  தயாரித்து, எழுதி, இயக்க, புதுமுகம்  சாய்ஸ்ரீ பிரபாகரன் நடிப்பில், ஒரு கன்னியாஸ்திரியாக வாழும் ஒரு இளம்பெண்ணின்  உணர்வுகளின் பின்னணியில், அன்பினைப் பேசும் அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மரியா”.  இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. 



இந்த பூமியில் சூழலில் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு பாதையை வாழ்க்கையாக தேர்ந்தெடுக்கிறார்கள். அன்பின் பாதை எல்லோருக்கும் உரிமையானது. மரியா ஒரு கன்னியாஸ்திரி பெண் , அவள் ஒரு சாதாரண பெண்ணைப் போல வாழ விரும்புகிறாள், ஆனால் சமூகமும் அவளைச் சுற்றியுள்ள மக்களும் அதை கடினமாக்குகிறார்கள். அவளின் அன்பு ஜெயிக்கிறதா?  அவள் கனவு நனவானதா ? என்பதே இப்படத்தின் கதைகளம். 



ஒவ்வொரு தவறுக்குப் பின்னும்  ஒரு நியாயம் உண்டு, அந்த நியாயத்தை அழுத்தமாக பேசும் ஒரு அழகான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. 



இப்படம் சென்னை அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் மற்றும் சிதம்பரம் பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. 



இப்படத்த்தில் அறிமுக நடிகை "சாய்ஸ்ரீ பிரபாகரன்" முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.  "பவேல் நவகீதன்" ஒரு மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில்  நடித்துள்ளார், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி சுதா புஷ்பா, ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 



"மரியா" திரைப்படம் , உலகில் உள்ள பல முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்றுள்ளது. இத்தாலி, மலேசியா, லண்டன், நேபாளம், புது தில்லி, ஹரியானா, மும்பை, கேரளா, உத்தரபிரதேசம், கொல்கத்தா ஆகிய நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. மேலும், "சிறந்த இந்திய திரைப்படம்", "சிறந்த இயக்குனர்", "சிறந்த திரைக்கதை", "சிறந்த நடிகை", "சிறந்த இசை" என  பல விருதுகளையும் பெற்றுள்ளது.



உலகமெங்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது ....



மேலும் இப்படத்தின் அனைத்து மொழி டிஜிட்டல் ரைட்ஸ்ம், திரையரங்கம் ரைட்ஸும், சேட்டிலைட் உரிமைகளையும் Uthraa Productions, செ.ஹரி உத்ரா வாங்கியுள்ளார் என்பது குறிப்பிட்டுள்ளது

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா