சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

கோவா திரைப்பட விழாவில் பாராட்டுப்பெற்ற ஆநிரை குறும்படம்!
Updated on : 26 November 2025

இந்திய சர்வதேச திரைப்பட விழா இந்தியன் பனோரமா பிரிவில் அதிகாரபூர்வமாக (Official) தேர்வுசெய்யப்பட்டு முதல் நாள் திரையிடலாக இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ஆநிரை குறும்படம் கோவாவில் அரங்கம் நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது.



 



முன்னதாக இ.வி.கணேஷ்பாபுக்குசிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.



 



இதுபற்றி இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது.



ஒவ்வொரு சினிமா கலைஞனும் வாழ்வில் ஒருமுறையாவது. இந்திய  சர்வதேச திரைப்பட விழா.கோவாவில் பங்கேற்க வேண்டும்.



 



அரிதான பல படைப்புகளும், தரவுகளும், சர்வதேச சினிமா வியாபாரத்துக்கான வாய்ப்புகளும், பொக்கிஷங்களாக கொட்டிக்கிடக்கிறது இங்கே. அப்படிப்பட்ட இடத்தில் எனது படம் தேர்வு செய்யப்பட்ட இந்த தருணம் என் வாழ்வில் அற்புதமான தருணம்.



 



இரவு பகலாக உழைத்த எனது பட்குழுவுக்கு நன்றி.



 



ஹிந்தி திரைப்பட இயக்குனரும், நடிகருமான அனுபம் கேர் அவர்கள் முதல் வரிசையில் உட்கார்ந்து படம் பார்த்து, படத்தின் பலகாட்சிகளிலும் கைதட்டி உற்சாகப்படுத்தினார்.

இந்திய சினிமாவின் ஆன்மாவை ஆநிரை குறும்படம் பிரதிபலிக்கிது. பணம்தான் பெரிது என்று நினைக்கும் இந்த உலகில் அன்புதான் பெரிது என்று இப்படம் காட்டுகிறது என்றும் பாராட்டினார்.



 



இந்தப் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ச்சுனன் ,தனது பசுமாட்டின் தோலில் செய்யப்பட்ட  இசைக்கருவியைக் கண்டு,அதை தனது மாடாகவே கருதி,கதறி அழும் காட்சி தன்னை நிலைதடுமாற வைத்துவிட்டது என்றும், இனி அப்படிப்பட்ட இசைக்கருவியை தன்னால் வாசிக்க முடியுமா என்று தேரியவில்லை என்றும்,

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைபாளர் மரகதமணி அவர்கள் ஆநிரை பார்த்துவிட்டு என் கதையை பாராட்டியுள்ளார்.



 



மேலும் வெளிநாட்டு திரைக்கலைஞர்களின் பாராட்டுக்கள் என் திரைப்பயனத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது இவ்வாறு இ.வி. கணேஷ்பாபு கூறினார்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா