சற்று முன்

10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |   

சினிமா செய்திகள்

Hotstar Specials-ஆக ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'லக்கி' திரைப்படம் JioHotstar-ல்
Updated on : 03 February 2026

நேரடி ஓடிடி ஒரிஜினல் திரைப்படமான ‘லக்கி’ (Lucky), Hotstar Specials ஆக பிப்ரவரி 20, 2026 அன்று பிரத்யேகமாக JioHotstar தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை JioHotstar, தனது சவுத் அன்பவுண்ட் நிகழ்வில் வெளியிட்டு, ‘லக்கி’ திரைப்படத்தின் தனித்துவமான உலகத்தை முதன்முறையாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.



 



வெளியாகியுள்ள டீசர், பார்ப்பதற்கு அப்பாவியாக இருக்கும் ஒரு நாய்க்குட்டி அரசியல் அதிகார மையங்களின் கவனத்தை ஈர்க்கும் போது உருவாகும் குழப்பங்களே கதையின் மையம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், ‘லக்கி’ திரைப்படம் நகைச்சுவை, குழப்பம் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் நிறைந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது.



 



உதய் மகேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகை தேவதர்ஷினி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை, அரசியல், ஆக்‌ஷன் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், அப்பாவித்தனமும் அதிகாரமும் மோதும் போது கட்டுப்பாட்டை மீறி நடைபெறும் சம்பவங்களை இந்த திரைப்படம் பேசுகிறது.



 



புதிய கதைக்களம், திறமையான நடிகர் குழாம் மற்றும் குடும்பங்கள், இளைஞர்கள், செல்லப்பிராணி பிரியர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலான பொழுதுபோக்கு அம்சங்களுடன் ‘லக்கி’ ஒரு முழுமையான எண்டர்டெய்னராக உருவாகியுள்ளது.



 



Hotstar Specials ‘லக்கி’ திரைப்படம், தமிழ் மொழியில் பிப்ரவரி 20, 2026 அன்று பிரத்யேகமாக JioHotstar தளத்தில் வெளியாகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா