சற்று முன்

நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

சென்னையில் இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்ப கருத்தரங்கம்!
Updated on : 11 January 2026

இந்திய திரைப்படத் துறையின் எதிர்காலத்தை நோக்கி தொழில்நுட்பம் மற்றும் படைப்பாற்றல் எவ்வாறு ஒன்றிணைய வேண்டும் என்பதைக் குறித்து ஆராயும் வகையில், ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப் மற்றும் புரொடியூசர் பஜார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து “ஃபிலிம் இன்டஸ்ட்ரி 5.0: தி ஃபியூச்சர் ஆஃப் இந்தியன் சினிமா” எனும் கருத்தரங்கை சென்னையில் புதன்கிழமை (ஜனவரி 7) நடத்தின. இந்த நிகழ்வு கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள புரொடியூசர் பஜார் அலுவலகத்தில் நடைபெற்றது.



 



திரைப்படத் துறையின் எதிர்கால வளர்ச்சி, தொழில்நுட்பத்தின் தாக்கம், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அலசி ஆராயும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கில், திரைப்படம், தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் அறிவுசார் உரிமைகள் துறையைச் சேர்ந்த பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டு, படைப்பாற்றலை தொழில்நுட்பத்துடன் இணைத்து புதிய உயரங்களை எட்டுவது குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.



 



இந்நிகழ்வில், சிங்கப்பூரைச் சேர்ந்த ரிவர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலரான டாக்டர் விவேகா காளிதாசன், தொழில்நுட்பம் திரைப்படப் படைப்பாற்றலுக்கு எவ்வாறு துணை நிற்கிறது என்பது குறித்து முக்கிய உரையாற்றினார். கதை எழுதுதல், படத்தொகுப்பு, காட்சி கதைசொல்லல் ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த திரைத்துறை பொருளாதார சூழலில் உரிமைகள், வருமானம் மற்றும் உலகளாவிய தாக்கங்களை எவ்வாறு மறு உருவாக்கம் செய்யலாம் என்பதைக் குறித்து வட்டமேசை கலந்துரையாடலும் நடைபெற்றது.



 



இந்த கருத்தரங்கில், பிக்ஸ் ஸ்டோன் இமேஜஸ் பிரைவேட் லிமிடெட் வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர் உஜ்வல் தன்குட்டே, தேஜ் என்டர்டெயின்மென்ட் இயக்குநர் நாகராஜன் வைத்தியநாதன், சக்தி குளோபல் டிவி ஓடிடி தலைவர் மற்றும் மகாராஜ குழுமத்தின் திரைப்பிரிவு தலைவர் சம்மந்த்ராஜ் கோதண்ட்ராம், பாக்கெட் எஃப்.எம் கிரியேட்டிவ் புரொடியூசர் அசாருதீன் ஜெ, ஐபிஆர்எஸ் தென் மண்டல உறவுகள் பிரிவின் உறுப்பினர் பாலமுரளி திருமுருகன், கிறிஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கிறிஸ்டி எஸ், சிங்கப்பூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பின் செயல் இயக்குநர் ஜமுனராணி கோவிந்தராஜூ, பிராண்ட் எக்சேஞ்ச் நிறுவன இயக்குநர் ரமேஷ் குமார் மல்லேலா, பியூர் சினிமா நிறுவனர் அருண் மோ, புரொடியூசர் பஜார் சட்டப்பிரிவு தலைவர் அர்ச்சனா கவில், ஓஓ ஸ்டூடியோ இன்க் இணை நிறுவனர் சிந்துஜா ராஜமாறன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.



 



நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கருத்தாழம் மிக்க உரைகள் மற்றும் சிந்தனைகள், கலந்து கொண்ட திரைத்துறையினரிடையே தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி வர்த்தக எல்லைகளை விரிவுபடுத்துதல், படைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் அறிவுசார் உரிமைகளை பாதுகாத்தல் குறித்த புரிதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். இதற்காக ஏற்பாட்டாளர்களான ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப் மற்றும் புரொடியூசர் பஜார் நிறுவனங்களுக்கு அவர்கள் நன்றியை தெரிவித்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா