சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'
Updated on : 20 November 2025

ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ் நிறுவனம்  சார்பில், ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “சாவு வீடு”. புதுமையான களத்தில் வித்தியாசமான கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 



 



சாவு வீடு எனும் தலைப்பே வித்தியாசமான சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, வீட்டுச் சுவற்றில் வித்தியாசமாக மாட்டி வைக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரங்களின் சாவுப்புகைப்படங்கள் நிறைந்திருக்கும், வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், பார்த்தவுடன் ஆவலைத் தூண்டுகிறது. 



 



இப்படத்தினை பற்றி அறிமுக இயக்குநர் ஆண்டன்  அஜித் கூறுகையில்..,

ஒரு சாவு வீடு, அங்கு  எதிர்பாராமல் நடக்கும் ஒரு அதிரடி திருப்பம்,  அதைத்தொடர்ந்து நடக்கும்  சம்பவங்களை மையமாக வைத்து, கலகலப்பான நகைச்சுவையுடன் மாறுபட்ட கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.   கதையை எழுதுவதற்கு முன்பே தலைப்பை எழுதிவிட்டேன்.கதைக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு இருக்காது. படம் பார்க்கும் போது ரசிகர்கள் கண்டிப்பாக அதை உணர்வார்கள். ரசிகர்களுக்கு இப்படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். 



 



சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 



 



கைதி, மாஸ்டர் படங்களில் நடித்த உதய் தீப்,  பேட்டை படத்தில் நடித்த  ஆதேஷ்பாலா 

ஆஷிகா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் K. சேஷாத்ரி, ஷ்யாம் ஜீவா, பவனா ஆகியோர் முக்கிய காதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 



 



இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் நவம்பர் இறுதியில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா