சற்று முன்

பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |    20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள 'நாகபந்தம்' கிளைமேக்ஸ்   |    ’அகண்டா 2’ நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி - நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா   |    சென்னையில் கிறிஸ்தவர்கள் நடத்தும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாடு!   |    மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை JioStar Leadership குழுவினர் சந்தித்தனர்!   |    மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர் சி வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.   |    எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!   |    அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்   |    'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!   |    ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!   |    துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!   |    சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் தடகள போட்டி இன்று துவங்கியது!   |    56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில் தேர்வு செய்யப்பட்ட 'லால் சலாம்'   |    நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |   

சினிமா செய்திகள்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!
Updated on : 01 August 2025

சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதைக்காக ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் சிறந்த துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கர் என 3 பிரிவுகளில் நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய விருதை ’பார்க்கிங்’ திரைப்படம் பெற்றுள்ளது. 



 



அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி கே.எஸ். சினிஷ் & பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்திருந்த ‘பார்க்கிங்’ படம் அதன் வெளியீட்டிற்கு பின்பு விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. தற்போது 71ஆவது தேசிய திரைப்பட விருதுகளை இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்தது. அதில் சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை (தெலுங்கு படம் ‘பேபி’யுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது) மற்றும் சிறந்த துணை நடிகர் விருது எம்.எஸ். பாஸ்கர் அவர்களுக்கும் என மூன்று தேசிய விருதுகளை அள்ளியுள்ளது ‘பார்க்கிங்’ திரைப்படம். 



 



சோல்ஜர்ஸ் ஃபேக்டரி கே.எஸ். சினிஷ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்தனர். அன்றாடம் வாழ்க்கையில் பலரும் எதிர்கொள்ளும் பார்க்கிங் சவாலையும் அதனால் ஏற்படும் உளவியல் மாற்றங்களையும் இந்தப் படம் நுட்பமாக அணுகியதாக ரசிகர்களும் சினிமா விமர்சகர்களும் பாராட்டினர். ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 



 



தயாரிப்பாளர்கள் கே.எஸ். சினிஷ் மற்றும் சுதன் சுந்தரம் தெரிவித்திருப்பதாவது, “சிறந்த தமிழ் படத்திற்கான விருதை ‘பார்க்கிங்’ பெறுவதில் நாங்கள் பெருமை அடைகிறோம். எங்கள் ‘பார்க்கிங்’ படக்குழுவினரின் உழைப்பிற்கு கிடைத்த சரியான அங்கீகாரம். நகர வாழ்க்கை, அங்கு ஏற்படும் பிரச்சினையால் வரும் ஈகோ, அவை எப்படி மனித உணர்வுகளையும் உறவுகளையும் மாற்றுகிறது என உலகளாவிய பார்வையாளர்களுக்கான கதையாக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இதை திரையில் கொண்டு வந்தார். ராம்குமார் கதை சொல்லும்போதே இது சிறந்த திரைக்கதை மற்றும் இதற்கான உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்பினோம். அதன்படி தற்போது ‘சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது’ கிடைத்திருக்கிறது. 

இந்தக் கதையை எந்தவிதமான தயக்கமும் இன்றி ஒத்துக்கொண்டு படத்திற்கு முழு ஆதரவு கொடுத்த என்னுடைய பார்ட்னர் பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரத்திற்கும் நன்றி. பல லேயர் கொண்ட இந்த கதாபாத்திரங்களை உண்மையான உணர்வோடு திரையில் பிரதிபலித்த நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கருக்கும் ஸ்பெஷல் நன்றி. ’பார்க்கிங்’ படத்தின் அனைத்து திறமையான நடிகர்கள், படக்குழுவினர் மற்றும் எங்களுடன் பயணித்த அனைவருக்குமே இந்த விருது உரியது. 



 



சந்தேகத்திற்கு இடமின்றி இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களுள் எம்.எஸ். பாஸ்கர் சாரும் ஒருவர். ‘பார்க்கிங்’ படம் மூலம் அவர் தேசிய அளவில் புகழ் பெற்றிருப்பது தயாரிப்பாளர்களாக எங்களுக்கும் மகிழ்ச்சி. ‘பார்க்கிங்’ டீம் சார்பாக தேசிய விருது பெற்ற மற்ற வெற்றியாளர்களுக்கும் குறிப்பாக ‘வாத்தி’ பட பாடலுக்காக ‘சிறந்த இசையமைப்பாளர்’ விருது வென்றிருக்கும் ஜிவி பிரகாஷ் குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்றனர். 



 



ஐடி ஊழியரான ஈஸ்வர், கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய மனைவியுடன் புது வீட்டிற்கு குடி போகிறார். அவர்கள் குடிபோகும் வீட்டிற்கு கீழ் இருக்கும் இளம்பரிதியுடன் வண்டி பார்க்கிங் தொடர்பாக மோதல் உருவாகிறது. மோதல் வளர்ந்து ஒருக்கட்டத்தில் வெடிக்க இறுதியில் என்ன ஆனது என்பதுதான் ‘பார்க்கிங்’ திரைப்படம். நகர வாழ்க்கை, மனித மனங்களின் உணர்வுகள், ஈகோ, பாசம் என அனைத்தையும் வலுவான திரைக்கதை மூலம் நுட்பமாக காட்டியிருந்தது ’பார்க்கிங்’ திரைப்படம். 



 



டிசம்பர் 1, 2023 அன்று வெளியான இந்தப் படம் பின்பு டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ப்ரீமியர் ஆனது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா