சற்று முன்
சினிமா செய்திகள்
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க கூட்டம்
Updated on : 10 May 2015

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க கூட்டம் இன்று வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் காலை 9 மணியளவில் நடைபெற்றது.
விழாவில் கல்வியாளர்களான ஜெகத்ரட்சகன், A.C.சண்முகம், ஐசரி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கல்லூரிகளில் படிக்க இயக்குனர் சங்க உறுபினர்களின் பிள்ளைகள் படிக்க இன்ஜினியரிங் கல்லூரியில் மூவரும் இணைந்து தலா 30 இடங்களை இலவசமாக அளித்துள்ளனர்.
கலை அறிவியல் கல்லூரியில் படிக்க ஜெகத்ரட்சகன் 20 சீட்டுகள், A.C.சண்முகம் 20 சீட்டுகள், ஐசரிகணேசன் 20 சீட்டுகள் என்று மொத்தம் அறுபது சீட்டுகள் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக இந்த விழாவை ஏற்பாடு செய்தனர்.
மற்றும் விழாவில் இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் தனது உடலை சென்னை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மற்றும் செயற்குழு உறுப்பினர்களும், நிர்வாகிகளும் உடல் உறுப்பு தானம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
விழாவில் இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, வி.சேகர்,எஸ்.ஏ.சந்திரசேகர், மனோபாலா, கே.பாக்யராஜ், பாண்டியராஜன், கே.எஸ்.ரவிகுமார்,பாலா, , சித்ராலட்சுமணன், ராமதாஸ், ரமேஷ்கண்ணா, ரவிமரியா, விஜய், தயாரிப்பாளர் கலைபுலி.எஸ்.தாணு, கே.ஆர், பொன்வண்ணன்,ஆர்.கண்ணன் மற்றும் ஏராளமான இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய செய்திகள்
ஆஹா ஓடிடி யில் காதலர் தினமான இன்று இரவு 7 மணி முதல் 'மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்'
இன்று காதலர் தினத்தன்று ஆஹா தமிழ் அதன் புதிய வெப் சீரிஸ் "மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்" மூலம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காதலைக் கொண்டுவருகிறது.
மதுரை பையனுக்கும் சென்னைப் பெண்ணுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகளை ஆராயும் ஒரு மனதைக் கவரும் வெப் சீரிஸ் ஆக தயாரிக்கப்பட்டுள்ளது. மோதலில் தொடங்கும் இவர்களது தவிர்க்க இயலாத நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. காதலில் இணைய முடியாதபடி இரண்டு கதாபாத்திரங்கள் குறுக்கே வர, காதல் கை கூடியதா இல்லையா என்ற கதைக்களத்தை காமெடி கலந்த ஒரு நகைச்சுவை பேக்கேஜாக திரைக்கதை அமைந்துள்ளது.
பிரபல இணைய மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஏஞ்செலின் இந்த தொடரின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவருக்கு இணையாக தொடரின் நாயகனாக கண்ணா ரவி நடிக்கின்றார் .இவர்களுடன் ரேணுகா , குரேஷி, ஷ்யாமா ஷர்மி மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.
விக்னேஷ் பழனிவேல் இயக்கும் இந்த வெப் சீரிஸ் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காதலர் தினமான இன்று இரவு 7 மணி முதல் ஆரம்பமாகிறது . அதனை தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய எபிசொட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காதலை கொண்டாடும் இந்த தொடரை காதலர் தினத்தன்று ஆஹா ஓடிடி தளத்தில் காணத்தவறாதீர்கள் .
'டிராகன்' படத்தில் நான் தான் அவருக்கு வில்லன், ஆனால் நல்ல வில்லன் - இயக்குநர் மிஷ்கின்
'ஓ மை கடவுளே' புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'டிராகன்' திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் , கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ்ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியிருக்கிறார்.
வரும் 21ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டிராகன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி 1.3 கோடிக்கும் மேற்பட்டவர்களால் பார்வையிடப்பட்டு, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறியிருக்கும் நிலையில், படத்தை மேலும் ரசிகர்களிடம் சென்றடையச் செய்யும் வகையில் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் வெளியீட்டிற்கு முன்னரான பிரத்யேக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக் குழுவினர் கலந்து கொள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விக்னேஷ் சிவன் பேசுகையில், ''திரைப்பட விழாவிற்கு வருகை தந்தது போல் இல்லை. பிரதீப், அஸ்வத், அர்ச்சனா மேடம் என இங்கு என்னுடைய நண்பர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.
பிரதீப்புடன் இணைந்து 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்திற்காக அவரை சந்திக்கும் போது நான் என்னுடைய திரையுலக பயணத்தில் கடினமான சூழலில் இருந்தேன். இருந்தாலும் உடனடியாக என்னை அழைத்து நான் சொன்ன கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரையுலகில் திறமையான நடிகர்கள் இருப்பார்கள். நட்சத்திர நடிகர்கள் இருப்பார்கள். ஆனால் சிலரை மட்டும் தான் நாம் தொடர்ச்சியாக பின்பற்றுவோம். அவர்களுடைய உடல் மொழி, நடிப்பு , திரை உலகம் சார்ந்த பணிகள்.என சில நடிகர்களை தொடர்ந்து கவனித்து வரும் போது தான் நாம் அவர்களுடைய ரசிகர்களாக மாறி விடுவோம். இதைப்போல் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்கள் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்து விடுவார்கள். அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் தற்போது நடிகராக இருந்து நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று அவருடைய ஸ்டைலில் நடிக்கும் போது அதை ரசிக்கும் கூட்டம் உண்டு. இதன் எண்ணிக்கை அடுத்தடுத்து அவர் நடிப்பில் உருவாகும் படங்கள் வெளியான பிறகு அதிகரிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து- ஈகோ இல்லாத எளிமையாய் பழகக்கூடிய இனிய நண்பர். அவருடன் இணைந்து பணியாற்றும் போது எளிதாக இருந்தது. இந்த படத்தின் பாடல்களை எழுதும் போதும் மறக்க முடியாத அனுபவங்கள் உண்டு.
இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவாக ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களை எழுதும் போது இதயப்பூர்வமாக எழுதுவேன். சில பாடல்களை உணர்வுப்பூர்வமாக சிந்தித்து எழுதுவேன். நான் முதன்முதலில் பாடல் எழுதும் போது, 'வரிகள் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுது' என என்னை சிலம்பரசன் தான் ஊக்கப்படுத்தினார். அதன் பிறகு ஒவ்வொரு பாடல் எழுதும் போதும் பாடல் வரிகள் மீது கவனம் செலுத்தி வருகிறேன். அந்த வகையில் இந்தப் படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், இசையமைப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
'டிராகன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அனைவரும் 21ம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், ''இன்று நான் எந்த கெட்ட வார்த்தையையும் பேச மாட்டேன். ஒரு வருடம் வரை எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளக் கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் தயாரிப்பாளர் அகோரம் சார், அர்ச்சனா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய மூவர் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகத்தான் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன். அர்ச்சனா மற்றும் ஐஸ்வர்யா என இருவரும்.. அவர்கள் தயாரிக்கும் படங்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள். அவர்கள் மேலும் தொடர்ந்து வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
பிரதீப், புரூஸ் லீ போன்றவர். அவர் இதுவரை ஆக்ஷன் படங்களில் நடிக்கவில்லை. ஒரு வேளை என்னுடைய இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கலாம். நீண்ட நாள் கழித்து திரையுலகில் நான் ஒரு யங் ஸ்டாராக பிரதீப்பை பார்க்கிறேன். அவர் ஒரு பிரைட்டஸ்ட் ஸ்டார். அவர் இதற்காக கடுமையாக உழைக்கிறார், உழைத்து வருகிறார்.
இந்தப் படத்தில் நான் தான் அவருக்கு வில்லன். ஆனால் நல்ல வில்லன். படப்பிடிப்பு தளத்தில் நானும், அவனும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் போது அவனுடைய அர்ப்பணிப்பை கவனித்து பிரமித்தேன். இயக்குநருக்கான நடிகராக இருக்கிறார். நானும் ஒரு இயக்குநர் என்பதால் இதனை என்னால் உறுதியாக கூற முடிகிறது. இதற்காக நான் அவரை மனதார பாராட்டுகிறேன். கேரக்டருக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டே இருக்கிறார். நடிக்கும் போது அவரிடம் ஒரு தனித்துவமான உணர்வு வெளிப்படுகிறது. இது அவரை மேலும் உயரத்திற்கு அழைத்துச் செல்லும். அவருக்கு தொடர்ந்து வெற்றிகள் குவியும்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து படப்பிடிப்பு தளத்தில் கடுமையாக உழைப்பவர். அவர் இயக்கிய இந்த படம் மிக எளிதாக பெரிய வெற்றியை பெறும். ஏனெனில் இந்தக் கால இளைஞர்களுக்கான ஒரு நீதியை அவர்கள் விரும்பும் ஸ்டைலில் சொல்லி இருக்கிறார். இது ஒரு எளிமையான கதை அல்ல. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான உந்துதலை வழங்கும் படமாக இருக்கிறது. இதற்காக அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்லூரியில் படிக்கும் இளைஞன் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற அனுபவத்தின் மூலமாக விவரித்திருக்கிறார். சொன்ன விதமும் உற்சாகத்துடன் இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. அவரும் மிக திறமையான படைப்பாளி. இன்னும் கூடுதல் உயரத்திற்கு செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன்,'' என்றார்.
இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் பேசுகையில், ''இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து குறித்து மிஷ்கின் சொன்னது உண்மைதான். படப்பிடிப்பு தளத்தில் அவர் மிகவும் கறாரான பேர்வழி. ஆனால் ஒருபோதும் சோர்வடையாமல் உற்சாகமாக பணியாற்றிக் கொண்டே இருப்பார். படப்பிடிப்பு தளத்தில் நடிக்கும் அனைத்து கலைஞர்களிடமும் காட்சிகளைப் பற்றி விரிவாக விளக்கம் அளிப்பார்.
நான் தற்போது ஏராளமான புதுமுக இயக்குநர்களுடன் தான் இணைந்து பணியாற்றுகிறேன். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். இந்தப் படத்திலும் படப்பிடிப்பு தளத்தில் இவர் என்னைப் போல் அல்லாமல் அமைதியாக பணிபுரிந்தார். இவருக்கு பதிலாக ஒளிப்பதிவாளர் படப்பிடிப்பு தளத்தில் உரத்த குரலில் ஆணையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தான் இனிமேல் நாமும் படப்பிடிப்பு தளத்தில் உரத்த குரலில் பேசுவதை விட ஒளிப்பதிவாளரை பேசவிட வேண்டும் என கற்றுக் கொண்டேன். இருந்தாலும் அஸ்வத் கடின உழைப்பாளி. அவர் கதை சொன்ன விதம் நன்றாக இருந்தது. சொல்வதில் புதிய அம்சங்கள் இருந்தது. அதில் ஒரு இயற்கையான உணர்வும் இருந்தது. இந்தத் திரைப்படத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் பொழுது போக்கு அம்சங்களும் இருக்கின்றன. இதற்காக இயக்குநர் அஸ்வத்திற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏ.ஜி.எஸ் தயாரிப்பாளர்களை நீண்ட நாட்களாகவே எனக்கு தெரியும். அவரகளை நான் தூரத்தில் இருந்தே ரசிக்கிறேன். அவர்களின் தயாரிப்பில் வெளியாகும் படங்கள் ஒவ்வொன்றும் தரமானதாகவும், வெற்றி பெறக் கூடியதாகவும் இருக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் இணையும்.
நடிகர் பிரதீப் இயக்கத்தில் உருவான 'கோமாளி' படத்தில் நானும் நடித்திருந்தேன். அந்தப் படத்தில் கடுமையாக உழைத்துக் கொண்டே இருப்பார். சாப்பிட கூட பல தருணங்களில் மறந்து விடுவார். இதுகுறித்து அப்படத்தின் நாயகனான ரவியுடனும் பேசி இருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் அதற்கு நேர் எதிராக இருக்கிறார். இந்த படத்தில் சரியாக சாப்பிடுகிறார். ஆனால் இடைவேளை இல்லாமல் பணியாற்றுகிறார்.
பிரதீப்பின் நடிப்பு தொடர்பாக இயக்குநர் மிஷ்கின் சொன்ன ஒரு விசயம் உண்மைதான். அவர் இயக்குநர்களின் நடிகர். படப்பிடிப்பு தளத்திற்கு நேரம் தவறாமல் வருவது, இயக்குநரின் கண் பார்வை செல்லும் இடத்தில் நிற்பது, இயக்குநர் என்ன சொன்னாலும் சரி என ஒப்புக் கொள்வது, என பல நல்ல விஷயங்கள் பிரதீப்பிடம் இருக்கிறது.
பெருமைக்காக சொல்லவில்லை. 50 ஆண்டுகளுக்கு பிறகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் இப்படித்தான் இருக்கிறார். ரஜினி சார் திரைக்கதை விவாதத்தின் போது தான் கலந்து கொண்டு ஆலோசனைகளை கூறுவார். ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டால் இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு நடிப்பார். அவர் செய்து கொண்டிருப்பதை தான் பிரதீப்பும் செய்கிறார். இதனை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நடிகராக இருந்தாலும் படம் இயக்குவதை தவிர்த்து விட வேண்டாம். படத்தை இயக்குவதிலும் கவனம் செலுத்துங்கள் பிரதீப். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்,'' என்றார்.
நடிகை கயாடு லோஹர் பேசுகையில், ''இது எனக்கு முதல் மேடை. சற்று பதற்றமாக இருக்கிறது. இந்த விழாவிற்காக நேரம் ஒதுக்கி வருகை தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்து சிறிய வயதில் நடிகை ஸ்ரீதேவியின் நடனத்தாலும், நடிப்பாலும் ஈர்க்கப்பட்டு நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டு, இன்று இந்த மேடையில் நிற்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் சகோதரர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல் நாள் படப்பிடிப்பின் போது எனக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கும் சிறிய அளவில் தவறான புரிதல் இருந்தது. அவர் கடுமையான உழைப்பாளி. பொறுமை மிக்க இயக்குநர். என் மீது நம்பிக்கை வைத்து எனக்கான கேரக்டரை வடிவமைத்திருந்தார்.
பிரதீப் ஒரு இன்ட்ரோவர்ட் பர்சன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பழகும் போது தான் அவர் ஒரு கதாசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முக ஆளுமை மிக்க திறமைசாலி என தெரியவந்தது. நட்புணர்வு மிக்கவர். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. தற்போது அவர் என்னுடைய இனிய நண்பராக மாறிவிட்டார். இதற்காகவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர்கள் ரவிக்குமார் - கௌதம் வாசுதேவ் மேனன் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மறக்க முடியாது. அவர்களின் இயக்கத்தில் நடிக்கவும் விரும்புகிறேன்.
தமிழ் மக்கள் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். இதற்காக அவர்களுக்கு எப்போதும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 21ம் தேதி அன்று ரசிகர்களை திரையரங்குகளில் சந்திக்கிறேன்," என்றார்.
இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் பேசுகையில், ''இந்த மேடையில் நிற்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் டிராகன் திரைப்படத்தில் பணியாற்ற காரணமாக இருந்த என்னுடைய இனிய நண்பர் அஸ்வத் மாரிமுத்துவுக்கும் நன்றி.
அஸ்வத் மாரிமுத்து இந்த கதையை என்னிடம் முதன்முதலாக சொல்லும் போதே நான் வியந்து விட்டேன். இன்று முழு திரைப்படத்தையும் பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய திரையுலக பயணத்தில் 'டிராகன்' ஃபேவரிட் ஆன படம் என உறுதியாக சொல்வேன். படம் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வு ரசிகர்களுக்கும் ஏற்படும் என நம்புகிறேன். இந்தப் படத்தின் இடம் பெற்ற பாடல்கள் வெளியான போது கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக பணியாற்றிய பாடலாசிரியர்கள், பாடகர்கள், பாடகிகள், இசைக் கலைஞர்கள் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ''இது எங்கள் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் 26வது திரைப்படம். ரொம்ப ஸ்பெஷலான படம். ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திற்கும் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்பது இலக்காக இருக்கும். அதே தருணத்தில் அர்த்தமுள்ள படைப்புகளை வழங்க வேண்டும் என்ற கனவும் இருக்கும். வெற்றியும், கனவும் இணைந்து ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்றால் அது கடினம். ஆனால் அது போன்றதொரு கமர்ஷியல் அம்சங்களும், கனவுகளும் இணைந்த படம்தான் 'டிராகன்'.
இந்தப் படத்தை முதலில் பார்த்துவிட்டு இயக்குநருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஒரு திரைப்படம் தயாராவது எளிதல்ல, அதன் பின்னணியில் மிகப்பெரிய குழுவினரின் கடின உழைப்பு இருக்கும். இந்தத் தருணத்தில் அந்த குழுவில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படத்தில் கே. எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் என மூன்று இயக்குநர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த மூவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இயக்குநர் மிஷ்கினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் நடிகை கயாடு லோஹரை வரவேற்கிறேன். எங்கள் நிறுவனம் எமி ஜாக்சன் போன்ற ஏராளமான நடிகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. நீங்களும் உங்களுடைய கடின உழைப்பால் நிறைய வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
அனுபமா பரமேஸ்வரன் இந்த நிகழ்விற்கு வரவில்லை என்றாலும் படத்தில் அற்புதமான கேரக்டரில் நடித்திருக்கிறார். அவருக்கும் வாழ்த்துகள்.
படத்தில் பணியாற்றிய ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தி
மடோனா செபாஸ்டியன் நடிக்கும் காதல்-நகைச்சுவை திரைப்படம் 'ஹார்ட்டின்'
துடிப்புமிக்க இளம் திறமைகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 'ஹார்ட்டின்'.
தலைப்புக்கேற்றார் போல் இளமை ததும்பும் ஃபீல் குட் படமாக தயாராகி வரும் 'ஹார்ட்டின்' திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்குகிறார்.
'மகான்', 'பேட்ட', 'ஜில் ஜங் ஜக்' புகழ் சனந்த் இப்படத்தில் நாயகனாக நடிக்க மடோனா செபாஸ்டியன் மற்றும் புதுமுகம் இமயா நாயகிகளாக நடிக்கின்றனர். பிரபல நடிகர்கள் இதர முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஹார்ட்டின் திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், "ரோம்-காம் என்று சொல்லப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதை இது. அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கி வருகிறோம். 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. 2025 கோடை விடுமுறைக்கு 'ஹார்ட்டின்' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.
இந்த திரைப்படத்திற்கு 'சுழல்' இணையத் தொடர் மற்றும் 'கொலைகாரன்' புகழ் முகேஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'நேரம்', 'பிரேமம்', 'கோல்டு' உள்ளிட்ட சூப்பர் ஹிட் மலையாள படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார்.
படத்தொகுப்பை 'குட் நைட்' மற்றும் 'லவ்வர்' புகழ் பரத் விக்ரமன் கையாள, கலை இயக்கத்தை ஜி துரைராஜ் ('கருடன்', 'அயோத்தி' புகழ்) மேற்கொண்டுள்ளார். 'விடுதலை 2' மற்றும் 'வெந்து தணிந்தது காடு' உள்ளிட்ட படங்களின் கதாபாத்திரங்களுக்கு ஆடைகளை வடிவமைத்த உத்தரா மேனன் 'ஹார்ட்டின்' படத்தின் ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.
திறமைமிக்க கலைஞர்களின் பங்களிப்போடு டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிப்பில் உருவாகி வரும் 'ஹார்ட்டின்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ஆல்பம் 'பட்டி'
காதலும் இசையும் இணைபிரியாதது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த வருட காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ஆல்பம் 'பட்டி' ('Buddy').
காதலின் உணர்வுகளான மகிழ்ச்சி மற்றும் வலியை இதயத்தை தொடும் வகையில் இசை மற்றும் காட்சிப்படுத்தி இருக்கும் 'பட்டி' ஆல்பத்தை வார் ஹார்ஸ் புரொடக்ஷன்ஸ் பேனரில் தீபா லக்ஷ்மண் பிரபு தயாரிக்க சத்தியசீலன் இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விவேக்கின் வரிகளுக்கு பிரியா மாலி இசையமைத்து பாடியுள்ளார்.
'கனா' புகழ் தர்ஷன் மற்றும் 'தியா' புகழ் குஷி ரவி முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'பட்டி' ஆல்பத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபல ஏபி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது.
சுதந்திரமான பெண்ணாக வாழும் தீபா பாத்திரத்தை சுற்றி ஆல்பம் சுழல்கிறது. காதலனை பட்டி (Buddy - தோழன்) என்று அழைக்கும் அவளுக்கு பைக் ஓட்டுவது, துல்லிய ஒலிகளை கேட்பது என்றால் கொள்ளை பிரியம். காதலர்கள் இருவரும் ஏற்காட்டுக்கு பைக்கில் செல்லும் போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. இது அவர்களது வாழ்க்கையை எப்படி புரட்டி போட்டது என்பது தான் 'பட்டி'.
'பட்டி' ஆல்பத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆரல் ஆர் தங்கம் படத்தொகுப்பை கையாள, பிரவீன் ஜி நடனம் அமைத்துள்ளார்.
வார் ஹார்ஸ் புரொடக்ஷன்ஸ் தீபா லக்ஷ்மண் பிரபு தயாரிப்பில் சத்தியசீலன் இயக்கத்தில் பிரியா மாலி இசையில் விவேக் வரிகளில் தர்ஷன், குஷி ரவி நடிப்பில் உருவாகியுள்ள உணர்ச்சிப்பூர்வ இசை ஆல்பமான 'பட்டி' ஏபி இன்டர்நேஷனல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு பாராட்டுகளை குவித்து வருகிறது.
'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் பான் இந்திய படத்தில் இணைந்த பாலிவுட் ஜாம்பவான் அனுபம் கேர்!
ப்ளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களான சலார் மற்றும் கல்கி 2898 கிபி ஆகிய படங்களின் மூலம் வெற்றியின் உச்சத்தில் இருக்கும் 'ரெபல் ஸ்டார் ' பிரபாஸ் தற்போது படைப்பாற்றல் மிக்க இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கும் பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்திய அளவில் புகழ்பெற்ற பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம்- வாழ்க்கையை விட மிகப்பெரிய கூறுகள் நிறைந்த பிரம்மாண்டமான படைப்பாக இருக்கும் என உறுதி அளிக்கிறது.
இந்த திரைப்படத்தில் பாலிவுட் ஜாம்பவான் அனுபம் கேர் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை நடிகரே பகிர்ந்து கொண்டுள்ளார். தான் ஏற்று நடிக்கும் கேரக்டர்களை கவனமாக தேர்வு செய்யும் அனுபம் கேர், இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்துவிட்டு 'அற்புதம்!' எனக் கூறியிருக்கிறார். அத்துடன் பிரபாஸுடன் திரையை பகிர்ந்து கொள்வதில் உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் ஹனு ராகவபுடியின் திறமையையும் அவர் பாராட்டினார். இதைவிட வாழ்க்கையில் வேறு என்ன கேட்க முடியும்? என்றும் அனுபம் கேர் கேட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்..
'' அறிவிப்பு : இந்திய சினிமாவின் #பாகுபலியுடன் எனது 544 வது பெயரிடப்படாத படத்தில் இணைந்திருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரே ஒரு #பிரபாஸ், நம்ப முடியாத திறமை மிக்க ஹனு ராகவபுடி இப்படத்தை இயக்கியுள்ளார். அத்துடன் மைத்ரி மூவி மேக்கர்ஸின் அற்புதமான குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது. எனது அருமை நண்பரும், புத்திசாலியுமான ஒளிப்பதிவாளர் #சுதீப் சாட்டர்ஜி தான் இதில் பணியாற்றுகிறார். 'இது ஒரு அற்புதமான கதை. வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்? நண்பர்களே! வெற்றி பெறுங்கள்! ஜெய் ஹோ!'' என பதிவிட்டிருக்கிறார்.
'ரெபல் ஸ்டார்' பிரபாஸ்- ஹனு ராகவபுடி - மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இது.
1940களில் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த வரலாற்று புனைவு கதை / மாற்று வரலாறு. போர் மட்டும் தான்...உலகத்திலிருந்து மறைக்கப்பட்ட மற்றும் புதைக்கப்பட்ட அநீதிகளுக்கும், மறக்கப்பட்ட உண்மைகளுக்கும் ஒரே தீர்வு என்று நம்பிய சமூகத்திலிருந்து... அதன் நிழல்களிலிருந்து... எழுந்த ஒரு போர் வீரனின் கதை.
இப்படத்தில் பிரபாஸுற்கு ஜோடியாக நடிகை இமான்வி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் முன்னாள் பிரபல நடிகர்கள் மிதுன் சக்கரவர்த்தி- ஜெயப்பிரதா ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். சர்வதேச தரத்திலான தயாரிப்பு மற்றும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் அதிக பொருட் செலவில் இப்படம் தயாராகிறது.
நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். சுதீப் சட்டர்ஜி ISC ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் கவனிக்க, தயாரிப்பு வடிவமைப்பை அனில் விலாஸ் ஜாதவ் கையாளுகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
சந்தோஷ் நாராயணனின் வசீகரிக்கும் இசையில் 'வா வாத்தியார்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடித்திருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் இடம்பெற்ற 'உயிர் பத்திக்காம..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் டீஸர் வெளியாகி ஏழு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. இந்நிலையில் 'வா வாத்தியார்' படத்தில் இடம்பெற்ற ' உயிர் பத்திக்காம..' எனத் தொடங்கும் முதல் பாடலும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகர் விஜய் நாராயண்- பின்னணி பாடகி ஆதித்யா ரவீந்திரன் - பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். தமிழ் திரையிசையுலகின் ட்ரெண்ட்செட்டரான சந்தோஷ் நாராயணனின் வசீகரிக்கும் இசையில் உருவான இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
“ரெட்ரோ” படத்தின் “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் “ரெட்ரோ” படத்திலிருந்து, அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் ரசிகர்களை மனங்களை கொள்ளை கொள்ளும் அழகான மெலோடி பாடலாக “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இப்பாடலை, பாடலாசிரியர் விவேக்கின் அற்புதமான வரிகளில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ளார். இப்பாடல் வெளியானவுடனே, இசை ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
சூர்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி மேற்கொண்டிருக்கிறார்.
ஆக்சன் கலந்த ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் ,ஊட்டி, கேரளா, சென்னை ஆகிய இடங்களில் நான்கு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இப்படம் உலகமெங்கும் வரும் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
அதர்வா முரளி நடிப்பில் முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும் ரொமான்ஸ் திரைப்படம் 'இதயம் முரளி'
Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், “இதயம் முரளி” படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெகு கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாக நுழைந்து, முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில், தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, #STR49 படத்தினைத் தொடர்ந்து, 4 வது படைப்பாக, முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக, அதர்வா முரளி நடிப்பில் “இதயம் முரளி” படத்தைத் தயாரிக்கிறது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures. “இதயம் முரளி” படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
கல்லூரியில் நடந்த விழாவினில் இப்படத்தின் டைட்டில் டீசர் ஒளிபரப்பட்டபோது, ரசிகர்களின் உற்சாக கூச்சல் விண்ணைப் பிளந்தது.
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் படத்திற்கு, இதயம் முரளி தலைப்பிடப்பட்டு அறிவிக்கப்பட்டது, ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இப்படத்தில் பங்கு பெற்றுள்ள நடிகர்கள் குழு கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் அவர்களுடன் உரையாடி, பாடல்கள் பாடி, படத்தின் தகவல்களை பகிர்ந்து கொண்டு, விழாவை சிறப்பித்தனர்.
இவ்விழாவில் கலந்துகொண்ட
நடிகை மற்றும் தொகுப்பாளணி ஏஞ்சலினா பேசியதாவது…
தொகுப்பாளிணியாக இருப்பதை விட இப்போது நடிப்பது பிடித்திருக்கிறது. இது எனக்கு மிகவும் முக்கியமான படம். இந்த வாய்ப்பைத் தந்த ஆகாஷுக்கு நன்றி. இப்படத்தின் ஷீட்டிங்கிற்கு நானும் அமெரிக்கா செல்கிறேன் என நினைக்கிறேன். இப்போது தான் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த டீசர் அனைவருக்கும் பிடித்துள்ளது என நம்புகிறேன். அதே போல் படமும் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் ரக்ஷன் பேசியதாவது…
ஆகாஷ் தமிழ் சினிமாவில் புயல் போல நுழைந்து, பெரிய பெரிய படங்கள் செய்து வருகிறார். உண்மையில் அவர் தயாரிப்பாளர் என்பதை விட இயக்குநர் தான். அவர் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. இந்த டீசரே கலக்கலாக இருக்கிறது. படத்தில் நானும் அதர்வாவுடன் அமெரிக்கா செல்வேன். இந்தப்படம் இளைஞர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்.
நடிகை பிரக்யா நாக்ரா பேசியதாவது…
இப்படத்தில் அதர்வா முரளி அவர்களுடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரது அப்பாவின் புகழ்பெற்ற கதாபாத்திரம் இப்படத்தின் தலைப்பாக அமைந்தது மகிழ்ச்சி. என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநர் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி.
நடிகை கயாது லோஹர் பேசியதாவது…
தமிழ் சினிமா ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பும், அன்பும், மிகப்பெரிய மகிழ்ச்சியை தருகிறது. இந்த அன்புக்கு பதிலாக, நல்ல படங்கள் மூலம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவேன். இது தான் நான் ஒப்பந்தாமகிய முதல் தமிழ்ப்படம், இந்த வாய்ப்பை வழங்கிய ஆகாஷுக்கு நன்றி. இந்தப்படத்திற்காக உங்களைப் போல நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.
பரிதாபங்கள் புகழ் சுதாகர் மற்றும் டிராவிட் பேசியதாவது…
ஒன் சைட் லவ் இல்லாத ஆளே கிடையாது, சிலருக்கு ஒன் சைட் லவ் கடைசி வரை ஒன் சைடாகவே இருந்து விடும், பலர் அந்த கட்டத்தை தாண்டி விடுவார்கள். ஆனால் அந்த உணர்வு அலாதியானது. நாங்கள் இருவரும் இந்தப்படத்தில் நாயகனின் நண்பர்களாக வருகிறோம். இந்த வாய்ப்பைத் தந்த ஆகாஷ் பிரதருக்கு நன்றி. இந்த ஷீட்டிங் எப்போதும் ஜாலியாக இருக்கும். ஷீட்டிங் எப்போது நடக்கும் என எதிர்பார்ப்போடு இருப்போம். ஆகாஷ் மிகத் திறமையானவர். எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
பாடலாசிரியர் விவேக் பேசியதாவது…
இந்த டீம் மிக அற்புதமான டீம். இவர்களுடன் வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம். ஆகாஷ் மிகத் திறமையான இயக்குநர். அவரும் தமனும் சேர்ந்து அட்டகாசமான ஒரு ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தமன் பிரதர் எனக்கு எப்போதும் அட்டகாசமான பாடல்கள் தந்துள்ளார். அவருக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அதர்வாவுடன் வேலை பார்ப்பதை பெருமையாக கருதுகிறேன். இப்படத்தில் நிறைய திறமையாளர்கள் இருக்கிறார்கள், அவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
பாடகி, நடிகை ஜொனிடா காந்தி பேசியதாவது…
நான் நடிக்கும் முதல் திரைப்படம் இது. என்னை நடிக்க ஊக்கப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி. இப்படத்தின் டீசர், மிக அட்டகாசமாக வந்துள்ளது. எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இயக்குநர் ஆகாஷுடன் வேலை பார்க்க ஆவலாக உள்ளேன். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகை நிஹாரிகா பேசியதாவது…
இயக்குநர் ஆகாஷுடம் தான், என் நடிப்பு பற்றி கேட்க வேண்டும். டீசர் அனைவருக்கும் பிடித்துள்ளது என நம்புகிறேன். இப்படம் நட்பு, காதல் பற்றியது என் கதாப்பாத்திரம் ரசிகர்களுக்கு பிடிக்கும். இந்த டீமுடன் வேலை பார்ப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.
நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசியதாவது…
ரசிகர்கள் எனக்கு தந்து வரும் அன்புக்கு நன்றி. இப்படத்தின் கதை பற்றி இப்போது சொல்ல மாட்டேன், உங்களுக்கு நிறைய ஆச்சரியம் உள்ளது. நம்முடைய கல்லூரி காலங்களில் நாம் நிறைய பேரை சந்திப்போம், பல அனுபவங்கள் இருக்கும், அதை ஞாபகப்படுத்தும் படமாக இப்படம் இருக்கும். இந்த டீம் ஃபேமிலி மாதிரி, ஷூட்டிங் மிக ஜாலியாக இருக்கிறது. படம் மிக நன்றாக இருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் தமன் பேசியதாவது,..
நான் நடிப்பேன் என நினைக்கவில்லை, எனக்கு ஜோடி நிஹாரிகா என சொல்லி என்னை இம்ப்ரெஸ் பண்ணி விட்டார் ஆகாஷ். கௌதம் மேனன், ஜீவா கலந்த கலவையாக ஆகாஷ் உள்ளார். கண்டிப்பாக ஜாலியான படமாக இருக்கும். ரொம்ப நல்ல லவ் ஸ்டோரி. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி.
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியதாவது…,
தயாரிப்பபை விட இயக்கம் தான் ஈஸி, சின்ன வயதிலிருந்து எனக்கு இயக்குநராகும் ஐடியா இருந்தது. ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டுமென உருவாக்கிய திரைக்கதை இது. இப்படம் நம் காதல், நட்பை ஞாபகப்படுத்தும். இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அனைவருக்கும் நன்றி. ஒரு அழகான காதல் படமாக இருக்கும் நன்றி.
நடிகர் அதர்வா பேசியதாவது…,
ஒன் சைட் லவ் எப்போதும் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம், என் அப்பாவின் கொண்டாடப்பட்ட டைட்டில் இதயம் முரளி, என்னுள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான், எல்லோருக்குள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான், அதைக் கொண்டாடும் வகையில் மிக அழகான காதல் படமாக இருக்கும். இயக்குநர் ஆகாஷுக்கு நன்றி. இதயம் முரளி என்பது மிகவும் உணர்வுப்பூர்வமான விசயம், ஆகாஷ் மிகப்பெரிய தயாரிப்பாளர், அவரை ஒரு இயக்குநராகத் தான் தெரியும். இந்தக்கதையை 2017ல் சொன்னார், அப்போது அது நடக்கவில்லை, பின்பு தயாரிப்பாளராக மாறிவிட்டார், அதன் பிறகு இப்போது இந்தப்படம் செய்யலாம் என்றார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. கண்டிப்பாக இப்படம் ஒரு நல்ல படமாக இருக்கும் நன்றி.
காதலின் மெல்லிய உணர்வுகளை கொண்டாடும் ஒரு படைப்பாக உருவாகி வரும் இப்படத்தின் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.
பாட்ஷா கிச்சா சுதீப்பின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் 'மேக்ஸ்' ZEE5-ல்!
ZEE5, 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய கன்னட மாஸ் திரில்லரான “மேக்ஸ்” திரைப் படத்தை, 15 பெப்ரவரி 7:30 PM அன்று டிஜிட்டல் பிரீமியரில் வெளியிடுகிறது! இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ள “மேக்ஸ்” திரைப்படம், பரபர திரைக்கதையுடன், ஆக்சன் ரோலர்கோஸ்டர் அனுபவமாக உருவாகியுள்ளது. பாட்ஷா கிச்சா சுதீப் மிக சக்திவாய்ந்த மாஸ் அவதாரில் நடித்து அசத்தியுள்ளார் !
இந்த கதையானது தனி ஒருவனின் தைரியம், சர்வைவல் மற்றும் பழிவாங்கலைச் சுற்றி ஒரு பரபரப்பான திரை அனுபவத்தைத் தருகிறது. ஒவ்வொரு நொடியும் பரபரக்க வைக்கும், இப்படம் திரையரங்குகளில் பெரும் வெற்றியை பெற்றது. “மேக்ஸ்” படத்தை ZEE5 இல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில், விரைவில் அனைவரும் கண்டு ரசிக்கலாம்.
பாட்ஷா சுதீப்புடன் இணைந்து, இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சாம்யுக்தா ஹோர்னாட், ஸுக்ருதா வாகிளே, சுனில் மற்றும் அனிரூத் பட் போன்ற பல பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேக்ஸ் படம் 2024 ஆம் ஆண்டின் மிக அதிக வருவாய் ஈட்டிய கன்னடப் படம் எனும் சாதனையை செய்துள்ளது. தற்போது ZEE5 இல் இப்படம் டிஜிட்டல் பிரீமியர் ஆகிறது.
“Max” திரைப்படத்தின் கதை, போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள அர்ஜூன் மகாக்ஷய் (கிச்சா சுதீபா) என்னும் கதாபாத்திரத்தைப் பற்றி பேசுகிறது. அவர் தனது பதவியேற்புக்கு, ஒரு நாள் முன் அந்த ஊருக்கு வருகிறார். சக்திவாய்ந்த அமைச்சர்களின் இரு இளம் பிள்ளைகள், அவர் பதவியேற்கும் காவல் நிலையத்தில் மர்மமாக இறந்துவிட்டதால், அர்ஜூன் தனது சக ஊழியர்களின் உயிரைக் காக்க, அரசியல்வாதிகளுக்கும் கேங்க்ஸ்டர்களுக்கும் எதிராக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான். அந்த ஒரு இரவில் நடைபெறும் அதிரடி திருப்பங்கள், பரபர சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.
ZEE5 சார்பில் கூறப்பட்டதாவது:
“இந்த ஆண்டின் மிகப்பெரும் பிளாக்பஸ்டரான மேக்ஸ் திரைப்படத்தை, ZEE5 இல் பல மொழிகளில் அனைத்து பார்வையாளர்களுக்கும் கொண்டு வருவதில் மிகவும் உற்சாகமாக இருக்கின்றோம். கிச்சா சுதீப் மற்றும் இந்த படத்தின் திறமையான குழுவுடன் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி. மேக்ஸ் ஒரு அதிரடி அனுபவத்தை தரும் படம், மேலும் இப்படம் பார்வையாளர்களை அதிரடி ஆக்சன் கதை, பரபர திரைக்கதை, மற்றும் சுதீப்பின் அருமையான நடிப்பு என மயக்குகிறது. திரையரங்குகளில் பெரும் வெற்றியை பெற்றதால், இப்படத்தை கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.”
கிச்சா சுதீப் கூறியதாவது..,
“மேக்ஸ் திரைப்படத்தை ZEE5-க்கு கொண்டு வருவது மிகுந்த மகிழ்ச்சி, குறிப்பாக திரையரங்கில் ரசிகர்களின் பேராதரவுக்குப் பிறகு, இப்போது டிஜிட்டலில் அனைவரிடமும் சென்று செருவது மகிழ்ச்சி. போலீஸ் இன்ஸ்பெக்டரான அர்ஜூன் மகாக்ஷய் வேடம் மிக மிக சுவாரஸ்யமாக இருந்தது, இது புத்திசாலித்தனத்துடன் கூடிய உணர்வுப்பூர்வமான கதை. படம் முழுதும் அதிரடியாக, பரபரப்பான தருணங்கள் மற்றும் வலிமையான திருப்பங்களுடன் ஒரு புது அனுபவமாக இருந்தது. ரசிகர்களின் உற்சாகமான வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்தது. இந்த திரைப்படம் ZEE5 மூலம் உலகமெங்கும் பல மொழிகளில் சென்று சேரவுள்ளது பெரு மகிழ்ச்சி.”
இயக்குனர் விஜய் கார்த்திகேயா கூறியதாவது…,
மேக்ஸ் திரைப்படத்தை உருவாக்கியது மிக அற்புதமானதாக இருந்தது, மேலும் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, எங்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்பதில் நான் பெருமைப்படுகிறேன், நாங்கள் உருவாக்க விரும்பியது, பார்வையாளர்களை அசத்தும் ஒரு பரபரப்பான, அதிரடியான உணர்வுப்பூர்வமான கதை . திரையரங்குகளில் கிடைத்த உற்சாக வரவேற்பைப் பார்த்தபோது, எங்கள் இலக்கை அடைந்ததாக உணர்ந்தோம். கிச்சா சுதீப்பின் அர்ஜூன் வேடம் மிக அசாதாரணமானது, மேலும் இந்த படத்தில் அனைத்து நடிகர்களும் அவர்களின் சிறந்த நடிப்பை தந்து, இந்த படத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியுள்ளனர். ZEE5 இல் மேக்ஸ் பிரீமியர் மூலம், அனைத்து பார்வையாளர்களுக்கு இந்த திரில்லரின் அனுபவத்தை உணர்வார்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.”
“மேக்ஸ்” திரைப்படத்தின் அதிரடி மற்றும் பரபரப்பு காட்சிகளை தவறவிடாதீர்கள் – ZEE5 இல் 15 பெப்ரவரி 7:30 PM அன்று வெளியாகும் “மேக்ஸ்”- திரைப்படத்தை கண்டு ரசியுங்கள் !
'VD12' படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு டீசர் வெளியாகியுள்ளது!
கௌதம் தின்னனுரி இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 'VD12', இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இந்தப் படத்தின் தலைப்பு தற்போது 'கிங்டம்' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு டீசர் வெளியாகியுள்ளது.
தீவிர ஆக்ஷன் மற்றும் உணர்வுகள் நிரம்பிய படமாக இது உருவாகியுள்ளது. சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் வகையிலான த்ரில்லர் மற்றும் பிரம்மாண்ட திரையனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தப் படம் வழங்க இருக்கிறது.
டீசரில் ஜூனியர் என்டிஆர் தெலுங்கிற்கும் சூர்யா தமிழுக்கும், ரன்பீர் கபூர் இந்திக்கும் குரல் கொடுத்துள்ளார்கள். இது ரசிகர்களுக்கும் சிறந்த டீசர் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது.
இந்தப் படம் சிறப்பாக வர நடிகர் விஜய் தேவரகொண்டா தனது கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் சரியான கதையாக இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா.
'ஜெர்ஸி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கௌதம் தின்னனுரி இந்த முறை விஜய் தேவரகொண்டாவை முற்றிலும் புதிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் காட்ட இருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் இந்த டீசர் ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை திருப்திபடுத்தும் வகையில் அமைந்து, உற்சாகத்தை அதிகரித்துள்ளது.
அனிருத் ரவிச்சந்தர் படத்திற்கு இசையமைக்கிறார். நவீன் நூலி படத்தொகுப்பைக் கையாள, கலை இயக்குநராக அவினாஷ் கொல்லா பணியாற்றுகிறார். ஜோமோன் டி.ஜான் மற்றும் கிரீஷ் கங்காதரன் இருவரும் ஒளிப்பதிவு செய்கின்றனர்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் பேனரில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரிக்கின்றனர்.
மே 30, 2025 அன்று திரையரங்குகளில் 'கிங்டம்' படம் வெளியாகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா