சற்று முன்

முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'   |    நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது   |    5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த 'சிக்மா' திரைப்பட டீசர்   |    களைகட்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!   |    விஜய் சேதுபதிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வைரல்!   |    Behindwoods Productions நிறுவனம் யூடுயூபில் வெளியிட்ட 'மூன்வாக்' படத்தின் மினி கேசட்!   |    சிறை ஒரு நிறைவான அனுபவம்! - தயாரிப்பாளர் SS லலித் குமார்   |    உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘மிஷன் சாண்டா’   |    குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்   |    வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது!   |    ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்   |    'வித் லவ்' படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் ரொமான்ஸ் மெலடி பாடல்!   |    மோகன்லாலின் ‘விருஷபா’ பட பாடலை, கர்நாடக துணை முதல்வர் வெளியிட்டார்!   |    யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை, அவர்தான் எனக்கு பிரேக் தந்தார் - நடிகர் சிவராஜ்குமார்   |    டிசம்பர் 24 முதல் ZEE5-ல் 'மிடில் கிளாஸ்'!   |    'தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்' என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும் இடம்   |    ஆகவே எனக்கு படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும் - விக்ரம் பிரபு   |    கிரிக்கெட் பின்னணியில் அமைக்கப்பட்ட ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ அறிமுக புரோமோ வெளியானது!   |    சிறந்த திரைப்பட விருதை வென்ற ராமின் ‘பறந்து போ’   |   

சினிமா செய்திகள்

ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம் ‘சிக்மா’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!
Updated on : 11 November 2025

சென்னை: தென்னிந்திய சினிமாவில் தரமான தயாரிப்புகளுக்கும் உலகளவில் பார்வையாளர்கள் மத்தியில் படங்களை கொண்டு போய் சேர்க்கும் உத்திக்கும் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ். இந்நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பான ஆக்‌ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படமான ’சிக்மா’ 65 நாட்களுக்கான படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தை சுபாஷ்கரனின்  லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது . நான்கு மாதங்கள் திட்டமிடப்பட்ட இந்தப் படத்தின் 95% ஷெட்யூல் நிறைவடைந்து உள்ளது . 



 



சமூக விதிமுறைகளை மீறி லட்சியத்துடன் தன் இலக்குகளைத் தொடரும்  அச்சமற்ற ஒருவனின் கதையைச் சொல்வதுதான் ‘சிக்மா’ திரைப்படம். இந்த திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் கலவையாக இருக்கும்.



 



நடிகர் சந்தீப் கிஷனை இந்தத் திரைப்படத்தில் முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக பார்க்கலாம். மொழி எல்லைகள் கடந்து ரசிகர்கள் மத்தியில் பான் இந்திய ஸ்டாராக இதன் மூலம் மாற இருக்கிறார் சந்தீப். அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜபே, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 



 



லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை செயல் அதிகாரி, தமிழ் குமரன் பகிர்ந்திருப்பதாவது, “இயக்குநர் ஜேசன் சஞ்சய் எங்களிடம் சொன்ன கதையை அப்படியே படமாக்கியிருக்கிறார். திரைக்கதையை திட்டமிட்டபடி, சொன்ன நேரத்திற்குள் படமாக்குவது அவரை முழுமையான இயக்குநராக மாற்றியிருக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் பட்ஜெட்டிற்குள்ளும் படமாக்குவதுதான் எந்தவொரு தயாரிப்பு நிறுவனத்தின் கனவு. திறமையான நடிகர்களுடன் 65 நாட்களில் 95% படப்பிடிப்பை முடிப்பது என்பது நிச்சயம் புதுமுக இயக்குநராக ஜேசன் சஞ்சயின் சாதனை. லைகா நிறுவனத்தில் ஜேசன் சஞ்சயை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். அவரது எதிர்காலத்திற்கும் வாழ்த்துகிறோம்” என்றார். 



 



’சிக்மா’ பட இயக்குநர் ஜேசன் சஞ்சய் பகிர்ந்து கொண்டதாவது, “’சிக்மா’ என்ற டைட்டில் பயமில்லாத, சுதந்திரமான, சமூகத்தால் முழுமையாக புரிந்து கொள்ள படாத ஒருவன் தன் இலக்குகளை நோக்கி நகர்வதை இந்தப் படம் பேசும். வேட்டை, கொள்ளை, காமெடி என இந்தப் படம் பரபரப்பான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும். தமனின் துடிப்பான இசையும் சந்தீப் கிஷனின் திறமையான நடிப்பும் லைகா புரொடக்‌ஷன்ஸின் பிரம்மாண்டமான தயாரிப்பும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத படமாக மாற்றும். இவர்களின் திறமை மற்றும் ஆதரவால்தான் குறிப்பிட்ட காலத்திற்குள் படப்பிடிப்பு முடிப்பது சாத்தியமானது. ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அது முடித்த பின்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி விடும். என்றார்.



 



தமிழ், தெலுங்கு உட்பட பன்மொழி படமாக உருவாகும் ’சிக்மா’ சென்னை, சேலம், தலகோனா மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. லைவ் லொகேஷன் மற்றும் கதையின் சாகசத்திற்கு ஏற்ற சிறப்பு செட்டும் அமைக்கப்பட்டுள்ளது.   

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா