சற்று முன்

சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |    முதன்முறையாக தெலுங்கில் யோகி பாபு நடிக்கும் 'குர்ரம் பாப்பி ரெட்டி'   |    தந்தை மகன் உறவை அடிப்படையாக வைத்து உருவான ‘பறந்து போ’ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில்!   |    ‘அக்யூஸ்ட்’ வெற்றி நடை போடுவதை முன்னிட்டு காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!   |    அறிமுக நடிகர் வினோத் ஹீரோவாக நடிக்கும் 'பேய் கதை' பட இசை & முன்னோட்டம் வெளியானது!   |    ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் 'ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா'   |   

சினிமா செய்திகள்

ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!
Updated on : 11 August 2025

பல மொழிகளில் ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கும், ரியல் ஸ்டார் உபேந்திரா, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பான்-இந்தியா திரைப்படமான “நெக்ஸ்ட் லெவல்” மூலம், வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்.



 



சுவாரஸ்யமான கதை சொல்லல் மற்றும் அதிநவீன விஷுவல் (VFX) ஆகியவற்றுடன், தனித்துவமான திரை அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது.



 



இப்படத்தின் நாயகியாக, பல மொழிகளில் சிறப்பாக நடித்துப் புகழ்பெற்ற நடிகை  மலாஶ்ரீயின் (Malashree) மகள் ஆராதனா (Aradhana) நடிக்கிறார். பன்முக திறமையாளர் தர்ஷன் (Darshan) உடன் கடேரா ( Kaatera )  படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் இதயங்களை வென்ற ஆராதனா,  தற்போது  தன் இரண்டாவது படத்தில், இன்னொரு கன்னட சூப்பர் ஸ்டாரான உபேந்திராவுடன் திரையை பகிர இருக்கிறார்.



 



தருண் ஸ்டுடியோஸ் (Tarun Studios ) நிறுவனத்தின் சார்பில் தருண் சிவப்பா (Tarun Shivappa) தயாரிக்கும் இப்படத்தை, பிரபல இயக்குநர் அரவிந்த் கௌஷிக் (Aravind Kaushik) இயக்குகிறார்.கன்னடத் திரையுலகில் இதுவரை எடுக்கப்பட்ட தனித்துவமான வித்தியாசமான படங்களில் ஒன்றாகவும், பான்-இந்திய படமாகவும் இப்படம் உருவாகவுள்ளது.



 



இப்படத்தின் துவக்க விழா, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட முகூர்த்த விழாவுடன்  நடைபெற உள்ளது. இவ்விழாவில் பல டாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெறவுள்ளது.



 



இப்படத்தின் மிக முக்கிய VFX காட்சிகள், மிக உயர்ந்த தரத்தில், இந்தியாவிலும் கனடாவிலும் உள்ள முன்னணி கிராபிக்ஸ் ஸ்டுடியோக்களுடன் (graphics studios) இணைந்து உருவாக்கப்படவுள்ளது. குறுகிய காலத்திற்குள் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட படைப்பை வழங்கி, தேசிய அளவில் கன்னட சினிமாவுக்கு புதிய அளவுகோலை அமைப்பதே படக்குழுவின் இலக்காகும்.



 



‘ஏ’, ‘உபேந்திரா’ (A, Upendra) , ‘ரக்த கண்ணீரு’ (Raktha Kanneeru) போன்ற உபேந்திராவின் கல்ட் கிளாசிக் படங்களின் சாரமும் கதை சொல்லும் பாணியும்,நெக்ஸ்ட் லெவல் (Next Level) படத்தில் இருப்பதாக கூறப்படுவதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.



 



ரோஸ், மாஸ் லீடர் (சிவராஜ்குமார் உடன்) Rose, Mass Leader (with Shivarajkumar) , விக்டரி 2( Victory 2), காகி( Khaki), சூ மந்தர் (Choo Mantar) போன்ற படங்களை தயாரித்த தருண் சிவப்பா ( Tarun Shivappa), தனது மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக நெக்ஸ்ட் லெவல் படத்தை உருவாக்குகிறார். சூ மந்தர் படத்தில் பணியாற்றிய அனூப் கட்டுகரன், இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.



 



வலுவான தொழில் நுட்ப  குழுவும், வாகை சூடிய நட்சத்திர பட்டியலும் கொண்ட நெக்ஸ்ட் லெவல், திரைப்படம் சமீப காலத்தில் உருவாகும் மிக தனித்துவமான  கன்னட படங்களில் ஒன்றாக இருக்கும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா