சற்று முன்

எல்லைகளை கடந்த மாஸ் - ஜப்பானில் ‘புஷ்பா 2’ 14 நாளில் ரூ.6.1 கோடி வசூல்!   |    Hotstar Specials-ஆக ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'லக்கி' திரைப்படம் JioHotstar-ல்   |    விஜய் அரசியல் குறித்த அனு மோகன் கருத்துகள் தனிப்பட்டவை - ‘ரெட் லேபிள்’ தயாரிப்பாளர் விளக்கம்!   |    மீண்டும் திரையரங்குகளில் STR-ன் ‘சிலம்பாட்டம்’!   |    ‘பள்ளிச்சட்டம்பி’யில் விண்டேஜ் லுக்கில் கயாடு லோஹர் கேரக்டர் போஸ்டர் வெளியீடு!   |    சென்னைக் கடற்கரையில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ‘வித் லவ்’ படக்குழுவினர்!   |    சசிகுமாரின் ‘மை லார்ட்’ அதிகாரம், அன்பு, அரசியல் நையாண்டி கலந்து பிப்ரவரி 13 முதல் திரையில்!   |    அக்கு சிகிச்சையின் மகத்துவத்தைப் பேசும் சீனு ராமசாமி   |    'ஜீவாவின் கம்பேக் வெற்றி' - வெற்றி விழாவில் நடிகர் மகிழ்ச்சி!   |    படப்பிடிப்புக்கு முன்பே நடிகர் ஏகன் படத்திற்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்!   |    அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் 4K டால்பி ஒலியுடன் மீண்டும் வெளியாகும் ‘அமைதிப்படை’   |    ‘நீ நடி கண்ணா’ என்ற ஒரு வார்த்தை என் பயங்களை உடைத்தது – நடிகர் அபிஷந்த் ஜீவிந்த்   |    மெகா ஸ்டார் குடும்பத்தில் இரட்டிப்பு சந்தோஷம், ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சி அலை!   |    25 ஆண்டுகளுக்குப் பின் மூவர் கூட்டணி, ‘பேங் பேங்’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ‘புரியாத புதிர்’க்கு மாநில அங்கீகாரம், சாம் CS-க்கு தமிழக அரசு சிறந்த இசையமைப்பாளர் விருது!   |    மகேஷ் பாபு–SS ராஜமௌலி கூட்டணியின் அடுத்த மாபெரும் திரில்லர் “வாரணாசி”   |    ஜென்-ஜி காதல் கதை “வித் லவ்” – அட்லீவின் வாழ்த்துடன் ட்ரெய்லர் வெளியீடு!   |    பார்ட் 1-ஐ மிஞ்சிய பார்ட் 2 - ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வெற்றியின் கொண்டாட்டம்!   |    'ஆகாசம்லோ ஒக தாரா'-வில் ஸ்ருதி ஹாசன் என்ட்ரி… துல்கர் சல்மான் படத்திற்கு புதிய பரிமாணம்!   |    ZEE5-ல் ‘சிறை’ மெகா சாதனை - 156 மில்லியன் பார்வை நிமிடங்கள்!   |   

சினிமா செய்திகள்

மீண்டும் திரையரங்குகளில் STR-ன் ‘சிலம்பாட்டம்’!
Updated on : 03 February 2026

நடிகர் சிலம்பரசன் (STR) பிறந்தநாளைத் தொடர்ந்து, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘சிலம்பாட்டம்’ மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. முன்னணி வெளியீட்டு நிறுவனமான எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.



 



மறுவெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். 



இந்நிகழ்வினில்… 



விநியோகஸ்தர்  எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ் பேசியதாவது.., 



ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை அனைவரும் கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன் நன்றி. 



 



ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் பேசியதாவது.., 



இந்தப்படத்தை மீண்டும் வெளியிடுவதாக வந்த தகவல் பெரும் உற்சாகத்தைத் தந்தது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இப்படத்தை விஜய் சாரும் அஜித் சாரும் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். இப்படத்தில் பல சுவாரஸ்யமான விசயங்கள் உள்ளது. யுவன் இசையில் இப்படத்தில் ஐந்து பாடல்களுமே பிளாக்பஸ்டர். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸுக்கு பெரிய லாபம் தந்த படம். இப்படத்தை எல்மா பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்குவது பெருமை. ரசிகர்களுக்கு இப்படம் பெரிய விருந்தாக இருக்கும். 



 



இயக்குநர் சரவணன் பேசியதாவது.., 



”சிம்புவுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். சிம்புவுக்கு பின்னால் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நாம் ஒரு மாஸ் சீனை எழுதுவோம், அதை சிம்பு நடிப்பில் திரையரங்கில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது. சிம்பு என் குடும்பம் மாதிரி, அவருக்கு கொடுத்த வெற்றி நான் எனக்கே தந்துகொண்ட வெற்றி. அப்போது போலவே இப்போதும் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடுவார்கள். இந்நேரத்தில் இப்படத்தில் நடித்த சினேகா, பிரபு உட்பட அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்  இப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்தார்கள். படத்தை ரசிகர்கள் இப்போதும் கொண்டாடுவார்கள் நன்றி.” 



 



இயக்குநர் Tராஜேந்தர் பேசியதாவது.., 



என் மகன் சிலம்பரசன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை, சிலம்பாட்டம் படத்தோடு கொண்டாடும் அனைவருக்கும் நன்றி. எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் ஆகிய இருவருக்கும் என் நன்றி. இயக்குநர் சரவணன் காலம் கடந்து நிற்கும் அருமையான ஆக்சன் படத்தை தந்துள்ளார். நான் என் பையன் நடித்ததில் வியந்து பார்த்த காதல் படம், விண்ணைத் தாண்டி வருவாயா!, நானும் பல காதல் படங்களை எடுத்திருக்கிறேன். ஆனால் என்னையே வியக்க வைத்த படம், விண்ணைத் தாண்டி வருவாயா. 



 



அதே போல ஆக்சன் படம் என்று எடுத்துக்கொண்டால், எத்தனையோ படங்கள் ரீரிலீஸ் ஆகிறது. ஆனால், மங்காத்தா மட்டும் தான் வெற்றி பெற்றது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஏன் வேறுபடங்களுக்கு கூட்டம் வரவில்ல.? அது போல  இந்த சிலம்பாட்டமும் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். இந்தப்படம் இந்த காலகட்டத்திற்கு ஏற்றாற் போல மீண்டும் டிஜிட்டல் செய்துள்ளார்கள். ஒவ்வொரு ஃப்ரேமும் அவ்வளவு கலர்ஃபுல்லாக இருக்கிறது. சரவணன் அடிப்படையில் கேமராமேன். அத்தனை அற்புதமாக எடுத்துள்ளார். இந்தப்படத்தில் நடித்த பிரபு, சந்தானம், சினேகா என எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர்.  என் உயிருள்ள உஷா படமும் ரீ ரிலிஸுக்கு தயாராகிவிட்டது. ஆனால், சிலம்பாட்டம் வருவதால் என் படத்தை தள்ளி வைத்துவிட்டேன். தம்பி, என் நண்பர் விஜய்யின் ஜனநாயகன் படம் வந்தாலும் தள்ளிப்போவேன் அது நான் தரும் மரியாதை.  தமிழ் சினிமா ரீ-ரிலீஸில் என் பையனின் சிலம்பாட்டம் பெரிய வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.  அனைவருக்கும் நன்றி. 



 



2008ஆம் ஆண்டு வெளியான ‘சிலம்பாட்டம்’, நல்ல வசூலையும் ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது. காலப்போக்கில், STR-யின் கல்ட் படங்களில் ஒன்றாக இந்த படம் மாறியது. இப்போது, மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புத்தம் புதிய பொலிவில் மீண்டும் திரைக்கு வருவது ரசிகர்களுக்கு ஒரு பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.



 



இந்த படத்தில் STR, “தமிழரசன்” மற்றும் “விச்சு” என இரு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தது பெரிதும் பேசப்பட்டது. கிராமத்து பின்னணியில் சிலம்பக் கலையை மையமாகக் கொண்டு அமைந்த ஆக்‌ஷன் காட்சிகள், அவரது உடல் மொழி மற்றும் டயலாக் டெலிவரி ஆகியவை படத்திற்கு தனித்த அடையாளத்தைத் தந்தன. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, மாஸ் ஆக்‌ஷன், உணர்ச்சிப் பூர்வமான அம்மா–மகன் சென்டிமெண்ட், கிராமத்து அரசியல் என பல அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்தன.



 



மாஸ் சிம்பு, ஆக்‌ஷன் சிம்பு, கிராமத்து சிம்பு – அனைத்தையும் ஒரே படத்தில் காண விரும்பும் ரசிகர்களுக்கு, ‘சிலம்பாட்டம்’ ரீ-ரிலீஸ் ஒரு திருவிழா அனுபவமாக இருக்கும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா