சற்று முன்

'தமிழ் பெண்களின் வீரத்தை போற்றும் வகையில் உருவாகியுள்ள 'வீர தமிழச்சி'!   |    நடிகர் சசிகுமார் பிறந்தநாளை முன்னிட்டு 'யாத்திசை' படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியானது!   |    ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' டிரெய்லர்!   |    VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடிக்க 'ஹெய் லெசோ' திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது!   |    'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |   

சினிமா செய்திகள்

புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!
Updated on : 17 July 2025

புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில், மனித குணத்தின் விசித்திரங்களை அழுத்தமாக பேசி, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்த “மனிதர்கள்” திரைப்படம்,  ஜுலை 17  இன்று  முதல், சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது.



 



Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர்  இராம் இந்திரா  இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், உருவான “மனிதர்கள்” திரைப்படம், கடந்த மே மாதம் 30 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியானது. 



 



ஒரு இரவில் ஒன்று சேர்ந்து, மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்கும் ஏற்படும் ஒரு சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சனையாக வெடிக்கிறது என்பதை, பரபரப்பான திரைக்கதையில், வித்தியாசமான களத்தில் அசத்தலான திரில்லராக, சொன்ன இப்படம், திரை ஆர்வலர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. 



 



தற்போது இப்படம்  சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா என இரண்டு ஓடிடி தளங்களில்,  ஸ்ட்ரீமாகி வருகிறது. இப்படத்தினை திரையரங்குகளில் தவறவிட்ட ரசிகர்கள், இப்போது வீட்டிலிருந்தே பார்த்து ரசிக்கலாம். 



 



இப்படத்தினை Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures சார்பில் இராஜேந்திர பிரசாத், ஜெ.நவீன் குமார், மு.கி.சாம்பசிவம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.  



 



இப்படத்தில் அறிமுக நடிகர்கள் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 



 



தொழில் நுட்ப குழுவில்  ஒளிப்பதிவு - அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ், இசை - அனிலேஷ் எல் மேத்யூ , படத்தொகுப்பு - தின்சா, கலை - மகேந்திரன் பாண்டியன், பாடல் - கார்த்திக் நேத்தா, ஒப்பனை - அ சபரி கிரிசன், துனைத்தயாரிப்பு - தரணிதரன் பரிமளா குலோத்துங்கன், நா யுவராஜ், உதவி இயக்கம் - லோகேஷ் க கண்ணன், சண்டை பயிற்சி - வின் வீரா, ஒளிக்கலவை - ஆனந்த் இராமச்சந்திரன், சப்தம் - சதீஷ், வண்ணம் - வசந்த் செ கார்த்திக், வரைகலை - ஆன்டனி பிரிட்டோ, விளம்பர வடிவமைப்பு  - ரிவர் சைடு ஹவுஸ்  மக்கள் தொடர்பு : AIM சதீஷ், சிவா ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.



 



அருமையான திரை அனுபவமான "மனிதரகள்' திரைப்படத்தை, சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் கண்டு ரசியுங்கள் !.



 



https://www.sunnxt.com/movie/detail/227466



 



https://www.aha.video/movie/manidhargal

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா