சற்று முன்

பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |    20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள 'நாகபந்தம்' கிளைமேக்ஸ்   |    ’அகண்டா 2’ நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி - நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா   |    சென்னையில் கிறிஸ்தவர்கள் நடத்தும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாடு!   |    மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை JioStar Leadership குழுவினர் சந்தித்தனர்!   |    மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர் சி வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.   |    எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!   |    அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்   |    'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!   |    ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!   |    துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!   |    சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் தடகள போட்டி இன்று துவங்கியது!   |    56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில் தேர்வு செய்யப்பட்ட 'லால் சலாம்'   |    நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |   

சினிமா செய்திகள்

நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'
Updated on : 11 August 2025

காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா,  பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu), ராம்  அச்சந்தா (Raam Achanta), கோபி அச்சந்தா (Gopi Achanta), 14 ரீல்ஸ் பிளஸ் (14 Reels Plus), M தேஜஸ்வினி நந்தமூரி (M Tejaswini Nandamuri) வழங்கும் #BB4 அகண்டா 2: தாண்டவம் பட டப்பிங்கை முடித்துள்ளார். இப்படம்  செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்கு வெளியாகிறது.



 



'காட் ஆஃப் தி மாஸஸ்' நந்தமூரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu) கூட்டணி, நான்காவது முறையாக இணைந்து, மிகவும் எதிர்பார்க்கப்படும், அதிக வரவேற்பைப் பெற்ற  'அகண்டா 2 : தாண்டவம்' படத்தில் பணியாற்றி வருகின்றனர். தற்போது போஸ்ட்-புரொடக்‌ஷன் கட்டத்தில் இருக்கும் இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில்,  மிகச்சிறந்த தொழில்நுட்பத் தரத்தில், பிரமாண்டமாகத் தயாராகி வருகிறது. 14 ரீல்ஸ் பிளஸ் பேனரின் கீழ் ராம் அச்சந்தா (Raam Achanta) மற்றும் கோபிசந்த் அச்சந்தா (Gopi Achanta) இணைந்து  தயாரிக்கும்  இந்தத் திரைப்படத்தை,  M தேஜஸ்வினி நந்தமூரி (M Tejaswini Nandamuri) பெருமையுடன் வழங்குகிறார். திரையரங்க வெளியீடு வேகமாக நெருங்கி வருவதால், மீதமுள்ள அனைத்து போஸ்ட்-புரொடக்‌ஷன் பணிகளையும் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே முடிக்க படக்குழு அயராது உழைத்து வருகிறது.



 



இப்படத்தின் டீசர் ஏற்கனவே இணையத்தையே பரபரப்பாக்கியுள்ளது. நந்தமுரி பாலகிருஷ்ணா இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு புதிய அவதாரத்தில் மிரட்டலான தோற்றத்தில் தோன்றி, ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளார். படத்தைக் காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.



 



டோலிவுட்டின் அதிர்ஷ்ட தேவதை எனக் கொண்டாடப்படும் நடிகை சம்யுக்தா (Samyuktha) மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பன்முகத் திறமை கொண்ட ஆதி பினிசெட்டி ( Aadhi Pinisetty) இப்படத்தில் தீவிரத்தையும் ஆழத்தையும் கொண்டு வரும்,  கதையில் தனித்து நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ஹர்ஷாலி மல்ஹோத்ரா (Harshali Malhotra) ஒரு முக்கிய வேடத்தில் டோலிவுட் அறிமுகமாகிறார்.



 



மிகச்சிறந்த தொழில்நுட்பக் குழுவினர் பணியாற்றும், அகண்டா 2: தாண்டவம் படத்தில் இசையமைப்பாளர் S. தமன் அற்புதமான இசையை வழங்குகிறார், C. ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். தம்மிராஜு  எடிட்டிங்  செய்கிறார், மேலும் அகண்டாவின் உலகத்தை  கலை இயக்குநர் A.S. பிரகாஷின் அற்புதமான அரங்க அமைப்புகளால் உயிர்ப்பித்துள்ளார்.



 



படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால், படத்தின் விளம்பர பணிகளைத் தீவிரப்படுத்தத் தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர், தொடர்ந்து புதுப்புது அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா