சற்று முன்

நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

ஆகவே எனக்கு படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும் - விக்ரம் பிரபு
Updated on : 20 December 2025

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கும் ‘சிறை’ விக்ரம் பிரபுவின் 25 வது படம். இப்படத்தில் விக்ரம் பிரபு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது அவர் நடிக்கும் நான்காவது போலீஸ் வேடம் என்றாலும், அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘சிறை’.



 



இயக்குநர் தமிழ் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு தான் இந்த கதையை எழுதியிருக்கிறார். அவர் மீது நம்பிக்கை வைத்து தான் இந்த படத்தில் நடித்தேன், அவர் சொன்னது போலவே படம் நன்றாக வந்திருக்கிறது. இயக்குநர் சுரேஷ், தமிழை விட சீனியர். இயக்குநர் வெற்றிமாறனிடம் நீண்ட வருடங்களாக இணை இயக்குநராக பணியாற்றியவர், அவரது அனுபவம் இந்த கதையை மிக நேர்த்தியாக கையாள வைத்திருக்கிறது.



 



படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித குமார் மகன் எல்.கே.அக்‌ஷய் குமார், நன்றாக நடித்திருக்கிறார். மிக ஆர்வமாக இருக்கிறார், படத்திற்காக அதிகமாக உழைத்திருக்கிறார். சில அனுபவங்களை அவர் என்னிடம் பகிர்ந்துக் கொண்ட போது, இதை விட அதிகமாக நான் கஷ்ட்டப்பட்டிருக்கிறேன், இதை விட இன்னும் அதிம இருக்கும், என்று கூறினேன். அவர் அறிமுக நடிகர் போல் அல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார்.” என்றார்.



 



’சிறை’ படத்தில் பேசப்பட்டிருக்கும் அரசியலை உணர்ந்து நடித்தீர்களா ? அல்லது இயக்குநர் சொன்னதை மட்டும் செய்தீர்களா ? 



இயக்குநர் தமிழ் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்பதால், என் கதாபாத்திரத்தை சொன்ன போது, நான் தமிழின் உடல் மொழியை தான் பின்பற்றினேன். அவரிடம் இருந்து இந்த கதாபாத்திரத்திற்காக சில விசயங்களை எடுத்துக் கொண்டேன், அதை வைத்து இயக்குநர் சொன்னதை வைத்து நடித்திருக்கிறேன். நிச்சயம் இந்த கதாபாத்திரம் எனக்கும், ரசிகர்களுக்கும் புதிதாக இருக்கும்.” என்றார்.



 



தொடர்ந்து வெவ்வேறு கதைக்களங்களில் நடிப்பது ஏன் ?



“கிரைம் திரில்லர் படங்களில் தொடர்ந்து நடித்தால், இப்படியே நடிப்பது ஏன் ? என்ற கேள்வி வருகிறது, அதை மாற்றினால், அது உங்களுக்கு நன்றாக இருக்குமே, என்று சொல்கிறார்கள். ஆனால், என்னை பொறுத்தவரை எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும், அனைத்து கதைக்களங்களிலும் நடிக்க வேண்டும். காரணம், அனைத்தும் நடிப்பு தான், அனைத்தும் கதாபாத்திரங்கள் தான். அதனால், நான் வெவ்வேறு ஜானர்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புவதோடு, வித்தியாசமான கதைக்களங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும், என்றுமுடிவு செய்துவிட்டேன்.” என்றார்.



 



உங்க தாத்தா, அப்பா நடிக்கும் காலத்தில் அவர்களை பற்றிய கிசுகிசுக்கள் அடிக்கடி வரும். ஆனால் உங்களை பற்றி அந்த மாதிரி எதுவும் வந்ததில்லையே, எப்படி?



நான் என் வேலை உண்டு, நான் உண்டு என்று இருப்பேன். ஷூட் முடிந்தவுடன் வீட்டுக்கு சென்று ஓய்வெடுப்பேன் மற்றப்படிதேவை இல்லாத விஷயங்களில் தலையிடமாட்டேன். ஆகவே எனக்கு படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வருகிறது. என்று விக்ரம் பிரபு கூறினார். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா