சற்று முன்

ஆக்சன்-திரில்லர் திரைப்படம் ‘மாஸ்க்’ ஜனவரி 9, 2026 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது!   |    ‘தி ராஜா சாப்’ ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது   |    நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்தே அவர்கள் குணம்தான் - இயக்குநர் நாராயணன்   |    இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'த்ரிபின்னா' இந்திய சிம்பொனி!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” கன்னட பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'   |    நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது   |    5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த 'சிக்மா' திரைப்பட டீசர்   |    களைகட்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!   |    விஜய் சேதுபதிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வைரல்!   |    Behindwoods Productions நிறுவனம் யூடுயூபில் வெளியிட்ட 'மூன்வாக்' படத்தின் மினி கேசட்!   |    சிறை ஒரு நிறைவான அனுபவம்! - தயாரிப்பாளர் SS லலித் குமார்   |    உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘மிஷன் சாண்டா’   |    குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்   |    வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது!   |    ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்   |    'வித் லவ்' படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் ரொமான்ஸ் மெலடி பாடல்!   |    மோகன்லாலின் ‘விருஷபா’ பட பாடலை, கர்நாடக துணை முதல்வர் வெளியிட்டார்!   |    யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை, அவர்தான் எனக்கு பிரேக் தந்தார் - நடிகர் சிவராஜ்குமார்   |   

சினிமா செய்திகள்

மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்கும் “ராபின்ஹுட்” பட டிரெய்லர் வெளியானது!
Updated on : 17 November 2025

LUMIERES STUDIOS நிறுவனம் சார்பில், ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், முதல் முறையாக நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, 1980 களின் கிராமப்புற  பின்னணியில், கலக்கலான காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராபின்ஹீட்”. 



 



தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் H வினோத் இப்பட டிரெய்லரை வெளியிட்டு,  படக்குழுவை பாராட்டியுள்ளார். 



 



படத்தின் டிரெய்லரைப் பார்த்த இயக்குநர் H.வினோத் , படத்தின் பின்னணி, விஷுவல்கள் பிரம்மாதமாக உள்ளது. காமெடி அருமையாக உள்ளது. இசை படத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. டிரெய்லர் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார். 



 



1980 களில், கிராமத்தில் ஒரு லாட்டரி சீட்டில் பெரிய பரிசு விழ, அந்த பரிசுக்காக இருவருக்கு இடையே நிகழும் போட்டியும், பிரச்சனைகளும் தான் இப்படத்தின் மையம். 



 



நாம் மறந்து போன லாட்டரி சீட்டு காலத்தை, கிராமப்புற பின்னணியில் மீட்டெடுத்து , கலகலப்பான திரைக்கதையுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன். 



 



இன்று வெளியாகியிருக்கும் டிரெய்லர், 1980 களின் காலகட்டத்தை திரையில் பார்க்கும் குதூகலத்தை தருவதோடு, வயிறு வலிக்க சிரிக்க வைக்கும், ஒரு கலக்கலான எண்டர்டெயினராக இப்படம் இருக்கும் என்பதை, உறுதி செய்கிறது. 



 



இப்படத்தில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் முதன்முறையாக நாயகனாக களமிறங்கியுள்ளார். எதிர் பாத்திரத்தில் மறைந்த  RNR மனோகர் நடித்துள்ளார். இவர்களுடன் KPY சதீஷ், அம்மு அபிராமி, சங்கிலி முருகன், முல்லை மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். 



 



இப்படத்தின் படப்பிடிப்பு அருப்புகோட்டை, காரியாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. 



 



விரைவில் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா