சற்று முன்

சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது!   |    ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம் ‘சிக்மா’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!   |    அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!   |    வெற்றிமாறனிடம் ராமர் மாட்டவில்லை, ராமரிடம் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் - விஜய் சேதுபதி   |    'ப்ரீ வெட்டிங் ஷோ' பிளாக்பஸ்டரை தொடர்ந்து தனது அடுத்த படத்தை அறிவித்த நடிகர் திரு வீர்!   |    'நாகபந்தம்' திரைப்படத்தின் ஆன்மீக பாடல் ‘ஓம் வீர நாகா’   |    2024 ஆண்டிற்கான சிறந்த கிறிஸ்தவ திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம்!   |    சிவாஜி கணேசன் பேரனுக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து!   |    டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் “ரெட்ட தல”   |    உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!   |    21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |   

சினிமா செய்திகள்

சிவாஜி கணேசன் பேரனுக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து!
Updated on : 11 November 2025

சத்ய ஜோதி பிலிம்ஸ் திரு. டி. ஜி. தியாகராஜன் வழங்க, தயாரிப்பாளர்களாக திரு. செந்தில் தியாகராஜன், திரு. அர்ஜுன் தியாகராஜன் மற்றும் திரு. சுப்பு பஞ்சு ஆகியோர் இணைந்து தயாரிக்க அனைவரும் எதிர்பார்க்கும் புதிய படைப்பாக “லெனின் பாண்டியன்” (Lenin Pandiyan) தற்போது உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை டி. டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார். 



 



சமீபத்தில் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள், இப்படத்தின் நாயகனும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனுமான நடிகர் தர்ஷன் கணேசன் அவர்களின் வரவிருக்கும் “லெனின் பாண்டியன்” திரைப்படத்துக்கு தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை வழங்கினார். இந்நிகழ்வில் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் திரு. டி. ஜி. தியாகராஜன், திரு. அர்ஜுன் தியாகராஜன், மேலும் திரு. ராம் குமார் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.



 



“லெனின் பாண்டியன்” திரைப்படத்தில் பல முக்கியமான நட்சத்திரங்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். இதில் தமிழ் திரைப்பட உலகின் பன்முக திறமையாளராக திகழும் கங்கை அமரன் நடித்துள்ளார். மேலும், நடிகை மற்றும் அரசியல்வாதியான ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழ் திரையுலகில் திரும்பி வருகிறார். இவர்களுடன் தர்ஷன் கணேசன், ஷ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



 



திரைப்படத்தின் இசையை திறமையான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உருவாக்குகிறார். ஒளிப்பதிவை ஏ. எம். எட்வின் சக்காய் கவனிக்க, தொகுப்பை நாகூரான் ராமச்சந்திரன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்துக்கு ஆத்தூரி ஜேகுமார், ஆக்‌ஷன் காட்சிகளுக்காக கலைமாமணி தளபதி தினேஷ், மற்றும் நடன வடிவமைப்புக்கு விஜயா மாஸ்டர் பொறுப்பேற்றுள்ளனர். படத்தின் பி.ஆர். நடவடிக்கைகளை சதீஷ் (AIM) மேற்கொள்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா