சற்று முன்

நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

வைரலாகும் ‘லக்கா லக்கா லடுக்கி’ ‘தீராப்பகை’ பட குத்து பாடல்!
Updated on : 13 January 2026

‘சிலந்தி’, ‘அருவா சண்ட’, ‘நினைவெல்லாம் நீயடா’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன், தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் படநிறுவனம் சார்பில் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள புதிய படம் ‘தீராப்பகை’. விறுவிறுப்பான த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் விஜயராகவேந்திரா நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக, தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகை ஹரிப்பிரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார். 



 



இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு ஸ்டைலான குத்து பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பாடலை இயக்குநர் ஆதிராஜன் தானே எழுதியுள்ளார். நட்சத்திர ஹோட்டலின் பாரில் அமைந்த காட்சியில், ஒரு நடனமங்கை மதுபானங்களை தன் உடலோடு ஒப்பிட்டு பாடுவது போல அமைந்துள்ள இந்த பாடல், தைரியமான வரிகளும் கவர்ச்சியான காட்சிகளும் கலந்து உருவாகியுள்ளது.



 



“லக்கா லக்கா லடுக்கி நான் தான் டாஸ்மாக்கு…

பீரு பிராந்தி விஸ்கி தொட்டா பாஸ்மார்க்கு…”



 



என தொடரும் இந்த பாடலை, ‘ஸ்டைலிஷ் தமிழச்சி’ என ரசிகர்களால் அழைக்கப்படும் ஸ்ரீநிஷா சீனிவாசன், தனது கிக் ஏற்றும் குரலில் பாடியுள்ளார்.



 



ஸ்ரீநிஷா சீனிவாசன், சமீபத்தில் ‘அரண்மனை – 4’ படத்தில் தமன்னாவின் கவர்ச்சி நடனத்திற்கு இடம்பெற்ற “அச்சோ அச்சோ அச்சச்சோ…” பாடல் மூலம் பெரும் ஹிட்டை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் குறித்து அவர், “இந்த ‘சரக்கு சாங்’ நிச்சயமாக பெரிய அளவில் வைரலாகும்” என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.



 



இந்த பாடலில், பல படங்களில் நாயகியாக நடித்துள்ள மேக்னா நாயுடு, செம கவர்ச்சி ஆட்டத்துடன் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். எம்.ஜி. கார்த்திக் இசையில் உருவான இந்த பாடலுக்கு, மாஸ்டர் சிவகுமார் நடன அமைப்பு செய்துள்ளார்.



 



படத்தின் தொழில்நுட்ப தரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பல பிரம்மாண்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜேஷ் கே. நாராயன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கேஜிஎப்’ படப்புகழ் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை கவனித்துள்ளார். மற்ற பாடல் வரிகளை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார்.



 



விறுவிறுப்பான திருப்பங்களும், த்ரில்லர் அம்சங்களும் நிறைந்த படமாக உருவாகியுள்ள ‘தீராப்பகை’, விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்களிடையே இப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா