சற்று முன்

பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |    20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள 'நாகபந்தம்' கிளைமேக்ஸ்   |    ’அகண்டா 2’ நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி - நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா   |    சென்னையில் கிறிஸ்தவர்கள் நடத்தும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாடு!   |    மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை JioStar Leadership குழுவினர் சந்தித்தனர்!   |    மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர் சி வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.   |    எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!   |    அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்   |    'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!   |    ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!   |    துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!   |    சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் தடகள போட்டி இன்று துவங்கியது!   |    56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில் தேர்வு செய்யப்பட்ட 'லால் சலாம்'   |    நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |   

சினிமா செய்திகள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!
Updated on : 11 August 2025

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை,  முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளார். 



 



கதையில் களத்தையும் கதாப்பாத்திரங்களையும் பிரதிபலிக்கும் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. 



 



டாணாக்காரன்  இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். 



 



ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம். 



 



நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க,  ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்‌ஷய் குமார் அறிமுகமாகிறார்.  இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.



 



செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ  சார்பில்  SS லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார்.    நிர்வாக தயாரிப்பாளராக  அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர். 



 



இப்படத்தின்  படப்பிடிப்பு சென்னை, வேலூர் சிவகங்கை ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்சன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் இசை மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா