சற்று முன்

நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!
Updated on : 01 August 2025

டைம்ஸ் மியூசிக்கின் ஒரு பிரிவான ஜங்லீ மியூசிக், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான "மதராஸி" படத்திலிருந்து முதல் பாடலான “சலம்பல” பாடலை வெளியிட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்தப் பாடல், இந்த ஜோடியின் 8வது படத்தில், ரசிகர்களின் ஃபேவரைட்டாக வெளியாகியுள்ளது.



 



துடிப்பான குரல் மற்றும் பன்முக வித்தகராக, வளர்ந்து வரும் சக்தி வாய்ந்த இளம் திறமையாளர், சாய் அபயங்கர் தனது பிரத்யேகமான குரலில், துடிதுடிப்பான “சலம்பல” பாடலை பாடியுள்ளார். அனிருத்தின் முத்திரை இசையில், அதிரடி டியூனில், மனதை அதிரடிக்கும் தாளத்தில், அழுத்தமான பிரேக்அப் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. 



 



"மதராஸி" படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறுகையில்,



நாங்கள் வழக்கமான பிரேக்அப் பாடல் மனநிலையிலிருந்து விடுபட்டு "சலம்பல” பாடலை,  மாறுபட்ட பாடலாக உருவாக்க விரும்பினோம். இது வித்தியாசமான, கணிக்க முடியாத பாடலாக இருக்கும், மேலும் SK உடன் இணைவது எப்போதும் மிரட்டலான ஒன்றாக இருக்கும். இயக்குநர் முருகதாஸின் தொலைநோக்குப் பார்வை மிகத் தெளிவாக இருந்தது. இது மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். இந்தப்பாடல் கண்டிப்பாக அனைவரையும் கவரும். 



 



இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில்…, 



“மதராஸி உணர்ச்சிப்பூர்வமான கதையுடன், பரபர ஆக்சனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. “சலம்பல” அந்த பரபரப்புக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று விரும்பினோம். நாங்கள் ஒரு வழக்கமான பிரேக்அப் பாடலை உருவாக்க விரும்பவில்லை.  மனதை ஆழமாகத் தாக்கும் மற்றும் உங்களை நெகிழ வைக்கும் ஒன்றை உருவாக்க விரும்பினோம். அனிருத் அந்த நெருப்பைக் கொண்டு வந்தார், சிவகார்த்திகேயன் அதற்கு வலு சேர்த்தார். இந்தப் பாடல் வரவிருக்கும் அதிரடிகளுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும். 



 



டைம்ஸ்/ஜங்லீ மியூசிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மந்தர் தாக்கூர் கூறுகையில்.., 



“அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சக்திவாய்ந்த  மிகப்பெரிய கூட்டணி. "சலம்பல" என்பது மீண்டும் மீண்டும் கேட்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பாடல். இது முதல் நொடியிலேயே உங்களை ஈர்க்கும். இந்த அற்புதமான பாடலுடன் "மதராஸி" படத்தின் இசையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.”



 



மேலும் ருக்மிணி வசந்த் மற்றும் வித்யுத் ஜம்வால் ஆகியோரும் இணைந்து நடித்திருக்கும் “மதராஸி” திரைப்படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. "சலம்பல" இப்போது அனைத்து தளங்களிலும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. முழு வீடியோவையும் YouTube ல் பாருங்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா