சற்று முன்

முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'   |    நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது   |    5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த 'சிக்மா' திரைப்பட டீசர்   |    களைகட்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!   |    விஜய் சேதுபதிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வைரல்!   |    Behindwoods Productions நிறுவனம் யூடுயூபில் வெளியிட்ட 'மூன்வாக்' படத்தின் மினி கேசட்!   |    சிறை ஒரு நிறைவான அனுபவம்! - தயாரிப்பாளர் SS லலித் குமார்   |    உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘மிஷன் சாண்டா’   |    குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்   |    வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது!   |    ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்   |    'வித் லவ்' படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் ரொமான்ஸ் மெலடி பாடல்!   |    மோகன்லாலின் ‘விருஷபா’ பட பாடலை, கர்நாடக துணை முதல்வர் வெளியிட்டார்!   |    யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை, அவர்தான் எனக்கு பிரேக் தந்தார் - நடிகர் சிவராஜ்குமார்   |    டிசம்பர் 24 முதல் ZEE5-ல் 'மிடில் கிளாஸ்'!   |    'தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்' என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும் இடம்   |    ஆகவே எனக்கு படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும் - விக்ரம் பிரபு   |    கிரிக்கெட் பின்னணியில் அமைக்கப்பட்ட ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ அறிமுக புரோமோ வெளியானது!   |    சிறந்த திரைப்பட விருதை வென்ற ராமின் ‘பறந்து போ’   |   

சினிமா செய்திகள்

முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'
Updated on : 26 December 2025

விங்ஸ் பிக்சர்ஸ் புதிய பட நிறுவனம் தயாரிப்பில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நாயகனாக நடிக்கும் படம் “செவல காள”. மதுரையைக் களமாகக் கொண்டு படம் வளர்ந்து வருகிறது.



 



இப்படத்தை கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி வருகிறார் பால் சதீஷ். யாரிடமும் உதவியாளராக பணிபுரியாமல் குறும்படங்கள் இயக்கி இன்று சாதனைபடைத்து வரும் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் வரிசையில் இவரும் குறும்படங்கள் இயக்கி, பின் இப்படத்தை இயக்கி வருகிறார். 



 



இப்படத்தின் படபிடிப்பு பூஜையுடன் மதுரை மேலூரில் ஆரம்பமானது. 



 



தனக்கு தவறு என்று பட்டால் அதை யார் செய்தாலும் அவர்களைத் தண்டிக்கத் தயங்காதவன் நாயகன். மதுரை அருகே ஒரு கிராமத்தில் வாழும் நாயகனின் அண்ணனை, ஊரையே  தனதாக்கி தன் கட்டுப்பாட்டில் வைக்கும்  ஊர்  பெரிய பணக்காரர் அவமானப் படுத்த.. நாயகனான தம்பி களம் இறங்க.. அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமான காட்சிகள் தான் இந்த படம் . 



 



வெளியூரில் இருந்து கிராத்துக்கு வரும் நாயகி..ஆரம்பத்தில் நாயகனின் முரட்டுத்தனத்தை பார்த்து பயந்தாலும்... அவனது குணத்தை அறிந்து அவனைக்காதலிக்க, அதற்கு எதிர்ப்பு எழ... நாயகன் வில்லனின் திட்டங்களை முறியடித்தாரா...? தன் காதலில் வெற்றி அடைந்தாரா...??  என்ற கேள்விகளுக்கு ஆக்‌ஷ்ன், காதல்,நகைச்சுவை, சென்டிமென்ட் ஆகிய அம்சங்களுடன் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதி  இப் படத்தை டைரக்ட் செய்துள்ளார் புது இயக்குநர் பால் சதீஷ்.



 



இதில் முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கிறார். அண்ணனாக ஆரியன், ஊர் பணக்காரராக சம்பத் ராம், நாயகியாக மீனாட்சி ஜெய்ஸ்வால் நடிக்கிறார்கள். 



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா