சற்று முன்

அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |   

சினிமா செய்திகள்

அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்
Updated on : 22 September 2025

தனது தனித்துவமான இயக்கத்தில்  ரசிகர்களைக் கவர்ந்துள்ள சினிமா வித்தகர் பிரசாந்த் வர்மா, மீண்டும் ஆர்கேடி ஸ்டுடியோஸுடன் இணைந்து ஒரு மாபெரும் சூப்பர் ஹீரோ பிரம்மாண்டத்தை உருவாக்க உள்ளார்.



 



டோலிவுட்டில் ஜாம்பி வகை படத்தை அறிமுகப்படுத்தியதும், இந்தியாவின் முதல் ஒரிஜினல் சூப்பர் ஹீரோ சாகாவான ஹனுமான் படத்தை உருவாக்கியதும் இவர்தான். அந்த கனவை இன்னொரு படி முன்னேற்றும் விதமாக, இப்போது அவர் தனது அடுத்த அத்தியாயமான அதீராவை அறிமுகப்படுத்துகிறார். இதில், கல்யாண் தாசரி ஹீரோவாக தனது பிரம்மாண்ட அறிமுகத்தைச் செய்கிறார். அதோடு, முன்னணி நடிகர் எஸ்.ஜே.சூர்யா  இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.



 



ரிவாஸ் ரமேஷ் டுக்கால் தலைமையிலான ஆர்கேடி ஸ்டுடியோஸ், இந்த பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த புதிய திரைப்படத்தை ஷரண் கோப்பிசெட்டி இயக்குகிறார்.



 



இந்திய இதிகாசங்களின் சாரத்தை கொண்டும், நவீன திரைத்திறனுடன் இணைந்தும் உருவாகும் அதீரா, (PVCU)-  பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின்  அடுத்த அத்தியாயமாகும். இந்த யுனிவர்ஸின் ஒவ்வொரு பகுதியும்  தனித்துவமான பின்புலம், காட்சியமைப்பு, மற்றும் மிகப்பெரிய கதைக்களம் கொண்டதாக இருக்கும். ஆனாலும் அவை அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒரு முழுமையான சூப்பர்ஹீரோ யுனிவர்ஸாக  விரிகின்றன.



 



இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது  பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், படக்குழு எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளது.



 



போஸ்டரில் ஒரு மாபெரும் எரிமலை வெடித்து, தீக்கங்குகளை வெளிப்படுத்துகிறது. ஆகாயம் முழுவதும் புகை மற்றும் சாம்பலால் மூடப்படுகிறது. அந்தக் குழப்பத்திலிருந்து, எஸ்.ஜே.சூர்யா, காளை போன்ற கொம்புகளுடன், பழங்குடி போர்வீரர் தோற்றத்தில், கொடூரமான அசுரனாக எழுகிறார். அவருக்கு முன், கல்யாண் தாசரி சூப்பர் ஹீரோ வேடத்தில், நவீன போர்க்கவசம் அணிந்து, தன்னம்பிக்கையுடன் மண்டியிட்டு எழுந்து நிற்கிறார். இந்த காட்சி, ஒரு அபாரமான ஹீரோ–வில்லன் மோதலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. 



 



நம்பிக்கை vs இருள் எனும் இந்த மாபெரும் போராட்டத்தில், அதீரா தனது மின்னல் சக்திகளை வெளிப்படுத்தி, தர்மத்தைக் காப்பாற்றுகிறார். எரிமலை போல வெடிக்கும் அதீரா, பார்வையாளர்களின் உணர்ச்சிகளை திரையரங்கில் கவரப்போகிறார். அதிரடி சண்டைகள், மூச்சுத் திணற வைக்கும் காட்சிகள், மற்றும் பரபரப்பான டிராமா—இவை அனைத்தும் “மின்னல் முழக்கம்” போல உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.



 



பிரசாந்த் வர்மாவுடன் ஹனுமான் படத்தில் பணியாற்றிய ஷிவேந்திரா கேமரா பொறுப்பை ஏற்றுள்ளார். பின்னணி இசையில் சிறப்பான திறமைகொண்ட  ஸ்ரீ சரண் பகாலா இசையமைக்கிறார். ஸ்ரீ நாகேந்திர தங்காலா புரொடக்‌ஷன் டிசைன் கவனிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரைப் பின்னர் அறிவிக்கப்படவுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா