சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

25 ஆண்டுகளுக்குப் பின் மூவர் கூட்டணி, ‘பேங் பேங்’ டைட்டில் டீசர் வெளியீடு!
Updated on : 01 February 2026

KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பிலும், தீபக் ரவி இணைத் தயாரிப்பிலும் உருவாகும் “பேங் பேங்” திரைப்படத்தின் டைட்டில் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவின் மறக்க முடியாத கூட்டணியான நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளதே இந்த படத்தின் மிகப் பெரிய ஹைலைட்டாக அமைந்துள்ளது.



 



வெளியான டீசரில், ஜாம்பியாக மாறி வேகமாக ஓடும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்த, துப்பாக்கியுடன் கெத்தாக எண்ட்ரி கொடுக்கும் பிரபுதேவா – வடிவேலு காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுகின்றன. “ஜாம்பி” என வடிவேலு கூறும் வசனமும், பிரபுதேவா–வடிவேலு கதாபாத்திரப் பெயர்களுடன் டீசர் முடிவடையும் தருணமும், படத்தை முழுமையாக பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது.



 



இப்படத்தை சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) எழுதி இயக்குகிறார். பிரபுதேவா–வடிவேலு கூட்டணிக்கே உரிய நகைச்சுவை, ஸ்டைல் மற்றும் மாஸ் அம்சங்களுடன், ஒரு கலக்கலான Horror Adventure படமாக “பேங் பேங்” உருவாகி வருகிறது.



 



படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, H. C. வேணு ஒளிப்பதிவு செய்கிறார். ஆக்ஷன் காட்சிகளை சுரேஷ் வடிவமைக்க, எடிட்டிங்கை ஆண்டனி கையாளுகிறார். தேசிய விருது பெற்ற ‘அனிமல்’ படத்தின் சவுண்ட் டிசைனுக்காக பாராட்டப்பட்ட Sync Cinema இப்படத்தின் சவுண்ட் டிசைனை மேற்கொண்டிருக்க, தெலுங்கனா மாநில விருது பெற்ற அரவிந்த் மேனன் சவுண்ட் மிக்ஸிங்கை செய்துள்ளார்.



 



நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம், KRG நிறுவனத்தின் 4-வது தயாரிப்பாக, மிகப் பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. தற்போது படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், முதல் கட்ட படப்பிடிப்பு இந்தோனேசியாவின் மவுண்ட் ப்ரோமோ என்ற செயலில் இருக்கும் எரிமலை பகுதியில் நடத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.



 



மற்ற நடிகர்கள் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், “பேங் பேங்” டைட்டில் டீசர், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா