சற்று முன்

அக்கு சிகிச்சையின் மகத்துவத்தைப் பேசும் சீனு ராமசாமி   |    'ஜீவாவின் கம்பேக் வெற்றி' - வெற்றி விழாவில் நடிகர் மகிழ்ச்சி!   |    படப்பிடிப்புக்கு முன்பே நடிகர் ஏகன் படத்திற்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்!   |    அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் 4K டால்பி ஒலியுடன் மீண்டும் வெளியாகும் ‘அமைதிப்படை’   |    ‘நீ நடி கண்ணா’ என்ற ஒரு வார்த்தை என் பயங்களை உடைத்தது – நடிகர் அபிஷந்த் ஜீவிந்த்   |    மெகா ஸ்டார் குடும்பத்தில் இரட்டிப்பு சந்தோஷம், ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சி அலை!   |    25 ஆண்டுகளுக்குப் பின் மூவர் கூட்டணி, ‘பேங் பேங்’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ‘புரியாத புதிர்’க்கு மாநில அங்கீகாரம், சாம் CS-க்கு தமிழக அரசு சிறந்த இசையமைப்பாளர் விருது!   |    மகேஷ் பாபு–SS ராஜமௌலி கூட்டணியின் அடுத்த மாபெரும் திரில்லர் “வாரணாசி”   |    ஜென்-ஜி காதல் கதை “வித் லவ்” – அட்லீவின் வாழ்த்துடன் ட்ரெய்லர் வெளியீடு!   |    பார்ட் 1-ஐ மிஞ்சிய பார்ட் 2 - ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வெற்றியின் கொண்டாட்டம்!   |    'ஆகாசம்லோ ஒக தாரா'-வில் ஸ்ருதி ஹாசன் என்ட்ரி… துல்கர் சல்மான் படத்திற்கு புதிய பரிமாணம்!   |    ZEE5-ல் ‘சிறை’ மெகா சாதனை - 156 மில்லியன் பார்வை நிமிடங்கள்!   |    சத்தமில்லா சினிமா - ஆனால் தாக்கம் அதிகம்! ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர் வெளியீடு   |    என் அடுத்த படம் ‘கைதி 2’ தான் – சம்பள சர்ச்சை, LCU, ரஜினி–கமல் படம் குறித்து லோகேஷ் விளக்கம்   |    சித்தார்தின் ‘ரெளடி & கோ’ வித்தியாசமான போஸ்டர் கான்செப்ட்   |    காதலின் ஐந்து உயிரெழுத்துகள்… ‘VOWELS – An Atlas of Love’ டைட்டில் லுக் வெளியீடு!   |    ராக் ஸ்டார் அனிருத் வெளியிட்ட ‘ராவடி’ ஃபர்ஸ்ட் லுக்! – ரசிகர்கள் உற்சாகம்   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மம்மூட்டி, மோகன்லால்!   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |   

சினிமா செய்திகள்

அக்கு சிகிச்சையின் மகத்துவத்தைப் பேசும் சீனு ராமசாமி
Updated on : 02 February 2026

மருந்தில்லா மருத்துவத்தின் மகத்துவத்தை பாதுகாக்கும் நோக்கில், அகவெளி அக்கு சிகிச்சையாளர்கள் சங்கத்தின் மாநில மாநாடு இன்று விமரிசையாக தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், முன்னாள் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேலன், அக்கு தெரபிஸ்ட் அசோசியேஷனுக்கான யூடியூப் சேனலை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.



 



நிகழ்வில் சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேலன் அக்கு சிகிச்சையாளர்கள் மாநில மாநாட்டை வாழ்த்தி பேசியதாவது,



 



“அகவெளி பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த அன்பழகன் மற்றும் மனோகரன் அண்ணன்களுக்கு நன்றி. சமுதாயத்தை சீர்திருத்தும் பணியை தொடர்ந்து இங்கிருப்பவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அன்பழகன் மற்றும் மனோகரன் இருவரும் உறவினர்களாக இருந்து எனக்கு நண்பர்கள் போன்று நெருக்கமானவர்கள். இவர்கள் மூலம் ஏங்கல்ஸ் ராஜா அறிமுகம் கிடைத்தது. இவர் சமுதாயத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். மருந்தில்லாத உணவு என்பதைத் தாண்டி, மருந்தில்லாத மருத்துவம் என்ற நிலைக்கு இன்று வந்திருக்கிறார். இதற்கு நம்முடன் இருப்பவர்களின் ஆதரவும் மிக முக்கியம். அக்குசிகிச்சையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அடுத்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்திய அளவில் அகவெளி ஆலமரம் போல வளர்ந்து நிற்க வேண்டும். இதன் பெருமையை எட்டி நின்று என்னால் உணர முடிகிறது. இன்றைய தேதியில் நல்லது செய்வதுதான் கடினமான ஒன்று. அந்த தடைகளை தாண்டி இந்த இயக்கத்தை அடுத்தடுத்து எடுத்துச் செல்லுங்கள். மனிதனின் வலியை போக்குவதைவிட சிறந்த ஒன்று கிடையாது. அந்த இடத்தில் அக்கு இருப்பது மகிழ்ச்சி” என்றார். 



 



அக்கு பங்சர் சிகிச்சையாளர்கள் சங்க தலைவர் ஏங்கல்ஸ் ராஜா,



 



“அக்கு சிகிச்சையாளர்கள் சங்கத்தினுடைய முதல் மாநில மாநாடு இது. நாற்பது நாட்களில் இதனை ஏற்பாடு செய்திருக்கிறோம். அறம்சார் வாழ்வே நலம் தரும் மருந்து என்பதே மாநாட்டின் நோக்கம். இந்த மாநாடு நம் அனைவருக்கும் தேவையானது. அக்குபங்சர் மருத்துவம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருக்கிறது. அதை அனைவருக்கும் எடுத்து செல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.  அக்குபங்சர் அறிவியல்பூர்வமான தா என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. நிச்சயமாக! உலகம் முழுவதும் இந்த சிகிச்சை முறை நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவும் 2017ல் இதை முழுமையான மருத்துவமுறையாக அங்கீகரித்திருக்கிறது. நமக்கு ஆதரவாக அரசியல் நிலைப்பாடுகளும் நம்மை சுற்றி இருக்கிறது. இந்த மருத்துவம் மக்களிடம் அதிகம் போய் சேரும்போது அதிகம் நன்மை கிடைக்கும்” என்றார். 



 



இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது,



 



“மனித உடலில் ஏற்படுகிற வலியை நீக்குபவர்கள்தான் கடவுள். அவர்கள்தான் மருத்துவர்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் மருத்துவர் ஆவது கடினம். ஏனெனில் வருகிறவர்கள் எல்லாருமே நோயாளிகள்தான். மருத்துவர்கள் சொல்வதை முழுதாக கேட்பதில்லை. மருந்தும் இல்லாமல், மந்திரமும் இல்லாமல் என் 75 வயது பாட்டியை அக்கு சிகிச்சை நடக்க வைத்தது. அப்போதிருந்து இதன் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. மனிதனின் ஆசையை கட்டுப்படுத்த புத்தர் சொன்ன விஷயம் இந்த ஊசியாகக் கூட இருக்கலாம். சில மருத்துவத்தின் பின்விளைவுகளால் கிராமப்புற மக்கள் அவதிப்படுகிறார்கள். அவர்களை எல்லாம் இந்த சிகிச்சை சென்று சேர வேண்டும் என்பது என் கோரிக்கை. என்னை இந்த விழாவிற்கு அழைத்ததற்கு நன்றி” என்றார்.



 





 





 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா