சற்று முன்

'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |   

சினிமா செய்திகள்

ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'
Updated on : 20 July 2025

செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் பேனரில் மும்பையை சேர்ந்த தமிழ் தொழிலதிபரான மாரியப்பன் முத்தையா தயாரிக்கும்  'சோழநாட்டான்' திரைப்படம் திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. 



 



"பட்டுக்கோட்டை" ரஞ்சித் கண்ணா இயக்கும் 'சோழநாட்டான்' முழுக்க ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விஜயகாந்த் நடித்த 'உழவன் மகன்' படத்திற்கு பிறகு ரேக்ளா ரேஸ் பின்னணியில் இப்படம் உருவாகிறது. மதுரை, திருநெல்வேலி புகழ் பாடும் எத்தனையோ படங்கள் வந்துள்ள நிலையில் சோழர்களின் தேசமான தஞ்சாவூர் மண்ணின் தனிச்சிறப்பை திரையில் பறைசாற்றும் விதமாக இந்த திரைப்படம் தயாராகிறது. 



 



'சோழநாட்டான்'  திரைப்படத்தில் 'டைனோசர்ஸ்' மற்றும் 'ஃபேமிலி படம்' புகழ் உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. லுத்துஃப் நாயகியாக நடிக்க, சௌந்தரராஜன் மற்றும் சுவேதா கர்ணா முக்கிய முன்னணி பாத்திரங்களை ஏற்க, நரேன், சீதா, பரணி மற்றும் விக்னேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 



 



திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் "பட்டுக்கோட்டை" ரஞ்சித் கண்ணா, "தஞ்சாவூரில் தொடங்கும் இப்படத்தின் கதை சென்னையில் தொடர்கிறது. ரேக்ளா பந்தயத்தோடு நில்லாமல் மலைவாழ் மக்களின் பெரும் துயரத்தை இப்படம் தோலுரித்துக் காட்டுகிறது. ஒரு மிகப் பிரபலமான நடிகர் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். அவர் யார் என்பதும் திரைப்படம் குறித்த மேலும் பல சுவாரஸ்ய தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்," என்றார். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா