சற்று முன்

படப்பிடிப்புக்கு முன்பே நடிகர் ஏகன் படத்திற்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்!   |    அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் 4K டால்பி ஒலியுடன் மீண்டும் வெளியாகும் ‘அமைதிப்படை’   |    ‘நீ நடி கண்ணா’ என்ற ஒரு வார்த்தை என் பயங்களை உடைத்தது – நடிகர் அபிஷந்த் ஜீவிந்த்   |    மெகா ஸ்டார் குடும்பத்தில் இரட்டிப்பு சந்தோஷம், ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சி அலை!   |    25 ஆண்டுகளுக்குப் பின் மூவர் கூட்டணி, ‘பேங் பேங்’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ‘புரியாத புதிர்’க்கு மாநில அங்கீகாரம், சாம் CS-க்கு தமிழக அரசு சிறந்த இசையமைப்பாளர் விருது!   |    மகேஷ் பாபு–SS ராஜமௌலி கூட்டணியின் அடுத்த மாபெரும் திரில்லர் “வாரணாசி”   |    ஜென்-ஜி காதல் கதை “வித் லவ்” – அட்லீவின் வாழ்த்துடன் ட்ரெய்லர் வெளியீடு!   |    பார்ட் 1-ஐ மிஞ்சிய பார்ட் 2 - ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வெற்றியின் கொண்டாட்டம்!   |    'ஆகாசம்லோ ஒக தாரா'-வில் ஸ்ருதி ஹாசன் என்ட்ரி… துல்கர் சல்மான் படத்திற்கு புதிய பரிமாணம்!   |    ZEE5-ல் ‘சிறை’ மெகா சாதனை - 156 மில்லியன் பார்வை நிமிடங்கள்!   |    சத்தமில்லா சினிமா - ஆனால் தாக்கம் அதிகம்! ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர் வெளியீடு   |    என் அடுத்த படம் ‘கைதி 2’ தான் – சம்பள சர்ச்சை, LCU, ரஜினி–கமல் படம் குறித்து லோகேஷ் விளக்கம்   |    சித்தார்தின் ‘ரெளடி & கோ’ வித்தியாசமான போஸ்டர் கான்செப்ட்   |    காதலின் ஐந்து உயிரெழுத்துகள்… ‘VOWELS – An Atlas of Love’ டைட்டில் லுக் வெளியீடு!   |    ராக் ஸ்டார் அனிருத் வெளியிட்ட ‘ராவடி’ ஃபர்ஸ்ட் லுக்! – ரசிகர்கள் உற்சாகம்   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மம்மூட்டி, மோகன்லால்!   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

‘புரியாத புதிர்’க்கு மாநில அங்கீகாரம், சாம் CS-க்கு தமிழக அரசு சிறந்த இசையமைப்பாளர் விருது!
Updated on : 01 February 2026

தமிழக அரசு சார்பில் 2016 முதல் 2022 வரை வழங்கப்பட உள்ள தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 2016-ம் ஆண்டு வெளியான ‘புரியாத புதிர்’ திரைப்படத்திற்காக முன்னணி இசையமைப்பாளர் சாம் CS அவர்களுக்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற மாநில விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



 



தனித்துவமான பின்னணி இசை, கதையின் மனநிலையை நுணுக்கமாக வெளிப்படுத்தும் மெலடிகள் என தனது இசை மொழியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் சாம் CS, ‘புரியாத புதிர்’ படத்தில் உருவாக்கிய இசையால் த்ரில்லர் அனுபவத்தை மேலும் தீவிரமாக்கியதாகப் பாராட்டைப் பெற்றார். அந்தப் பாராட்டுகளுக்கே அரசின் அங்கீகாரமாக இவ்விருது அமைந்துள்ளது.



 



‘ஒரு இரவு’, ‘அம்புலி’ போன்ற படங்களின் மூலம் இசைத்துறையில் பயணத்தைத் தொடங்கிய சாம் CS, அதன் பின்னர் கைதி, விக்ரம் வேதா, அடங்க மறு, RDX, புஷ்பா 2, மஹாவதார் நரசிம்மா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் த்ரில்லிங் மற்றும் உணர்வுப்பூர்வமான இசையை வழங்கி தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.



 



விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சாம் CS, “‘புரியாத புதிர்’ படத்திற்காக தமிழக அரசு மாநில விருது வழங்கியிருப்பது அளவற்ற மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது. இது என் இசைப் பயணத்தில் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம். இந்த தருணத்தில் படக்குழுவினருக்கும், என்னுடன் பணியாற்றிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் இசைக்குழுவினருக்கும் என் நன்றிகள். இனியும் ரசிகர்களின் மனதைத் தொடும் படைப்புகளை வழங்குவேன்” என தெரிவித்துள்ளார்.



 



தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமல்லாமல் பாலிவுட் உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் சாம் CS இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். குறிப்பாக ரவிமோகனின் ‘கராத்தே பாபு’, கார்த்தியின் ‘சர்தார் 2’ போன்ற முக்கிய படங்கள் அவரது வரிசையில் உள்ளன. இந்த மாநில விருது, சாம் CS-ன் இசைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா