சற்று முன்

ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |    விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இணைந்துள்ளார்!   |    நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!   |    இணையத்தில் வைரலாக பரவி வரும் 'வா வாத்தியார்' பட போஸ்டர்!   |    ஐசரி  K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!   |    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'ரஜினி கேங்' ஃபர்ஸ்ட் லுக்!   |    விஷ்ணு விஷாலுக்கு அமீர்கான் வில்லனா!   |    100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனை   |    TVAGA உடன் இணைந்து பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது   |    எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்துகொண்ட 'டஸ்வா' பிராண்ட் ஆடை திருவிழா!   |    தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகும் 'ராம்போ'!   |    மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' பட வெளியீட்டை அறிவித்தனர் படக்குழு!   |    'மூக்குத்தி அம்மன் 2', படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !   |   

சினிமா செய்திகள்

PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!
Updated on : 14 August 2025

இந்தியாவின் மிகப் பெரிய, பிரீமியம் திரையரங்க குழுமமான PVR INOX, ஹோம்பாலே பிலிம்ஸுடன் இணைந்து, சினிமா அனுபவத்தை தொடர்ந்து புதிய உச்சத்துக்கு எடுத்து சென்று வருகிறது. இந்த சுதந்திர தின வார இறுதியில், PVR INOX தனது புகழ்பெற்ற லோகோவில் (logo) காந்தாரா திரைப்படத்தின் அசத்தல் அம்சங்களை இணைத்து, அக்டோபர் 2 அன்று வெளியாகும் காந்தாரா: அத்தியாயம் 1க்கு ஒரு கண்கவர் முன்னோட்டத்தை வழங்கியுள்ளது.



 



இன்று முதல், ‘கூலி’ மற்றும் ‘வார் 2’ பார்க்க வரும் ரசிகர்கள், PVR INOX லோகோவை உயர் தரத்திலான ஃபயர் தீம் அனிமேசன் ( fire-themed animation ) வடிவில், அனைத்து திரையரங்குகளிலும் கண்டு ரசிக்க முடியும். அதிநவீன திரை-ப்ரொஜெக்ஷன் முறை மற்றும் நாட்டின் உச்சமான கலை  வடிவ ( state-of-the-art ) டிஜிட்டல் மாஸ்டரிங் தொழில்நுட்பத்தின் உதவியால் உருவாக்கப்பட்ட இந்த லோகோ, (logo) காந்தாராவின் மைய சக்தியையும் மற்றும் கலாச்சார ஆழத்தை வெளிப்படுத்துகிறது.



 



இந்த லோகோ (logo) மாற்றம், இந்த ஆண்டின் மிகப் பெரிய திரைப்பட நிகழ்வுகளில் ஒன்றிற்கு முன், ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் வகையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து PVR INOX திரையரங்குகளிலும் திரையிடப்படும்.



 



PVR INOX Ltd. – வருவாய் மற்றும் செயல்பாடுகள் தலைமை நிர்வாக அதிகாரி கவுதம் தத்தா கூறியதாவது..,



“சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல – அது ஒரு தேசத்தை ஒன்றிணைக்கும் உணர்வு. PVR INOX-ல், எப்போதும் திரையரங்கத்தைத் தாண்டிய, பிரமாண்டமான அனுபவங்களை உருவாக்க முயற்சித்து வருகிறோம். காந்தாராவின் மைய சக்தியை எங்கள் புகழ்பெற்ற லோகோவில் இணைப்பதன் மூலம், இந்தியாவின் செறிவான கலாச்சார கதைகளைப் போற்றுகிறோம். இது வெறும் லோகோ மாற்றம் அல்ல – ரசிகர்களை மறக்க முடியாத கதையுலகிற்குள் அழைக்கும் ஒரு அழைப்பிதழ்.”



 



ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறியதாவது..,



“இந்தியாவின் மிகப் பெரிய மல்டிப்ளெக்ஸ் குழுமம், உலகளவில் மிகப்பெரிய ரசிகர் தொடர்பை கொண்ட நிறுவனம், காந்தாராவை இப்படி தனித்துவமான முறையில் கொண்டாட முடிவு செய்திருப்பது எங்களுக்கு பெருமையாகும். இது மிகச் சிறப்பு வாய்ந்த ஐடியா, குறிப்பாக சுதந்திர தினத்தில், நமது செறிவான கலாச்சாரத்தை கொண்டாடும் முயற்சி. இத்தனை பெரிய குழுமத்துடன்  இணைந்து, நாங்கள் வெகு நம்பிக்கையுடன் சொல்லும் கதைகளை, உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.”



 



வரும் வாரங்களில், PVR INOX மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் மேலும் பல வகையான ஐடியாக்களின் அடிப்படையில் புதுமைகளை அறிமுகப்படுத்தி, ரசிகர்களை காந்தாரா உலகிற்குள் அழைக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள உள்ளன.



 



இத்தகைய முயற்சிகள் மூலம், PVR INOX மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ், இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தங்களின் முன்னணித் தலைமையையும், ரசிகர்களுக்கு மறக்க முடியாத, ஆழமான புதிய  அனுபவங்களை வழங்கும் பங்களிப்பையும் உறுதிப்படுத்துகின்றன.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா