சற்று முன்

கபிலன் வைரமுத்து எழுதியுள்ள ‘நித்திலன் வாக்குமூலம்’ நாவல் இன்று வெளியானது!   |    ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கும் 'சுப்ரமணி'   |    'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    துபாயில் புதிய பாந்தர் கிளப் திறந்து வைத்த கிங் கான் ஷாருக்கான்!   |    பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் 'வித் லவ்'!   |    நடிகை ரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!   |    ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தில் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ஜனவரி 23 அன்று திரைக்கு வரும் 'மாயபிம்பம்'!   |    ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகும் தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை நிகழ்வு!   |    இசை உலகின் ஜாம்பவான் ஏ.ஆர். ரஹ்மான் முதன்முறையாக நடிகராக அறிமுகமாகிறார்!   |    ஆக்சன்-திரில்லர் திரைப்படம் ‘மாஸ்க்’ ஜனவரி 9, 2026 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது!   |    ‘தி ராஜா சாப்’ ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது   |    நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்தே அவர்கள் குணம்தான் - இயக்குநர் நாராயணன்   |    இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'த்ரிபின்னா' இந்திய சிம்பொனி!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” கன்னட பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'   |    நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது   |    5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த 'சிக்மா' திரைப்பட டீசர்   |    களைகட்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!   |    விஜய் சேதுபதிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வைரல்!   |   

சினிமா செய்திகள்

‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தில் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
Updated on : 02 January 2026

யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமாக, நயன்தாரா நடித்துள்ள ‘கங்கா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்  தற்போது வெளியாகி பெரும் கவனம் பெற்றுள்ளது. அதிரடி, அழகு, ஆற்றல் என அனைத்தையும் ஒருங்கே தாங்கிய இந்த தோற்றம், யாஷின் கனவுப் படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய சக்தியாக இருப்பதை உறுதி செய்கிறது.



 



தனித்துவமான நடிப்பு திறமை, உணர்வுப்பூர்வ வெளிப்பாடு மற்றும் வலுவான திரை ஆளுமை கொண்ட நடிகையாக நீண்ட காலமாக கோலோச்சி  வரும் நயன்தாரா, டாக்ஸிக் படத்தில் இதுவரை தோன்றாத ஒரு புதிய பாத்திரத்தில் தோன்றுகிறார். இருள் நிறைந்த இந்த உலகத்தில், அவரது இருப்பே ஒரு வலுவான அடையாளமாக திகழ்கிறது.



 



கங்கா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா, அச்சமற்ற துணிச்சலுடனும், கம்பீரமான அமைதியுடனும் திரையில் தோன்றுகிறார். கையில் துப்பாக்கியுடன், செழுமையான கேசினோ ( grand casino) பின்னணியில் நின்று கொண்டு, அந்த இடத்தையே கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் காட்டுகிறார். அழகும் ஆபத்தும் கலந்த அந்த தோற்றம், கதாபாத்திரத்தின் ஆழத்தையும் மர்மத்தையும் வலுவாக வெளிப்படுத்துகிறது.



 



இந்தக் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் கீது மோகன்தாஸ்  (Geetu Mohandas) கூறுகையில்,



“நயன்தாராவை  ஒரு சிறந்த நட்சத்திரமாகவும், வலிமையான திரைபட முன்னணி ஆளுமையாகவும் அனைவரும் அறிவோம். ஆனால் டாக்ஸிக் படத்தில், இதுவரை நாம் காணாத ஒரு பரிமாணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் திரையில் நடிக்கவில்லை; அந்தக் கதாபாத்திரமாகவே மாறினார். அவரின் ஆழம், நேர்மை, உணர்ச்சி எல்லாமும் அந்த கதாப்பாத்திரத்தின் இயல்பாகவே இருந்தது. அந்த தருணத்தில்தான் எனக்கு உண்மையான ‘கங்கா’ கிடைத்தார். அதைவிட அழகானது, அந்த பயணத்தில் ஒரு நெருங்கிய நண்பரையும் நான் பெற்றேன்,” என தெரிவித்துள்ளார்.



 



KGF: Chapter 2 மூலம் இந்திய சினிமாவின் வரலாற்றை மாற்றிய யாஷ், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மூலம் மீண்டும் ஒரு புதிய உயரத்தை நோக்கி பயணிக்கிறார். இந்த படம், தனது தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் கருப்பொருளால் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. முன்னதாக, கியாரா அத்வானி நடித்த ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரம் வெளியானபோது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, ஹூமா குரேஷியின் ( Huma Qureshi’s ) மர்மமான ‘எலிசபெத்’ தோற்றம், பழமையான கோத்திக் அழகுடன் கூடிய புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியது.



 



யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதை எழுதி, கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள Toxic: A Fairytale for Grown-Ups திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது. ஒளிப்பதிவை தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி மேற்கொள்ள, இசையமைப்பை ரவி பஸ்ரூர் செய்துள்ளார். படத்தொகுப்பில் உஜ்வல் குல்கர்னி, கலை இயக்கத்தில் டி.பி. அபித் பணியாற்றியுள்ளனர். ஆக்‌ஷன் காட்சிகளை ஹாலிவுட் புகழ் ஜே.ஜே. பெர்ரி (John Wick) உடன் இணைந்து அனுபவம் வாய்ந்த அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்‌டி அமைத்துள்ளனர்.



 



யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதையை எழுதியுள்ள இந்தப் படம், கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஆங்கிலம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம்  தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.



 



தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி ஒளிப்பதிவையும், ரவி பஸ்ரூர் இசையையும், உஜ்வல் குல்கர்ணி எடிட்டிங்கையும், T.P.அபித் புரொடக்ஷன் டிசைன் கவனிக்கின்றனர். ஆக்‌ஷன் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் J.J. பெரி (John Wick) உடன் இணைந்து இணைந்து அனுபவம் வாய்ந்த அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்‌டி  (Kecha Khamphakdee)அமைத்துள்ளனர்.



 



வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, வரவிருக்கும் மார்ச் 19, 2026, ஈத், உகாதி, குடி பட்வா ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து, திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா