சற்று முன்

15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |    'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |   

சினிமா செய்திகள்

கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!
Updated on : 22 July 2025

சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற நவகோடி கூடைப்பந்து போட்டி, இளம் விளையாட்டு திறமையாளர்களின் கொண்டாட்டமாக மாறியது. உள்ளூர் அணிகள் வயது வாரியாகப் போட்டியிட்டதால், இந்த நிகழ்வு அதிக உற்சாகமானதாக மாறி பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்தது.



 



இந்தப் போட்டியின் சிறப்பம்சங்களில் ஒன்று முன்னாள் இந்திய நெட்பால் அணித் தலைவரும், நடிகையுமான பிராச்சி தெஹ்லான், முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார். இவர் 'மாமாங்கம்' திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர். பிராச்சி தெஹ்லான் அறக்கட்டளை மூலம் இதுபோன்ற விளையாட்டுகளை ஊக்குவித்து வருகிறார். அவரது வருகை இந்த நிகழ்வுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது. 



 



"உள்ளூர் அணிகள் போட்டியிடுவதைப் பார்ப்பது அற்புதமான அனுபவம். ஒவ்வொரு போட்டியும் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது. தேசிய அளவிலான வீரர்களைப் பார்ப்பது போல் உணர்ந்தேன். இந்த இளம் கூடைப்பந்து வீரர்களின் திறமையைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.”



 



விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், போட்டி முடிவில் நான்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ. 5,000 உதவித்தொகையை தெஹ்லான் அறிவித்தார். இது வெற்றியாளர்கள் மத்தியில் மட்டுமல்லாது பல்வேறு வயதுப் பிரிவுகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவரது அறக்கட்டளை மூலம்  வழங்கப்படும் இந்த உதவித்தொகைகள், இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 



 



“மாற்றத்தைக் கொண்டுவர உதவும் இந்த மகத்தான நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சிறிய ஊக்கம் கூட ஒரு விளையாட்டு வீரரின் கனவுக்கு சிறகுகளை கொடுக்கும். நம் நாட்டின் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்" என்றார். 



 



இது போன்ற முயற்சிகளுடன் நடைபெறும் நவகோடி டார்னமெண்ட் வெறும் போட்டியாக மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்கால சாம்பியன்களை வளர்க்கும் முக்கிய முயற்சியாகவும் திகழ்ந்து வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா