சற்று முன்

10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |   

சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி, பிறந்தநாள் கொண்டாட்டமாக வெளியான “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ஃபர்ஸ்ட் லுக்
Updated on : 19 January 2026

விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர், ஜே.பி.   நாராயண் ராவ் கொண்ட்ரோலா, பூரி கனெக்ட்ஸ், ஜே.பி. மோஷன் பிக்சர்ஸ் (JB Motion Pictures’ Film ) இணையும் “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு”  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!



 



பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா முயற்சி #PuriSethupathi, திரைப்படம், ஸ்டைலிஷ் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் அதிரடி கூட்டணியில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது போஸ்ட்-ப்ரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, JB Motion Pictures நிறுவனத்தின் JB  நாராயண் ராவ்   கொண்ட்ரோலா  (JB Narayan Rao Kondrolla) இணைந்து தயாரிக்கிறார்.



 



விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இன்று  வெளியிட்டுள்ளது. “ஸ்லம் டாக்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு “33 டெம்பிள் ரோடு” என்ற டேக்லைன் வழங்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், கலைந்த முடி மற்றும் தாடியுடன், பிச்சைக்காரன் உடையில், நீளமான ஸ்கார்ஃப் மற்றும் பூட்ஸ் அணிந்து, மங்கலான வெளிச்சம் மற்றும் பனிமூட்டம் சூழ்ந்த குடிசைப் பகுதியில், கையில் பெரிய கதையை பிடித்தபடி, சுற்றிலும் பணக்கட்டுகள் பறக்கும் நிலையில் விஜய் சேதுபதி ஒரு வெறித்தனமான அவதாரத்தில் தோன்றுகிறார். இந்த டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும்  இப்படத்தின் ஆக்சன் எண்டர்டெய்னர் தன்மைக்கு, பெரும் ஹைப்பை உருவாக்குகின்றன.



 



தன் நாயகர்களை தனித்துவமான மேக்கோவர்களுடன் மாஸாக உருவாக்குவதில் பெயர் பெற்ற பூரி ஜெகன்னாத், இந்த படத்திலும் அதை நிரூபித்துள்ளார். விஜய் சேதுபதி, இதுவரை தனது திரை வாழ்க்கையில் முயற்சிக்காத, முற்றிலும் புதிய ஒரு பாத்திரத்தில் இப்படத்தில் தோன்றுகிறார்.



 



இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.மேலும், பிரம்மாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை பாத்திரங்களில் கலக்கியுள்ளனர்.



 



அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற படங்களில் துடிப்பான இசையமைப்பை வழங்கிய தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்,  படத்திற்கு இசையமைக்கிறார்.



 



இந்தப் படம், தமிழ், தெலுங்கு ,கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா