சற்று முன்

'ஜீவாவின் கம்பேக் வெற்றி' - வெற்றி விழாவில் நடிகர் மகிழ்ச்சி!   |    படப்பிடிப்புக்கு முன்பே நடிகர் ஏகன் படத்திற்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்!   |    அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் 4K டால்பி ஒலியுடன் மீண்டும் வெளியாகும் ‘அமைதிப்படை’   |    ‘நீ நடி கண்ணா’ என்ற ஒரு வார்த்தை என் பயங்களை உடைத்தது – நடிகர் அபிஷந்த் ஜீவிந்த்   |    மெகா ஸ்டார் குடும்பத்தில் இரட்டிப்பு சந்தோஷம், ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சி அலை!   |    25 ஆண்டுகளுக்குப் பின் மூவர் கூட்டணி, ‘பேங் பேங்’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ‘புரியாத புதிர்’க்கு மாநில அங்கீகாரம், சாம் CS-க்கு தமிழக அரசு சிறந்த இசையமைப்பாளர் விருது!   |    மகேஷ் பாபு–SS ராஜமௌலி கூட்டணியின் அடுத்த மாபெரும் திரில்லர் “வாரணாசி”   |    ஜென்-ஜி காதல் கதை “வித் லவ்” – அட்லீவின் வாழ்த்துடன் ட்ரெய்லர் வெளியீடு!   |    பார்ட் 1-ஐ மிஞ்சிய பார்ட் 2 - ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வெற்றியின் கொண்டாட்டம்!   |    'ஆகாசம்லோ ஒக தாரா'-வில் ஸ்ருதி ஹாசன் என்ட்ரி… துல்கர் சல்மான் படத்திற்கு புதிய பரிமாணம்!   |    ZEE5-ல் ‘சிறை’ மெகா சாதனை - 156 மில்லியன் பார்வை நிமிடங்கள்!   |    சத்தமில்லா சினிமா - ஆனால் தாக்கம் அதிகம்! ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர் வெளியீடு   |    என் அடுத்த படம் ‘கைதி 2’ தான் – சம்பள சர்ச்சை, LCU, ரஜினி–கமல் படம் குறித்து லோகேஷ் விளக்கம்   |    சித்தார்தின் ‘ரெளடி & கோ’ வித்தியாசமான போஸ்டர் கான்செப்ட்   |    காதலின் ஐந்து உயிரெழுத்துகள்… ‘VOWELS – An Atlas of Love’ டைட்டில் லுக் வெளியீடு!   |    ராக் ஸ்டார் அனிருத் வெளியிட்ட ‘ராவடி’ ஃபர்ஸ்ட் லுக்! – ரசிகர்கள் உற்சாகம்   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மம்மூட்டி, மோகன்லால்!   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |   

சினிமா செய்திகள்

அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் 4K டால்பி ஒலியுடன் மீண்டும் வெளியாகும் ‘அமைதிப்படை’
Updated on : 01 February 2026

தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ மற்றும் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ ஆகிய படங்களை அதிநவீன தொழில்நுட்பத்தில் மறுவெளியீடு செய்து பெரும் வெற்றியை பெற்ற ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனர் கார்த்திக் வெங்கடேசன், தற்போது புரட்சி தமிழன் சத்யராஜ் – மணிவண்ணன் வெற்றிக் கூட்டணியின் அரசியல் சூப்பர் ஹிட் படமான *‘அமைதிப்படை’*யை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வர உள்ளார்.



 



வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் சூழல் பரபரப்பாக இருக்கும் நிலையில், இன்றைய அரசியல் நிலவரத்துக்கும் அப்படியே பொருந்தும் வகையில் 32 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘அமைதிப்படை’ திரைப்படம், 4K தொழில்நுட்பம் மற்றும் டால்பி ஒலியுடன் பிரம்மாண்டமாக மறுவெளியீடு செய்யப்படுகிறது.



 



இந்த படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.



 



இதுகுறித்து பேசிய கார்த்திக் வெங்கடேசன்,



"சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எப்படி 'பாட்ஷா' மற்றும் 'படையப்பா' படங்களோ, தளபதி விஜய்க்கு எப்படி 'கில்லி'யோ, அஜித் குமாருக்கு எப்படி 'மங்காத்தா' திரைப்படமோ, ‍புரட்சி தமிழன் சத்யராஜுக்கு 'அமைதிப்படை' அப்படி ஒரு மைல்கல் படம். அரசியல் ஞானியான மணிவண்ணன் இயக்கியுள்ள இப்படம் எக்காலத்துக்கும் பொருந்தும். ஜென் ஜி (Gen Z) தலைமுறையினரும் ரசித்து பார்க்கும் வகையில் 'அமைதிப்படை' அமைந்துள்ளது. அதில் வரும் காட்சிகளும் வசனங்களும் இன்றைய அரசியல் நிகழ்வுகளுக்கும் அப்படியே ஒத்துப்போகும் வகையில் உள்ளன‌. எனவே இப்படத்தை இப்போது எடுக்கப்படும் புது படங்கள் போன்று அதிநவீன 4கே தொழில்நுட்பத்தில் டால்பி ஒலியுடன் வெளியிடுவதில் மகிழ்ச்சி," என்றார்.



 



சத்யராஜ், மணிவண்ணன், சுஜாதா, கஸ்தூரி, ரஞ்சிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘அமைதிப்படை’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். 1994-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்த அரசியல் திரைப்படம், விரைவில் ஸ்பேரோ சினிமாஸ் சார்பில் மீண்டும் திரையரங்குகளில் அரசியல் அதிர்வை ஏற்படுத்த தயாராக உள்ளது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா